சில விஷயங்கள் சாதரணமாக ஆரம்பித்து சுவாரஸ்யமாக மாறி நம் நேரங்களை அபகரித்து கொள்ளும் என்பதை எனக்கு இந்த லாரிபேக்கர் குறித்த தேடல் எனக்கு உணர்த்தியது. இதற்கு முன் அவரை குறித்து அறிந்திருந்தாலும் அவையெல்லாம் கடுகளவு என தோணச்செய்தது அவரின் சாதனைகள். கட்டிட கலைக்காக தன்னையே அர்பணித்தவரின் செயல்முறைகளில் கட்டுமான செலவினங்களை குறைக்க உதவும் முறைகளில் சிலவற்றை இங்கு காண்போம்.
இது குறித்து அவர் எழுதிய ‘A Manual of Cost cut for Strong Acceptable Housing’ என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். இதனை இந்த சுட்டியில் தரவிறக்கி படித்து பாருங்கள்.
SHAPE ( அமைப்பு )
கட்டிடத்தின் அமைப்பும் கட்டுமான செலவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக 20 மீ2 அளவுள்ள ஓரு கட்டிட்த்தை 4 மீ அகலமும் 5 மீ நீளமுமாக சதுர வடிவில் அமைத்தால் கட்டுமான செலவு மிகவும் கூடும். ஏனென்றால் சுவரின் சுற்றளவு (Perimeter) 18 மீ வரும் இதையே செவ்வக வடிவிலோ , அரை வட்ட அல்லது வட்ட வடிவில் அமைத்தால் சுவரின் சுற்றளவு குறையும். தேவையான ஏரியாவும் நமக்கு கிடைக்கிறது அதே சமயம் சுவரின் சுற்றளவு குறைவதால் செங்கல் கட்டும் கணிசமான அளவில் குறைகிறது. கீழ்காணும் அட்டவணையில் 20 மீ2 பயன்பாட்டு ஏரியாவிற்கு பல அமைப்பு(Shape)களில் வெளிச்சுவர்களின் சுற்றளவு மீட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சதுரமான அமைப்பை விட செவ்வகமான மற்றும் வட்ட வடிவ அமைப்பே செலவை குறைக்கும் வழிமுறைகளில் சிறந்தது என அறியலாம். (இந்த அமைப்பில் செவ்வகத்தை விட சதுர அமைப்பே சுவரின் சுற்றளவு குறைவாக வருகிறது. பின்னூட்டத்தில் குறிப்பிட்ட திரு சிவ் அவர்களுக்கு நன்றி)
வட்ட வடிவும் செவ்வக அமைப்பும் ஓரே சுற்றளவுதான் என்றாலும் நம்முடைய தேவைகளை கருத்தில் கொண்டு அமைப்புகளை முடிவு செய்வது நலம். ஓரே கட்டிட ஏரியா அதன் அமைப்பின் மூலம் மனையில் அதிக அளவு காலியிடத்தை ஏற்படுத்துகிறது என்பதை கீழ் உள்ள படத்தின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். நமக்கு தேவையான இடமும் கிடைக்கும் அதே நேரத்தில் அதிக அளவு காலியிடங்களின் மூலம் வீட்டிற்கு கிடைக்கும் காற்றோட்டமும் அதிகரிக்கும். ஆரோகயமாக வாழ்வதற்கு வீட்டினுள் கிடைக்கும் காற்றோட்டம் முக்கிய பங்களிப்பு ஆற்றும்.
செங்கல் சுவர்
செங்கல் சுவர்களை பூசாமல் விடுவதன் மூலம் கணிசமான அளவு செலவை குறைக்கலாம். செங்கல் சுவர்களுக்கு அது போண்ற பூச்சுமானமும் தேவையில்லை. இப்படிப் பூசிய வீடுகளில் வெயிலில் உள்ளே வெப்பமும் மழையில் உள்ளே குளிருமாக உள்ளது. சுவரைப் பூசாமல் விட்டால் மழைக் காலத்தில் வீட்டின் உள்ளே வெப்பமாகவும் வெயில் காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் இருக்கும். செலவும் குறைவு.
செங்கல் கட்டும்போது வழக்கமான ”இங்கிலீஸ் பாண்ட் (Engilish Bond)” க்கு பதிலாக ”ரேட்டிராப் பாண்ட் (Rat trap Bond)” உபயோகித்தால் செலவும் குறையும், அதே நேரத்தில் சுவரில் கேவிட்டி அமைப்பும் இருப்பதால் எந்தவிதமான தட்பவெப்ப நிலைக்கும் வீட்டினுள் இதமான அமைப்பை ஏற்படுத்துகிறது. இந்த இரு அமைப்பையும் கீழ் உள்ள பட்த்தின் மூலம் தெளிவாக அறியலாம்
”இங்கிலீஸ் பாண்ட் (Engilish Bond)”
”ரேட்டிராப் பாண்ட் (Rat trap Bond)”
சுவரில் டைல்ஸ் ஒட்டவே கூடாது. அது சுவர்களின் சுவாசத்தைக் கெடுக்கும். வீட்டுக்குள் காற்று வராது. அதனால்தான் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றவர்கள், திரும்பி வந்ததும் மின்விசிறியைப் போட்டுக்கொள்கிறார்கள். வீடு, இறுக்கமாக இருப்பதால் அதில் வசிப்போருக்கு நிறைய நோய்களும் வருகின்றன (கலை விமர்சகர் தேனுகா திரு. அண்ணாகண்ணன் அவர்களுக்கு அளித்த பேட்டியில் சொன்ன வரிகள். http://annakannan-interviews.blogspot.com/2005/07/blog-post_112280867419794933.html)
லாரி பேக்கர் கட்டிய உயர்தர விடுதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவநிலையங்கள் போன்றவை இயற்கை சூழலுடன் இணைந்து ஆடம்பரம் இல்லாத அழகுடன் திகழ்பவை. மருத்துவர்கள் லாரிபேக்கர் பாணி கட்டிடங்கள் நோயாளிகளுக்கு ஆறுதலானவையாக இருப்பதாக கூறினார்கள்.
குளிரூட்டும் வசதிக்காக லாரி பேக்கர் உருவாக்கிய உத்தியும் அபாரமானது. வீட்டுக்குள் சிறிய குளம் ஒன்றை உருவாக்கி அதனை சுற்றி சுட்ட செங்கலால் ஆன சுவரை அமைத்து விடுவார். அது நீரை உறிஞ்சி குளிர்ந்து வெளிவிட்டு குளிரூட்டும் பணியை செய்யும்.
ரூஃப் கான்கிரீட்டிற்கு (Roof Concrete) இவரின் முறை மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். சிவில் இன்ஜியரிங்கின் மிகநுட்பமான விஷயங்களை பயன்படுத்தி செலவுகளை குறைக்கும் வழிமுறைகளை கூறியிருப்பார். அது குறித்தும் மேலும் பல விஷயங்களை குறித்தும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.
------
உங்கள் ஊக்கங்களை எதிர்பார்த்து
கண்ணா..
69 comments:
கண்ணா, இது போல தொழில்நுட்பக் கட்டுரைகள் எழுதத்தான் யாரும் முன்வருவதில்லை. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். பல விசயங்களைத் தெரிந்து கொண்டேன்.
நம் ஊரில் உள்ள வீடுகளில் உள்ள நல்ல நடைமுறைகளையும், திருத்த வேண்டியவற்றையும் எழுதினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.
வாஸ்து எந்த அளவிற்கு உண்மை என்பதையும் / அல்லது வாஸ்து கூற வரும் அறிவியல் என்ன என்பதையும் கூறினால் நன்றாக இருக்கும்.
கண்ணா ,இந்த ரேட் டிராப் பாணி நான் கேள்விப்பட்டதே இல்லையே என்று நினைத்து படித்துக்கொண்டிருக்கும் போதே படத்தில் இதை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.இதிலும் ஒரு சந்தேகம் ....இப்ப ஒரு செங்கல் உயரம் 3 அங்குலம் என்றால் 9" அங்குல width சுவரில் 3 அங்குல கேவிட்டி வரும்,இப்படி செய்யும் போது அந்த சுவர் மீது வரும் பாரம் தாங்குவதில் பிரச்சனை வராதா?
இக்காலத்தில் பல சுற்றுச்சுவர்கள் வெறும் மறைப்புக்கே உபயோகப்படுகிறது அப்படியில்லாமல் அந்த சுவர் பாரத்தை தாங்க வேண்டும் என்று வரும் போது இம்முறை உபயோகப்படுமா என்று தெரியவில்லை.
சுவர் பூச்சு தேவையில்லை என்கிறீர்கள் அப்போது பார்வை அழகுக்கு என்ன செய்வது? ஏதேனும் உத்தி இருக்கா?
3 அங்குல கேவிட்டி திருடர்களுக்கு பெரிதாக வேலையில்லாமல் செய்யக்கூடியது. மலிவு விலையில் தங்குபவர்களிடம் என்ன இருக்கப்போவது?
சூப்பரப்பு... படங்களுடன் நல்ல தகவல்கள்.
கொத்தனாரு வேலை படிக்கும்போது கிடைச்ச புக்கு எல்லாம் இன்னும் வச்சுருககீரு போல...
நான் கட்டப்போற வீட்டக்கு நீருதாவே கொத்தனாரு... இப்பவே பிக்ஸ் பண்ணியாச்சு...
சுவாரசியமா இருக்கு.
இந்த ரேட் டிராப் மெத்தடும், இங்கல்லாம் ஹாலோ ப்ளாக்ஸ் பயன்படுத்துறாங்களே, அதுவும் ஒரே யுத்தியா?
இத்துறையில் உள்ளவர்கள் லாரி பேக்கர் முறைகளின் சாதக, பாதகங்களை இங்கு விவாதித்தால் முழு தெளிவு பெறலாம் (என்னைப் போன்றவர்கள்!!)
குளிரூட்டும் வசதிக்காக லாரி பேக்கர் உருவாக்கிய உத்தியும் அபாரமானது. வீட்டுக்குள் சிறிய குளம் ஒன்றை உருவாக்கி அதனை சுற்றி சுட்ட செங்கலால் ஆன சுவரை அமைத்து விடுவார். அது நீரை உறிஞ்சி குளிர்ந்து வெளிவிட்டு குளிரூட்டும் பணியை செய்யும்.
...............Healthier choice. Better air-conditioner. :-)
வரவேற்கத்தக்க பதிவு,,தொடருங்கள்...
நல்ல உபயோகமான் பதிவு. பூசாம விட்டா சுவரு தன்னி உரிஞ்ந்து பலம் இல்லாம போயிடுமுன்னு சொல்லுவாங்களே?
வாங்க செந்தில்வேலன் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்
வாஸ்து குறித்தும் விரைவில் எழுதுகிறேன்
வாங்க வடுவூர் குமார்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல
//3 அங்குல கேவிட்டி வரும்,இப்படி செய்யும் போது அந்த சுவர் மீது வரும் பாரம் தாங்குவதில் பிரச்சனை வராதா?//
லாரி பேக்கர் பரிந்துரைக்கும் ரூப்ஸ்லாப் ம் வழக்கத்தை விட எடை குறைவானதாகவே இருக்கும். அவர் இந்த முறையை பயன்படுத்தி மூன்றுமாடிகள் வரை கட்டி இருக்கிறார்.
//சுவர் பூச்சு தேவையில்லை என்கிறீர்கள் அப்போது பார்வை அழகுக்கு என்ன செய்வது? ஏதேனும் உத்தி இருக்கா?//
அதற்குத்தான் தற்போது கேரளாவில் ஹேபிடைட் எனும் செங்கற்கல் தயாரிக்கிறார்கள். அதனை கொண்டு கட்டினால் பார்வை அழகும் கிடைக்கும்
//3 அங்குல கேவிட்டி திருடர்களுக்கு பெரிதாக வேலையில்லாமல் செய்யக்கூடியது//
இது முக்கியமான கேள்வி. ஆனால் இதுவும் அந்த ஹைபிடைட் முறையில் நீங்கி விடும். அந்த செங்கற்களை வைத்து கட்டும் போது உள்பக்கம் மட்டும் பூசி விடுகிறார்கள். வெளிப்பக்கம் பூசுவதில்லை
வாடா நாஞ்சிலு
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
நீ கட்ட போற வீடு...சின்ன வீடா..? பெரிய வீடா.?
வாங்க ஹுஸைனம்மா
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//இந்த ரேட் டிராப் மெத்தடும், இங்கல்லாம் ஹாலோ ப்ளாக்ஸ் பயன்படுத்துறாங்களே, அதுவும் ஒரே யுத்தியா?//
இல்லை. ரேட் டிராப் என்பது நமது ஊரில் கிடைக்கும் செங்கற்களை வைத்து வித்தியாசமான முறையில் கட்டப்படுவது.
உபயோகமான பதிவு கண்ணா.. நன்றி..
கண்ணா , அருமையான பதிவு நம்ப அண்ணாச்சி கூட அவரோட ரசிகர் தான் , இது பற்றி இன்னும் நிறைய எழுதவும் ...
சுந்தர்
கண்ணா மிகவும் அருமையான பதிவு.
ரேட் ட்ராப் பாண்ட் கேரளாவில் பரவலாக புழக்கத்தில் உள்ளது,நம்ம ஊர் டாஸ்மாக் கொத்தனார்களுக்கு படத்தை காட்டி விளக்கி கட்டுவதற்குள் தாவு தீந்துவிடும்.
======
முட்டுக்காடு அருகே உள்ள தக்ஷின்சித்ரா தீர்க்கதரிசி லாரிபேக்கரால் ஸோனிங் பிளான் செய்யப்பட்டது.அதற்கு என் பழைய கம்பெனியின் சீஃப் பென்னி குரியா கோஸ் என்பவர் தான் எக்ஸிக்யூஷன் ஆரிகிடெக்ட்.அப்போது நாங்கள் இந்தவகை ராட் ட்ராப் பாண்ட்களையே பயன்படுத்தி காஞ்சிபுரம் வீடு,கேரளா வீடு , காரைக்குடி வீடு என கட்டினோம்.
அப்போது உள்ளூர் கொத்தனார்களை வைத்துக்கொண்டு படாத பாடு பட்டோம்.பின்னர் லாரிபேக்கரின் பட்டரையிலிருந்து தான் ஆள் தருவித்தோம்.
கொத்தனார் மனசாட்சியோடு நன்கு உழைத்தால் மட்டுமே தரமான கட்டுவேலை கிடைக்கும்.அல்லது இதை தெரிந்த சூபர்வைசர்களோ அல்லது வீட்டு உரிமையாளர்களோ அறிவுறுத்த வேண்டும்.இன்றைய சூழலில் ஒருவர் லோகாஸ்ட் இஞ்சினியர் என்று சொன்னால் பெரிய விஷயம் அது.சுற்றுப்புறத்தின் மீது ஆர்வமுள்ளவர்கள்,தன்னலம் கருதாதவர் தான் இப்படி இறங்க முடியும்.
இது கட்டுமானத்தின் தரத்தைப்பொருத்து
நல்ல லோட்பியரிங் எடுக்கும். ஒரு நல்ல கட்டுமானத்திற்கு உட்புறம் பூசவே தேவையில்லை,மிகவும் அழகாய் இருக்கும், பூசாமல் மூன்று கோட் டிஸ்டெம்பெர் அடிக்கப்பட்ட சுவர்கள்.நிறைய ஜிம்மிக்ஸ் செய்யலாம்.
ஹட்கோவின் இந்த சுட்டியை பார்க்க:-
http://results2.ap.nic.in/general/rt/gistvill3.jsp?rno1=25&rno=58
==============
பூசப்படாத அழகிய உள்தோற்றம் எப்படி இருக்கும் என பார்க்க.
http://www.apartmenttherapy.com/ny/good-questions/good-questions-how-to-whitewash-my-brick-wall-024690
http://www.archidose.org/Blog/AE009a.jpg
=============
கண்ணா அருமையான் பதிவுக்கு மிக்க நன்றி
நல்ல பதிவு..
நீங்கள் குறிப்பிட்ட பிடிஎஃப் கோப்பு தரவிரக்க முடியவில்லை...
மின்மடலில் அனுப்ப இயலுமா...நன்றி..
enmadal@yahoo.com
அன்பு அறிவன்,
என் தளத்திற்கு வருகை தந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள் பல.
அதில் நீங்கள் குறிப்பிட்டிருந்த மின்புத்தகத்தை மெயில் அனுப்பி விட்டேன்.
அது எதனால் தரவிறக்க முடியவில்லை என கூறலாமா? ஏனெனில் நான் லிங்க் சரிசெய்து பார்த்துதான் இணைத்தேன். ஏதேனும் பிழையென்றால் சரிசெய்ய ஏதுவாக இருக்கும்
நன்றி
கண்ணா.
கண்ணா, நல்லா இருக்குப்பா...
கலக்குங்க... கலக்குங்க..
இவ்வளவு நாளாக ஆர்வத்துடன் தேடிக்கொண்டிருந்த அரிய விசயங்களை. எளிமையாக விளக்கும் உங்கள் இடுகை அருமை கண்ணா.
இது பொக்கிஷம். தொடர்ந்து எழுதுங்கள். அறிய ஆவலாய் இருக்கிறோம்.
மிக சந்தோசமாக உணர்கிறேன்.
//சுவரில் டைல்ஸ் ஒட்டவே கூடாது. அது சுவர்களின் சுவாசத்தைக் கெடுக்கும். வீட்டுக்குள் காற்று வராது. அதனால்தான் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றவர்கள், திரும்பி வந்ததும் மின்விசிறியைப் போட்டுக்கொள்கிறார்கள். வீடு, இறுக்கமாக இருப்பதால் அதில் வசிப்போருக்கு நிறைய நோய்களும் வருகின்றன//
ஆகா..இப்படி டைல்ஸ் இல்லாமல் வீடுகளை பார்ப்பது இப்போது அபூர்வமாக இருக்கிறது..ஆனால் எந்த இன்ஜீனியரும் இது போல் சொல்வது இல்லையே..தெரியாதா இல்லை நமக்கு என்ன என்று விட்டு விடுகிறார்களா? தல.
பின்னூட்ட புயல் சித்ராக்கா வருகையால் உளம் மகிழ்கிறது..
ஓட்டும் போட்டுட்டு போனிங்க பாருங்க அங்கதான் நீங்க நிக்குறீங்க..
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
வாங்க கண்ணகி,
வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி
//ஷாகுல் said...
நல்ல உபயோகமான் பதிவு. பூசாம விட்டா சுவரு தன்னி உரிஞ்ந்து பலம் இல்லாம போயிடுமுன்னு சொல்லுவாங்களே?//
வாங்க ஷாகுல்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
வர்ண பூச்சின் மூலம் உதிர்வதை தடுக்கலாம்.
வாங்க திவ்யாஹரி,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
வாங்க சுந்தர் அண்ணே..
நல்லாருக்கீங்களா...எவ்ளோ நாளாச்சு நீங்க வந்து கமெண்ட் போட்டு
//
கண்ணா , அருமையான பதிவு நம்ப அண்ணாச்சி கூட அவரோட ரசிகர் தான் , இது பற்றி இன்னும் நிறைய எழுதவும் ...//
லாரி பேக்கரை பற்றி அறிந்தவர்கள் அவரின் ரசிகராகவே ஆகி விடுவார்கள். அண்ணாச்சியுமா...ரைட்டு
கண்டிப்பாக இது குறித்து நிறைய எழுதுகிறேன்..
நிறைய தகவல் திரட்டி விட்டேன்...ஆனால் சுவாரஸ்யமான எழுத்து நடைதான் மக்கர் பண்ணுது
ஆஹா...கலக்குறீங்க குருவே :) ரொம்ப பயனுள்ள பதிவா இருக்கே.
நன்றி தல
வாங்க கார்த்தி,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
நீங்கள் கொடுத்த லிங்கெல்லாம் அருமை. அதை அனைத்தையும் சேவ் பண்ணி விட்டேன். அடுத்தடுத்து அதையும் யூஸ் பண்ணுகிறேன்
உங்கள் குருநாதரை பற்றியும் அறிய ஆவல் மேலிடுகிறது
வாங்க ஜிஆர்ஜி allways cool
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
அடிக்கடி வந்து ஊக்கிவியுங்கள். இது போன்ற தொழில்நுட்ப பதிவுகளை தொடர்ந்து எழுத உங்களை போன்றவர்களின் ஆதரவுதான் எனக்கு எனர்ஜி பூஸ்ட்
வாங்க அக்பர்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
ஓரே நாள்ல மூணு பதிவுக்கும் பின்னூட்டமா....அசத்துறீங்க பாஸ்
நானும் அங்க வாரேன்...கும்மி அடிக்க
வாங்க நாடோடி
தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல..
//ஆகா..இப்படி டைல்ஸ் இல்லாமல் வீடுகளை பார்ப்பது இப்போது அபூர்வமாக இருக்கிறது..ஆனால் எந்த இன்ஜீனியரும் இது போல் சொல்வது இல்லையே..தெரியாதா இல்லை நமக்கு என்ன என்று விட்டு விடுகிறார்களா? தல.//
நாகரீக தொழில்நுட்ப வளர்ச்சியால் நான் உட்பட நிறைய பேருக்கு இது குறித்த விழிப்புணர்வு இன்னும் சரியாக இல்லை
Dear கண்ணா,
My sincere apologies, at the outset, for writing in English. Although I am a physician I have strong interests in house designing that I do as a hobby!
My question is directed at the outer wall length of 20 square meters buildings with square and rectangle shapes. In that picture you (or, Baker) have shown that a rectangle building has a smaller outer wall length compared to a square building. I believe there is a flaw here or, I have a flaw with respect to my math; please clarify that for me; and please permit me to cite an example of a building with 16 square feet area.
Consider this scenario: 4 feet square building makes 16 square feet of area and the wall circumference is 16 feet (4+4+4+4). OK.
Next, take a 16 square feet of a rectangle building with sides of 8 feet length and 2 feet breadth. While agreeing that the area is 16 square feet, the circumference of the outer wall is 20 feet (8+2+8+2).
According to my calculation construction of a outerwall of rectangle building would cost more than a square building as it takes 4 feet more; in other words, 25% more of construction costs with respect the outer wall ( 16 feet wall in a square building as opposed to 20 feet wall with a rectangle building).
Could you (or, Baker) please explain this; I would very much appreciate that.
Sincerely,
Shivu
Dear Kannan,
We are constructing one single storey house in my native. We have planned not to go for pillar type as it may increase the cost however we are advised to put at least belt concrete over the basement. Can you pls tell me, is it necessary to put belt concrete for single storey building. Thanks in Advance
Raja N
நன்றி கண்ணா பகிர்வுக்கு
வாங்க நான் ஆதவன்@ சூர்யா,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
அன்பு Shivu,
உங்களுக்கு தமிழில் பதில் சொல்வதற்கு தவறாக நினைக்க வேண்டாம்.
உங்கள் வருகைக்கும் கேள்விக்கும் நன்றிகள் பல
சரிதான்.. அது செவ்வகத்திற்கு பதில் சதுர அமைப்பு செலவு குறையும் என வந்திருக்க வேண்டும். உஙகளோடு ஒத்து போகிறேன். அந்த புத்தகத்திலும் கவனகுறைவால் வந்திருக்கலாம். நானும் சரிவர ஆராயாமல் பதிவிட்டதிற்கு மன்னிக்கவும்.
அதை பதிவில் திருத்தி விடுகிறேன்.
உண்மையில் உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
பொதுவாக இது போன்ற தொழில்நுட்ப பதிவுகளுக்கு ஆதரவு குறைவாகத்தான் இருக்கும் என்று நினைத்துதான் இதை பதிவிட்டேன்.. ஆனால் என் எண்ணம் பொய்யாகும் படி வரும் இது போன்ற ஆதரவு, கேள்விகள், விவாதங்கள் என்னை இன்னும் இது போல எழுதலாம் என ஊக்குவிக்கிறது.
தொடர்ந்து வாருங்கள்.. குறையிருந்தால் சுட்டி காட்டுங்கள்.. ஆரோக்யமான விவாதத்தை ஆரம்பிப்போம்
நன்றி
//நீ கட்ட போற வீடு...சின்ன வீடா..? பெரிய வீடா.?//
எங்க நாஞ்சில என்ன நெனச்சிங்க. அவரு ரெண்டு வீடும் சேர்த்து கட்டுவாரு. :)
நன்றி..
தரவுச் சுட்டியில் ப்ரீமியம் மெம்பர்கள் மட்டுமே எளிதில் தரவிரக்க முடியும் போலிருக்கிறத.(ராபிட் ஃபைர்தானே..சாரி நினைவில்லை)..
நான் இருமுறை முயற்சித்த போதும் எனது ஐ.பி எண்ணுக்கு உரிய கோட்டா முடிந்து விட்டதாகச் சொல்லியது..இத்தனைக்கும் நான் பெரும்பாலும் எதையும் இணையத்திலிருந்து அதிகம் தரவிரக்கம் செய்பவன் அல்லன்..எனவேதான் உங்களுக்குத் தெரிவித்தேன்..
நன்றி.
அன்பு ராஜா,
உங்கள் வருகைக்கு நன்றி.
சிங்கிள் ஸ்டோரிக்கு பெல்ட் காங்கிரீட் தேவையில்லையென்றாலும் வருங்காலத்தில் முதல்மாடி கட்டுவதை கருத்தில் கொண்டு பெல்ட் காங்கிரீட் போடுவது மிக நல்லது.
இது போன்ற சந்தேகங்களையும் நீங்கள் கேட்கலாம்
---
மேலும் விபரங்களுக்கு http://www.acchelp.in என்ற முகவரியில் சென்றால் இலவச ஆலோசனை மையம் குறிப்பிட்ட ஊர்களில் அமைத்து பணி புரிந்து வருகிறார்கள்.
நன்றி ஜோதி
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
வாங்க அக்பர்
நன்றி மீண்டும் வந்து கருத்து தெரிவித்தற்கு
//எங்க நாஞ்சில என்ன நெனச்சிங்க. அவரு ரெண்டு வீடும் சேர்த்து கட்டுவாரு. :)//
ஆமாமா ... அவரு பண்ணுவாரு :))
நன்றி அறிவன்
உங்கள் மீள் வருகைக்கு..
அது மெகாஅப்லோடு ல் ஏற்றியிருந்தேன்.. இது முழுவதும் இலவசம்தான்..
இதுல ப்ராப்ளமா...அடுத்து வேற ஏதாவது சைட்டில் ஏற்ற வேண்டியதுதான்
:)
நன்றி
miga arumai please telme u r id
pepusekar@gail.com +930776819720
அருமையான நல்ல பகிர்தல்..பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்..
அடுத்து பதிவு எப்ப..
வாங்க சேகர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
என் ஐடி mk1venki@gmail.com
உங்களுக்கும் மெயில் அனுப்பி இருக்கிறேன்
வாடா வினோத்...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
அடுத்த பதிவா...அதுக்குள்ளயா.... டீன் ஏஜ் தொடர்பதிவுதான் எழுதாலாம்னு இருக்கேன்.. ஆனா எப்போன்னு தெரியலை...
நல்லா இருக்கு கண்ணா . ப்ளாக் போனதுல எழுதவும் படிக்கவும் மனமில்லாம போச்சு . தொடர்ந்து எழுதுங்க . உங்களைப் பார்த்தா எனக்கும் நிறைய நம்ம துறை சார்ந்து எழுதணும் போல இருக்கு . நானும் முயற்சி பண்றேன் . மறுபடியும் BUILDING MATERIALS எடுத்து படிக்கணும் போல .
//செவ்வகத்தை விட சதுர அமைப்பே சுவரின் சுற்றளவு குறைவாக வருகிறது// கண்டிப்பா நானும் செக் பண்ணி பார்த்தேன் செவ்வகம்தான் அதிகமா வருது . இந்த மாதிரி உதாரணம் போடும் முன் நீங்களும் ஒருமுறை செக் பண்ணி பார்த்துடுங்க கண்ணா . முடிஞ்சவரைக்கும் பிழை இல்லாம சொல்வோம் .
இந்த மாதிரியான பதிவுகள் துறை சார்ந்து இருக்குறவங்களுக்கு மிக பயனுல்லதா இருக்கும் .நம்ம சென்னை மற்றும் கிராமப் புறங்களில் வீடு கட்டுவோருக்கு எப்படி குறைந்த செலவில் கட்டுவது , எந்த மாதிரியான பொருள்( குறைந்த விலையில் தரமான) பயன்படுத்துவது , ஒரு ஒரு சின்ன இடங்களில் கூட அழகுபடக் கட்டுவது ? இதை பற்றிய பதிவிட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் . இந்த தொடரையும் தொடர்ந்து எழுதுங்கள் .
பாஸ் உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
http://sinekithan.blogspot.com/2010/02/blog-post_27.html
அன்புள்ள கண்ணா அவர்களுக்கு,
அடடா! நான் எழுத ஆரம்பித்த கட்டுரையை நீங்கள் முந்திக்கொண்டு ஆரம்பித்துவிட்டிர்கள். கட்டிடங்களையும் சுற்றுப்புறச் சூழலையும் உண்மையாக நேசிப்பவர்களுக்கு லாரி பேக்கர் ஒரு ஆதர்ச கலைஞர் தான். இந்தக் கட்டுரையைப் பற்றி என் பணிவான வேண்டுகோள்!
//சுவரில் டைல்ஸ் ஒட்டவே கூடாது. அது சுவர்களின் சுவாசத்தைக் கெடுக்கும். வீட்டுக்குள் காற்று வராது. அதனால்தான் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றவர்கள், திரும்பி வந்ததும் மின்விசிறியைப் போட்டுக்கொள்கிறார்கள். வீடு, இறுக்கமாக இருப்பதால் அதில் வசிப்போருக்கு நிறைய நோய்களும் வருகின்றன//
என்ற வரிகள் கலை விமர்சகர் தேனுகா திரு. அண்ணாகண்ணன் அவர்களுக்கு அளித்த பேட்டியில் சொன்ன வரிகள்.
(http://annakannan-interviews.blogspot.com/2005/07/blog-post_112280867419794933.html) இப்படி எழுதும் போது தேனுகா இப்படி சொல்கிறார் என்று சொல்லி அந்த பக்கத்தின் சுட்டியை அளித்திருந்தால் வாசர்களுக்கு படிக்க மற்றும் ஒரு கட்டுரை கிடைத்திருக்கும். என் நோக்கம் தவறை சுட்டிக் காட்டுவதில் இல்லை, உங்கள் கட்டுரையின் நம்பகத்தன்மை பாதிக்காமல் இருக்கத்தான்.
மிக்க நல்ல கட்டுரை - பேக்கரின் சாதனைகளை தமிழ் கூறும் நல் உலகிற்கு எடுத்துச் செல்வதற்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
மீனாட்சிசுந்தரம்
http://kattidakkalai.blogspot.com/
அன்பு நண்பர் மீனாட்சி சுந்தரம் ,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
நீங்கள் சுட்டி காட்டியதற்கும் நன்றிகள் பல. இது கடந்த ஆறு மாத காலமா நான் பார்த்த, படித்த குறிப்புகளை வேர்டில் சேமித்து வைத்திருந்தேன். ஆனால் அது குறித்த சுட்டிகளை நான் இதுவரையில் சேமிக்கவில்லை. இனி அதையும் சேமித்து குறிப்பிட்டு விடுகிறேன்.
இப்போதே அந்த சுட்டியையும் இணைத்து விடுகிறேன். மிக தாமதம்தான் என்றாலும் இனி படிப்போருக்கு தெரியட்டுமே..
நீங்களும் எழுதுங்கள். தமிழில் கட்டுமான தொழில்நுட்ப பதிவுகள் மிக குறைவாக இருப்பதால் நாமெல்லாம் இது குறித்து அதிகம் எழுத வேண்டும்
நன்றி
எனக்கு நீலகிரி மலைப்பகுதியில் சிறிய அளவில் ஒரு எளிமையான வீடு கட்டணும். கொஞ்சம் விவரங்கள்சொல்லவும்.
ஆஹா மிகவும் சிறப்பான பல தகவல்களை தந்திருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி .
நானும் இப்பொழுதுதான் கிராமத்தில் ஒரு வீடு காட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் . ஆனால் அங்கு இருக்கும் போறியாளர்கள் . வீடு காட்டும் எண்ணமே காணாமல் போகும் அளவிற்கு . செலவுகளைப் பற்றி சொல்கிறார்கள் . எனக்கு இன்னும் சில தகவல்கள் தேவைப்படுகிறது உதவ இயலுமா நண்பரே ??????????
Shankarpo071@gmail.com
http://wwwrasigancom.blogspot.com/
@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
கண்டிப்பாக எனக்கு தெரிந்த தகவல்களை தருகிறேன் நண்பா
உங்களுக்கு தேவையான் தகவலுக்கு விபரங்களுடன் எனக்கு mk1venki@gmail.com கு மெயில் அனுப்புங்க. எனக்கு தெரிந்தததை சொல்கிறேன். தெரியாததை தேடி தருகிறேன்
SUPER
உங்கள் பதிவுகள் இன்னும் நிறைய கட்டுமானத் தொழில் நுட்பங்களை தமிழில் கொண்டு வரட்டும்.இனையத்தில் தமிழில் தொழில் நுட்பக்கட்டுரைகள் குறைவு. நிறைய எழுதுங்கள் நண்பரே. வாழ்த்துகள்.
Dear sir,
i want do contact to Laurie Baker,please give me the contact number
Dear sir ,
i want do contact to Laurie Baker,please give me the contact number
thanking you
regards
Boominathan
ROMBA ARUMAIYA SONNENGA, ENNUM NIRAIYA THAGAVAL VENUM, APPURAM " CAVITY" PATHI SONNERGAL ENAKKU PURIYAVILLAI KONJAM VILAKKAM KODUKKA MUDIYUMA
supprapa kanna
உண்மையிலேயே தமிழில் அரிய முயற்சி. பாராம்பரிய கட்டிட முறை தெரிந்த கட்டிட கலைஞர்கள் இல்லை. மேற்கத்திய பாணியில் உரிய நிபுணத்துவம் பெற்ற உள்ளூர் கட்டிட கலைஞர்கள் இல்லை. கட்டிட பொறியாளர்களை வைத்து நடுத்தர மக்களால் வீடு கட்ட முடியவில்லை. அனுபவ ஞானம் உள்ள கொத்தனார்களை நம்பித்தான் வீடு கட்ட வேண்டியுள்ளது. பில்டர்கள் என்று இருப்பவர்களுக்கு தாங்கள் சொல்லும் விஷயங்களை புரிந்து கொள்ளவே இயலாத நிலை உள்ளது. உள்ளூரில் நடுத்தர மக்களுக்கான படித்த சுற்றுப்புற ஆர்வலராக இருக்கக் கூடிய கட்டிட பொறியாளர்கள் கிடைப்பதே இல்லை. யாரிடம் போய் லாரி பேக்கர் தொழில்நுட்பத்தையும் ரேட் டிராப் கட்டிட முறையையும் லாரி பேக்கர் முறை கூரை அமைப்பையும் கூறி வீடு கட்டுவது. யாரை அனுக வேண்டும் என்பது குறித்து விரிவாக சொன்னால் உதவியாக இருக்கும். லாரி பேக்கர் கட்டிடக் கலையின் குறைபாடுகளை பற்றியும் (ஏதேனும் இருந்தால்) சொல்லலாம். வெளிப்பூச்சுமானம் இல்லாமல் வீடு கட்டுவது மனதிற்கு திருப்தியை தராதே என்ன செய்வது? நமக்கு அவசரத் தேவை என்று சொன்னால் 1.உறுதி தன்மை பாதிக்காத குறைந்த செலவு கொண்ட கட்டிட முறை. 2.அழகான உறுதியான கட்டிட முறை.3.வாஸ்து நம்பிக்கை கொண்டவர்களையும் ஈர்க்கும் வகையிலான வரைபடம்.4.சிமிண்ட், கம்பி, மரம் செலவுகளை குறைத்து அழகும் உறுதியும் மிக்க கட்டிடங்களை கட்டும் திறமையான கட்டுமான மு்றை.5.நவீன வசதிகளை அனுபவிப்பதற்கு தடை ஏற்படுத்தாத கட்டிட முறை.
மனதில் தோன்றும் ஆசைகளை சொல்லிக் கொண்டே போகலாம். நல்ல முறையில் கட்டிடம் கட்டுபவர்கள் யார்? வேறு என்ன கட்டிட முறைகள் உள்ளது என்று தெரியாமல் பரிதவிக்கும் மக்களுக்கு குறிப்பாக தமிழக மக்களுக்கு தமிழில் கட்டிடக்கலை நுட்பங்களை பற்றி சொல்வதற்கு ஒருவர் முன் வந்திருக்கிறார் என்பது மனதிற்கு ஒரு நிறைவை தந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கட்டிடக்கலை பற்றி கூறுவதற்கு அதிலும் தமிழில் கூறுவதற்கு ஒருவர் இருக்கிறார் என்பது மிகவும் பெருமைப்படத்தக்க விஷயம். வாழ்க உங்கள் சேவை. வளரட்டும் கட்டிடக்கலை நுட்பங்கள்.
Arumai... Arumai... indha katturai mekavum arumai. idu mailkallalla meka sirantha padikkal.
Best For flooring grainate or vertified tile?
அருமையான நல்ல உபயோகமுடைய பதிவு
அருமையான நல்ல உபயோகமுடைய பதிவு
In Trivandrum - the Costford in which Lurie Baker was the Director - constructing this model houses..
me attempted this house..
and this model houses are conceptual houses.. to use less cement, less bricks, to use recycled woods, to use filler slab for reducing costs, red-oxide flooring.. rain water harvesting.. rubble missionary (no belt needed).. and the list is endless..
rat -trap walls used to breath.. air going up at the day and coming down at the night..
in rat-trap one brick is laid in full length and the next one is laid in cross length and so the bearing capacity is not affected..
art of constructing a house..
அருமையான பதிவு...
Good newsletter
Post a Comment