Saturday, May 2, 2009

ஜெயலலிதா... ஈழ ஆதரவாளரா?

தேர்தல் எத்தனையோ பல்டிகளையும், துரோகங்களையும் நிகழ்த்துகிறது… இந்த ஒற்றை வார்த்தைதான்.. கலைஞரை உண்ணாவிரதம் இருக்கவும், ஜெயலலிதாவை தனிஈழம் அமைத்து தருவேன் என சொல்லவும், வைகோ, ராமதாஸ், திருமாவை அணி மாறவும், இன்னும் என்னன்னவெல்லாம் செய்ய வைக்கிறது.. சரி விஷயத்திற்கு வருவோம்…

ஜெயலலிதாவின் திடீர் ஈழ ஆதரவு ஏன்? அதனால் ஏதும் பயன் உண்டா.? என்வரையில் ஜெவின் இந்த திடீர் ஆதரவு…சந்தேகமேயில்லாமல் தேர்தல் ஸ்டண்ட். மட்டுமே…இதுநாள் வரையில் ஈழம் என்பது இலங்கையின் உள் நாட்டு பிரச்சினை என சொல்லி வந்தவர் உண்ணாவிரதம் இருக்க செல்லும் போதே….. இன்னும் இது போல் எத்தனை பல்டிகள் அடிக்க போகிறாறோ என்றுதான் அனைவரும் நினைத்தனர்.. அதுதான் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது…

ஜெயலலிதா நினைத்ததை நடத்தி காட்டி விடுவார் என கூறிகொண்டு இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி…. எதை அவர் நடத்தி காட்டுவார். இப்பொது நினைத்ததையா? இல்லை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு நினைத்ததையா?

அதிமுக அணி 40 ல் வென்ற பின்னர் மத்தியில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்தால்…… காங்கிரஸ் வரக்கூடாது என்ற உங்கள் எண்ணம் என்னாவது? அவர் அப்படி பல்டி அடிக்க மாட்டார் என யார் உத்திரவாதம் தருவார்கள் பல்டிக்கு பெயர் போன ராமதாஸ், வைகோ வா?

சரி.. பி ஜெ பி க்கு ஆதரவு அளிப்பாரா? அப்படியென்றால் நாம் நேரடியாக பி ஜெ பிக்கு வாக்களிப்புதுதானே முறை..

அண்ணன் வைகோ அவர்கள் சொல்வது போல், ஜெ பிரதம வேட்பாளர் என்றால்… ஏன் அவர் தேர்தலில் நிற்க வில்லை? தேர்தலில் நின்று நான் தான் பிரதம வேட்பாளர் என்றால் கொஞ்சம் நம்பும் படியாக இருக்கும்…

தேர்தலை முன்வைத்தாவது இவர்கள் எல்லாம் ஈழத்துக்கு ஆதரவாக பேசவாவது செய்கிறார்களே..அதுவரையில் மகிழ்ச்சி..

என்னை பொறுத்த வரையில், கலைஞர் உண்ணாவிரதம் இருந்து (?!) கனரக ஆயுத பிரயோகத்தை நிறுத்தியதை (??!!) போல ஒரு மேடை அமைத்து அதில் கலைஞர், ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, மற்றும் அனைத்து தலைவர்களும் உண்ணாவிரதம் இருந்து ஈழத்தில் போர்நிறுத்தம் செய்ய முன் வருவார்களா?

தனி ஈழம் அமைத்து தர தேர்தலுக்கு பின் முயற்சிகள் மேற்கொள்ளட்டும். தற்போது உடனடியாக போர் நிறுத்ததிற்கு இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளட்டும்…..

தமிழர்கள் இப்பிடி சேராமல் பிரிந்திருப்பதால்தான்… ஈழத்தில் தமிழன் செத்து கொண்டிருக்கிறான்..
கடைசி நேரம் வரையில் பதவியில் இருந்து பதவிசுகத்தை அனுபவித்து விட்டு இப்போது வெளியே வந்திருக்கும் ராமதாஸிக்கும், விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்கு பொடாவில் உள்ளே தள்ளிய ஜெயலலிதாவே..தனி ஈழம் அமைக்க உதவுவார் என நம்பும் அப்பாவி வைகோவுக்கும் இதை பற்றி பேச தகுதியே இல்லை..


விஜயகாந்த் இதுபற்றி வாயே திறக்காதது எனக்கு மிகபெரிய ஆச்சர்யமாய் இருக்கிறது… இரண்டு பெரிய கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்தாமல் இருக்கிறாறே? இவர் கல்யாண மண்டபத்தை இடித்ததற்கு கூப்பாடு போட்டாறே? ஈழ விஷயத்தில் ஊமையாய் இருக்கிறாறே? காங்கிரஸிடம் இருந்து பெட்டிகள் கைமாறியிருக்கலாமோ?

ஆனா இவங்க அடிக்கற லூட்டியெல்லாம் பார்த்தா.. இந்த சனியன் புடிச்ச எலக் ஷன் எப்படா முடியும் னு இருக்கு.

15 comments:

vinoth gowtham said...

ரொம்ப சரி கண்ணா..
ஜெயா நாற்பது ஜெய்தாலும் அதன் பிறகு ஈழ தமிழர்கள் விஷயதில் அவரின் நிலைபாடு என்ன என்பது பெரிய கேள்விக்குறி தான்..
அதே மாதிரி இவரை நம்பி மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது..
எந்த சமயத்தில் வேண்டும் என்றாலும் யார் பேச்சையாவது கேட்டு கவுத்து விடுவார்..
பாதிப்புகளை எண்ணவே மாட்டார்..

விஜயகாந்த் என்ன ஆனார் என்றே தெரியவில்லை..
அனால் ஒரு இடத்தில அகதிகளுக்கு ஆதரவை பேசி உள்ளார்..
சபரி என்ற படத்தில்..

Kanna said...

நன்றி வினோத்

தீப்பெட்டி said...

என்ன கண்ணா ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு டெம்ப்ளேட் மாற்றமா?

அந்த குழந்தை (எப்போதும் மாற்றமில்லா) மிகவும் அழகு.

//என்னை பொறுத்த வரையில், கலைஞர் உண்ணாவிரதம் இருந்து (?!) கனரக ஆயுத பிரயோகத்தை நிறுத்தியதை (??!!) போல ஒரு மேடை அமைத்து அதில் கலைஞர், ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, மற்றும் அனைத்து தலைவர்களும் உண்ணாவிரதம் இருந்து ஈழத்தில் போர்நிறுத்தம் செய்ய முன் வருவார்களா?//

இது கலைஞர் இருந்த உண்ணாவிரதத்தினைப் போல அதிர்வலைகளை இந்திய இலங்கை உயர் மட்டங்களில் ஏற்படுத்துமா?

மேலும் இனி ஜெயலலிதா ஈழதமிழர்களுக்கு எதிரான நிலையை பழைய தீவிரத்துடன் எடுக்க இயலாதென நினைக்கிறேன். ஆனால் அவரது விடுதலைபுலிகளை பற்றிய கருத்துகள் இன்றும் மாற்றமில்லாததை நாம் கவனிக்க வேண்டும்.

Kanna said...

நன்றி தீப்பெட்டி, வினோத்

உங்களின் தொடர் ஆதரவிற்கு...

Kanna said...

// @தீப்பெட்டி சொன்னது…
என்ன கண்ணா ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு டெம்ப்ளேட் மாற்றமா?//


என்ன தலைவா பண்ண இன்னும் ஒரு டெம்ப்ளேட்டும் ஒழுங்கா செட் ஆகலை.....அதான் அடிக்கடி மாற்றி கொண்டிருக்கிறேன்

அக்னி பார்வை said...

இன்னுமா இவங்கள நம்பிக்கிடிருக்கீங்க

ஹூஸ்...

Kanna said...

நன்றி அக்னி பார்வை...

வருகைக்கும் கருத்துக்கும்....

raja said...

nice one...

romba politicsla irangiyacho...............

Kanna said...

வாங்க ராஜா..

சும்மா... நீங்களும் பிளாக் ஆரம்பிங்க....

என் ப்ளாக்கை பார்த்துமா...இன்னும் பயப்படுரீங்க.....

வாங்க தல

பதி said...

//ஆனா இவங்க அடிக்கற லூட்டியெல்லாம் பார்த்தா.. இந்த சனியன் புடிச்ச எலக் ஷன் எப்படா முடியும் னு இருக்கு.//

அதே.... :(

Kanna said...

நன்றி பதி,

இப்போதான் முத முறையா வந்துருங்கீங்க...

நன்றி

வருகைக்கும் , கருத்துத்துகளுக்கும்......

sundar said...

தங்கள் பதிவினை தாமதமாய் பார்க்க நேர்ந்ததுக்கு வருந்துகிறேன். நிறைய எழுதுங்கள்

பாஸ்கர் said...

தேர்தல் முடிந்தால் இந்தக் கூத்து கொஞ்சம் குறையும்.காட்சிகள் மாறலாம்.பேச்சுக்கள் மாறலாம்.அறிக்கைகள் மாறலாம்.ஆனால் இந்த இலங்கைப் பிரச்சனைக்கு இந்தியாவோ, தமிழ் நாட்டு அரசியல் வாதிகளோ ஒரு நன்மையும் செய்யப் போவதில்லை.இந்தத் துன்பம் முடிவுக்கு வராத என்று ஏங்காத உள்ளங்கள் இல்லை. சில சமயம் காலம் அதன் போக்கில் நகர்ந்து செல்கிறது.எனக்கும் நெல்லை தன ஊர்.இப்போது இருப்பது டெட்திரோஇட் (Detriroit, USA).

Kanna said...

நன்றி சுந்தர்,

தாமதமாய் பார்த்தாலும், ஊக்கமளித்ததில் பெரு மகிழ்ச்சி...

Kanna said...

வாங்க நெல்லை பாஸ்கர்,

வருகைக்கு நன்றி...நெல்லை மக்களோட வருகையே சந்தோஷம்லா......