Friday, May 29, 2009

பிரபல பதிவரின் உண்மைமுகம்…

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


திருப்பதி ஆண்டவரை நினைத்து ஃபீல் பண்ணி ’வெங்கடேஷ்’ என்று அப்பா வைச்சது.எனக்கு பிடிக்கும் ஆனா இப்ப அப்பாதான் ஏன் வைச்சோம்னு ஃபீல் பண்ணுறதா கேள்வி


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

ஒரு வருடம் முன்பு…

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும்..

ஏன்னா நான் என்ன எழுதியிருக்கேன்னு வாத்தியாருக்கே புரியாம ஏதோ பக்கம் பக்கமா எழுதியிருக்கான்னு புல்லா அடிச்சிட்டு வஞ்சகமே இல்லாமல் ஒன்னு ரெண்டுன்னு மார்க் போட்டு பார்டர்ல பாஸ் செஞ்சதுக்கு காரணமான என் எழுத்து ரொம்ப பிடிக்கும் (ம்..டாக்டருக்கு படிச்சிருக்கலாம்..)

4).பிடித்த மதிய உணவு என்ன?

பிடிச்சது கிடைக்குதான்னு பாக்குறத விட கிடைக்குறத சாப்பிடனும்னு வள்ளில ரஜினி சொல்லலை சில்லி பய நானே சொல்லிகிட்டது (எது கிடைச்சாலும்…..களத்துல இறங்கிற வேண்டியதுதான்.)

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

எளிதில் பழகி விடுவேன்.. ஆனால் நெருக்கமான நட்பாக ரொம்ப காலம் எடுக்கும்..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டும் பிடிக்கும். அருவி குளியல் மிகவும் பிடிக்கும்…பாபநாசம், மணிமுத்தாறு போன்ற கூட்டமில்லாத இடங்களில் நெடுநேரம் குளிக்க பிடிக்கும்


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள் தான்..

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: தன்னம்பிக்கை.

பிடிக்காத விஷயம் : பிடிச்ச விஷயம் என்னனு கேட்டா. .. கொஞ்சம் கூட மன சாட்சியே இல்லாம தன்னம்பிக்கைன்னு பொய் சொல்லுறது9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடிச்ச/பிடிக்காத விஷயம்: ஆக்ரமிப்பு. என்னை முழுசா ஆக்ரமித்திருப்பது

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?..

என் தங்கை பொண்ணு ஐஸ்குட்டி பக்கத்துல இல்லயேன்னு ரொம்ப ஃபீல் பண்ணுறேன்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெள்ளையா..பழுப்பான்னு தெரியாத ‘ஙே’னு பேய் முழி முழிச்சிட்டு இருக்கற ஒரு அழுக்கு பனியனும்…கருப்பு கலர் டவுசரும்

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

’உன் பார்வையில் பையித்தியமானேன்…
உன் வார்த்தையில் வாக்கியமானேன்…
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்.. மயங்கினேன்...’

சம்திங்.. சம்திங் படத்திலிருந்து… எனக்கு ரொம்ப பிடிச்ச பாடலும் கூட

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு.. எத்தனை வர்ணங்கள் இருந்தாலும் ஒரு சிறிய கரும்புள்ளிதான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது

14.பிடித்த மணம்?

அம்மாவின் கைமணம் (எங்க போனாலும் என் புத்தி சாப்பாட்டை தவிர வேறபக்கம் போகமாட்டுக்கு)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

தீப்பெட்டி @ கணேஷ்குமார்: சமீபத்தில் எழுத ஆரம்பித்து இருக்கிறார்.. தெளிவான அலசல் மற்றும் பின்னூட்டங்களுக்கு சொந்தகாரர்..

ஜோ..: பல பின்னூட்டங்களில் என் கருத்தும் இவர் கருத்தும் ஒத்து போவதின் மூலம் கிடைத்தது இவரின் அறிமுகம். மிக அருமையாக எழுதிவருகிறார்…பின்னூட்டங்களில் இவரின் தைரியம் மற்றும் நேர்மை எனக்கு மிகவும் பிடிக்கும்..

என்பக்கம் @ பிரதீப் அமீரகவாசி…ஒரு கம்பெனியை நடத்தி வருகிறார். துபாய் கட்டிட துறையை பற்றிய பல தகவல்களை பதிவிட்டு வருகிறார்…

நான் மேலே குறிப்பிட்ட மூன்று பேரும் இன்னும் சில நாள்களில் பதிவுலகில் தவிர்க்க முடியாத ஆட்களாக இருப்பார்கள்16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

நண்பன் வினோத்தின் பதிவில் வந்து குங்குமத்திலும் பிரசுரமான “சில பருவங்கள் சில பார்வைகள்” ரொம்ப பிடிக்கும்
எல்லா தலைப்பிலும் எழுத கூடிய திறமை உள்ளவர். நல்ல நண்பர். என் சில காராமான பதிவால் கொஞ்சம் எதிர்ப்புகளை எதிர்கொண்டபோது என் பக்கம் நின்றவர்..பதிவின் மூலம் கிடைத்த சிறந்த நண்பன்

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட், செஸ், சீட்டுகட்டு

18.கண்ணாடி அணிபவரா?

இது வரை இல்லை.. ஏன்னா சின்ன வயசுல இருந்தே ரொம்ப படிக்கறது இல்ல…. கதை புக்குன்னாலும் படக்கதை மட்டும்தான்... என் ஏரியா..

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

இயல்பான வாழ்க்கையையும், சிறந்த திரைக்கதையையும் ஒருங்கிணைத்த திரைபடங்கள் மிகவும் பிடிக்கும்


20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன்..

21.பிடித்த பருவ காலம் எது?

மார்கழி காலை…

சுகமான தூக்கத்தின் நடுவில் அம்மா என்னை திட்டி எழுப்பி அவரை கோவிலில் கொண்டு போய் விடச்சொல்லி என்னிடம் நடத்தும் அழகான யுத்தம்… இந்த காலையில்தான்


22. படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

ஷிவ் கேராவின் “யு கேன் வின்”

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அடிக்கடி. எப்போதெல்லாம் என்னை கவரும் படங்கள் கிடைக்கிறதோ அப்போதெல்லாம்….

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் : நாங்க இந்த பேங்க்ல இருந்து பேசுறோம், உங்களுக்கு லோன் வேணுமா என் கூவும் கிளிகளின் சத்தம்

பிடிக்காத சப்தம்: வாங்குன லோனை கட்டச்சொல்லி பேசும் ஆபிஸரின் சத்தம்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அமீரகம் தான்….

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இருந்தா சொல்ல மாட்டனா??

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

இதையெல்லாம் படிச்சிட்டு தமிழிஷ், தமிழ்மணத்தில ஓட்டும் போடாம…கமெண்டும் போடாம போகுற ஆட்களின் மனநிலையை என்னால் ஏற்று கொள்ளவே முடியாது…

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பேறித்தனம்..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

பெளர்ண்மி இரவில்.. அம்மா பிசைந்து தரும் அந்த பழைய சோறுடன் ஊரில் என் வீட்டு மொட்டைமாடி

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

நான் நானாய் இருக்கனும்னு ரொம்ப ஆசை.. முடியவில்லை

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

நண்பர்களோடு ஊர் சுற்றுவது

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..

இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, அன்பு, பாசம், நட்பு, பிரிவு துரோகம், விரக்தி, வலி, உழைப்பு என அனைத்தையும் காண இறைவன் எனக்களித்த வாய்ப்பு..டிஸ்கி:


பிரபலபதிவர் பற்றின்னு டைட்டில் குடுத்திட்டு உன்னை பற்றியே இருக்கேன்னு சின்னபுள்ளதனமா நீங்க கேப்பிங்கன்னுதான் ஹிட் கவுண்டருக்கு சூடு வச்சு 5 லட்சம் ஆக்கிட்டேன்.. 5 லட்சத்தை தாண்டியதுக்கும் வாழ்த்திட்டு போங்க மக்களே….

46 comments:

கனககோபி said...

//இப்ப அப்பாதான் ஏன் வைச்சோம்னு ஃபீல் பண்ணுறதா கேள்வி//
இது நிறைய அப்பாமார் கவலைப்பட்ற விசயம்...
:)

Mrs.Menagasathia said...

//இதையெல்லாம் படிச்சிட்டு தமிழிஷ், தமிழ்மணத்தில ஓட்டும் போடாம…கமெண்டும் போடாம போகுற ஆட்களின் மனநிலையை என்னால் ஏற்று கொள்ளவே முடியாது…//

நான் தான் பர்ஸ்ட் போல..

இதுக்காகவே ஒரு பதிவு போடுறேன்.இப்பதான் உங்க ப்ளாக் பக்கம் வந்து உங்க பதிவை படித்தேன்.நல்லா சொல்லிருக்கிங்க உங்களை பத்தி...[ஆனா என்ன சொன்னீங்கன்னு எனக்கு ஒன்னுமே புரியல ஹி..ஹி..]

மதிபாலா said...

அடப்பாவிகளா....

இப்படியும் ஒரு வெளையாட்டா

Suresh said...

உங்களை பற்றி தெரிந்து கொள்ள உதவியது நண்பா நேர்மையான பதில்

/அடப்பாவிகளா....

இப்படியும் ஒரு வெளையாட்டா//

ஹா ஹா

Suresh said...

//
தீப்பெட்டி @ கணேஷ்குமார்: சமீபத்தில் எழுத ஆரம்பித்து இருக்கிறார்.. தெளிவான அலசல் மற்றும் பின்னூட்டங்களுக்கு சொந்தகாரர்..

ஜோ..: பல பின்னூட்டங்களில் என் கருத்தும் இவர் கருத்தும் ஒத்து போவதின் மூலம் கிடைத்தது இவரின் அறிமுகம். மிக அருமையாக எழுதிவருகிறார்…பின்னூட்டங்களில் இவரின் தைரியம் மற்றும் நேர்மை எனக்கு மிகவும் பிடிக்கும்..

என்பக்கம் @ பிரதீப் அமீரகவாசி…ஒரு கம்பெனியை நடத்தி வருகிறார். துபாய் கட்டிட துறையை பற்றிய பல தகவல்களை பதிவிட்டு வருகிறார்…

நான் மேலே குறிப்பிட்ட மூன்று பேரும் இன்னும் சில நாள்களில் பதிவுலகில் தவிர்க்க முடியாத ஆட்களாக இருப்பார்கள்/

நீங்கள் அழைத்த் முவரும் நம் நண்பர்களே வாழ்த்துகள்

Suresh said...

//இதையெல்லாம் படிச்சிட்டு தமிழிஷ், தமிழ்மணத்தில ஓட்டும் போடாம…கமெண்டும் போடாம போகுற ஆட்களின் மனநிலையை என்னால் ஏற்று கொள்ளவே முடியாது…/

ஹீ ஹீ

கோவி.கண்ணன் said...

//பிரபலபதிவர் பற்றின்னு டைட்டில் குடுத்திட்டு உன்னை பற்றியே இருக்கேன்னு சின்னபுள்ளதனமா நீங்க கேப்பிங்கன்னுதான் ஹிட் கவுண்டருக்கு சூடு வச்சு 5 லட்சம் ஆக்கிட்டேன்//

:)

ம் நடத்துங்க !

Kanna said...

வாங்க கனககோபி

ஸேம் ப்ளட்தானா....

வருகைக்கும் கமெண்டிற்கும் நன்றிவாங்க Mrs.Menagasathia,


எனக்கே ஓண்ணும் புரியல...அப்புறம் எப்பிடி உங்களுக்கு புரியும்..ஹி ஹி

படிச்சிட்டு அப்பிடியே போகாம கமெண்ட் போட்டதற்கு மிக்க நன்றி

Kanna said...

வாங்க மதிபாலா,

நமக்கெல்லாம் மீட்டர், கவுண்டர்னு பாத்தாலே சூடு வைக்கத்தான் தோணுது.....

வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி

KISHORE said...

1.திருப்தி வெங்கியே வருதபடுறதா கேள்வி...

2. பலருக்கும் பல காரணம்...

3. என்னை போலவே இருக்கீங்க...
8. இதாங்க உங்க கிட்ட பிடிச்சது..
11. என்ன கலர் இருந்த என்ன கண்ணா... டிரஸ் போட்டு இருக்கோம் இல்ல அதன் முக்கியம்.
24. எப்படி இப்படி? உள்ள இருக்குறது தான வருது...
32. அருமை...(இதை விட வேறு அழகான வார்த்தை எனக்கு தோனல...)

Kanna said...

சுரேஷ் நண்பா,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

//நீங்கள் அழைத்த முவரும் நம் நண்பர்களே வாழ்த்துகள்//

நமக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு நண்பர்கள்..

Kanna said...

வாங்க கோவி கண்ணன்,

என் தளத்திற்கு உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல

KISHORE said...

//பிரபலபதிவர் பற்றின்னு டைட்டில் குடுத்திட்டு உன்னை பற்றியே இருக்கேன்னு சின்னபுள்ளதனமா நீங்க கேப்பிங்கன்னுதான் ஹிட் கவுண்டருக்கு சூடு வச்சு 5 லட்சம் ஆக்கிட்டேன்.. 5 லட்சத்தை தாண்டியதுக்கும் வாழ்த்திட்டு போங்க மக்களே….//

இது... கலக்கல்.. இதுக்குமேல யாராவது நாக்கு மேல பல்ல போட்டு கேள்வி கேப்பாங்களா ?

Kanna said...

வாங்க கிஷோர்,


//1.திருப்தி வெங்கியே வருதபடுறதா கேள்வி...//

அது உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா..?!!


//2. பலருக்கும் பல காரணம்...//

உண்மை

//3. என்னை போலவே இருக்கீங்க...//

ஸேம் ப்ளட்தானா....

//8. இதாங்க உங்க கிட்ட பிடிச்சது..//

இதுதான் உங்ககிட்டயும் புடிச்சது


//11. என்ன கலர் இருந்த என்ன கண்ணா... டிரஸ் போட்டு இருக்கோம் இல்ல அதன் முக்கியம்.//


இப்பிடி கம்பெனி சீக்ரெடை பப்ளிக்கா சொல்ல கூடாது

//24. எப்படி இப்படி? உள்ள இருக்குறது தான வருது...
32. அருமை...(இதை விட வேறு அழகான வார்த்தை எனக்கு தோனல...)//

நன்றி நன்றி நன்றி கிஷோர்

சென்ஷி said...

//’உன் பார்வையில் பையித்தியமானேன்…
உன் வார்த்தையில் வாக்கியமானேன்…
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்.. மயங்கினேன்...’//

எனக்கு மிகப்பிடித்த பாடலில் ஒன்று..

:-)

தீப்பெட்டி said...

அழைப்பிற்கு நன்றி பாஸ்,

சாய்ஸ் கொடுத்திருந்துருக்கலாம்...

பரவாயில்ல.. பரிட்சை எழுதுறேன்..

எப்படியாவது பாஸ் மார்க் போட்டுருங்க

vinoth gowtham said...

//பிடிச்ச விஷயம்: தன்னம்பிக்கை.

பிடிக்காத விஷயம் : பிடிச்ச விஷயம் என்னனு கேட்டா. .. கொஞ்சம் கூட மன சாட்சியே இல்லாம தன்னம்பிக்கைன்னு பொய் சொல்லுறது//

நல்ல காமெடி..:))

//வெள்ளையா..பழுப்பான்னு தெரியாத ‘ஙே’னு பேய் முழி முழிச்சிட்டு இருக்கற ஒரு அழுக்கு பனியனும்…கருப்பு கலர் டவுசரும்//

இது அதை விட காமெடி..

//கருப்பு.. எத்தனை வர்ணங்கள் இருந்தாலும் ஒரு சிறிய கரும்புள்ளிதான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது//

பக்கா..

//தீப்பெட்டி @ கணேஷ்குமார்: சமீபத்தில் எழுத ஆரம்பித்து இருக்கிறார்.. தெளிவான அலசல் மற்றும் பின்னூட்டங்களுக்கு சொந்தகாரர்..//

எனக்கு இவற்றில் கணேஷின் எழுத்துக்கள் தெரியும்.. நல்ல விரிவாக அலசி எழுத கூடியவர்..
சொன்ன மாதிரி இன்னும் கொஞ்ச நாள்ல பிளாக்கர் உலகில் ஒரு தவிர்க்க முடியாத இடத்தை பிடிப்பார்..வாழ்த்துக்கள்..

ஜோ மற்றும் பிரதீப் இருவர்க்கும் வாழ்த்துக்கள்..

//எல்லா தலைப்பிலும் எழுத கூடிய திறமை உள்ளவர். நல்ல நண்பர். என் சில காராமான பதிவால் கொஞ்சம் எதிர்ப்புகளை எதிர்கொண்டபோது என் பக்கம் நின்றவர்..பதிவின் மூலம் கிடைத்த சிறந்த நண்பன்//

ரொம்பா நன்றி நண்பா..

//சுகமான தூக்கத்தின் நடுவில் அம்மா என்னை திட்டி எழுப்பி அவரை கோவிலில் கொண்டு போய் விடச்சொல்லி என்னிடம் நடத்தும் அழகான யுத்தம்… இந்த காலையில்தான்//

உங்க வீடுலயுமா..எங்க அம்மாவும் தான்..


//பிரபலபதிவர் பற்றின்னு டைட்டில் குடுத்திட்டு உன்னை பற்றியே இருக்கேன்னு சின்னபுள்ளதனமா நீங்க கேப்பிங்கன்னுதான் ஹிட் கவுண்டருக்கு சூடு வச்சு 5 லட்சம் ஆக்கிட்டேன்.. 5 லட்சத்தை தாண்டியதுக்கும் வாழ்த்திட்டு போங்க மக்களே…. //

இது தான் ஹைலைட்டே:)))

vinoth gowtham said...

ஆனா வெங்கி நீங்க இன்னும் நிறையா எழுத வேண்டும்..நான் உங்களிடம் நிறையா பதிவுகள் எதிர்ப்பார்கிறேன்..:)

Kanna said...

-----------------------------------
சென்ஷி சொன்னது…
//’உன் பார்வையில் பையித்தியமானேன்…
உன் வார்த்தையில் வாக்கியமானேன்…
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்.. மயங்கினேன்...’//

எனக்கு மிகப்பிடித்த பாடலில் ஒன்று..

:-)
--------------------------------

வாங்க சென்ஷி,

உங்கள் கருத்திற்கு நன்றிகள் பல..

ம்..எனக்கும் அந்த ஆரம்ப வரிகளுக்காகவே இந்த பாடல் மிகவும் பிடித்து போனது...

என் பக்கம் said...

அருமையான பதிவு நன்பரே

ஆழமாக உணர முடிந்தது.....

நன்றி

Kanna said...

//தீப்பெட்டி கூறியது...
அழைப்பிற்கு நன்றி பாஸ்,

சாய்ஸ் கொடுத்திருந்துருக்கலாம்...

பரவாயில்ல.. பரிட்சை எழுதுறேன்..

எப்படியாவது பாஸ் மார்க் போட்டுருங்க
//

வாங்க தீப்பெட்டி,

நானும் இதே கேள்வியைத்தான் வினோத்திடம் கேட்டேன்..

என்பதிவை பாத்துமா உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை...

சும்மா தைரியமா எழுதுங்க பாஸ்..

Kanna said...

----------------------------------
//சுகமான தூக்கத்தின் நடுவில் அம்மா என்னை திட்டி எழுப்பி அவரை கோவிலில் கொண்டு போய் விடச்சொல்லி என்னிடம் நடத்தும் அழகான யுத்தம்… இந்த காலையில்தான்//

உங்க வீடுலயுமா..எங்க அம்மாவும் தான்..
----------------------------------

வாங்க வினோத்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி,

இந்த தொடர்பதிவில் என்னை அழைத்ததற்கும் நன்றி..

ஆமால்ல அம்மா கூட நடக்கும் சின்ன சின்ன செல்ல சண்டைகளை மிஸ் பண்றோம்ல...

Kanna said...

----------------------------------
vinoth gowtham கூறியது...
ஆனா வெங்கி நீங்க இன்னும் நிறையா எழுத வேண்டும்..நான் உங்களிடம் நிறையா பதிவுகள் எதிர்ப்பார்கிறேன்..:)
----------------------------------

கண்டிப்பா வினோத்

நிறைய எழுத முயற்சி செய்யுறேன்...


நிறைய மொக்கை போட்டு உங்களையெல்லாம் ஒரு வழி பண்ணாம விட போறதில்ல

Kanna said...

// என் பக்கம் கூறியது...
அருமையான பதிவு நன்பரே

ஆழமாக உணர முடிந்தது.....

நன்றி
//

வாங்க என் பக்கம் பிரதீப்,

நன்றிகள் வருகைக்கும் கருத்திற்கும்..

நான் உங்களையும் மாட்டி விட்ருக்கேன்...

சீக்கிரம் பதிலை ரெடி பண்ணவும்

கலையரசன் said...

அடங்கொக்கா மக்கா! அதுகுள்ளயா 32 கேள்விக்கும் பதில் எழுதிட்ட?
நான்தான் லேட்டா?

கலையரசன் said...

உன்கிட்ட தப்பிச்சி கிஷோர்கிட்ட மாட்டிடேன் மாப்பு!

//ஒரு வருடம் முன்பு…//
ஏன் அழுத?

//(ம்..டாக்டருக்கு படிச்சிருக்கலாம்..)//
எல்லாம் டாக்டர் ஆனா? யாருதான் பேஷன்ட் ஆகறதாம்?

//வெள்ளையா..பழுப்பான்னு தெரியாத ‘ஙே’னு பேய் முழி
முழிச்சிட்டு இருக்கற ஒரு அழுக்கு பனியனும்..//
தொவச்சா கிழிஞ்சிடுமோ?

Kanna said...

// கலையரசன் கூறியது...
அடங்கொக்கா மக்கா! அதுகுள்ளயா 32 கேள்விக்கும் பதில் எழுதிட்ட?
நான்தான் லேட்டா? //

மக்கா நான் வந்து கிஷோர் கூடவே போடவேண்டியது....

என்னோட சோம்பேறிதனத்தாலதான் இன்னைக்கு போட்டேன்..

அதுல பாதி காப்பி பேஸ்ட்..

Kanna said...

கலையரசன் கூறியது...
----------------------------------
உன்கிட்ட தப்பிச்சி கிஷோர்கிட்ட மாட்டிடேன் மாப்பு!
-----------------------------------
நாங்களெல்லாம் உன்னை தான் பலி ஆடுன்னு முடிவு பண்ணி எழுதவே ஆரம்பிக்கிறோம்.

என்ன இருந்தாலும் என் கோட்டா பாக்கி இருக்கு மாப்பு ...ஏதாவது விஷயம் சிக்கட்டும்..


----------------------------------

//ஒரு வருடம் முன்பு…//
ஏன் அழுத?
-----------------------------------


இதுவரைக்கும் யாருமே கேக்கலையே...நீ மட்டும் எதுக்கு கேக்கற மாப்பு...


----------------------------------
//(ம்..டாக்டருக்கு படிச்சிருக்கலாம்..)//
எல்லாம் டாக்டர் ஆனா? யாருதான் பேஷன்ட் ஆகறதாம்?
-----------------------------------

வேற யாரு ...நீதான்..............

-----------------------------------
//வெள்ளையா..பழுப்பான்னு தெரியாத ‘ஙே’னு பேய் முழி
முழிச்சிட்டு இருக்கற ஒரு அழுக்கு பனியனும்..//
தொவச்சா கிழிஞ்சிடுமோ?
----------------------------------

அழுக்குலதான் மாப்பு துணியே ஒட்டிகிட்டு இருக்கு....

கலையரசன் said...

நாங்களும் முடிச்சாச்சி...
வந்து என்னையும்.. கும்முங்க!

பித்தன் said...

//29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

பெளர்ண்மி இரவில்.. அம்மா பிசைந்து தரும் அந்த பழைய சோறுடன் ஊரில் என் வீட்டு மொட்டைமாடி

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

நான் நானாய் இருக்கனும்னு ரொம்ப ஆசை.. முடியவில்லை
//

இது ரெண்டும் சூப்பர் -:)

******

டெம்ப்லேட்ட எதுக்கு மாத்துநிங்க.... இதவிட பழசே நல்லா இருந்துது...

Kanna said...

//கலையரசன் கூறியது...
நாங்களும் முடிச்சாச்சி...
வந்து என்னையும்.. கும்முங்க!//

மாப்பு ஏழரையை இன்விடேஷன் வைச்சு கூப்பிடுறியே...நீ ரொம்ப நல்லவண்டா...

வந்துகிட்டே இருக்கோம் ..கும்முறதுக்கு

Kanna said...

//பித்தன் கூறியது...

இது ரெண்டும் சூப்பர் -:)

******

டெம்ப்லேட்ட எதுக்கு மாத்துநிங்க.... இதவிட பழசே நல்லா இருந்துது...//

வாங்க பித்தன்,

நன்றி வருகைக்கும் கருத்திற்கும்..

என்னோட ப்ளாக்ல பாலோயர் லிஸ்ட் சேர்க்க முடியலை...அதான் நிறைய டெம்ப்ளேட் மாத்திகிட்டு இருக்கேன்...
கூடிய விரைவில் ஓரு நல்ல டெம்ப்ளேட் பிடிச்சுடுவேன்..

உங்கள் கருத்திற்கு நன்றிகள் பல..

Joe said...

//
ஜோ..: பல பின்னூட்டங்களில் என் கருத்தும் இவர் கருத்தும் ஒத்து போவதின் மூலம் கிடைத்தது இவரின் அறிமுகம். //
நன்றி கண்ணா,
//
மிக அருமையாக எழுதிவருகிறார்…
//
இதெல்லாம் உங்களுக்கே ரொம்ப அதிகமா தெரியலையா?
நான் ஏதோ டயிரி-இல எழுதுற மாதிரி ஏதோ கிறுக்கிட்டு இருக்கேன்.
என்னைப் போய், பிரபல பதிவர், மிக அருமையாக எழுதிவருகிறார்-ன்னு சொல்லிக்கிட்டு?

ஏதோ இப்போதைக்கு எழுத்துப் பிழைகள் இல்லாமே எழுதுறேன், அவ்வளவு தான்.

அப்படி பிரபல பதிவரா இருந்திருந்தா என்னோட கடைசி பதிவுக்கு நிறைய பின்னூட்டங்கள், அல்லது வோட்டுகள், அல்லது இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு ஏதாவது செய்வோம் என்று மின்னஞ்சல்கள் வந்திருக்க வேண்டும். மொத்தமா ஐந்து பேருக்கு மேல வரல.

//
நான் மேலே குறிப்பிட்ட மூன்று பேரும் இன்னும் சில நாள்களில் பதிவுலகில் தவிர்க்க முடியாத ஆட்களாக இருப்பார்கள்
//
மத்த ரெண்டு பெரும் நல்லா எழுதுறாங்க, என்னைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை.

Kanna said...

@ Joe கூறியது...

//நன்றி கண்ணா,//நன்றிக்கு நன்றி ஜோ
//அப்படி பிரபல பதிவரா இருந்திருந்தா என்னோட கடைசி பதிவுக்கு நிறைய பின்னூட்டங்கள், அல்லது வோட்டுகள், அல்லது இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு ஏதாவது செய்வோம் என்று மின்னஞ்சல்கள் வந்திருக்க வேண்டும். மொத்தமா ஐந்து பேருக்கு மேல வரல. //

ஜோ.. வோட்டுக்களும், பின்னூட்டங்களும் பதிவின் தரத்தை நிர்ணயிப்பதில்லை என்பது என் தனிபட்ட கருத்து..

சொல்ல போனால் இப்போதெல்லாம் தமிழிஷில் பிரபல இடுகைகளில் வெளிவரும் பதிவுகளை விட மற்ற இடுகைகள்தான் எனக்கு படிக்க சுவாரஸ்யமாய் இருக்கிறது..

அந்த வகையில் நான் உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன்..அருமையாக உள்ளது..

S Senthilvelan said...

கண்ணா,

உங்க பதில்கள் எல்லாமே சூப்பருங்க... இன்னிக்கு தான் பதிவர் கலையரசன் கிட்டே பேசினேன். பதிவர் சந்திப்பு பற்றி சொன்னார்.

எதிர்பார்ப்போட இருக்கேன் நம்ம சந்திப்பிற்காக :)

நேரம் கிடைச்சா நம்ம பக்கத்திற்கும் வந்திட்டுப் போங்க..

http://senthilinpakkangal.blogspot.com/

Kanna said...

//S Senthilvelan கூறியது...
கண்ணா,

உங்க பதில்கள் எல்லாமே சூப்பருங்க... இன்னிக்கு தான் பதிவர் கலையரசன் கிட்டே பேசினேன். பதிவர் சந்திப்பு பற்றி சொன்னார்.

எதிர்பார்ப்போட இருக்கேன் நம்ம சந்திப்பிற்காக :)

நேரம் கிடைச்சா நம்ம பக்கத்திற்கும் வந்திட்டுப் போங்க..

http://senthilinpakkangal.blogspot.com///

வாங்க Senthilvelan,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல

பதிவர் சந்திப்பு வரும் ஜுன் 5 இடம் முடிவு செய்து நாளை அறிவிப்பு வெளியாகும்.

உங்கள் தளத்திற்கும் வந்து கும்மி பணி ஆற்றுகிறேன்..

Joe said...

நன்றி கண்ணா: பின்னூட்டத்துக்கும், தொடர் பதிவு எழுத அழைத்ததற்கும்.
ஒரு வகையில் நீங்கள் சொல்வதும் சரி தான். எண்ணிக்கை மட்டும் தரத்தை நிர்ணயிப்பதில்லை.

பதிவர்கள் ஒரு வகையான குறுகிய வட்டங்களில் செயல்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது. அதாவது இதற்கு முன்னமே பிரபலமான பதிவர்கள் புதிதாக வந்து நன்கு எழுதும் பதிவர்களுக்கு பின்னூட்டம் இடுவதில்லை. தமிழ்மணத்தில் சிலர் எதிர் வோட்டுகளும் வேண்டுமென்றே போடுகிறார்கள், நேற்று வந்தவன் இவன் எப்படி என்னை விட அதிக வோட்டுகள் வாங்கலாம் என்ற பொறாமையில் அவ்வாறு செய்வதாக, என்றும் கேள்விபட்டேன். ஒரு வேளை நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம்.

தொடர் பதிவு எழுதி விளையாடும் மனநிலையில் நான் இல்லை என்பதால், கேள்வி பதில் பதிவை சில நாட்களுக்கு பிறகு எழுதுறேன்.

Anonymous said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

அது ஒரு கனாக் காலம் said...

ஓட்டு குத்தியாச்சு

கார்த்திகைப் பாண்டியன் said...

பதில்களில் தெரியும் நேர்மை அசத்துகிறது நண்பா.. அடுத்து எழுதப் போகும் நண்பர்களின் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. அப்புறன் அந்தத் தலைப்பு சரியான குசும்பு

Kanna said...

//அது ஒரு கனாக் காலம் கூறியது...
ஓட்டு குத்தியாச்சு //

நன்றி நண்பரே...

ஓட்டு போட்டதற்கு கோடான கோடி நன்றி..

Kanna said...

//கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
பதில்களில் தெரியும் நேர்மை அசத்துகிறது நண்பா.. அடுத்து எழுதப் போகும் நண்பர்களின் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. அப்புறன் அந்தத் தலைப்பு சரியான குசும்பு//

வாங்க கார்த்திகைப் பாண்டியன்..

நன்றிகள் பல வருகைக்கும், கருத்திற்கும்..

Suresh said...

//என்ன லுக்கு...?!//

பெயரே ஹம் வில்ங்கமா தான் இருக்கு

//டிஸ்கி:


பிரபலபதிவர் பற்றின்னு டைட்டில் குடுத்திட்டு உன்னை பற்றியே இருக்கேன்னு சின்னபுள்ளதனமா நீங்க கேப்பிங்கன்னுதான் ஹிட் கவுண்டருக்கு சூடு வச்சு 5 லட்சம் ஆக்கிட்டேன்.. 5 லட்சத்தை தாண்டியதுக்கும் வாழ்த்திட்டு போங்க மக்களே//

வாழ்த்துகள் வைக்கிறது வைக்கிற ஊறுகாய் மாதிரி 5 கோடி வைக்க வேண்டியது தானே அதில் என்ன கெஞ்சதனம்

Suresh said...

பிரபலம்னு சொல்லி சும்மா நச் ஆக்கிட்ட நீ பிரபலம் தான் மச்சான்

Kanna said...

// @Suresh கூறியது...

வாழ்த்துகள் வைக்கிறது வைக்கிற ஊறுகாய் மாதிரி 5 கோடி வைக்க வேண்டியது தானே அதில் என்ன கெஞ்சதனம் //

வாடா மச்சான்...

நான் நல்லவன்னு உனக்கு தெரியாதாடா...


அதான்டா வைக்கல...

Kanna said...

// @Suresh கூறியது...

பிரபலம்னு சொல்லி சும்மா நச் ஆக்கிட்ட நீ பிரபலம் தான் மச்சான்//

மச்சான் நீதான்டா நண்பன்...

இந்த பயலுக வினோத், கிஷோரு, கலை யாருமே இத சொல்லடா....

நீதான்டா குடுத்த காசுக்கு மேல கூவிருக்க

டேங்ஸ்டா...மச்சான்