உறங்காத விழியில்..
இறக்காத கனவுகள்..
ஊமை சண்டாளர்களுக்கு புரியுமா..???!!
ஈழம் குறித்த என் ஒரு கவிதையின் மீள்பதிவு..
ஈழம்..
மனிதன் மரத்து
போனதின் காயம்
மனிதம் மரித்து
போனதின் சாயம்..
போனதின் காயம்
மனிதம் மரித்து
போனதின் சாயம்..
இரத்தங்களற்ற விடியலும்..
யுத்தங்களற்ற பூமியும்
ஏன் ஈழனுக்கு இல்லை?
ஈழப் பிறவிகள் – என்ன
ஈனப் பிறவிகளா?
முன்னொரு காலத்தில்
மனிதன் என்றொரு
உயிரினம் இருந்ததாம்
இப்போது அவன்
எங்கே என்று
தெரிய வில்லை..
நாங்கள். யாரிடம்
போய் புலம்ப ..

