Monday, June 22, 2009

The Flight Plan – ஏரோப்ளேன்ல ஏடாகூடம் - விமர்சனம்நம்ம கலை, வினோத்லாம் இங்கிலீபீஸ் படத்தை பத்தி விமர்சனம் எழுதும் போதெல்லாம் நமக்கு எதுக்கு இந்த கருமம் புடிச்ச வேலைன்னு நினைச்சு அதை படிச்சே பார்க்காம கமெண்ட் போட்டுட்டு ஓடி வந்துட்டேன். ஆனா அதுக்கு அடுத்த வாரமே இந்த கிஷோரு பயலும் இங்கிலிஸ் படத்தை பத்தி விமர்சனம் எழுதுனத பார்த்த உடனேயே முடிவு எடுத்துட்டேன் நாமளும் ஓரு இங்கிலிசு படத்த பத்தி விமர்சனம் போட்றணும்டா அப்பிடின்னு. உடனே ஒரு பிரண்ட்கிட்ட சொல்லி இங்கிலிஸ் பட கலெக்‌ஷன் வாங்கிட்டு வந்திட்டேன். விமர்சனம் எழுதறதுக்காக ஒவ்வொரு படமா பாக்குறேன் .!! கருமம்... கருமம்...!! அதுல முக்கால்வாசி படத்தை பத்தி எழுதவே முடியாது. அதுல தேடிபுடிச்ச ஒரு நல்ல படம் “The Flight Plan”Director: Robert Schwentke


Starring: Jodie Foster, Peter Sarsgaard, Erika Christensen, Sean Bean, Haley Ramm


விமானம் பறந்து கொண்டிருக்கும்போது நீங்கள் அழைத்து வந்த ஆறு வயது சிறுமி காணாமல் போனால் .. எப்படி இருக்கும்? அதெப்படி பறக்கும் விமானத்தில் சிறுமி காணாமல் போக முடியும் என ஆச்சர்யங்களை அதிகபடுத்தி கொண்டே நகர்கிறது “The Flight Plan” . முழுக்க முழுக்க நாயகியை பிரதானமாக கொண்டு நகர்வதால் படம் வித்தியாசமாக என் கவனத்தை கவர்ந்தது.


வீட்டின் மாடியில் இருந்து கணவன் விழுந்து இறந்து விடுகிறான். அதற்கு மேலும் அந்த வீட்டில் வசிக்க முடியாமல் கணவனின் சடலத்துடனும் தன் மகளையும் அழைத்து கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்கு ஜுடி ஃபோஸ்டர் கிளம்புகிறார். கணவரின் பிரேதத்துடனும், தன் ஆறு வயது மகளுடனும் நாயகி தன் பெற்றோரின் வீட்டிற்கு செல்ல விமானத்தில் ஏறிய உடன் அதுவரை இருந்த தொய்வு நீங்கி வேகம் கூடுகிறது.

காலியான இருக்கையில் மகளை படுத்து தூங்க வைத்து பின் தானும் தூங்கி எழுந்து பார்க்கும் போது மகளை காணாமல் திடுக்கிடும்போது திரைகதையில் கூடும் பரபரப்பு விமானியிடம் புகார் செய்ததும் அவர்கள் செக் இன் சார்ட்டில் பார்த்து விட்டு அப்படி ஓரு பயணி விமானத்தில் ஏறவே இல்லை எனும்போது பரபரப்பின் உச்சகட்டத்திற்கு போகிறது.

அருகில் உள்ளவர்களும் பார்க்கவில்லை என்றபோதும் நாயகியின் வற்புறுத்தலால் தேடிபார்க்க விமானி உத்தரவிடுகிறார். அவர்களும் எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்து இல்லை என சொல்லவும் நாயகி பாத்ரூம் செல்வதாக சொல்லி அதிலிருந்து கூரையை உடைத்து வெளியேறி பாதுகாப்பு அலாரத்தை அலற செய்து பின் பாதுகாப்பு அதிகாரியிடம் மாட்டும் போது சக பயணிகள் அனைவருமே நாயகியை மனநோயாளியாக பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

உண்மையில் மகளுடன் பயணம் செய்தாளா? அவள் மனநோயாளியா? இல்லையென்றால் அவளுடைய ஆறு வயது மகள் என்ன ஆனாள்? யார் இதை செய்தார்கள்? எப்படி காப்பாற்றுகிறாள் என்பதை திருட்டு விசிடியில் கண்டு களிக்கவும்..

டிஸ்கி:

இப்பல்லாம் ஆபிஸ் டையத்துல ஆபிஸ் வேலையைதான் பார்க்கணும்னு ஆபிஸருங்க கொடுமைபடுத்தறதுனால கடந்த ஒரு வாரமா என்னால ஆன்லைனுக்கு வரமுடியல என்பதையும் இங்கு தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
என்ன கொடுமை சரவணன் இது.????

25 comments:

Mrs.Menagasathia said...

//வாங்க... இவ்ளோ தூரம் வந்திட்டு ஒன்னும் சொல்லாமலா போய்ருவீங்க...//
இதோ என் கருத்து!!
விமர்சனம் நல்லா எழுதிருக்கிங்க!!

கண்ணா || Kanna said...

வாங்க Mrs.Menagasathia ,

வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல

தீப்பெட்டி said...

//திருட்டு விசிடியில் கண்டு களிக்கவும்..//

திருட்டு விசிடியை கூரியரில் அனுப்பவும். இல்லயென்றால் முழுகதையையும் அடுத்த பதிவில் சொல்லிவிடவும்..

இளைய கவி said...

இந்த படம் நானும் பாத்திருக்கேன் தல. படத்த விட உங்க விமர்சனம் அருமையா இருக்கு. இன்னும் எழுதுங்க தல்..

அக்னி பார்வை said...

தொர இங்கிலி பீசு படமெல்லாம் பாக்குது

வினோத்கெளதம் said...

//கருமம்... கருமம்...!! அதுல முக்கால்வாசி படத்தை பத்தி எழுதவே முடியாது. //

இப்ப தான் புரியுது வேலை வேலைனு சொன்னது என்ன வேலைனு..

வினோத்கெளதம் said...

நல்லா விமர்சனம் பண்ணி இருக்கீங்க..

வினோத்கெளதம் said...

Jodie Foster சும்மா சொல்ல கூடாது நல்ல.............................

நடிகைனு சொல்ல வந்தேன்..

KISHORE said...

என் பொண்ணு எங்கடா? 2 வருஷத்துக்கு முன்னாடி டி.வி ல அடிக்கடி இந்த படத்தோட விளம்பரம் ஓடும்... பார்த்த படம் தான்...ஆனாலும் உன் விமர்சனம் அருமை...

கலையரசன் said...

டேய்.. மரியாதையா சொல்லிடு...
இந்த படத்தை எங்கிருந்து காப்பி பேஸ்ட் பன்ன?

உனக்கு ராகவன் நைஜீரியா அண்ணாச்சியை சந்திச்ச,
பதிவ போட நேரம் இல்ல... ஜூடி போஸ்டரை போட
.. சே! ஜூடி போஸ்டர் படத்தை போட நேரமிருக்கோ?

கலையரசன் said...

விமர்சனம் சூப்பபபபபபர்ர்ர்ர்ர் மச்சி!
அருமையா எழுதியிருக்க..
கலக்கிட்ட மாப்புள!

(நீ மட்டும்தான் படிக்காம பின்னூட்டம் போடுவியா? நாங்களும் போடுவோமுல்ல?)

அபுஅஃப்ஸர் said...

விமர்சனம் எழுதனும்னே படம் பார்த்திருக்கீங்க போல‌

நல்லாயிருக்கு

கண்ணா.. said...

வாங்க தீப்பெட்டி @ கணேஷ்குமார்,

//திருட்டு விசிடியை கூரியரில் அனுப்பவும். இல்லயென்றால் முழுகதையையும் அடுத்த பதிவில் சொல்லிவிடவும்..//

கூரியர் அனுப்ப கம்பெனி நிதிநிலமை இடம் கொடுக்கவில்லை.

எனக்கு ஃபுல்லா புரிஞ்சிருந்தா நான் இந்த பதிவிலேயே சொல்லியிருப்பனே..இப்பிடி பப்ளிகா கேட்டு அசிங்க படுத்திட்டீங்களே...

வருகைக்கும் கருத்திற்கும் தொடர் ஆதரவிற்கும் நன்றிகள் பல.

கண்ணா.. said...

வாங்க இளைய கவி

//இந்த படம் நானும் பாத்திருக்கேன் தல. படத்த விட உங்க விமர்சனம் அருமையா இருக்கு. இன்னும் எழுதுங்க தல்..//

நன்றி தல..

என் தளத்திற்கு உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல

கண்ணா.. said...

வாங்க அக்னி பார்வை

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

//தொர இங்கிலி பீசு படமெல்லாம் பாக்குது//

என்ன பாஸ் பண்ண...இந்த கலை, வினோத், கிஷோர்ல்லாம் இங்கிலிபீசு படத்த பத்தி எழுதுறாய்ங்க...அதான் நானும் களத்துல இறங்கிட்டேன்

கண்ணா.. said...

வாங்க வினோத்

//இப்ப தான் புரியுது வேலை வேலைனு சொன்னது என்ன வேலைனு..

நல்லா விமர்சனம் பண்ணி இருக்கீங்க..

Jodie Foster சும்மா சொல்ல கூடாது நல்ல.............................

நடிகைனு சொல்ல வந்தேன்..//

இப்போ புரிஞ்சிட்டா என்ன வேலைன்னு....அப்பாடா..!! உங்களுக்கெல்லாம் புரிய இவ்ளோ நேரம் ஆகுது..

அதுசரி ...நான் ஓரு வாரம் ப்ளாக்க்கு வரலைன்னதும் என் எதிரில்லாம் உன் ப்ளாக்க்கு வர அளவுக்கு துணிச்சல் வந்திட்டா..

என்ன நடக்குது அங்க...!!!!!

கண்ணா.. said...

வாங்க கிஷோர்,


//என் பொண்ணு எங்கடா? 2 வருஷத்துக்கு முன்னாடி டி.வி ல அடிக்கடி இந்த படத்தோட விளம்பரம் ஓடும்... பார்த்த படம் தான்...ஆனாலும் உன் விமர்சனம் அருமை..//

ஹா.. ஹா.. என் பொண்ணு எங்கடா? தலைப்பு அருமை..

என் விமர்சனம் அருமைன்னு சொல்லி கொடுத்த காசுக்கு கரெக்டா வேலை பார்த்திட்ட...

அடுத்த பதிவு போட்ட உடனே சொல்லி அனுப்பறேன்...

கண்ணா.. said...

வாடா கலை,


//டேய்.. மரியாதையா சொல்லிடு...
இந்த படத்தை எங்கிருந்து காப்பி பேஸ்ட் பன்ன? //

டேய் கம்பெனி சீக்ரெட்டை இப்பிடி பப்ளிக்கா கேக்காதடா..

//உனக்கு ராகவன் நைஜீரியா அண்ணாச்சியை சந்திச்ச,
பதிவ போட நேரம் இல்ல... ஜூடி போஸ்டரை போட
.. சே! ஜூடி போஸ்டர் படத்தை போட நேரமிருக்கோ?//தானை தலைவி ஜூடி போஸ்டர் பத்தி தப்பா பேசுனா நடக்குறதே வேற.....

கண்ணா.. said...

வாங்க அபுஅஃப்ஸர்

//விமர்சனம் எழுதனும்னே படம் பார்த்திருக்கீங்க போல‌

நல்லாயிருக்கு//

நீங்கதான் கரெக்டா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க.....

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

இராயர் அமிர்தலிங்கம் said...

www.ultimatetamil.com la padam pathingala mappu

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

வணக்கம் நண்பர் கண்ணா
அருமையான
படம்க,ஜோடீ பாஸ்டரின் நடிப்பு மிக அருமையாக இருக்கும்
காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு கூடும்.நல்ல எழுத்து
நணபர் கலக்கல் கலை மூலம் உங்களை பற்றி அறிந்து இங்கு வந்தேன்.
தொடர்ந்து நட்புக்கரம் கொடுப்போம்.
துபாய் பதிவர் பட்டியலில் உங்கள் பெயரையும் இணைத்துள்ளேன்.
நன்றி
கார்த்திகேயன்
ஷார்ஜா
http://geethappriyan.blogspot.com/2009/07/reservoir-dogs199218.html

மணிகண்டன் said...

விமர்சனம் ரொம்ப நல்லா எழுதறீங்க கண்ணா. படம் பார்க்கும் ஆவலை தூண்டற மாதிரி.

thenammailakshmanan said...

vimarsanam arumai....
but heading il alert aga irunga...
nalla irukurathai nangalum padikirom illaiya athunaala...
then nice
all the best

Joe said...

Not writing any posts these days Kanna?

நாஞ்சில் பிரதாப் said...

அட...நீருமா... நான் கவனிக்கவே இல்லையேப்பு..... எழுதுவே... மொக்கைப்போடாம இந்தமாதிரி அடிக்கடி எழுதுவே... நல்லாருக்க...

நான் இந்த படத்தை எப்பவோ பார்த்துட்டேன்...