Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Friday, May 10, 2013

லாலா கடை லட்சிய வேலை


பத்தாவது படிக்கும் போது பார்ட் டைமா ஒரு எஸ்டிடி பூத்தில் வேலை பார்த்து வந்தேன். டூட்டி டைம் வந்து மாலை 8-11 கல்லாவில் இருந்து கணக்கு முடித்து கடையை அடைக்க வேண்டும் மறுபடி காலை 7 மணிக்கு திறந்து 9மணிக்கு மாற்று ஆள் வரும் வரையில் இருக்க வேண்டும் சனி, ஞாயிறுகளில் புல் டே டூட்டின்னு பேசி வேலைக்கு போயிட்டு இருந்தேன் .

அப்பதான் என்னுடைய லட்சிய வேலையை நான் கண்டறிந்தேன்.. மூணுகடை தள்ளியிருந்த லாலா கடையில் வேலை பார்க்கும் இசக்கியை பார்த்தப்புறம்தான் எனக்குள் அந்த ஆசை. இசக்கி வெள்ளந்தியான பய.. நானு வேலைக்கு சேர்ந்த மொத நாளா வந்து சினேகமா விசாரிச்சான். லாலா கடையில மீந்து போன பலகாரத்தையெல்லாம் குடுத்து விடுவாங்க. வழக்கமா 9 மணிக்கெல்லாம் சவுண்ட் கொடுத்து கூப்பிடுற அண்ணாச்சி இன்னும் கூப்பிடலை.. எனக்கு பசிக்க ஆரம்பிச்சிது. கடையில வேற ரெண்டு பேரு… போன் பேசிட்டே இருங்காங்க..டக்னு டேபிள்க்கு அடில குனிஞ்சு போன் வயரை உருகி விட்டு லைன் டெட்ன்னு அவங்களை அனுப்பிட்டு லாலா கடைக்கு போனா… செம கூட்டம்… அண்ணாச்சிய மெதுவா கூப்பிட்டு என்னாச்சின்னு கேட்டா… 

இன்னைக்கு நல்ல வியாபாரம் தம்பி ஓண்ணும் மிஞ்சலை நாளைக்கு தாரேன் என்னன்னு சொல்றாரு
உள்ள எட்டி பார்த்தா.. இந்த இசக்கிபய அந்த நெய்முறுக்கை எடுத்து வாய்ல போட்டு பாட்டு படிச்சிட்டே… பார்சல் கட்டிட்டு இருக்கான். வெட்கத்தை விட்டு அண்ணாச்சிட்ட கேட்டேவிட்டேன்
… 
அண்ணாச்சி நெய்முறுக்காது ஒண்ணு குடுங்க பசிக்குன்னு

அண்ணாச்சி ஒண்ணுமே சொல்லலை.. அதனால திருப்பி கேட்டேன்.. இசக்கி மட்டும் திங்கான்.. எனக்கு மட்டும் இல்லேன்னு சொல்றியேலேன்னு

என்னாச்சின்னு தெரிய்ல புசுக்குன்னு கோவப்பட்டுட்டாரு.. லேய்…உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னா புரியாதா போ..போயி உங்க ஓனர்ட்ட போயி கேளு.. எங்கடையில வேலை பாக்குற ஆளுக்கு மட்டும்தான் ஓசில இனி பலகாரம்னு.

பக்கத்து ஹார்டுவேர் கடையில வேலை பாக்குற மைக்கேலும் எண்ட்ட வந்து சொன்னான் இந்த இசக்கிபய மூணாப்புதாம்ல படிச்சிருக்கான்… ஆனா அவனுக்கு அடிச்ச யோகத்தை பாத்தியா.. டெய்லி நெய்முறுக்கு, அண்டிபருப்பு, பால்கோவான்னு ஸ்பெஷல் அயிட்டமாத்தான் சாப்பிடுவான்னான்.

அன்றிலிருந்து என்னுடைய குறிக்கோளே எப்பிடியாது சீக்கிரம் படிச்சு முடிச்சு ஓரு லாலா கடையில் வேலைக்கு சேர்ந்திரணும்ங்கறதாகத்தான் இருந்துச்சு. ப்ளஸ் டூ லீவுல அண்ணாச்சிட்ட கேட்டு வேலைல்லாம் ரெடி பண்ணி வச்சுருந்தேன் :))  வீட்டுக்கு தெரிஞ்சு கிடைச்ச ஏச்சுல அந்த ஆசையை மூட்டை கட்டி வச்சுட்டேன்.

Monday, July 5, 2010

சுடச்சுட......நெல்லை பதிவர் சந்திப்பு செய்திகள் புகைப்படங்களுடன்...!!!

இரண்டு மாதங்களுக்கு முன், அதிகாலை 10 மணி அளவில் போன்.. ஓரு குரல் நான் ராஜா பேசுறேன் என்றது. எந்த ராஜா என்றதும் நாந்தான் துபாய் ராஜா என்றது அதேகுரல். ஆஹா நம்ம அண்ணந்தான் கூப்ப்டுறாரான்னு வழக்கமான நலம் விசாரிப்புகளுக்கு பிறகு நான் திருநவேலி வாரேன்... நாம மீட பண்ணலாமான்னு கேக்கவும் சரின்னு புது பஸ்ஸ்டாண்டு முன்னாடி உள்ள அருணா ஸ்விட்ஸை ஸ்பாட்டா முடிவு செய்து சந்திக்க தயாரானோம்.


ஓரு மணி நேரம் கழித்து மறுபடியும் போன்.. வந்தாச்சுன்னு... சரி வாரேன்னு பைக்கை எடுத்து கிளம்பினா ஓரு சந்தேகம் அவரை எப்பிடி அடையாளம் கண்டுபிடிக்க...அவரு புரோபைல் போட்டோவில் ஷேக் டிரஸ்ஸோட பாத்தது. ஓரு பார்ட்டி போட்டோவிலும் மொட்டை அடிச்சிருந்தாரு அதை தவிர வேறு ஓண்ணும் தெரியாதேன்னு காதல் கோட்டை அஜித்குமார் தேவயானியை பாக்க போற மாதிரி யோசனை பலமாதிரி ஓட ஆரம்பித்தது. பைக்கை நிப்பாட்டி விட்டு போன் பண்ணினால் கட் பண்ணி விட்டு ஆறடி உயர ஆள் கை காட்டுறாரு...(என்னா உசரம்ணே....!!! உங்க ஹைட்டுக்கு நீங்க பாஸ்ட் பெளலிங்க் போட்டா....பேட்டிங் பண்ணுறவன் செத்தான்) ஆஹா ராஜா கூப்பிட்டுடாரே...மீ த பர்ஸ்ட்டேய் சொல்லிறலாமான்னு வாய் வரைக்கும் வந்ததை நாகரீகம் கருதி அடக்கி கொண்டேன்.


பல விஷயங்களை சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தோம். திருநெல்வேலியில் இருந்து எவ்வளவு பதிவர்கள் என இருவரின் ஆச்சர்யங்களையும் பகிர்ந்து கொண்டோம். நாஞ்சிலுக்கு போன் பண்ணலாம் என கால் பண்ணினால் அவர் போனை வைத்து விட்டு கேரளா வரைக்கும் போயிருக்கிறார் என அவர் வீட்டில் தகவல் சொன்னார்கள். சரி அப்டின்னா.. மறுபடியும் எக்ஸ்பிரஸ் மலையாள மங்கையிடம் மயங்கி விட்டது. திருமப பார்ட்டி துபாய் வந்ததும் மலையாளப்பட விமர்சனம் கண்டிப்பாய் இருக்கும்னு மனசுல நினைச்சுகிட்டேன்.


அப்புறம் ஓரு ஜுஸை குடித்து கொண்டே உரையாடி கொண்டிருந்தோம். அவர் ஐந்து வருடமாக பதிவெழுதுவதையும் இப்போதுதான் அதிக அளவில் புதிய பதிவர்கள் வருவதையும், ஓரு முறை அம்பை பஸ் ஸ்டாண்டில் ஆடுமாடு என்ற பெயரில் பதிவெழுதும் பதிவரை பார்த்து விட்டு “நீங்கதானே ஆடுமாடுன்னு” எப்படி கேக்க என குழம்பி பின் அறிமுக படுத்தி பேசிய சுவாரஸ்யமான சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார். பின் அவரை பாளை பஸ் நிலையத்தில் டிராப் செய்து விட்டு நான் ஜங்சனுக்கு சென்றேன். திருநெல்வேலி நிறைய மாறிவிட்டது நிறைய மாறாமல் அப்படியே இருக்கிறது. அதையெல்லாம் பத்தி எழுதி ஓரு பத்து பதிவாது தேத்திறணும்னு நினைச்சுகிட்டேன்.


அதன் பிறகு ஓரு பத்து நாள் கழித்து நண்பர் பதிவர் எறும்பு ராஜகோபால் அண்ணனும் போனில் பேசினார்கள். ஊருக்கு வந்திருப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் நான் அப்போது தஞ்சாவூரில் இருந்ததால் அவரை சந்திக்க முடியாமல் போனது.


பதிவர் சந்திப்பு புகைப்படங்கள்


பதிவர் சந்திப்பை பற்றி எழுதினால் புகைபடங்கள் பதிவிட வேண்டும் என்ற தொன்று தொட்டு வரும் பாரம்பரியத்தை பின்பற்ற வில்லையென்றால் வரலாற்றுபிழை ஏற்பட்டு விடக்கூடாது என்பதாலும்  எங்களின் தன்னடக்கத்தின் காரணமாக நாங்கள் புகைப்படம் எடுக்காமல் விட்டதாலும் கூகுளில் இருந்து களவாண்ட படங்கள் உங்கள் பார்வைக்கு..



Thursday, April 1, 2010

அகிள உளக தமில்கொலைபதிவற்கல் சங்கம்

பிரபல பதிவர் கவிபேரரசு குசும்பன் ஆரம்பித்த அகில உலக தமிழ்வலைபதிவர்கள் சங்கத்தில் சிலபல குறைகள் இருப்பதாலும் குறைந்தபட்ச பதிவர்களின் தேவையை அது பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எக்கி நிற்பதாலும், பிரபல பதிவர்களை மட்டுமே அவர்கள் குறிப்பிடுவதாலும், பிரபலமல்லாத பதிவர்களின் நலனை மட்டுமே மனதில் வைத்து போட்டி சங்கம் அமைக்க முடிவெடுத்தாகி விட்டது. ஆம் உங்கள் நலனை முன்னிட்டு “அகிள உளக தமில்கொலைபதிவற்கல் சங்கம்” ஆரம்பிக்க படுகிறது.

 

இந்த சங்கத்தில் யாரெல்லாம் சேரலாம்



நான் தினமும் பல பேருக்கு கமெண்ட் போடுகிறேன் ஆனால் யாருமே எனக்கு கமெண்ட் போட வில்லையே என கவலைபடுவரா நீங்கள்..???

எனக்கு தமிழில் சரியாக டைப்ப வரவில்லை ஆனால் நினைத்தை எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவரா..???

ஓரு வாக்கியம் டைப் செய்யவே நாக்கு தள்ளுதே.. எப்பிடிதான் பக்கம் பக்கமா டைப் செய்றாங்களோன்னு வாய் பிளப்பவரா..???

சீரியஸான பதிவில் நீங்கள் எதையாவது சொன்னால் வாசிப்பனுவம் பத்தாது, அது இதுன்னு சொல்லி உங்களை சிரிப்பு போலிஸ் ஆக்குறாங்களா..???

உங்களை யாராவது மானங்கெட்ட தனமா ஏசி கமெண்ட் போட்டதும் ரத்தம் சூடாகி திட்டலாம் என டைப்ப ஆரம்பித்தால் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருகிறதே என வருத்தப்படுபவரா,,????

இதில் குறிப்பிடபடாத இன்னும் பலவற்றையும் செய்பவரா நீங்கள்….?????


கவலையை விடுங்கள்.. உங்கள் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுதான் அகிள உளக தமில்கொலைபதிவற்கல் சங்கம்.

இதில் சேர்பவர்களுக்கு பதிவு காத்தாடாமல் இருக்க ஆள் வைத்து பின்னூட்டமும் ஓட்டும் போட ஏற்பாடு செய்யப்படும்.

பிரபல பதிவர்களுக்கு நீங்கள் போடும் பின்னூட்டத்திற்கு பதில் சொல்ல வில்லையென்றால் சங்கத்தின் மூலம் அவர்களுக்கு இம்போசிஷன் போட ஏற்பாடு செய்யப்படும்

பிரபலபதிவர்கள் உங்களுக்கு பின்னூட்டத்தில் ஸ்மைலி மட்டும் போட்டு சென்றால் அவர்களை தக்க விதத்தில் தட்டி கேட்கப்படும்.

இதன் சங்கத்து உறுப்பினர்களை ஏன் தவறாக டைப்பிகிறாய் என கேட்டால் கேட்டவர்களின் மூக்கில் குத்த ஆட்கள் நியமிக்கப்படும்.

ஏதேனும் பிரச்சனை என்றால் எஸ்ஸாவது எப்பிடி? யாராவது மானம் கெட்ட கேள்வி கேட்டாலும் கொஞ்சம் கூட சூடு, சொரணையில்லாமல் இருப்பது எப்படி? போன்றவைகள் பதிவர்பட்டறையில் சொல்லிதரப்படும் என்பதையும் இங்கு தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் ஆலோசனைகள் தற்போது சங்கத்துல எவனுமே சேராததால.. சேர்ந்தஉடன் ஆலோசித்து பிறகு சொல்லப்படும்.


உடனே முந்துங்கள். முதலில் வரும் 10 அதிர்ஷ்டசாலி நேயர்களுக்கு பஸ்ஸுல் ஜன்னலோர சீட் வழங்கப்படும் என்பதையும் சங்கத்தின் சார்பில் தெரிவிக்க கடமை பட்டுள்ளோம்



டிஸ்கி:

இந்த சங்கத்தில் எல்லாருமே தலைவர்கள்தான். எத்தனை நபர்கள் சேருகிறார்களோ அத்தனை பிராஞ்ச் ஆரம்பித்து அனைவருக்கும் தலைவர் பதிவு அளிக்கப்படும் என்பதையும் இதன் மூலம் தெரிவிக்க கடமைபட்டிருக்கிறோம்.







Wednesday, March 10, 2010

சாரு பெரியாரிஸ்டா – ஜுவி காமெடி

இவ்வார ஜுனியர் விகடனில் வெளிவந்த சாரு பேட்டியை விட அவரை குறித்த ஜுவியின் அறிமுகம்தான் பயங்கர சிரிப்பை வரவழைத்த்து. சாருவை பெரியாரிஸ்ட் என அறிமுகப் படுத்தி சிரிப்பு மூட்டி இருந்த்து. எந்த பெரியாரிஸ்ட் சாமியாருக்கு சொம்பு தூக்கியிருக்கிறார். கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாமல் இந்த அடைமொழியை கொடுத்திருக்கிறார் ஜுவி நிருபர்.



இதில் வழக்கம் போல் சாரு சரவெடி காமெடிகளை உதிர்திருக்கிறார். இதுவரை நாலாயிரம் ஏமாந்தேன் என்றவர் இப்போது அவர் இருபத்து ஐந்தாயிரமும் அவர் மனைவி ஒரு இலட்சமும் ஏமாந்து இருக்கிறார் என கூறுகிறார்.

யோவ் நித்தி ஒழுங்கா இப்பவே உண்மையை ஒத்துக்கோ...இல்லேன்னா போக போக அமெளண்ட் ஏறிரும்.

அவரின் அந்த கேள்வியும் பதிலும் கீழே.

கேள்வி:

'நீங்கள் சாமியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் புகழ் புராணம் பாடியதாகவும், இப்போது அதை மறைப்பதற்காக சாமியார் மீது வழக்குப் போடப் போவதாகவும் சொல்லப்படுகிறதே?''

பதில்:

''பணம் சம்பாரிக்கணும்னா நான் எப்படி வேணும் னாலும் சம்பாரிச்சிருப்பேன். எவ்வளவு வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன். சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு பல தடவை அவனுக்கு நான்தான் தண்டம் அழுதிருக்கேன். புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்கு பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு. இதுக்கிடையில கும்ப மேளாவுக்கு போறதுக்காக என் மனைவி ஒரு லட்ச ரூபாயை அவன்கிட்ட கொடுத்திருக்கா. அதையெல்லாம் திருப்பித் தரச் சொல்லித்தான் அவன் மேல நான் வழக்குப் போடப் போறேன். மத்தபடி சில மாமா பயலுக கிளப்பிவிடுற கதைக்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்!''

அடங்கொன்னியா... அடங்கவே மாட்டியான்னு கேட்க தோணுதுங்க... அட அவன விடுங்க..  எழுத்தாளர் எல்லாம் புத்திசாலி, காவி உடுத்தரவனெல்லாம் சாமியார்ன்னு நம்புற ஜனங்க இருக்குற வரைக்கும் இவனுங்க கல்லா கட்டிகிட்டேதான் இருப்பாங்க.

இப்போ நித்தி – ரஞ்சிதா விஷயத்தில் குமுதமும், ஜூவியும் கல்லா கட்ட ஆயத்தமாகி விட்டது. அதை வைத்து இவரும் குமுதம் ரிப்போர்ட்டரில் தொடர் எழுதப்போவதாக கேள்வி. இப்பொதெல்லாம் இவரை விடவும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.