Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Saturday, April 9, 2011

நெல்லையில் முந்துவது யார் - தேர்தல் நிலவரம்

நீண்ட நாள்களுக்கு பிறகு என் பளாக்கில் பதிவில் எழுதும் போது ஒரு இனம் புரியாத கேள்வி “ஏன் இதை இவ்வளவு நாள் எழுதவில்லை?” என. பெரிய காரணங்கள் ஒன்றுமில்லை எழுத விஷயங்களும் ஆர்வமும் இல்லாததுதான்.

சரி விஷயத்திற்கு வருவோம்.  தேர்தல் வருவதால் பதிவு, பஸ், டிவிட்டர் என ஆங்காங்கே விவாதங்கள் நடைபெறுவதால் நானும் நெல்லை தொகுதியை பற்றி பதிவிடலாம் என நினைத்து இதோ ஆரம்பித்தாகிவிட்டது.




எல்லா தேர்தல்களிலும் அரசியல் கட்சிகள் மிகவும் கவனத்தோடு வேட்பாளர்களை தேர்வு செய்யும் தொகுதி நெல்லை ஏனெனில் இந்த தொகுதியில் வென்ற கட்சிதான் ஆட்சியமைக்கும் எனபது இதுவரை நடந்த தேர்தல்களில் நிருபணமாகி இருக்கிறது.  இப்போது திமுக சார்பாக ஏஎல் எஸ் லெட்சுமணனும் அதிமுக சார்பில் நயினார் நாகேந்திரனும் பலப்பரிட்ஷை நடத்துகிறார்கள். கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன் 722 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்று 2006ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாலைராஜாவிடம் 606 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்று தற்போது மூன்றாவது முறையாக நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து நான்கு முறை தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை எம் எல் ஏ ஆனவரும் திருநெல்வேலி மாநகராட்சி மேயராகவும் இருக்கும் ஏ எல் எஸ்ன் மகன் லெட்சுமணன் போட்டியிடுகிறார். சிட்டிங்க் எம் எல் ஏ மாலைராஜாவின் ஆதரவும் கட்சி மற்றும் தந்தையின் செல்வாக்கும் கரைசேர்க்கும் என நம்பியிருக்கிறார்.  

தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுகவிற்கு சம அளவில் செல்வாக்கு உள்ளது. வேட்பாளர் அறிவித்த நாளில் இருந்து கணிக்க முடியாத அளவிலேயே இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் பந்தயத்தில் திமுக சற்று முன்னே நின்றாலும் நயினார் நாகேந்திரனின் மற்றும் கட்சியினரின் அபாரமான பீல்ட் வொர்க்கினால் உடனடியாக சுதாரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இதுவரை 1951 ல் இருந்து 2001 வரை தொகுதி வெற்றி நிலவரம் கீழே. ( நன்றி: Press Information Bearu chennai) 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட மாலைராஜா 65,517 ஓட்டுகளும் அதிமுக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 64,911 ஓட்டுகளும் வாங்கினார். 606 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.


இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சை போல பரபரப்பான போட்டியில் திமுகவும் அதிமுகவும் திமுக 2001 தேர்தலில் 722 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தொகுதியை இழந்து 2006 தேர்தலில் 606 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மீண்டும் தொகுதியை கைப்பற்றியிருக்கிறது. தற்போதய பரபரப்பான் சூழலில் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது மற்றும் மதிமுக எதிர் கூட்டணியில் இல்லாதது போன்ற சாதகமான சூழ்நிலைகள் திமுகவிற்கு இருந்தாலும் கடுமையான களப்பணி, கடந்த முறை கடும் போட்டியை கொடுத்த அதிமுக வேட்பாளர், பாளை தொகுதிக்கு பரிச்சயமான திமுக வேட்பாளர் என சில காரணங்களால் தற்போதைய நிலவரப்படி 60:40 என்ற அளவில் அதிமுகவின் ஆதிக்கம் அதிகமா படுகிறது. தேர்தலுக்கும் இன்னும் ஓரு வாரம் கூட இல்லாத நிலையில் இறுதி நேர களப்பணி, வாக்குகள் பதிவாகும் சதவிகிதம் ஆகியவற்றால் இன்னமும் கணிக்க முடியாத தொகுதியாக இது இருக்கிறது. 

 டெய்ல் பீஸ்:  பாளை தொகுதியை பொறுத்தவரை சிட்டிங் எம் எல் ஏ மைதீன்கான் பக்கமாகவே காற்று பலமாக வீசுகிறது


Wednesday, May 13, 2009

இன்றைய தலைப்பு செய்திகள் - தேர்தல் ஸ்பெஷல்





வெற்றி வாய்ப்பு பிராகாசமாக உள்ளது - அழகிரி

மதுரை ம‌க்களவை‌த் தொகு‌தி‌யி‌ல் எனது வெ‌‌ற்‌றி ‌பிரகாசமாக உ‌ள்ளது எ‌ன்று ‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் மு.க.அழ‌கி‌ரி வா‌க்க‌ளி‌த்த ‌‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்







40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் : கருணாநிதி
செ‌ன்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 13 மே 2009 ( 12:57 IST )

40 தொகு‌திக‌ளிலு‌ம் வெ‌ற்ற‌ி பெறுவோ‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌‌தி வா‌க்க‌‌ளி‌த்த ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் இதனை தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்

திண்டுக்கல் அருகே வா‌க்கு‌ப்பதிவில் மோதல்: தி.மு.க. பிரமுகர் கொலை
திண்டுக்கல் (ஏஜென்சி), புதன்கிழமை, 13 மே 2009 ( 12:33 IST )

தி‌ண்டு‌க்க‌ல் அருகே வா‌‌க்கு‌‌ச்சாவடி அருகே ந‌ட‌ந்த மோத‌லி‌ல் ‌தி.மு.க. ‌கிளை செயலார் க‌த்‌தியா‌ல் கு‌த்‌தி கொல்லப்பட்டார்.இ‌ந்த ‌நிக‌ழ்வு அ‌‌‌ங்கு பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.
தேர்தல் செய்திகள் நாளையும் தொடரும்...

Saturday, May 2, 2009

ஜெயலலிதா... ஈழ ஆதரவாளரா?





தேர்தல் எத்தனையோ பல்டிகளையும், துரோகங்களையும் நிகழ்த்துகிறது… இந்த ஒற்றை வார்த்தைதான்.. கலைஞரை உண்ணாவிரதம் இருக்கவும், ஜெயலலிதாவை தனிஈழம் அமைத்து தருவேன் என சொல்லவும், வைகோ, ராமதாஸ், திருமாவை அணி மாறவும், இன்னும் என்னன்னவெல்லாம் செய்ய வைக்கிறது.. சரி விஷயத்திற்கு வருவோம்…

ஜெயலலிதாவின் திடீர் ஈழ ஆதரவு ஏன்? அதனால் ஏதும் பயன் உண்டா.? என்வரையில் ஜெவின் இந்த திடீர் ஆதரவு…சந்தேகமேயில்லாமல் தேர்தல் ஸ்டண்ட். மட்டுமே…இதுநாள் வரையில் ஈழம் என்பது இலங்கையின் உள் நாட்டு பிரச்சினை என சொல்லி வந்தவர் உண்ணாவிரதம் இருக்க செல்லும் போதே….. இன்னும் இது போல் எத்தனை பல்டிகள் அடிக்க போகிறாறோ என்றுதான் அனைவரும் நினைத்தனர்.. அதுதான் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது…

ஜெயலலிதா நினைத்ததை நடத்தி காட்டி விடுவார் என கூறிகொண்டு இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி…. எதை அவர் நடத்தி காட்டுவார். இப்பொது நினைத்ததையா? இல்லை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு நினைத்ததையா?

அதிமுக அணி 40 ல் வென்ற பின்னர் மத்தியில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்தால்…… காங்கிரஸ் வரக்கூடாது என்ற உங்கள் எண்ணம் என்னாவது? அவர் அப்படி பல்டி அடிக்க மாட்டார் என யார் உத்திரவாதம் தருவார்கள் பல்டிக்கு பெயர் போன ராமதாஸ், வைகோ வா?

சரி.. பி ஜெ பி க்கு ஆதரவு அளிப்பாரா? அப்படியென்றால் நாம் நேரடியாக பி ஜெ பிக்கு வாக்களிப்புதுதானே முறை..

அண்ணன் வைகோ அவர்கள் சொல்வது போல், ஜெ பிரதம வேட்பாளர் என்றால்… ஏன் அவர் தேர்தலில் நிற்க வில்லை? தேர்தலில் நின்று நான் தான் பிரதம வேட்பாளர் என்றால் கொஞ்சம் நம்பும் படியாக இருக்கும்…

தேர்தலை முன்வைத்தாவது இவர்கள் எல்லாம் ஈழத்துக்கு ஆதரவாக பேசவாவது செய்கிறார்களே..அதுவரையில் மகிழ்ச்சி..

என்னை பொறுத்த வரையில், கலைஞர் உண்ணாவிரதம் இருந்து (?!) கனரக ஆயுத பிரயோகத்தை நிறுத்தியதை (??!!) போல ஒரு மேடை அமைத்து அதில் கலைஞர், ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, மற்றும் அனைத்து தலைவர்களும் உண்ணாவிரதம் இருந்து ஈழத்தில் போர்நிறுத்தம் செய்ய முன் வருவார்களா?

தனி ஈழம் அமைத்து தர தேர்தலுக்கு பின் முயற்சிகள் மேற்கொள்ளட்டும். தற்போது உடனடியாக போர் நிறுத்ததிற்கு இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளட்டும்…..

தமிழர்கள் இப்பிடி சேராமல் பிரிந்திருப்பதால்தான்… ஈழத்தில் தமிழன் செத்து கொண்டிருக்கிறான்..




கடைசி நேரம் வரையில் பதவியில் இருந்து பதவிசுகத்தை அனுபவித்து விட்டு இப்போது வெளியே வந்திருக்கும் ராமதாஸிக்கும், விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்கு பொடாவில் உள்ளே தள்ளிய ஜெயலலிதாவே..தனி ஈழம் அமைக்க உதவுவார் என நம்பும் அப்பாவி வைகோவுக்கும் இதை பற்றி பேச தகுதியே இல்லை..










விஜயகாந்த் இதுபற்றி வாயே திறக்காதது எனக்கு மிகபெரிய ஆச்சர்யமாய் இருக்கிறது… இரண்டு பெரிய கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்தாமல் இருக்கிறாறே? இவர் கல்யாண மண்டபத்தை இடித்ததற்கு கூப்பாடு போட்டாறே? ஈழ விஷயத்தில் ஊமையாய் இருக்கிறாறே? காங்கிரஸிடம் இருந்து பெட்டிகள் கைமாறியிருக்கலாமோ?

ஆனா இவங்க அடிக்கற லூட்டியெல்லாம் பார்த்தா.. இந்த சனியன் புடிச்ச எலக் ஷன் எப்படா முடியும் னு இருக்கு.

Monday, April 27, 2009

மனோகரா….மண்டைய போட்றாத… - கலைஞருக்கு சில கேள்விகள்…

மனோகரா….மண்டைய போட்றாத… - கலைஞருக்கு சில கேள்விகள்…



தலைப்பை பாத்துட்டு நீங்களே ஏதாவது கற்பனை பண்ணீராதீங்க….இந்த பதிவு ரெண்டு பகுதியா இருக்கு…முதல்ல
என் ஆருயிர் நண்பன் மனோகரனை பத்தி… அப்புறம் நம்ம தானை தலைவர், தமிழன தலைவர் கலைஞருட்ட எனக்கு தெரியாத விஷயத்தை கேட்டு தெரிஞ்சுகலாம்னு…

மனோகரன்

என் ஆருயிர் நண்பன். அவன் நேத்து டீவில கலைஞர் உண்ணாவிரதம் இருக்குறத பாத்துட்டு அவனும் இருக்க ஆரம்பிச்சவந்தாங்க… இன்னும் அவன் நிறுத்தல….அவருக்காது ரெண்டு பொண்டாடியும் வந்து சூசு குடுத்தாங்க…. இவனுக்கு இன்னும் கல்யாணமே ஆகல…. யாரு வந்து சூசு குடுக்க… நான் போயி குடுக்க போனதுக்கு இலங்கைல யாரோ கோத்த பயலோ கோட்டி பயலோ ஓருத்தன் இருக்கானாம்ல அவன் வந்து நாங்க சண்டய நிப்பாட்டிடோம்னு பத்திரத்துல கையெழுத்து போட்டு தந்தாதான் முடிப்பேன்னு சொல்லுறான்.. இவனுக்கு ஏற்கனவே அல்சர் இருக்கு….. அதுபோக உடம்புல சொல்ல படாத இன்னும் பல வியாதில்லாம் இருக்குல்லா… அதான் அவன பாத்து சொல்லுறேன் மனோகரா….மண்டைய போட்றாத…


சாமி.. எனக்கு ஓரு உண்மை தெரிஞ்சாகணும்……



கலைஞரிடம் சில கேள்விகள்..

1) இலங்கைல போர் நிறுத்தற வரைக்கும் உண்ணாவிரதம்னு இருந்திய….ரொம்ப சந்தோஷம்.. ஆனா பாருங்க..இந்த சோனியா புள்ளயும் இந்த சிதம்பரம் பயலும் சேந்து உங்க கிட்ட பொய் சொல்லி உண்ணாவிரதத்த முடிச்சு புட்டாப்ல…. ஆனா அந்த விளங்காத பய ராஜபக்‌ஷே என்னன்னா போர் முடியலன்னு சொல்லிட்டான். இப்ப நீங்க மறுபடியும் உண்ணாவிரதம் இருப்பியளா… இல்ல என்ன பண்ணுவிய சொல்லும்..?



2) உங்க உடன்பிறப்புக்கெல்லாம் நேத்து காலைல 6 மணில இருந்து தமிழ் உணர்வு பீ…றிட்டு வந்து அங்கங்க உண்ணாவிரதம் இருந்தாங்க.. இப்ப அவங்க அந்த உண்ர்வ எங்கிட்டு வச்சுட்டு இருக்கானுக சொல்லும் ??



3) இந்த சிதம்பரம் பய மேலயும், சோனியா புள்ள மேலயும் பொய் சொல்லிடானுவன்னு சொல்லி போலிஸ் காரனுவட்ட போய் கேஸ் குடுப்பியளா.???



4) இந்த ராஜபக்‌ஷேயும் , கோட்டி பயலும் சேந்துகிட்டு போரை நிப்பாட்ட மாட்டன்னு சொல்லிட்டு இருக்கானுவ….. பின்ன இங்க இருந்து ரெண்டு தூது பயலுவ.. அங்க போயி என்ன புடுங்கிட்டு வந்தானுவ ???



5) அப்புறம் நம்ம கனிமொழியக்கா..இந்த விஷயத்துக்காக நேத்து ஏதும் உங்ககிட்ட ராஜினாமா லெட்டர் ஏதும் குடுத்துச்சா..????? குடுத்துன்னா எங்ககிட்ட சொல்லிருங்கப்பு.. நாங்களும் தெரிஞ்சுகுடுவோம்ல..


Wednesday, April 15, 2009

சரத்பாபு.....அக்னி குஞ்சொன்று கண்டேன்.....


அரசியல் ஒரு சாக்கடை என நாமெலலாம் புலம்பி கொண்டே இருக்க... ஒருவன் மட்டும் சுத்த படுத்த களத்தில் இறங்கி விட்டான்...
இத்தனை நாள் எதிர்பார்த்த மாற்றம் இதுதான்! தென்சென்னை வாக்களர்களுக்கு ஒரு வேண்டுகோள்! நமது நண்பர்களையும், உறவினர்களையும் இவருக்கு வோட்டு போட வைப்பது, நம்மை ஆட்சி செய்ய திறமையற்ற பொறுக்கிகளை தேர்ந்தெடுப்பது நிறுத்தப்பட வேண்டும் என்று நினைக்கும் அனைவரது கடமை! இன்ஃபொசிஸ் நாரயணமூர்த்தி அவர்கள், தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் ஜெயிப்பது மக்களுக்கு நல்லது என்று சொல்லியிருப்பது அர்த்தம் பொதிந்தது!ஒரு நல்ல இளைஞனை மக்களுக்கு அறிமுகப்படுத்திய விகடனுக்கு நன்றி.


இந்த வார ஜீ வியில் தென்சென்னை வேட்பாளர்..சரத்பாபு வை பற்றி படித்து வியந்து போனேன்..


ஜீ வியில் வந்தவை




''என்னோட சின்ன வயசில எங்க அம்மா சாப்பாடு வேணாம்டானு சொல்லிட்டு, அடிக்கடி தண்ணி குடிச்சுக்கிட்டே இருப்பாங்க. 'தண்ணின்னா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கு'னு சின்னப் பையன் நானும் நினைச்சுட்டு இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது, இட்லி கடையில் கிடைக்கிற வருமானத்தை வச்சு அம்மா, நான், ரெண்டு அக்கா, ரெண்டு தம்பினு ஆறு பேர் எப்படி சாப்பிட முடியும்? அதான் எங்க அம்மா தண்ணீரை குடிச்சே வயித்தை நிறைச்சுட்டு இருக்காங்க.

இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க 'யூத் ஐகான்' விருதும் பெற்றவர் சரத்பாபு. ஐ.ஐ.எம்-மில் படித்தவர்களெல்லாம் பல லட்சம் மாத சம்பளத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களில் உயர் பதவிகளில் செட்டில் ஆவது வழக்கமாக இருக்க... சரத்பாபு எடுத்தது மாறுபட்ட முடிவு. பொதுவாக ரிப்பன் வெட்டும் எந்த நிகழ்ச்சிக்கும் போகாத இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, சரத்பாபு முதல் முதலாக காலேஜ் ஒன்றில் கேன்டீன் துவங்கியபோது அதன் துவக்க விழாவுக்கு வந்து இவரை உற்சாகப்படுத்தினார்.
நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) எம்.பி.ஏ. பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற 'பிட்ஸ்-பிலானியில்' இன்ஜினீயரிங் பட்டமும் வாங்கியவர். ஐ.ஐ.எம்-மிலும், பிட்ஸ்-பிலானியிலும் படித்த அத்தனை பேரிடம் இல்லாத ஒரு கூடுதல் 'தகுதி' சரத்பாபுவுக்கு உண்டு.
ஆம். சரத்பாபு மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர்! அவருடைய அம்மா மடிப்பாக்கத்தில் தெருவோரம் சிறு இட்லி கடை நடத்தியவர். அதன்மூலம் கிடைத்த வருமானத்தில்தான் இத்தனை பட்டங்களையும் பெற்றார் சரத்பாபு.


Hindu வில் வந்தவை..




“Amma could have sent me to work and made her life much easier. But, she chose to make me study... I had to give my best”




Mr. Sarathbabu attributes his career growth to the calculated risks he took at the beginning. He started off with two people.




“We did the organising and also doubled up as waiters and served the food to clients. Part of me kept asking, you’re an IIM-A product, should you be doing this?... And the other part of me kept saying, it does not matter what you do, just do it well.”


ஒரு சாதாரண வேலைக்கு கூட...எத்துனை கேள்விகள்...படிப்பு..முன் அனுபவம்..திறமை...என்று கேட்கிறார்கள்...நமக்காக உழைக்க ஒருவனை அனுப்பும் போது சரத்பாபு போன்ற படித்த, கஷ்டமும்,நிஜமும்,சூழ்நிலைகளும் நன்கு தெரிந்த ஒருவனை அனுப்பி வைக்க பத்திரிகைகளும் உதவ வேண்டும். நாளைய இந்தியாவிற்கு...இதுவே முதல் மையில் கல்லாக இருக்கட்டுமே...

எனக்கு தெரிந்து ஜூ.வி சமிபத்தில் செய்த பெரிய விஷ்யம் இது போன்றவர்களை பற்றி கட்டுரை எழுதியது.