Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Monday, June 7, 2010

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா..!!!

கடந்த மாதம் அமீரகத்திலிருந்து கிளம்பும் போதே ஏதோ கல்யாணமாகி போகும் பெண்களை போல கட்டிடம் கட்டாந்தரையெல்லாம் பார்த்து உணர்ச்சிகள் குபீர் குபீர்னு பெருக்கெடுத்துச்சு.. அப்பவே எனக்கு மைல்டா சந்தேகம் வந்துச்சு. ஆனா இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சுது நான் சந்தேகப்பட்டது சரிதான்னு. சில குடும்ப செளகரிய காரணங்களுக்காக நான் இன்னும் குறைந்தது ஓரு வருடமாவது இந்தியாவில் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால் தீவிரமாக வேலை தேட வேண்டிய அவசியமும் ஏற்பட்டு விட்டது ( ஐயகோ...!! ) இந்தியாவுல வேலை கிடைச்சா கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் வேலை பாக்க சொல்லுவாய்ங்களேன்னு பயத்தோடயே அப்ளிகேஷன் அனுப்ப ஆரம்பிச்சா.. உடனேயே கால் லெட்டரும் வந்து இண்டர்வ்யூம் சக்ஸஸ் ஆகிடுச்சு (இன்னுமாடா உன்ன இந்த உலகம் நம்புது...அவ்வ்வ்). போஸ்டிங் பெங்களூருன்னு சொன்னாய்ங்க....அங்க கிளைமேட்டும் நல்லா இருக்கும்ங்கறதால நானும் ஓகே சொல்லிட்டேன்.

அப்பிடியே ஓரு பத்து பதினைஞ்சு நாளு ஆகுதுங்க நானும் இங்க பெங்களூரு வந்து....ஹும்... இது வரைக்கும் பெங்களூருல நான் தங்கி இருக்கற வீட்டையே முழுசா சுத்தி பாக்க முடியாத அளவுக்கு வேலை பெண்ட நிமுத்துறாங்க. ஆனா என்னதான் கஷ்டப்பட்டாலும் ஏதோ ஓரு வெள்ளக்காரபயலுக்கு வேலை பாக்காம நம்மூருகாரனுக்குதான் வேலை பாக்குறோம்கற நிம்மதி இருக்கு பாருங்க அது அனுபவிச்சாதாங்க தெரியும். அட...அட...அட....

நட்பின் பலம்



இங்க வந்து வீடு பாக்க ஆரம்பிக்கும் போதுதான் நட்போட பலம் தெரியுது. இங்க நான் என் இரண்டு பள்ளிகால நண்பர்களை குறிப்பிடலேன்னா நன்றி கெட்டவனாயிருவேன். செந்தில், விஜயகுமார் ப்ளஸ் டூவில் என்கூட படித்த நண்பர்கள். சாப்ட்வேர் லையனில் சென்று முறையே AOL, IBM நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். பெங்களூரில் அவர்கள் வசிப்பதால் அவர்களை தொடர்பு கொண்டேன். அப்போது நண்பர் விஜயகுமார் டெல்லியில் இருந்தார் ஆனாலும் நண்பர், நண்பரின் நண்பர் என பலரையும் தொடர்பு கொண்டு எனக்கான இடத்தேடலில் மும்முரமாக இடுபட்டார். நன்றி விஜய். பின் கம்பெனி கெஸ்ட் கவுஸில் ஓரு வாரகாலம் தங்க அனுமதி கிடைத்ததும் வீடு தேட நண்பர் செந்தில் வண்டியை எடுத்து வந்து தெரு தெருவாக தேட ஆரம்பித்தார். இறுதியில் ஓரு வீட்டை அமர்த்திவிட்டுதான் ஓய்வெடுத்தார். நன்றி செந்தில். இது போன்ற நண்பர்கள் கிடைத்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்லி கொல்கிறேன்.

என் குடும்ப பிரச்சினை



இப்போ ரெண்டு நாளு முன்னாடிதான் மறுபடி ப்ளாக்கையே ஓப்பன் பண்ணேன். (ஏன்...ஏண்டா... இவ்ளோ நாளு நிம்மதியாதான இருந்தே...) ஆனா ஓப்பன் பண்ணாமலே இருந்துருக்கலாம் நினைக்க வைச்சுடாங்க. அதுவும் முகில் எழுதுகிறார்ங்கற இடுகையை செந்தழில் ரவியின் தளத்தில் படிச்சதும் எனக்குள் பயங்கர அதிர்வை ஏற்படுத்துச்சு. அதிலிருந்து மீண்டு வரவே ரொம்ப நேரம் ஆச்சு. சந்தன முல்லை அவர்கள் எவ்ளோ பாதிக்க பட்டிருப்பாங்கன்னு அதோட வீரியத்தை எனக்கு உணர்த்தியது முகிலின் எழுத்தை படிக்கும் போதுதான். அதுவரையில் மேலோட்டமாக அந்த விஷயத்தை படித்து கொண்டிருந்தவன் லிங்க் தேடி மூலமும் படிக்க நேர்ந்தது. அந்த பூக்காரி இடுகை படிச்சா நர்சிம் இப்பிடில்லாம் எழுதுவாராங்கற அதிர்ச்சிதான் அதிமாச்சுது. பெண்ணை எதிர் கொள்ள இந்த கேவலமான ஆயுதம்தானா உங்களுக்கு கிடைச்சுது நர்சிம்.

ஆனால் அதை வைச்சு எழுதின மற்றவர்களின் பதிவை படிச்சால் என்னவோ அவங்களோட தனிப்பட்ட பழைய பகையை தீர்த்துக்கற மாதிரிதான் தெரியுது. ஆனா இதை ஜாதி ரீதியா பாக்குறவங்க யாரா இருந்தாலும் அவங்களுக்கு என் கடும் கண்டங்கள். சந்தன முல்லை அவர்களும் இதை இழுத்து கொண்டு போவதும் எனக்கு சரியாக படவில்லை. ஆணாதிக்கம் மிகுந்த உலகில் இதை வைத்து மற்றவர்கள் திருந்துவார்கள் என்றோ அல்லது இனிமேல் இது போல நடக்காது என்றோ யாராலும் உறுதியாக கூறமுடியாது. நர்சிம்மை என்ன பண்ண வேண்டும் என்று நீங்கள்தான் முடிவு பண்ண வேண்டும். மற்ற நாட்டாமைகளை உள்ளே விட்டால் அவர்களுடைய தனிப்பட்ட பகை ஆட்களை உள்ளே இழுத்து குட்டையை குழப்பி கொண்டுதான் இருப்பார்கள். ஏனெனில் வினவு லீனா விஷயத்திலும், செந்தழில் ரவி கிருபாநந்தினி மற்றும் கவிதா அவர்கள் விஷயத்திலும் இது போன்ற தவறை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே இது குறித்து வாதம் புரிவது எதிர்வாதங்களுக்கு இடமளிக்கிறது. நீங்களும் உங்கள் கணவரும் கலந்து ஆலோசித்து என்ன பண்ண வேண்டுமென்று உங்கள் தளத்தில் குறிப்பிடுங்கள் அதுதான் அடுத்தடுத்த ஆரோக்யமான தீர்வுக்கு வழி வகுக்கும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. இதை உங்களுக்கான முடிவை நான் எடுப்பதாக நீங்கள் கருதினால் மன்னித்து கொள்ளுங்கள்.

Monday, March 22, 2010

பத்து பெண்களாஆஆஆஆ......!!!!! தொடர்பதிவு...

என்னை இந்த தொடர்பதிவிற்கு அழைத்த அன்பு நண்பர் பிரபுவிற்கு நன்றிகள் பல. பிடித்த பெண்கள் பத்து பேரை மட்டும்தான் சொல்ல வேண்டும், சொந்தகாரர்களை சொல்ல கூடாது என்ற கட்டுப்பாடுகளை மட்டும் கடைபிடிக்கிறேன்.

பிடித்த பத்து பெண்கள் என்ற இப்பதிவை என்னை பெற்று, வளர்த்து, சமூகத்தில் போராட எல்லா மனவலிமையையும் குணங்களாக எனக்கு தந்த என் அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்.

சாதனை பெண்கள் குறைவாக உள்ளார்களே.. நிறைய பேரின் தொடர் பதிவில் திரும்ப திரும்ப ஒரே பெயர்களே வருகிறதே என நண்பர்கள் சிலர் வருத்தப்பட்டனர். ஆமாம் உண்மைதான் பெண்களெல்லாம் ஆண்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாலே அவர்கள் வெளிச்சத்திற்கு வரவில்லை. நீங்கள் எந்த சாதனையாளர்களை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். அவர்கள் ஓன்று பெண்களாக இருப்பார்கள், அல்லது வெற்றி பெற்ற ஆண்களின் பின்னால் இருப்பார்கள். அப்படி உங்களின், என்னின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து பெண்களுமே சாதனையாளர்கள்தான்.

இதையெல்லாம் தாண்டி பிரபலமான, எனக்கு பிடித்த பத்து பெண்களின் தொகுப்பு கீழே.

செல்லம்மாள் பாரதி


மகாகவி பாரதியாரின் மனைவி. ஊர் உலகிற்கெல்லாம் பெண் விடுதலை, சமூக புரட்சி என உரக்க சொன்னவரின் வீட்டை கட்டிகாத்தவர். வீட்டில் சமைக்க அரிசியில்லாமல் அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி வைத்த அரிசியை கூட பாரதி குருவிக்கு கொடுக்கும் போதும் பொறுமையாக அறிவுருத்திய பெண்மணி. இது போன்ற பல சம்பவங்களை கேள்வி பட்டதில் இருந்து எனக்கு பாரதியாரின் படங்களை பார்க்கும் போதெல்லாம் அவரின் வெற்றிக்கு காரணமான செல்லம்மாள்தான் நினைவிற்கு வரும்.

நளினி முருகன்


காதல் கணவனுக்காக கடுமையான ஜெயில் வாழ்க்கையையே திருமணப் பரிசாக ஏற்று இன்னமும் அவரின் மேல காதல் குறையாமல் வாழும் இவரின் மன உறுதிக்காகவே இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்

சோனியாகாந்தி


தான் வளர்ந்த தேசத்தை விட்டு இந்தியாவில் வாழ்வது பெரிய விஷயம்தான் திருமணத்திற்கு பின் இந்தியராக வாழ்ந்தது மட்டுமல்லாமல் தன் காதல் கணவன் மறைவிற்கு பிறகும் இந்தியராகவே வாழ்ந்து அசத்துகிறார். காதலுக்காக தன் நாட்டையே உதறி தள்ளிய, தனக்கு வந்த பிரதமர் பதவியையும் உதறிய இவரை பார்த்தால் வியப்புதான் வருகிறது

டி.பி.ராஜலெட்சுமி

தமிழில் முதல் பெண் இயக்குனர். 1936 ல் மிஸ். கமலா என்ற திரைப்படத்தையும் பின்பு 1938ல் மதுரைவீரன் படத்தையும் இயக்கியுள்ளார் (நன்றி அய்யனார் – இந்த தகவல் அவரின் பதிவில் இருந்துதான் தேடி எடுத்தேன்)

சி. வி. திலகவதி


சதர்ன் ரயில்வேயின் முதல் பெண் ஓட்டுனர். உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் முதல் பெண் ஓட்டுனர் என்றாலும் வரும்காலத்தில் நிறைய பெண் ஓட்டுனர்கள் வருவதற்கு உந்து சக்தியாக இருக்கிறார்.

சாவித்திரி


தர்மபுரியை சேர்ந்த இவர் சென்னை மாநகர பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். கடினமான வேலைகளுக்கு பெண்கள் வரமாட்டார்கள் என்ற மாயையை இவர், திலகவதி மற்றும் பல பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் நிருபித்து வருகிறார்கள்.

கவிஞர் தாமரை


எனக்கு இவரின் திரைபடபாடல்களில் இவரை பிடித்ததை விடவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் இவரின் பேச்சை கேட்டு இவரின் ரசிகன் ஆனேன். என்னா பேச்சு அது...!! ஸான்ஸே இல்லங்க... இப்ப கேட்டாலும் கைதட்ட தோணும்

சானியா மிர்சா


விளையாட்டு துறையில் இந்தியாவில் மிகபிரபலமான பெண் டென்னிஸ் வீராங்கனையாக இவர் உருவெடுத்த விதம் ஆச்சர்யமானது. ஆனால் அதற்கான இவரின் உழைப்புதான் என்னை கவர்ந்த்து.

ராதிகா


ராடான் மீடியா எனற நிறுவனத்தை வெற்றிகரமாக நட்த்தி வருபவர். இந்த துறையில் ஆண்களே நிறுவனத்தை நட்த்த திணறிவரும் இக்காலத்தில் வெற்றிகரமாக நடத்தி, பெண்களால் ஆண்களை விடவும் வெற்றிகரமாக செயல்படமுடியும் என நிருபித்து வருபவர்

ஜெயலலிதா


இவரின் தைரியத்திற்காக பிடிக்கும். தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியை ராணுவ கட்டுகோப்புடன் வழிநடத்தும் ஆளுமைதிறன், நிர்வாகத்திறன் எனக்கு இவரிடம் மிகவும் பிடித்தது.

இந்த தொடர்பதிவை தொடர விரும்புவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.