போன வருடம் தமிழ் புத்தாண்டு சித்திரையிலா அல்லது தையிலா என குழப்பம் வந்தது. இப்போது அது குறித்து அந்தளவிற்கு சலசலப்பு இல்லையென்றாலும் அந்த சமயத்தில் நான் படித்த ஓரு சுவாரஸ்யமான பதிவு இந்த சுட்டியில்
நண்பரும் அவருக்கு மெயில் வந்ததை பதிவாக பகிர்ந்துள்ளார். அதனால் அது தவறாக இருந்தாலும் அது அவர் பிழை இல்லை.
எதுவாக இருந்தாலும் வாழ்த்து சொல்வதே மகிழ்வான விஷயம்தான். ஒருவொருக்கொருவர் பகிரப்படும் வாழ்த்துக்களால் மனம் நிறைகிறது. அதனால் இப்போதும் மற்றும் தையிலும் சொல்லுவோம்.
தமிழர் திருநாள் பொங்கல் சமயத்தில் ஊரில் இருக்க முடியவில்லையே என்ற வருத்தம்தான் அதிகமாக உள்ளது. பொங்கலுக்கு உறவினர் நண்பர் வீடுகளுக்கு இனிப்பு வழங்குவது, மறுநாள் சோத்தை கட்டி கொண்டு செல்லும் பாபநாசம், மணிமுத்தாறு , மற்றும் ஆத்தங்கரை , அருவிகரைகளை நினைத்தால், நிறைய இழக்கிறோம் என தோன்றுகிறது.
இப்போது எதற்கு வருத்தங்களை பற்றி சொல்ல...அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.