Showing posts with label வீரபாண்டியன் IAS. Show all posts
Showing posts with label வீரபாண்டியன் IAS. Show all posts

Monday, March 29, 2010

வீரபாண்டியன் IAS ஐ பதிவுலகிற்கு வரவேற்போம்

கடந்த வருடம் மே மாதம் ’’ வீரபாண்டியன் IAS - வறுமையை தாண்டிய போராட்டம்...!! புரோட்டா கடையிலிருந்து ஓரு IAS.. !! சாதித்த சட்ட கல்லூரி மாணவர்...!! ’’ என்று ஓரு பதிவிட்டு இருந்தேன். அந்த பதிவை படித்து விட்டு இதை தொடருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.படிக்கும் போது வறுமையின் காரணமாக புரோட்டா கடையில் பகுதி நேரமாக வேலையும் பார்த்து கொண்டு ப்ளஸ் டூவில் மாநில அளவில் ரேங்க் எடுத்ததோடு மட்டுமில்லாமல் IAS ஆகி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை இலட்சியமாக கொண்டு அதனை சாதித்தார். ஆம் IAS தேர்வில் அகில இந்திய அளவில் 53வது இட்த்தை பிடித்தார். வறுமையை தாண்டிய அவரின் போராட்டம் என்னை கவர்ந்ததால் அவ்வாறு பதிவிட்டிருந்தேன். அதன் பிறகு ஆனந்த விகடனில் அவரின் காதல் திருமணம் குறித்து போட்டிருந்த்தை படித்த்தும் சரியான ஆளை பற்றிதான் எழுதியிருக்கிறோம் என நினைத்து கொண்டிருந்தேன். ஏனெனில் காதலுக்காகவும் மனிதர் பல ஆண்டுகள் போராடி வென்றிருக்கிறார்.





இரண்டு நாள்களுக்கு முன்னால் அதே வீரபாண்டியன் IAS யிடம் இருந்து “intha seithiyai veliyittorukkum matrum vaazhthu therivitha anaivarukkum nenchaarntha nanrikal” என்று ஓரு பின்னூட்டம் வந்திருந்தது. பார்த்தவுடன் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. எப்போதும் மொக்கைகளையே எழுதி கொண்டிருக்கும் எனது ப்ளாக்கில் எப்போதாவது இது போல எழுதுவேன். அதற்கும் மொக்கைகளுக்கு உரியதை விட குறைந்த வரவேற்பே இருக்கும். ஆனால் ஓரு வருடம் கழித்தும் இது போல பதிவுகள் கவனிக்கப்படும் எனத்தெரியும் போது உருப்படியான விஷயங்கள் அடிக்கடி எழுதலாம் எனத்தோன்றுகிறது. அப்போதெல்லாம் இது போன்ற பதிவுகளுக்கும் தொடர்ந்து வந்து என்னை ஊக்கமூட்டிய நண்பர்கள் வினோத் மற்றும் கிஷோருக்கும் இந்நேரத்தில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

வீரபாண்டியன் IAS ம் பதிவு எழுத ஆரம்பித்து இருக்கிறார். இரண்டு பதிவு ஆரம்பித்து இருந்தாலும் ஓரு பதிவில் தான் எழுதியிருக்கிறார். அவருடைய பதிவின் முகவரி http://veerapandiang.blogspot.com/ தேர்தலை குறித்து சிறிய கவிதையொன்றை எழுதியிருக்கிறார். வறுமையை தாண்டி போராடிய ஓருவர் பதிவு எழுத ஆரம்பித்து இருக்கிறார். அவரை நாம் ஊக்குவிப்போம். இது அவரின் புரோபைல் பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட்.


தொழில் சமூகசேவை என குறிப்பிட்டு இருக்கிறார். பதிவுலகிற்கு அவரை வரவேற்போம். இவரை போன்றவர்கள் தொடர்ந்து ஆர்வமுடனும், தொடர்ந்த ஊக்கத்துடனும் உழைக்கும் போதுதான் சமூகத்தில் வறுமையோடு போராடி கொண்டிருக்கும் பல பேருக்கு நம்பிக்கை குறையாமல் இருக்கும்.

Sunday, May 10, 2009

வீரபாண்டியன் IAS - வறுமையை தாண்டிய போராட்டம்...!! புரோட்டா கடையிலிருந்து ஓரு IAS.. !! சாதித்த சட்ட கல்லூரி மாணவர்...!!





வறுமையான சூழலில் வளர்ந்து , மாநகராட்சி பள்ளியில் படித்து, பகுதி நேரமாக புரோட்டா கடையில் வேலை பார்த்து தற்போது சட்ட கல்லூரியில் பி எல் இரண்டாமாண்டு படித்து வருகிறார். குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாக பள்ளி படிக்கும் போது பள்ளி முடிந்ததும் மாலை 4 மணி முதல் 11 மணி வரையில் புரோட்டா கடையில் வேலை பார்த்து வந்தார். தற்போது IAS தேர்வில் இந்திய அளவில் 53வது இடம். சாதனை.. !! மாபெரும் சாதனை... !!! முதலில் வாழ்த்துக்கள் வீரபாண்டியன் அவர்களே..




இந்த மாபெரும் சாதனைக்கு சொந்தகாரர் வீரபாண்டியன் மதுரை மண்ணின் மைந்தர். பத்தாம் வகுப்புவரை மதுரை செனாய் மாநகராட்சி பள்ளியில் படித்திருக்கிறார். பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றிருக்கிறார். சட்டகல்லூரியில் படித்து கொண்டே அண்ணா நகரில் ஓரு தனியார் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

வீரபாண்டியனின் அப்பா கணேசன் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். அம்மா பெருமாளக்காள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார். தம்பி வீரமணி சினிமாவில் உதவி ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து வருகிறார்.

வறுமையான குடும்ப சூழல், மாநகராட்சி பள்ளியில் படிப்பு, வறுமை காரணமாக மாலை 4 மணி முதல் 11 மணி வரை புரோட்டா கடையில் வேலை... இப்படி பட்ட சூழலை தாண்டி சாதனை படைத்தது பல இளைஞர்களுக்கு நம்பிக்கையை விதைத்திருக்கிறார். ஏழைகுடும்பத்தில் பிறந்து படிக்கும் போதே பெற்றோரின் கஷ்டத்தில் பங்கெடுத்து தடைகளை தகர்த்து வெற்றி பெற்றுள்ளார். நிச்சயமாக இவர் பதவிக்கு வந்தால் மேலும் பல நன்மைகள் செய்வார் என நம்பிக்கை பிறக்கிறது. விடாமுயற்சியால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு வீரபாண்டியன் ஓரு சிறந்த முன் உதாரணம்.


இதைவிட பெரிய ஆச்சர்யம் அவரின் பெற்றோர்களின் பேட்டி. வீரபாண்டியன் அவர்களின் தந்தை திரு. கணேசன் அவர்கள் ஓரு பத்திரிக்கை பேட்டியில் கூறியது

நானும் எனது மனைவியும் கல்வியறிவு பெறாதவர்கள். வீரபாண்டியன் சிறு வயதிலிருந்தே படிப்பில் முதலிடம் பெற்று வந்தார். அவர் IAS ஆக வேண்டும் என எண்ணினேன்

இவர் பாத்திர வியாபாரம் செய்து வருகிறாம். எத்தனை உயர்வு இவரின் பாத்திரம்.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..


டிஸ்கி.:


இந்த தேர்விற்கு மூன்று லட்சத்து 18 ஆயிரத்து 843 பேர் விண்ணப்பித்தனர். முதன்மை தேர்வெழுதிய ஓரு லட்சத்து 67 ஆயிரத்து 35 பேரில், 11 ஆயிரத்து 849 பேர் எழுத்து தேர்விற்கு தேர்வு செய்ய பட்டனர். அதில் 625 ஆண்கள், 166 பெண்கள் என மொத்தம் 791 பேர் சிவில் சர்வீஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் 96 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள். அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.




நண்பர் ஏகலைவன் வலைதளம் மற்றும் தினமலர் செய்திகளில் இருந்து தகவல்கள் திரட்டபட்டன. நன்றி ஏகலைவன், தினமலர்.

http://egalivan.blogspot.com/2009/05/blog-post_08.html

http://www.dinamalar.com/topnewsdetail.asp?News_id=1138&cls=row4&ncat=