Monday, February 8, 2010

கட்டிட கலை & லாரி பேக்கர் - சிறு அறிமுகம் - தொடர் 01

   மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடங்களில் மூன்றாவதானதும் கலைகளின் புராதானதுமான கட்டிட கலையை பற்றி தொடராக எழுதலாம் என நிறைய நாட்கள் நினைத்து வந்தாலும் அதற்கான ஆரம்பமே இன்றுதான் கைகூடுகிறது. இந்த தொடரை கட்டிட கலையின் காந்தி என்றழைக்கப்படுபவரும், வீடு கட்ட ஆகும் செலவை குறைக்கும் ஆராய்ச்சியில் தன் வாழ்நாளை செலவழித்து வழிமுறைகளை வகுத்த “லாரி பேக்கர்” க்கு சமர்ப்பித்து ஆரம்பிக்கிறேன்.



பழங்காலத்தில் இயற்கை சீற்றங்களில் இருந்தும், வனவிலங்குகளிடமிருந்தும் தன்னை பாதுகாக்க குகைகளில் தஞ்சம் அடையும் போது ஆரம்பமாகிறது கட்டிடகலையில் அத்தியாயம். அதன்பின் பல பரிணாமங்களை கண்ட இக்கலை நவீன யுகத்திற்கேற்ப பிரமாண்ட வளர்ச்சியைடந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.



நவீன யுகத்தில் தேவைகளுகான கலையாக வளர்ந்ததை விட அழகியல் சார்ந்து மிக வேக வளர்ச்சியடைந்தது. ஆனால் இந்தியா போன்று குடியிருக்க வீடின்றி தவிக்கும் ஏழை மக்கள் அதிகம் உள்ள நாடுகளிலும் இது அழகியல் சார்ந்து வளர்வதை காட்டிலும் அடிப்படை தேவைகளுக்கா வள்ர்வதுதான் உண்மையான வளர்ச்சி என லாரி பேக்கர் போன்ற மேதைகள் தொடர்ந்து வலியுறுத்து வருகிறார்கள்.


பேக்கரின் வீடுகள் பற்றிய தன் சிந்தனை வியப்பானது.

“உலகமெங்குமே ஒரு நடுத்தர வர்கத்து மனிதனின் வாழ்க்கை சேமிப்பில் பெரும்பகுதியை வீடுகள் பிடுங்கிக் கொள்கின்றன. நாற்பது ஐம்பது வருடம் ஒருமனிதன் ஒரு வீட்டுக்காக உழைக்கிறான் என்பதே அதற்குப் பொருள். அதைவிட அபத்தமான ஏதும் இல்லை. ஏன் என்றால் அந்த வீட்டின் ஆயுட்காலம் அந்த அளவுக்கு நீளமானதல்ல. கடனைக் கட்டிமுடிக்க வீடு பழையதாகிவிடுகிறது. இடிக்க வேண்டியதுதான். புதிய நாகரீகத்தில் வீடு போல ஒரு மாபெரும் வீண் வேறு எதுவுமே இல்லை.”



இதற்குக் காரணம் வீடுகட்டுவதில் உள்ள வணிகம். நம் வீடுகளின் பெரும்பகுதி தொழில்துறையால் உருவாக்கப்பட்ட பொருட்கள். தொழில்துறை அவற்றை நமக்கு தேவையானதாக ஆக்குகிறது. எளிய கடன் வசதிகள் மூலம் நம்மை அவற்றை வாங்கச்செய்கிறது. நமது வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் உண்மையில் நமக்குத் தேவைதானா என்பதையே நாம் அறிவதில்லை. தொழில்துறை உற்பத்தியாக வீடு இருக்கும்போது அதற்கு ஒரு பொதுத்தன்மை தேவையாகிறது. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஒரே பொருட்கள். ஒரே வடிவமைப்பு.

இந்தக் காரணத்தால் வீட்டின் கட்டுமானப் பொருட்களின் விலையில் அறுபதுசதவீதம் வரை அந்தபொருட்களை கொண்டுவந்து சேர்க்கும் செலவாக இருக்கிறது



இதனால் லாரி பேக்கர் ”ஒருபிராந்தியத்தில் கிடைக்கும் பொருட்களையும் திறமையையும் மட்டுமே பயன்படுத்தி அங்கே வீடுகளைக் கட்டுவது “ என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.



லாரி பேக்கர் ஓரு சிறுகுறிப்பு



01.03.1917 - 01.04.2007



இங்கிலாந்தில் பிறந்து, இரண்டாம் உலகப் போரின் போது மிஷினரியின் மூலம் சேவை செய்ய 1945 ல் இந்தியா வந்து தற்செயலாக காந்தியடிகளைச் சந்தித்து அவருடைய விருப்பப்படி இந்தியாவில் தங்கி, கட்டடக் கலையில் காந்தியத்தன்மையைப் புகுத்தியவர் 2007ம் வருடம் ஏப்ரல் 1 ம் தேதி திருவனந்த புரத்தில் காலமானார்.



அவருடைய கட்டடங்கள் மிக எளிமையான அருகில் கிடைக்கக் கூடிய eco frindly பொருட்களைக் கொண்டு கட்டியவர். அவர் கட்டிய 3000 தனியார் ம்ற்றும் கேரள அரசு கட்டிடங்கள் கேரளா முழுவதும் காண முடியும்.



ஏராளமான விருதுகளை வாங்கிய அவருக்கு இந்திய அரசு 1991 ல் பத்மஸ்ரீ விருதை வழ்ங்கி கௌரவித்தது.



கேரள டாக்டர் எலிசபெத்தை மணந்து, இந்தியக் குடியுரிமை பெற்று கடந்த 50 வருடங்களாக திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர்.



அவர் கேரள அரசுடன் இணைந்து COSTFORD எனும் தொண்டு நிறுவனத்துடன் செயல் பட்டு வந்தார்.



இனிமேல் வீடு கட்டுவ்தாக இருப்பவர்கள், Life, Work & Writings - Laurie Baker என்ற புத்தகம் G.Bhatia Penguin Publishers வாங்கிப் படித்து பயனடையலாம்


----------

லாரி பேக்கரின் கட்டிடத்தின் செலவுகளை குறைக்க உதவும் தொழில் நுட்பம் அடுத்த பாகத்தில்.....


----------



47 comments:

மதார் said...

happy to see a civil engineer , keep on writing in civil field .

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பதிவு...

Prathap Kumar S. said...

ஓட்டு என்ன வேட்டே போடலாம் தல... நல்ல பகிர்வு.

உம்மை சாதாரண கொத்தனாருன்னு நினைச்சேன். நீரு விசயம் தெரிஞ்ச கொத்தனாருதான் வே...
ஆமா...கடைசில புரஜ் கலிபா உள்ள விட்டானுங்களா இல்லயா?

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் - தொடருங்கள் துறை சார் பதிவுகளினை !

ஹுஸைனம்மா said...

/வீட்டின் கட்டுமானப் பொருட்களின் விலையில் அறுபதுசதவீதம் வரை அந்தபொருட்களை கொண்டுவந்து சேர்க்கும் செலவாக இருக்கிறது//

ஆமாம்.

இந்த விவரமெல்லாம் நாங்க வீடு கட்டும்போது தெரியாமப் போச்சேன்னு வருத்தமா இருக்கு.

// நாஞ்சில் பிரதாப் said...
உம்மை சாதாரண கொத்தனாருன்னு நினைச்சேன். நீரு விசயம் தெரிஞ்ச கொத்தனாருதான் வே...//

உங்க ஃப்ரண்டுங்கிறதனால உங்கள மாதிரித்தான் இருக்கணுமா? :-)

geethappriyan said...

நண்பர் கண்ணா ,
இவரை ஃபாதர் ஆஃப் லோகாஸ்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் என்பார்கள்,அன்னார் நம்முடன் இல்லாவிட்டாலும் அவரின் படைப்புகள் எல்லோர் மனதிலும் நீங்காமல் வாழும். பேராசை பிடித்த கொத்தனார் மேஸ்திரிகளை , தேடிப்போய் ஏமாறும் வீடு கட்டுபவர்கள் இவரைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், டிசைனர்,மற்றும் படித்த எஞினியர்களை வைத்து வீடு கட்ட வேண்டும். இவரைப்பற்றிய யூட்யூப் டாகுமெண்டரியயும் தேடி இணைக்கவும்.
--------
இனி எந்த வெண்ணெய்யும் நீ கக்கூஸு திறந்ததை எழுதினேன்னு சொல்லமுடியாது.நல்ல பதிவுய்யா.
ஓட்டுக்கள் போட்டாச்சு

நாடோடி said...

வாழ்த்துக்கள் ....தொடரட்டும் துறைச் சார்ந்த பதிவுகள்.

கண்ணா.. said...

நண்பர்களே

மதார் அவர்கள் இன்று பதிவிட்ட கட்டுமானம் குறித்த கீழ்கண்ட பதிவையும் பார்த்து ஊக்குவியுங்கள்

சொந்தவீடு வாங்குமுன் கவனிக்க வேண்டியவை

goma said...

அழகாக விளக்கமாக எழுதியிக்கிறீர்கள்...இவை போன்ற விஷயங்களையும் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் தொடருங்கள்...நாங்கள் உங்களைத் தொடருகின்றோம்

வினோத் கெளதம் said...

நல்ல விளக்கமான பதிவு..
தொடர்ந்து இதேமாதிரி நிறையா எழுத வேண்டும் ( அப்ப தான் படிக்காமலே கருத்து சொல்ல சுலபமா இருக்கு )..;)

- இரவீ - said...

அருமையான பயன்மிகுந்த பதிவு. நன்றி. தொடரட்டும் சேவை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கண்ணா, அருமையான தொடர ஆரம்பித்திருக்கீங்க. வாழ்த்துகள்.

Chitra said...

லாரி பேக்கர் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். நிறைய விஷயங்களை அருமையா தொகுத்து தந்து இருக்கீங்க. நன்றி.

Best wishes to write more on this topic!

வடுவூர் குமார் said...

லாரி பேக்க‌ர் ப‌ற்றி இன்று தான் தெரிந்துகொண்டேன்‍ சொல்ல‌வே வெட்க‌மாக‌ இருக்கு அதுவும் இந்த‌ தொழிலில் இருந்துகொண்டே!!
கேர‌ளாவைத்த‌விர‌ வேறு எங்கும் அவ‌ர் வீடுக‌ளை க‌ட்ட‌வில்லையா? அல்ல‌து க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌வில்லையா?

கண்ணா.. said...

வாங்க மதார்

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல.. நீங்களும் சிவில் இன்ஜினியர் என அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாங்க....

கண்ணா.. said...

வாங்க சங்கவி

வருகைக்கும் தொடர் ஊக்குவிப்பிற்கும் நன்றிகள் பல

கண்ணா.. said...

வாடா பிரதாப்..

ஓட்டு போட்டதுக்கு நன்றிடாப்பா...

//கடைசில புரஜ் கலிபா உள்ள விட்டானுங்களா இல்லயா?//

இல்ல தல ..:( புரோஜக்ட் முடிஞ்சுதுன்னு சொல்லி ஹெட் ஆபிஸ் டெண்டரிங் டீம்ல தூக்கி போட்டாங்க..

கண்ணா.. said...

வாங்க ஆயில்யன்,

வருக்கைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

//வாழ்த்துக்கள் - தொடருங்கள் துறை சார் பதிவுகளினை //

கண்டிப்பாக தொடர்கிறேன்.

நீங்க கத்தாரிலா இருக்கீங்க..? நானும் கத்தார் அல்ஜாபரில் ஓரு வருடம் குப்பை கொட்டினேன்..

கண்ணா.. said...

வாங்க ஹுஸைனம்மா

தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும், முக்கியாம ஓட்டு போட்டதற்கும் நன்றிகள் பல..

---------------------------
// நாஞ்சில் பிரதாப் said...
உம்மை சாதாரண கொத்தனாருன்னு நினைச்சேன். நீரு விசயம் தெரிஞ்ச கொத்தனாருதான் வே...//

உங்க ஃப்ரண்டுங்கிறதனால உங்கள மாதிரித்தான் இருக்கணுமா? :-)
------------------------

ஹா..ஹா...லூஸ்ல விடுங்க... அது இன்னும் கல்யாணம் ஆகுற வரை இப்பிடிதான் தண்ணி தெளிச்சு விட்ட மாதிரி அலையும்... கண்டுக்காதீங்க...

கண்ணா.. said...

வாங்க கார்த்தி,

வருகைக்கும், கருத்திற்கும், ஓட்டுகளுக்கும் நன்றி.

அதெப்படி தல...எந்த இடத்துல கமெண்ட் போட்டாலும் அதுக்குறித்து விளக்கமா ..போடுறீங்க... இந்த விசயத்துல உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு....


//இனி எந்த வெண்ணெய்யும் நீ கக்கூஸு திறந்ததை எழுதினேன்னு சொல்லமுடியாது//

நான் எதையுமே பெருசா எடுக்கறது கிடையாது பாஸு... லூஸ்ல விடுங்க...

கண்ணா.. said...

வாங்க நாடோடி,

வருகைக்கும், கருத்திற்கும்.. பாலோயர் ஆனதிற்கும் நன்றி

malar said...

''புதிய நாகரீகத்தில் வீடு போல ஒரு மாபெரும் வீண் வேறு எதுவுமே இல்லை.”

ரொம்ப நல்ல பதிவு...

நாஞ்சில் பிரதாப் said..
உம்மை சாதாரண கொத்தனாருன்னு நினைச்சேன். நீரு விசயம் தெரிஞ்ச கொத்தனாருதான் வே...
ஆமா...கடைசில புரஜ் கலிபா உள்ள விட்டானுங்களா இல்லயா?

படித்து நல்ல சிரிப்பு...

ஹுஸைனம்மா said...

யூத் விகடன்ல வந்திருக்கீங்க போல, வாழ்த்துக்கள்.

Unknown said...

// ஏராளமான விருதுகளை வாங்கிய அவருக்கு இந்திய அரசு 1991 ல் பத்மஸ்ரீ விருதை வழ்ங்கி கௌரவித்தது. //

ஹம்ம்.., சினிமா நடிகரா இருந்து இருந்தா 1961-ல வாங்கி இருக்கலாம்

கண்ணா.. said...

வாங்க கோமா,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..தொடர்வதற்கு நன்றிகள் பல

கண்ணா.. said...

வாடா வினோத்து,

உன் கமெண்டை பாத்தா, கலை உன் யூசர் நேம்ல வந்து பண்ண மாறிக்கே இருக்கு.

ஏண்டா.... நானே ஆடிக்கொருக்க அமாவாசைக்கொருக்கதான் உருப்படியான பதிவே போடுறேன்...அதையும் படிக்கலேன்னா என்ன பண்ணலாம் உன்னை....க்ர்ர்ர்ர்ர்..( மனசாட்சி: என்னமொ நீ எல்லா இடத்துலயும் படிச்சுட்டு கமெண்ட் போடுற மாதிரி.. ஓவரா ஃபீல் பண்ணாத.. ஓவர் ஆக்டிங் உடம்புக்கு நல்லதல்ல)


ஆனா ஓட்டு போட்டதுக்கு கோடானு கோடி நன்றி மாப்பி..)

கண்ணா.. said...

வாங்க - இரவீ,

வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல...

கண்ணா.. said...

வாங்க செந்தில்வேலன் ,

உங்களை மாதிரி வருமா தல....ஏதோ நானும் முயற்சி பண்ணுறேன்....

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க சித்ராக்கா,

வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிக்கோவ்..

கண்ணா.. said...

வாங்க வடுவூர் குமார்,

இதெல்லாம் ஓரு விஷயமா..கூகிலாண்டவர்ல தேடுனீங்கன்னா இதை விட நிறைய மேட்டர் கிடைக்கும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

கண்ணா.. said...

வாங்க மலர்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

//படித்து நல்ல சிரிப்பு...//

உங்களை பதிவ படிக்க சொன்னா.. நீங்க கமெண்டை படிச்சு சிரிக்கவா செய்யுறீங்க....நல்லா இருங்க....

கண்ணா.. said...

@ ஹீஸைனம்மா,

மீண்டும் வந்து தகவலை சொன்னதற்கும், வாழ்த்திற்கும் நன்றி

நீங்க சொல்லிதான் எனக்கே தெரியும்...

ம்...விகடனில் எனது பதிவுன்னு ஓரு பதிவு போட்டு மறுபடி மொக்கையை ஸ்டார்ட் பண்ணிற வேண்டியதுதான்..

கண்ணா.. said...

வாங்க பேநா மூடி,

//ஹம்ம்.., சினிமா நடிகரா இருந்து இருந்தா 1961-ல வாங்கி இருக்கலாம்//

ஹா..ஹா...உண்மைதான்...சினிமா நடிகரா இருந்தா டாக்டர் பட்டமே வாங்கிருக்கலாம்...:)

Prathap Kumar S. said...

தல யுத் விகடன்ல பதிவை பார்த்தேன் தல... வாழ்த்துக்கள்.

என் பேரை எதுக்குவே நாறடிக்கீரு... ஏற்கனவே நாறிப்போய்த்தான் கிடக்கு... இதுல நீரு வேற...

துபாய் ராஜா said...

நல்லதொரு முயற்சி கண்ணா. லாரி பேக்கர் அறிமுகமும் அருமை.

தொடருங்கள். தொடர்கிறோம்.

கண்ணா.. said...

வாடா நாஞ்சிலு...

வாழ்த்துக்களுக்கு நன்றி.

//என் பேரை எதுக்குவே நாறடிக்கீரு... ஏற்கனவே நாறிப்போய்த்தான் கிடக்கு... இதுல நீரு வேற...//


உன்னை நாறடிக்கலேன்னா...தூக்கமே வரமாட்டுக்கு...அதான் ஹி..ஹி

கண்ணா.. said...

வாங்க துபாய் ராஜா,

என் சிறு முயற்சிக்கு உங்கள் ஊக்கத்திற்கு நன்றி....


வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல

thambi durai said...

GOOD,WHEN WILL BE THE NIXT...
MD.ANSARI
QAQC ENGINEER
DOHA

சாமக்கோடங்கி said...

நான் மெகானிகல் என்ஜினீயர்.. ஆனாலும் உங்கள் தகவல் சூப்பரா இருக்கு...

தொடர்ந்து படிக்கனும்போல இருக்கு, இதே விறுவிறுப்போட எழுதுங்க.. நன்றி..

☀நான் ஆதவன்☀ said...

குட் போஸ்ட் தல

கண்ணா.. said...

வாங்க தம்பிதுரை & அன்சாரி,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

உங்களை போன்றோரின் பின்னூட்ட ஊக்கம்தான் எனக்கு உற்சாக டானிக்

இந்த வாரத்திற்குள் அடுத்த பகுதியும் பதிவிடுகிறேன்

கண்ணா.. said...

வாங்க பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

//நான் மெகானிகல் என்ஜினீயர்.. ஆனாலும் உங்கள் தகவல் சூப்பரா இருக்கு...

தொடர்ந்து படிக்கனும்போல இருக்கு, இதே விறுவிறுப்போட எழுதுங்க.. நன்றி..//


நன்றி..உங்கள் பின்னூக்கத்திற்கு...

தொடர்ந்து வாங்க....

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றிகள் பல

February 14, 2010 1:20 PM

கண்ணா.. said...

வாங்க நான் ஆதவன் சூர்யா,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தல

சிநேகிதன் அக்பர் said...

இப்பதான் ரெண்டாம் பாகம் படிச்சிட்டு வாரேன்.

சூப்பர் கண்ணா.

தொடர்ந்து எழுதுங்கள்.

Unknown said...

நல்ல பதிவு .தொடரட்டும்.வாழ்த்துகள்

கோமதி அரசு said...

நல்ல பதிவு.

seethag said...

very happy to see your write up about laurie baker.However these days people who build houses on his princilples build mainly for rich people.When i contacted some of the people i realised only the rich and famous could afford bakerian houses!!!irony.