இவ்வார ஜுனியர் விகடனில் வெளிவந்த சாரு பேட்டியை விட அவரை குறித்த ஜுவியின் அறிமுகம்தான் பயங்கர சிரிப்பை வரவழைத்த்து. சாருவை பெரியாரிஸ்ட் என அறிமுகப் படுத்தி சிரிப்பு மூட்டி இருந்த்து. எந்த பெரியாரிஸ்ட் சாமியாருக்கு சொம்பு தூக்கியிருக்கிறார். கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாமல் இந்த அடைமொழியை கொடுத்திருக்கிறார் ஜுவி நிருபர்.
இதில் வழக்கம் போல் சாரு சரவெடி காமெடிகளை உதிர்திருக்கிறார். இதுவரை நாலாயிரம் ஏமாந்தேன் என்றவர் இப்போது அவர் இருபத்து ஐந்தாயிரமும் அவர் மனைவி ஒரு இலட்சமும் ஏமாந்து இருக்கிறார் என கூறுகிறார்.
யோவ் நித்தி ஒழுங்கா இப்பவே உண்மையை ஒத்துக்கோ...இல்லேன்னா போக போக அமெளண்ட் ஏறிரும்.
அவரின் அந்த கேள்வியும் பதிலும் கீழே.
கேள்வி:
'நீங்கள் சாமியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் புகழ் புராணம் பாடியதாகவும், இப்போது அதை மறைப்பதற்காக சாமியார் மீது வழக்குப் போடப் போவதாகவும் சொல்லப்படுகிறதே?''
பதில்:
''பணம் சம்பாரிக்கணும்னா நான் எப்படி வேணும் னாலும் சம்பாரிச்சிருப்பேன். எவ்வளவு வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன். சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு பல தடவை அவனுக்கு நான்தான் தண்டம் அழுதிருக்கேன். புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்கு பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு. இதுக்கிடையில கும்ப மேளாவுக்கு போறதுக்காக என் மனைவி ஒரு லட்ச ரூபாயை அவன்கிட்ட கொடுத்திருக்கா. அதையெல்லாம் திருப்பித் தரச் சொல்லித்தான் அவன் மேல நான் வழக்குப் போடப் போறேன். மத்தபடி சில மாமா பயலுக கிளப்பிவிடுற கதைக்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்!''
அடங்கொன்னியா... அடங்கவே மாட்டியான்னு கேட்க தோணுதுங்க... அட அவன விடுங்க.. எழுத்தாளர் எல்லாம் புத்திசாலி, காவி உடுத்தரவனெல்லாம் சாமியார்ன்னு நம்புற ஜனங்க இருக்குற வரைக்கும் இவனுங்க கல்லா கட்டிகிட்டேதான் இருப்பாங்க.
இப்போ நித்தி – ரஞ்சிதா விஷயத்தில் குமுதமும், ஜூவியும் கல்லா கட்ட ஆயத்தமாகி விட்டது. அதை வைத்து இவரும் குமுதம் ரிப்போர்ட்டரில் தொடர் எழுதப்போவதாக கேள்வி. இப்பொதெல்லாம் இவரை விடவும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.
