Wednesday, May 27, 2009

புலிகளின் வெற்றி

பிரபல எழுத்தாளரின் அரைகுறை புரிதல்.


இந்த பதிவில் வன்முறையின் தோல்வி எனும் கட்டுரையை முழுதும் படித்துவிட்டு வந்தால் என் கட்டுரை கொஞ்சம் புரியலாம்..

வன்முறையின் தோல்வி என சொல்லுபவர் வென்றது எது என சொன்னால் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்...

விடுதலை போராட்டங்களை வன்முறை என்ற அளவில் புரிந்திருக்கும் அவரின் புத்திசாலி தனத்தை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.. அதில் விடுதலை புலிகள் அத்தனைபேரும் கொல்லபட்டு விட்டார்கள் என்வும் கூறுகிறார். இவரை போய் பிரபல எழுத்தாளர் என்று என்னிடம் சொன்ன கஸ்மாலத்தை தேடிக்கிட்டு இருக்கேன்..அவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும்..அப்புறம் #^*%@#!##@***+##..

சரி அதை விடுங்க விஷயத்துக்கு வருவோம்.


எது வன்முறை.?


தன் இன விடுதலைக்காக, இன துரோகம் செய்தவர்களை கொல்வதின் பெயர் வன்முறை என்றால் ஒரு விடுதலை இயக்கத்தை போரில் வெல்ல உலக நாடுகளின் துணையுடன் பல்லாயிரகணக்கான அப்பாவி தமிழர்களை கொல்வதின் பெயர் என்ன.?










புலிகள் பல தலைவர்களை கொன்றார்கள், சக போராளிகளை கொன்றார்கள் என கூப்பாடு போடுபவர்கள் கூட அவர்கள் அப்பாவிகளை கொன்றதாக கூறுவதில்லை..




ஆனால் இப்போது ஸ்ரீலங்காவில் என்ன நடக்கிறது..அனைத்து உலக நாடுகளின் துணைகொண்டு அப்பாவிகளை அல்லவா அழித்து கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்களை புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என கூறுபவர்கள்.. பொதுமக்களின் மேல் ஸ்ரீலங்கா குண்டுகள் வீசுவதற்கு காரணம் கண்டுபிடிக்கிறார்கள். சரி ஓரு வாதத்திற்காக புலிகள் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்துவதாக கொண்டாலும் அதனால் பொது மக்களின் மேல் குண்டுகளை வீசுவதை நியாயபடுத்தலாமா..?

ஆனால், ஸ்ரீலங்கா அரசாங்கம் பொதுமக்களின் உயிர்களை மதிக்கவில்லை. மக்கள் மிகவும் குறுகிய நிலப்பரப்பில் செறிவாக இடம்பெயர்ந்து இருந்தபோதும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியிருந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது




விடுதலை புலிகளின் வெற்றி


என்வரையில் இது புலிகளின் வெற்றியாகவே கருதுகிறேன்.. உலக நாடுகளின் ஸ்ரீலங்காவிற்கு தமிழனுக்கு சம உரிமை கொடுக்கவேண்டும் என சொல்ல வைத்ததின் மூலம் புலிகள் தங்களின் போராட்டத்தில் பகுதி அளவு வெற்றி பெற்று விட்டார்கள் என்பதுதான் என் எண்ணம்..இந்த தற்போதைய பின்னடைவையும் நேர்கொண்டு வெகுவிரைவில் தங்களின் முழுவெற்றியையும் பெறுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் ( அங்க நாடாளுமன்றம்தானா.?!) ராஜ பக் ஷே வை தமிழர் உரிமைகள் பாதுகாக்கபடும் எனவும் சொல்ல வைத்ததை புலிகளின் இதுநாள் வரையிலான போராட்டத்தின் வெற்றியாகத்தான் நான் பார்க்கிறேன்..

புலிகள் தாங்கள் இதுவரையில் கையகபடுத்தியிருந்த நிலபகுதிகளை இழந்திருக்கலாம்..நம்பிக்கையை இழக்கவில்லை..மீண்டும் ஓயாத அலைகள் அடிக்கும்..இதையும் தாண்டி நிலபரப்புக்கள் கிடைக்கும்..அந்த நாளில் தமிழ் ஈழம் பிறக்கும்.




நாக்க புடுங்கிட்டு சாகலாம் போல இருக்கு பாஸ்


http://www.paristamil.com/tamilnews/?p=11924மேலே சொன்ன லிங்கில் போய் பார்த்த செய்தி

சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போரியல் குற்றங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை தேவை என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிலான நாடுகளும், இது அதற்கான தருணம் அல்ல என சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகளும் தெரிவித்திருக்கின்றன

சிறிலங்கா தொடர்பான விவாதத்தை சாதாரண கூட்டத்தில் விவாதிக்கலாம் என சிறிலங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் இந்தியாவுக்கான தூதுவர் தெரிவித்திருக்கின்றார்.
இந்தியாவுடன் இணைந்து சீனாவும், ரஸ்யாவும் சிறிலங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன.”

இந்த செய்தியை படிச்ச உடனே இந்தியனா பொறந்ததை நினைச்சி நாக்க புடுங்கிட்டு சாகலாம் போல இருக்கு பாஸ்

24 comments:

Anonymous said...

உங்களது கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

கண்ணா.. said...

நன்றி குளோபன்

வருகைக்கும், கருத்திற்கும்

-L-L-D-a-s-u said...

உங்களது கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.


Especially the last sentence .
I too feel the same .

Vandhe Madharam ..
Jai Hind..
Jai Ho ..
F**K

தீப்பெட்டி said...

//உலக நாடுகள் ஸ்ரீலங்காவிற்கு தமிழனுக்கு சம உரிமை கொடுக்கவேண்டும் என சொல்ல வைத்ததின் மூலம் புலிகள் தங்களின் போராட்டத்தில் பகுதி அளவு வெற்றி பெற்று விட்டார்கள் என்பதுதான் என் எண்ணம்..//

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்....

கண்ணா.. said...

வாங்க -L-L-D-a-s-u ,

அடுத்த தடவை உங்க பேரை சொல்லிருங்களேன்...இதை எப்பிடி கூப்பிட்னும்னு குழப்பமா இருக்கு...

//இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க அவசியமில்லை : இந்தியா//

இதை பத்தி படிச்ச உடனே வயிறு எரியுதுங்க...


தமிழர்களின் காட்டு கூப்பாடு ஏன் ஆட்சியாளர்களுக்கு புரியவில்லை..

இந்த அளவுக்கு தமிழனை ஏன் உதாசீன படுத்த வேண்டும்....

கண்ணா.. said...

வாங்க தீப்பெட்டி,

வருகைக்கும் கருத்திற்கும் தொடர் ஆதரவிற்கும் நன்றி..

SUBBU said...

இந்தியனா பொறந்ததை நினைச்சி நாக்க புடுங்கிட்டு சாகலாம் போல இருக்கு பாஸ்

SUBBU said...

:((((((((((

கண்ணா.. said...

வாங்க சுப்பு,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஆட்சியாளர்களுக்கு புரிய வைக்கனும் பாஸ்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

கன்னுமுன்னடி தாய்,தங்கை,அக்கா மானபங்கம் படுத்தும்போது, அகிம்சை வழிலதான் போராடனும்.

கர்பிணி வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுக்குறத பாத்துட்டும் அகிம்சைவழில தான் போராடனும்.

அப்பாவிகள் படுகொலை செய்யப்படும் போதும். உயிருடன் கொளுத்தும் போதும் அமைதியா பாத்துட்டு அகிம்சைவழில தான் போராடனும்.

கடைசி ஒரு உசுரு இருக்கவரைக்கும் அகிம்சையில தான் போராடனும்...
எல்லா உசுரு போனாலும் அகிம்சை வழிதான் போகணும் அப்படின்னு கூட சொல்லுவாக.

வெள்ளக்காரன் சிங்கள அரசாகத்தவிட கொடுரமா நடந்துகிட்டதா எனக்கு படல. ரெண்டு பேருக்கும் வித்தியாசம் இருக்கு.

இவிக குடும்பத்துல இது எல்லாம் நடந்தாலும் இப்படி தான் போரடுவாகலான்னு கேட்கணும்,.

தந்தை செல்வா அகிம்சை வழில போராடினது இவிக கண்ணுக்கு தெரியல.

திலிபன் அகிம்சை வழில போராடி உயிரைவிட்டது இவிக கண்ணுக்கு தெரியல.

இன்னைக்கு புலிகள அழிசிட்டாங்கன்னு இப்படி சொல்லும் நம்ம மக்கள் ... புலிகளால தனி ஈழம் கிடைதிருந்தா அவர்கள் தீவிரவாதிகள் அல்ல போராளிகள், அப்படின்னு சொன்னாலும் சொல்லுவோம்.

அதுக்காக புலிகள் மேல தப்பே இல்லன்னு சொல்லல...

உரிமைகள் மறுக்கப்படும் பொழுது உணர்வுகள் மிதிக்கப்படும் பொழுது போராட்டம் பிறந்தே தீரும்.... அதன் வடிவம் மாறலாம்.. அவ்வளவுதான்.

இந்த மாதரி தான் போராடனும் அந்தமாதரி தான் போராடனும்ன்னு சொல்லுறதுக்கு நமக்கு வக்கு இருக்கான்னு தெரியல.. ஏன்னா வலிய அனுபவிச்சவனுக்கு தான் தெரியும் எப்படி போராடுறதுன்னு.


-பித்தன்

விதை... said...

i read that famous writer article i got same feel , but you are write very clearly i accept all your thinking
Thank you very much for your writing because you are write our feelings& thoughts

T.Mugesh

Unknown said...

//இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க அவசியமில்லை : இந்தியா//

சீ தூ சத்தியமா இனி யார் கேட்டாலும் நான் இந்தியன்னு சொல்லிக்க மாட்டேன்............

சரவணன் said...

//இந்தியனா பொறந்ததை நினைச்சி நாக்க புடுங்கிட்டு சாகலாம் போல இருக்கு பாஸ்//

அப்படி எல்லாம் பண்ணாதீங்க பாஸ்.உங்களை இந்தியனா ஏன் நினைக்கிறீங்க், தமிழன் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
கடவுச்சீட்டு என்ற ஒன்றில் மட்டுமே நீங்கள் இந்தின்.

கண்ணா.. said...

வாங்க பித்தன்,

உங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல...

கண்ணா.. said...

நன்றி விதை,

உங்கள் கருத்துக்களை இங்கு விதைத்ததற்கு...

அவரின் கட்டுரையை படிக்கும் போது வந்த கோபம்தான் இதை எழுத தூண்டியது...

நீங்கள் இகலப்பை அல்லது NHM Writer install செய்தால் எளிதாக தமிழில் டைப் செய்யலாம்

கண்ணா.. said...

”என்பக்கம்” என் பக்கத்திற்கு வந்ததற்கு நன்றி.

உங்கள் பதிவில் நிறைய துபாய் குறித்த தகவல்கள் பார்க்கிறேன்..

நீங்கள் துபாயில் இருக்கிறீர்களா.?

நான் மற்றும் நண்பர்கள் வினோத், கலையரசன் போன்றோர் துபாயில் வருகிற ஜுன் 7ம் தேதி பதிவர் சந்திப்பு நடத்தலாம் என முயற்சிகள் எடுத்து வருகிறோம்...

உங்கள் வசதியை தெரிவித்தால் நலம்.

என் அலைபேசி எண் 050 -9253270

நன்றி

கண்ணா.. said...

வாங்க சரவணன்,

அப்பிடி நினைச்சிதானே மனசை தேத்த வேண்டியிருக்கு...

வேற என்ன பண்ண...

கலையரசன் said...

சிறப்பான, இயல்பான நடை.
சிந்திக்க வைக்கும் கருத்துக்கள். பாராட்டுக்கள்!!
கோபத்தை குறைச்சுக்கோங்க.....
ஒற்றுமையாகவும், பொறுமையாகவும் இருப்போம்
நாளை நமதே!!

கண்ணா.. said...

வாங்க கலையரசன்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா...

//கோபத்தை குறைச்சுக்கோங்க...

ஒற்றுமையாகவும், பொறுமையாகவும் இருப்போம்
நாளை நமதே!! //


சரி தலைவா முயற்சி பண்ணுறேன்

கண்ணா.. said...

நன்றி தமிழர்ஸ்,

சீக்கிரம் இணைத்து விடுகிறேன்..

Sakthi said...

அண்ணா,
என் பக்கத்தில் உங்கள் பின்னூட்டங்களைப் படித்தேன், ஒரு ஈழத் தமிழனை உங்கள் கருத்துக் கூடப் பாதித்துவிடக் கூடாது எனும் உங்கள் நோக்கத்திற்கு முதலில் தலை வணங்குகிறேன்!
எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த நாட்டினை எதற்காகவும் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுப்பதில்லை, ஆனால் ஈழத் தமிழருக்கான உங்கள் இந்தக் கட்டுரை, உண்மையிலேயே எமக்கான உங்கள் எண்ணங்களை மிக அழகாக வெளிப் படுத்துகின்றன.
மிக்க நன்றி அண்ணா...
நிறைய எழுதுங்கள், வாழ்த்துக்கள்!

கண்ணா.. said...

நன்றி சக்தி,

உங்களின் வருகை எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுக்கிறது...

kishore said...

அருமை கண்ணா ...
விரைவில் இந்த ரணங்கள் ஆறனும் என்று இறைவனை வேண்டுகிறேன்
என்னால உங்கள பலொவ் பண்ண முடியல என்ன காரணம் யார் செய்த தாமதம்?
அப்பறம் சீக்ரமா ஓட்டு பட்டய இணைச்சிடுங்க... உங்க பதிவ பலரும் படிக்க உதவியாக இருக்கும்...

Joe said...

நல்ல பதிவு கண்ணா!

இந்த பதிவினை படித்துப் பாருங்கள்.
http://tamilnathy.blogspot.com/2009/05/blog-post_27.html.

We are all citizens of this whole wide world and the concept of a nation is a myth and a farce.