Saturday, January 2, 2010

புர்ஜ் துபாய் திற்ப்பு விழா - கம்பெனி பார்ட்டி




ஏற்றி விட்ட ஏணியை மறக்கும் உலகம்


ஜனவரி 4ம் தேதி மிக பிரமாண்டமான ஓபனிங்க்கு தயாராகி கொண்டிருக்கிறது துபாயில் உள்ள அல் புர்ஜ் டவர் , உலகின் மிக உயரமான கட்டிடம்.

818 மீ உயரம், 160 மாடிகளை கொண்ட இந்த கட்டிடம், ஸ்ட்ரக்ச்ச்ர் மற்றும் கிளாடிங் வேலைகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராகிறது. ஜனவரி 4ல் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.






ஏற்றி விட்ட ஏணியை மறக்கும் மனிதனின் பழக்கத்தை இந்த கட்டிடமும் கற்று கொண்டது. வெறும் மண்ணாக கிடந்த இடத்தை கம்பியாலும் காங்கீரீட்டாலும் உலகில் மிக உயரத்திற்கு கொண்டு செல்ல அல்லும் பகலும் அயராது உழைத்தவர்களை ( யார்ரா... அவன் கேக்கெ.. பிக்கென்னு சிரிக்குறவன்) மறந்து விட்டது. இப்போது என்னால் கட்டிடத்திற்கு உள்ளே நுழைய முடியவில்லை. விஐபிகளும் விவிஐபிகளும் மட்டுமே நுழைய முடியுமாம்.




கிளிக்கு றெக்கை முளைச்சிட்டுதோன்னோ..அதான் பறந்து போச்சு.........



” பாலூட்டி வளர்த்த கிளி

பழம் கொடுத்து வார்த்த கிளி

நான் வளர்த்த பச்சை கிளி

நாளை வரும் கச்சேரிக்கு “


உலகின் உயரத்தில் உன்னத தமிழன் ( வேற யாரு ...ந்நாந்தேன்...)




இயர் எண்ட் பார்ட்டி...

இந்த ரிஸஸன் நேரத்தில் பார்ட்டியை நடத்தவா வேண்டாமா என பட்டிமன்றம் நடத்தி எடுக்கப்பட்ட முடிவு. வழக்கம் போல் முதல் நாளே சொல்லி விட்டதால் அதிலிருந்தே ஓன்றும் சாப்பிட கூடாது என்ற தொன்று தொட்ட வழக்கத்தை விட்டு விட்டால் தமிழின துரோகி என கூறி விடுவார்கள் என்பதால் அதையே கடைபிடித்தேன்.





முதலில் பவுலிங் செண்டர்க்கு சென்றோம். பந்தை உருட்டி கட்டைகளை தட்டி விட்டு பக்கத்திலிருக்கும் செம கட்டைகளை ஓரு தட்டு தட்டி விளையாண்டோம். ஊரில் கோலிக்காவை மட்டுமே விளையாண்டு பழக்கம். இங்கு வந்து இம்மாம் பெரிய பந்தை குடுத்தா என்ன பண்ணுவேன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..







சரின்னு மனசை தேத்திகிட்டு, ”சாமி.. தேவதைகள் மத்தியில மானத்தை வாங்கிறாதனு” நினைச்சுகிட்டே பந்தை போட்டா... கடவுள் நல்லவங்களை எப்பவும் கைவிடமாட்டார்னு புரிஞ்சுகிட்டேன். ( யாரு அந்த நல்லவன்னு தெரியாத மாறி கேப்பீங்களே..)

அப்புறம் ரெஸ்டாரண்ட் போய் சாப்டவிட்டா...ஆத்தாடி...ஸ்பூனை கைல குடுத்து சாப்பிட சொல்லுறானுவோ... அடங்கொக்கா மக்கா.. ஸ்பூனு வச்சு அதை எடுத்துகறேன்..கைய வச்சு சாப்ட்டுக்கறேன்னு சொன்னா .. கேக்கானுவளா...கேணப்பயலுக.... அப்புறம் ஸ்பூனு வச்சு ரொட்டியை பிச்சா ஓரு பாதி என் டேமேஜர் முகத்துல போய் விழுது... அப்புறம் அவங்க எல்லாரும் கெஞ்சி கேட்டுகிட்டதுனால மறுக்கா கையை வச்சே சாப்பிட்டு முடிச்சேன்.








இதுக்கு மேல என்னால டைப்ப முடியாத காரணத்தால் உரையை இதோடு முடித்து கொள்கிறேன்.

37 comments:

நாகா said...

//இதுக்கு மேல என்னால டைப்ப முடியாத காரணத்தால் உரையை இதோடு முடித்து கொள்கிறேன்//

துக்கம் தொண்டய அடைக்குதா? விடுங்க பாஸூ, இந்த சின்ன கட்டடத்துக்கு முன்னாடி நீங்க எவ்வளோ பெரிய ஆளு? :)

Prabhu said...

இந்தக் கட்டிடத்த நீங்க கட்டுனீங்களா? இப்படியெல்லாம் சொன்னா போஜனம் கிடைக்காது :)

கண்ணா.. said...

வாங்க நாகா

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க பப்பு,

கட்டிடத்தை நான் கட்டலை, நான் ஆபிஸ்ல உக்காந்து ப்ளாக் படிக்கசொல்லோ கொத்தானார் கட்டிடாங்கோ....

வருகைக்கு நன்றி :)

kishore said...

நீயும் பாரின்ல வேலை செய்யுற "பச்சபுள்ள" தான்னு உயரமான கட்டிடம் முன்னாடி நின்னு போட்டோ எடுத்து நிருபிச்சிட்ட.. அது என்ன பாரின்ல வேலை செய்யுற பயபுள்ளைங்க எல்லாம் போட்டோ கேட்டா எதாவது உயரமான கட்டிடம் இல்ல அழகான கார்(அது எவனுதோ?) முன்னாடி நின்னு போட்டோ எடுத்து காமிகிறிங்க?

கலையரசன் said...

L160 611M போர்டுக்கு பக்கத்துல நின்னு எடுத்துகிட்ட சரி... பின்னாடி பில்டிங்க கானாமே???

கலையரசன் said...

செல்லாது... செல்லாது.. நாலு பேரு போயி சாப்பிட்டது எல்லாம் பார்ட்டியின்ற கணக்குல ...

வராதுலே!

வராதுலே!!

வராதுலே!!!

கலையரசன் said...

எல்லாத்தையும் பொறுத்துக்கலாம்டா!!
ஆனா, கடைசியா உள்ள போட்டோவுல..

பிச்ச எடுக்குற ஃபிகர்கிட்ட என்ன போஸ் வேண்டிகிடக்கு???

வினோத் கெளதம் said...

என்ன சட்டை அது..ஜிங்கு சான் நீல கலர் சட்டை தான்னு ..;)

வினோத் கெளதம் said...

//ஊரில் கோலிக்காவை மட்டுமே விளையாண்டு பழக்கம். இங்கு வந்து இம்மாம் பெரிய பந்தை குடுத்தா என்ன பண்ணுவேன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

உண்மையில் Bowling center தான் போனிங்களா..இது எதோ Double meaning டயலாக் மாதிரி தெரியுதே..

குசும்பன் said...

நீங்க கொத்தனாரா சொல்லவே இல்ல?

geethappriyan said...

கண்ணா நீங்கள் சாம்சங் பேஸிக்ஸிலா வேலை பார்த்தீர்கள்? நான் டெப்பா இண்டீரியஸ் ஆபீஸில் கேட் ஆபரேடர் டீம் லீடராக இருந்தேன்.(ஜன2006 முதல் நவம்பர்2007) கண்டிப்பாக பார்த்திருப்போம்,அந்த பேஸ்மெண்டில்.
உங்க ஆபிஸ் வந்து தான் நாங்க வெண்டிங் மிஷினில் கோக் மற்றும் பிஸ்கட் காசு போட்டு எடுப்போம்.
நான் கடைசியாக வேலையை விடுகையில் 150 மாடிகள் வரை வந்திருந்தது.கான்க்ரீட் பம்பிங் ரெகார்ட் ப்ரேக்கின் போது அங்கே தான் இருந்தேன்.
===================
அந்த சோகம் உங்களையும் தாக்கும் என்னும் போது வந்த அழுகையும் தானா நின்றுடுச்சு.
===================
சேம் பிளட்
இப்போ உங்க ஆபீஸ் இருந்த இடம் எல்லாம் ஏரியாயிருக்குமே?
தல நாம எல்லாம் இதை மதிக்காமல் அடுத்த வேலையை கையில் எடுத்துக்கொண்டு போய்கீட்டே இருக்கனும்.என்கிட்டயும் 80 ஆவது மாடியில டெப்பா தொப்பி போட்டு நிக்கிறா மாதிரி ஒரு படம் உண்டு.:)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//வினோத்கெளதம் said...
என்ன சட்டை அது..ஜிங்கு சான் நீல கலர் சட்டை தான்னு ..;)
//

அதானே.. :))

//கலையரசன் said...
எல்லாத்தையும் பொறுத்துக்கலாம்டா!!
ஆனா, கடைசியா உள்ள போட்டோவுல..

பிச்ச எடுக்குற ஃபிகர்கிட்ட என்ன போஸ் வேண்டிகிடக்கு???
//

கண்ணா, கலைய கொஞ்சம் கவனிங்க.. :))

- இரவீ - said...

அட ஜுப்பரு...

பதிவ சொல்லுல பாஸ்... கடைசி போட்டோவ... :)

இங்கன தான் குப்பகொட்டுரியலா???
நானும் பக்கத்துல தான் பொருக்கிகினு இருக்கேன்.

வாழ்த்துக்கள் நன்பரே.

கண்ணா.. said...

வாடா கிஷோரு..

ஏண்டா நானே சோகத்துல இருக்கும்போது நீ வேற எதுக்கு எண்ணெ ஊத்துற

கண்ணா.. said...

வாடா கலை

4 பேர் இல்லடா, 40 பேரு போனோம், ஆனா கூட்டத்துல தலைவர் தெளிவா தெரியாத காரணத்தால் இந்த போட்டோ..

பாஸ் பிச்சையெடுத்தாலும் பிகர் பிகர்தானே....

கண்ணா.. said...

வாடா வினோத்,

பதிவு போட்டா அனுபவிக்கனும், ஆராய கூடாது... அவ்வ்வ்வ்

கண்ணா.. said...

வாங்க குசும்பன்

நான் கொத்தனார்லாம் இல்லீங்கோ....அதுக்கு பெரிய படிப்பு படிக்கோணும்னு சொல்லிட்டாங்கோ...

கண்ணா.. said...

வாங்க கார்த்தி

நீங்க depa va அதில் யாமின் ஷிகாப் எனக்கு ரொம்ப பழக்கம்.

ஆனா நாம் அங்க பாத்திருக்க வாய்ப்பு இல்லை. ஏன்னா நான் ஜனவரி 2008 ல் தான் இங்க ஜாயின் பண்ணினேன். அதற்கு முன்னால் கத்தாரில் இருந்தேன்.

கண்ணா.. said...

வாங்க செந்தில்வேலன்,

நீங்களுமா கும்ம ஆரம்பிச்சாச்சு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கலைக்கு கல்யாணம் ஆனாதான் சரியா வருவான்னு நினைக்குறேன்..

அதுவரைக்கு ஓண்ணும் பண்ண முடியாது
:)

கண்ணா.. said...

வாங்க இரவீ,

என்னாது நீங்களும் இங்கனதான் இருக்கீரா...

அப்புறம் இன்னும் ஏன் அமீரக கொலை வெறி படையில இல்லை

போன் நம்பர் குடுங்க பாஸ். பேசுவோம்

வடுவூர் குமார் said...

அவ்வ‌ள‌வு உய‌ர‌த்துல‌ ஐஸ் வைத்தால் உருகிடும் என்ப‌தால் காலிபா என்று பெய‌ர் மாற்ற‌ம் செய்து அபுதாபியை கொஞ்ச‌ம் அர‌வ‌ணைத்து செல்கிறார்க‌ளா?

சென்ஷி said...

வாய்த்துக்கள் பாசு :)

கண்ணா.. said...

வாங்க குமார்,

இப்போதைய நிலைமையில் அபுதாபியை அரவணைத்தால்தான் துபாயில் அடுப்பு எரியும்.. அதனால்தான்

கண்ணா.. said...

//சென்ஷி said...
வாய்த்துக்கள் பாசு :)//

வாங்க சென்ஷி

நாளைக்கு பதிவுன்னு சொல்லி ரெண்டு பாட்டை போட்டு ரெண்டு வாரம் ஆச்சு...அதுக்குள்ள ஊருக்கு போயாச்சா..

ஹேப்பி வெகேஷன் பாசு....:))

Chitra said...

இப்போது என்னால் கட்டிடத்திற்கு உள்ளே நுழைய முடியவில்லை. விஐபிகளும் விவிஐபிகளும் மட்டுமே நுழைய முடியுமாம்.

கிளிக்கு றெக்கை முளைச்சிட்டுதோன்னோ..அதான் பறந்து போச்சு......... அண்ணாத்தைக்கு no entryaa...... இந்த அடுக்கு மாடிக்கு அடுக்குமா?

Prathap Kumar S. said...

//இப்போது என்னால் கட்டிடத்திற்கு உள்ளே நுழைய முடியவில்லை. விஐபிகளும் விவிஐபிகளும் மட்டுமே நுழைய முடியுமாம்.//

உண்மைதானேவே... கொத்தனாரு வேலையை முடிச்சமா கைகழுவனமான்னு இல்லாம உள்ளாற போய் கும்மியடிக்குனும்வேற ஆசையாவே... ரொம்பத்த லொள்ளுவே உமக்கு...


//அப்புறம் அவங்க எல்லாரும் கெஞ்சி கேட்டுகிட்டதுனால மறுக்கா கையை வச்சே சாப்பிட்டு முடிச்சேன்.//
அதானே நாமென்னு ராக்பெல்லர் பேமிலியா? கொட்டாம்பட்டி பழனிச்சாமி பேரனுக்கு ஸ்பூன்லாம் ஓவெரதாம்வே...

ரிஷபன்Meena said...

nice pictures.

கண்ணா.. said...

வாங்க சித்ரா,

நம்ம ஊரு பாளை’யங்’கோட்டை காரரு நீங்க .. உங்களுக்காச்சும் என் ஆதங்கம் புரிஞ்சுதே...

நன்றிங்கோ...

கண்ணா.. said...

வாங்க நாஞ்சிலு

என்னடா இது இன்னுமா உலகம் என்னை நம்பலை

உடனே இன்ஸ்டண்டா பின்நவீனத்துவத்துல ரெண்டு கவிதை எழுதிற வேண்டியதுதான்..

வருகைகு நன்றி

கண்ணா.. said...

வாங்க ரிஷபன்

வருகைக்கு நன்றி

- இரவீ - said...

உங்கல நெனச்சா பாவமா இருக்கு... இந்தாங்க என் நம்பரு... 0509208379

malar said...

சார் நீங்க சிவில் இன் உங்க ப்ரொஃபில் பார்து தெரிந்து கொண்டேன் .உங்கள மாதிரி நாங்க போய் பார்க்க முடியிமா?உங்கள் வருகைக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

பாவம் பாஸ் நீங்க.
அடுத்த முறை கட்டும் போது அக்ரிமெண்ட் போட்டுடுங்க.

இங்க இருக்குற‌ நிலமைக்கு இந்த பிகர் ரொம்ப சூப்பர்.

பெல்லி டான்ஸ் பார்த்த கலைக்கு இது எல்லாம் ஜூஜூபியாத்தான் தெரியும். அவ்வ்வ்வ்வ்.

கண்ணா.. said...

வாங்க இரவி

நம்பர் நோட்டட்

சீக்கிரமே அமீரக கொலைவெறி கும்பலில் சேர்ந்து சொறியலாம்.

நன்றி

கண்ணா.. said...

வாங்க மலர்

முதல் வருகைக்கு நன்றி...

இப்பல்லாம் வரவர நாகர்கோவில் காரெவெல்லாம் ஒண்ணா சேந்துகிடுதாங்கோ...

:)

கண்ணா.. said...

வாங்க அக்பர்

தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

நெக்ஸ்ட் கண்டிப்பா...அக்ரிமெண்ட்தான்...

சில்லி பய கலை சொல்லுல்றதெல்லாம் படிச்சுகிட்டா இருக்கீங்க....அய்யோ....அய்யோ...


எங்களை மாதிரி போய் படிக்காம் கமெண்ட் மட்டும் போட்டு வந்துருங்க பாஸ்..

ஓட்டும் போட்ருங்க....இல்லன்னா ஜிடாக்ல தொல்லை தாங்க முடியாது

:)