Sunday, May 10, 2009

வீரபாண்டியன் IAS - வறுமையை தாண்டிய போராட்டம்...!! புரோட்டா கடையிலிருந்து ஓரு IAS.. !! சாதித்த சட்ட கல்லூரி மாணவர்...!!

வறுமையான சூழலில் வளர்ந்து , மாநகராட்சி பள்ளியில் படித்து, பகுதி நேரமாக புரோட்டா கடையில் வேலை பார்த்து தற்போது சட்ட கல்லூரியில் பி எல் இரண்டாமாண்டு படித்து வருகிறார். குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாக பள்ளி படிக்கும் போது பள்ளி முடிந்ததும் மாலை 4 மணி முதல் 11 மணி வரையில் புரோட்டா கடையில் வேலை பார்த்து வந்தார். தற்போது IAS தேர்வில் இந்திய அளவில் 53வது இடம். சாதனை.. !! மாபெரும் சாதனை... !!! முதலில் வாழ்த்துக்கள் வீரபாண்டியன் அவர்களே..
இந்த மாபெரும் சாதனைக்கு சொந்தகாரர் வீரபாண்டியன் மதுரை மண்ணின் மைந்தர். பத்தாம் வகுப்புவரை மதுரை செனாய் மாநகராட்சி பள்ளியில் படித்திருக்கிறார். பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றிருக்கிறார். சட்டகல்லூரியில் படித்து கொண்டே அண்ணா நகரில் ஓரு தனியார் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

வீரபாண்டியனின் அப்பா கணேசன் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். அம்மா பெருமாளக்காள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார். தம்பி வீரமணி சினிமாவில் உதவி ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து வருகிறார்.

வறுமையான குடும்ப சூழல், மாநகராட்சி பள்ளியில் படிப்பு, வறுமை காரணமாக மாலை 4 மணி முதல் 11 மணி வரை புரோட்டா கடையில் வேலை... இப்படி பட்ட சூழலை தாண்டி சாதனை படைத்தது பல இளைஞர்களுக்கு நம்பிக்கையை விதைத்திருக்கிறார். ஏழைகுடும்பத்தில் பிறந்து படிக்கும் போதே பெற்றோரின் கஷ்டத்தில் பங்கெடுத்து தடைகளை தகர்த்து வெற்றி பெற்றுள்ளார். நிச்சயமாக இவர் பதவிக்கு வந்தால் மேலும் பல நன்மைகள் செய்வார் என நம்பிக்கை பிறக்கிறது. விடாமுயற்சியால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு வீரபாண்டியன் ஓரு சிறந்த முன் உதாரணம்.


இதைவிட பெரிய ஆச்சர்யம் அவரின் பெற்றோர்களின் பேட்டி. வீரபாண்டியன் அவர்களின் தந்தை திரு. கணேசன் அவர்கள் ஓரு பத்திரிக்கை பேட்டியில் கூறியது

நானும் எனது மனைவியும் கல்வியறிவு பெறாதவர்கள். வீரபாண்டியன் சிறு வயதிலிருந்தே படிப்பில் முதலிடம் பெற்று வந்தார். அவர் IAS ஆக வேண்டும் என எண்ணினேன்

இவர் பாத்திர வியாபாரம் செய்து வருகிறாம். எத்தனை உயர்வு இவரின் பாத்திரம்.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..


டிஸ்கி.:


இந்த தேர்விற்கு மூன்று லட்சத்து 18 ஆயிரத்து 843 பேர் விண்ணப்பித்தனர். முதன்மை தேர்வெழுதிய ஓரு லட்சத்து 67 ஆயிரத்து 35 பேரில், 11 ஆயிரத்து 849 பேர் எழுத்து தேர்விற்கு தேர்வு செய்ய பட்டனர். அதில் 625 ஆண்கள், 166 பெண்கள் என மொத்தம் 791 பேர் சிவில் சர்வீஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் 96 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள். அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
நண்பர் ஏகலைவன் வலைதளம் மற்றும் தினமலர் செய்திகளில் இருந்து தகவல்கள் திரட்டபட்டன. நன்றி ஏகலைவன், தினமலர்.

http://egalivan.blogspot.com/2009/05/blog-post_08.html

http://www.dinamalar.com/topnewsdetail.asp?News_id=1138&cls=row4&ncat=

24 comments:

vinoth gowtham said...

வீரபாண்டி தன்னுடய சிந்தனையாலும் செயலாலும் உழைப்பாலும் உயர்ந்து விட்டார்..
வாழ்த்துக்கள் அனைவருக்கும்..

Kanna said...

நன்றி வினோத்.

வருகைக்கும் தொடர் ஆதரவிற்கும்....

உனது இன்றைய பதிவு மிக அருமை...கிஷோரும் இன்று கலக்கியிருக்கிறார்....

தொடர்ந்து கலக்குங்கள்

KISHORE said...

வீரபாண்டியனுக்கு வாழ்த்துக்கள்...
நன்றி கண்ணா இது போன்ற திறமைசாலிகளை உலகிற்கு வெளிபடுத்துவதற்கு ..

KISHORE said...

வீரபாண்டியனுக்கு வாழ்த்துக்கள்...
நன்றி கண்ணா இது போன்ற திறமைசாலிகளை உலகிற்கு வெளிபடுத்துவதற்கு ..

Kanna said...

நன்றி கிஷோர்

வருகைக்கும் கருத்துக்கும்

தீப்பெட்டி said...

மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வெற்றி அவருடையது. அவருடைய செயல்பாடுகள் எவ்விதம் அமையும் என்பதை வருங்காலம் பதிவு செய்யும்...

Joe said...

வீரபாண்டியனுக்கு வாழ்த்துக்கள்!

Renga said...

நல்ல பதிவு...

எல்லோரும் முத்துகுமரன் என்று முட்டாள்தனமாக புலம்பி கொண்டு அவரின் போட்டோவையும் போட்டு ஒப்பாரி வைக்கும் வேளையில்.. நீங்கள் சற்று மாறுபட்டு சாதித்த வீரபாண்டியனை பற்றி பதிவிட்டு... GREAT!!!!!

Kanna said...

நன்றி தீப்பெட்டி, ஜோ, ரங்கா

வருகைக்கும், கருத்துக்கும்...

Kanna said...

அன்பு ரங்கா,

முத்துகுமார் பற்றிய உங்கள் கருத்தும் என் கருத்தும் மாறுபட்டவை...

முத்துகுமாரை பற்றி நாம் புலம்பாவிட்டால்தான் முட்டாள்கள் என்பது என் தாழ்மையான கருத்து...

அப்பாவி தமிழன் said...

உங்க bidvertiser ல குத்திட்டேன் தல நேரம் கிடைக்கறப்போ ( வாரம் ஒரு தடவ ) நம்ம தளத்திலயும் வந்து குத்திட்டு போங்க

சிறகுகள் said...

கண்ணா தங்கள் பதிவு நச் என்று உள்ளது... வாழ்த்துகள்...தொடர்ந்து சாதனையாளர்கள் பட்டியல் தொடரட்டும்...ஊக்கம் தருகிறது உங்கள் பதிவு...

thevanmayam said...

வசதி இருந்தும் பலர் படிப்பதில்லை!!!
உண்மையான சாதனையாளர் இவர்தான்!!

நெல்லைத்தமிழ் said...

வறுமையான குடும்ப சூழல், மாநகராட்சி பள்ளியில் படிப்பு, வறுமை காரணமாக மாலை 4 மணி முதல் 11 மணி வரை புரோட்டா கடையில் வேலை... இப்படி பட்ட சூழலை தாண்டி சாதனை படைத்தது பல இளைஞர்களுக்கு நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.

/////
இதமாதிரி வர்ற நாலு பேரு இருந்தா போதும்னே... இவங்களை நாடாள சொன்னா போதும்... அரசியல்வாதிங்களை வீட்டுக்கு அனுப்பிடலாம்
/////

Kanna said...

வாங்க அப்பாவி தமிழன்,


bidvertiserல குத்தினதுக்கு நன்றி, நானும் அங்க வந்து குத்தியாச்சு....

அடிக்கடி வந்து குத்துங்க...

ஆனா எனக்கு ஒரு சந்தேகம்...இப்பிடி குத்தினா கண்டுபிடிச்சு காசை குறைக்க மாட்டங்கல்லா....

Kanna said...

வாங்க சிறகுகள் ,

உங்க சிறகை என் தளத்தில் விரித்தற்கு வாழ்த்துக்கள்..

Kanna said...

வாங்க thevanmayam

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்....

//வசதி இருந்தும் பலர் படிப்பதில்லை!!!
உண்மையான சாதனையாளர் இவர்தான்!!//

உண்மை....அதனால்தான் இந்த பதிவு

Kanna said...

வாங்க நெல்லைதமிழ்,

உங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.....

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...

அப்பாவி தமிழன் said...

//////ஆனா எனக்கு ஒரு சந்தேகம்...இப்பிடி குத்தினா கண்டுபிடிச்சு காசை குறைக்க மாட்டங்கல்லா....//

அடிக்கடி குத்தினா எதாவது பிரச்னை வரும் எப்போயாவது இருந்துட்டு பத்து நாளைக்கு ஒரு தடவ குத்தினா பிரச்னை வராது. சரி நீங்க எவ்ளோ சம்பாதிச்சு இருக்கிங்க ?

Dr.P.Kandaswamy said...

மகத்தான சாதனை. மிகுந்த பாராட்டுக்குரியது

veerapandian said...

intha seithiyai veliyittorukkum matrum vaazhthu therivitha anaivarukkum nenchaarntha nanrikal...

கண்ணா.. said...

@Dr.P.Kandaswamy

வாங்க டாக்டர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

@veerapandian

வாங்க வீரபாண்டியன் IAS,

நீங்கள் இதை பார்த்து பின்னூட்டமும் இட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் நன்றியை அனைவருக்கும் தெரிவிக்கிறேன்

நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அருமை கண்ணா,
மிகவும் பெருமையாயிருக்கு,