Saturday, June 6, 2009

அமீரக பதிவர் சந்திப்பு – 05/06/2009 - புகைபடங்களுடன்

முதலில் என்போன்ற புதிய பதிவரின் அழைப்பை ஏற்று சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கலையரசன் முதல் ஆளாக 5.20 கெல்லாம் அங்கே வந்து விட்டு போன் செய்தார். நானும் வினோத்தும் அப்போதுதான் அறையை விட்டு வெளியே வந்தோம். அதன்பின் டாக்ஸி பிடித்து அடுத்த 15 நிமிடத்தில் அங்கே சென்றோம்.பின் சுந்தர் அவர்கள் வீட்டில் தயார் செய்த வடையுடன் வந்தடைந்தார். பின் பார்க்கில் தோதான இடம் பார்த்து உக்கார்ந்தோம்.அதன்பின் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.
மொத்தம் 14 நபர்கள் வந்திருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அவரவர்களின் அறிமுகத்திற்கு பின் கலந்துரையாடல் ஆரம்பித்தது. அய்யனார் மற்றும் ஆசாத் சிறப்பாக ஆரம்பித்தனர். பின் அனைவரும் சகஜமாக பேசி உரையாடலை சுவாரஸ்யமாக ஆக்கினர்.

பல பதிவுகளை பற்றி குறிப்பிட்டனர். அதையெல்லாம் உடனடியாக படிக்க வேண்டும் என நினைத்து கொண்டேன்.

அண்ணன் திரு ராகவன் நைஜீரியாவில் இருந்து வரும் 21ம் தேதி பதிவர்களை சந்திக்க விரும்பி துபாய் வருவதால் அனைவரும் வரவேண்டும் என கேட்டுகொள்ளபட்டது… 21ம் தேதி ஞாயிற்றுகிழமை வேலை நாள் என்பதால் 8 மணிக்கு ஏதாவது ஒரு ஹோட்டலில் சந்திக்கலாம் எனவும் விவாதிக்கபட்டது.

கலந்து கொண்ட பதிவர்கள்அய்யனார்
http://www.ayyanaarv.blogspot.com/அபுல்கலாம் ஆசாத்
http://www.ennam.blogspot.com/சுந்தர்
http://trichisundar.blogspot.com/சரவணன் @ குசும்பன்
http://www.kusumbuonly.blogspot.com/சிவராமன்
http://sivaramang.wordpress.com/லியோ சுரேஷ்
அசோக்குமார்
செந்தில்வேலன் http://senthilinpakkangal.blogspot.com/

கலையரசன்
http://www.kalakalkalai.blogspot.com/

பிரதீப் குமார்
http://www.oviya-thamarai.blogspot.com/

வினோத் கெளதம்
http://julykaatril.blogspot.com/

கண்ணா @ வெங்கடேஷ்
http://venkatesh-kanna.blogspot.com/

நாகா
ஜெயகுமார்
இனி சில குழுபடங்கள்
குட்டு

நான் பல விதமாக போஸ் கொடுத்த போட்டோக்களையெல்லாம் அனுப்பாமல் சதி செய்து மறைத்து வைத்த கலையரசனுக்கு என் கடும் கண்டங்கள். நீங்களும் உங்கள் கண்டனங்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இது போன்ற விஷமிகளுக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள்
அமீரகத்தில் இதற்குமுன் நடந்த பதிவர் சந்திப்பு புகைபடங்களை கீழ் உள்ள லிங்கில் கிளிக்கி பார்க்கலாம்

http://s189.photobucket.com/albums/z261/alif007/?action=view&current=24082007417.jpg

73 comments:

அபி அப்பா said...

super super! where is me, asif, penathalar, minnal, muthukumar, nanban shaji, ahamed jubair, jaseela, sudarmani(auh), mahendran, and some others:-)))))

நெல்லை காந்த் said...

Hi Nanba,
How are you da?
Nice to see you in Blog world.

Thanks
Vijay

Kanna said...

hi vijay,

welcome to blog

can u give some more information about you..

is it MDT Vijay ?

Kanna said...

வாங்க அபிஅப்பா,

வருகைக்கு நன்றி...

மற்றவர்கள் போட்டோவும் இருந்தால் அனுப்பவும்.. இல்லையென்றால்.. பதிவு முகவரி கொடுத்தால் நான் அவர்களை தொடர்பு கொண்டு போட்டோ வாங்க வசதியாக இருக்கும்

நெல்லை காந்த் said...

Hi Venkatesh,

Yeah, you are right, this is Vannai Vijay.

Super ra irruku da unn blog da.


I am recognize with your photo da and my mail id is nellaivijay@gmail.com


Thanks
Vijay

தீப்பெட்டி said...

படங்கள் எல்லாம் நன்றாக இருந்தன..
கராமா பார்க்கை கலக்கி விட்டீர்கள்..

Kanna said...

ஹாய் விஜய்,

நெல்லைகாந்த் பேரே..டெர்ரரா இருக்கு.. இன்னும் போஸ்ட் பண்ணலையா? சீக்கிரம் பண்ணவும்.அங்கு வந்து கும்மி அடிக்க வேண்டி இருக்கிறது..

அதுசரி

இப்போ எங்க இருக்கே...?


உனக்கு ஓரு தனிமடல் அனுப்புகிறேன்.

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி நண்பரே!

பித்தன் said...

அமிரக பதிவர் சந்திப்பை பற்றி சில கேள்விகள்

1. கலையரசன் தீர்த்தத்தை கொண்டு வந்தாரா ? அனைவருக்கும் வழங்கினாரா ?
2. நீங்கள் சிறப்பு விருந்து கொடுத்திர்களா ?
3. வினோத் அனைவருக்கும் ஒரு பாக்கெட் மணல் கொடுத்தானா ?
4. வினோத் என்னமோ பொண்ணு பாக்குரமாதறி வந்திருக்கனே, எதாவது பிகரிடம் அயி லவ் யு சொல்லி அடிவாங்கினானா ?

டக்ளஸ்....... said...

அசத்தீட்டீங்க போல...!
எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான்..
"வட போச்சே......!"

Kanna said...

நன்றி தீப்பெட்டி @ கணெஷ்குமார்

வருகைக்கும், கருத்திற்கும்

Kanna said...

வாங்க சென்ஷி,

வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல

அண்ணன் ராகவன் நைஜீரியா அவர்களை சந்திக்க வரும் 21ம் தேதி நீங்கள் அவசியம் வரவேண்டும்

அது ஒரு கனாக் காலம் said...

மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது...எல்லோரையும் சந்தித்ததில் ... நன்றி கண்ணன்

பூச்சரம் said...

பதிவுலக நண்பர்களோடு கருத்துக்களை பகிருங்கள்
பூச்சரம் online பதிவர் சந்திப்பு

கேளுங்க.. கேளுங்க.. நல்லா கேளுங்க..
விரைவில்..பிரபல பதிவர்களை உங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க களம் அமைக்கிறது.. பூச்சரம்

பூச்சரம்

இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS
http://poosaram.blogspot.com/

Kanna said...

வாங்க பித்தன்


//1. கலையரசன் தீர்த்தத்தை கொண்டு வந்தாரா ? அனைவருக்கும் வழங்கினாரா ?//


இல்லை. பித்தன் ஏமாற்றுகாரன்..


//2. நீங்கள் சிறப்பு விருந்து கொடுத்திர்களா ?//

கலந்து கொண்டவர்கள் வேண்டாம் என கெஞ்சி கேட்டுக்கொண்டதால் குடுக்க வில்லை..


//3. வினோத் அனைவருக்கும் ஒரு பாக்கெட் மணல் கொடுத்தானா ?//

இல்லவே இல்லை...

//4. வினோத் என்னமோ பொண்ணு பாக்குரமாதறி வந்திருக்கனே, எதாவது பிகரிடம் அயி லவ் யு சொல்லி அடிவாங்கினானா ?//

சுந்தர் சார் வடை கொண்டு வந்ததால் எங்கள் இருவரின் கவனமும் அதிலேயே இருந்ததால்.. வேறு பக்கம் பார்க்க முடியவில்லை

மயாதி said...

good

Kanna said...

//டக்ளஸ்....... said...
அசத்தீட்டீங்க போல...!
எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான்..
"வட போச்சே......!"//

வாங்க டக்ளஸ்,

வருகைக்கு நன்றி..

எங்களுக்கே பத்து வடை கழிச்சு பதினோறாவது வடை தக்கனூன் டுதான் கிடைச்சுதேன்னு வருத்தத்துல இருக்கோம்..நீங்க வேற ... எரிஞ்ச வயித்துல தீயை பத்த வைக்காதீங்க...

Kanna said...

// அது ஒரு கனாக் காலம் said...
மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது...எல்லோரையும் சந்தித்ததில் ... நன்றி கண்ணன்//

நன்றி சுந்தர் சார்,

வருகைக்கு நன்றி...

கொண்டுவந்த வடைக்கு ஸ்பெஷல் நன்றிகள்..

குசும்பன் said...

அவ்வ்வ்வ் என் நல்ல படம் வேற இல்லையா? எல்லாம் இந்த கலைய சொல்லனும்!

கலையரசன் said...

//எங்களுக்கே பத்து வடை கழிச்சு பதினோறாவது வடை தக்கனூன் டுதான்
கிடைச்சுதேன்னு வருத்தத்துல இருக்கோம்..//

அடப்பாவி! என்ன வாட்டர் வாங்க அனுப்பிட்டு மொத்த வடையும் காலி பன்னிட்டு நல்லவன் மாதிரி நடிக்கறியா? அடுத்த தடவ நீதான் தண்ணிவாங்க போகனும், நான் வடைய பாத்துகறேன்!

இராகவன் நைஜிரியா said...

நன்றி கண்ணா. துபாயில் சந்திப்போம்.

நான் தங்கும் ஹோட்டல் விவரம் இன்னும் தெரியவில்லை. இரண்டு நாட்களில் தங்களுக்கு தனி மடல் அனுப்புகின்றேன்.

Kanna said...

வாங்க மயாதி

வருகைக்கு நன்றி

Kanna said...

//குசும்பன் said...
அவ்வ்வ்வ் என் நல்ல படம் வேற இல்லையா? எல்லாம் இந்த கலைய சொல்லனும்!//

வாங்க குசும்பன்..

கலை மேல் கொலைவெறியில் இருக்கறவங்க லிஸ்டுல நீங்களும் வந்து சேந்துகிடுங்க..

Kanna said...

வாடா கலை,

நீ இன்னும் ஊருக்குள்ளதா திரியுறயா....

உன் மேல நிறைய பேரு கொலைவெறியுல அலையுதாங்க...போட்டோவ சரியா எடுக்கலன்னு....

எதுக்கும் எங்கயாவது பாலைவனத்துல போய் தலைமறைவா இருந்துட்டு 2-3 நாள் கழிச்சு வந்தா நல்லது

Kanna said...

//இராகவன் நைஜிரியா said...
நன்றி கண்ணா. துபாயில் சந்திப்போம்.

நான் தங்கும் ஹோட்டல் விவரம் இன்னும் தெரியவில்லை. இரண்டு நாட்களில் தங்களுக்கு தனி மடல் அனுப்புகின்றேன்.//

வாங்க அண்ணா,

கண்டிப்பாக சந்திப்போம், காத்திருக்கிறேன்

அபுஅஃப்ஸர் said...

கண்ணா நானும் அமீரகத்தில்தான் இருக்கேன், என்னை அழைக்க மறந்துவிட்டீர்களே

ராகவ் அண்ணன் மூலம் தாங்கள் பதிவர் சந்திப்பு பற்றி தகவல் கிடைத்தது... வாழ்த்துக்கள்

அடுத்த சந்திப்பில் முடிந்தால் சந்திப்போம்

வடுவூர் குமார் said...

கராமா பூங்காவில் இருக்கும் அந்த வேப்பமரங்களை பார்க்கும் போது பழைய ஞாபகங்கள் வருகிறது.
பல வெள்ளிக்கிழமை மாலைகளை அங்கு கழித்திருக்கேன்.

Kanna said...

//அபுஅஃப்ஸர் said...
கண்ணா நானும் அமீரகத்தில்தான் இருக்கேன், என்னை அழைக்க மறந்துவிட்டீர்களே

ராகவ் அண்ணன் மூலம் தாங்கள் பதிவர் சந்திப்பு பற்றி தகவல் கிடைத்தது... வாழ்த்துக்கள்

அடுத்த சந்திப்பில் முடிந்தால் சந்திப்போம்//

வாங்க அபுஅப்ஸர்,

மன்னிக்கவும் என்னிடம் தங்கள் அலைபேசி எண் இல்லை மேலும் அமீரகத்தில் எந்த எந்த பதிவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்ற விபரமும் நான் பதிவு எழுத புதிதாக வந்த காரணத்தால் இல்லை..

அதனால்தான் பதிவின் மூலம் அனைவரையும் அழைத்தேன்..

சந்திப்பில் கூட இது குறித்து விவாதித்தோம்...அமீரகத்திலுள்ள பதிவர்களின் ப்ளாக் முகவரி மற்றும் அலைபேசி எண் வாங்கி ஓரு முகவரியில் ஒழுங்கு படுத்த வேண்டும் என்று..


வரும் 21ம் தேதி அண்ணன் ராகவன் நைஜீரியா அவர்கள் வர இருப்பதால் தாங்களும் வரவேண்டும் என கேட்டு கொள்கிறேன். உங்களின் அலைபேசி எண் கிடைத்தால் இடம் மற்றும் நேரம் குறித்த தகவல் தெரிவிக்க வசதியாக இருக்கும்.

என் தளத்திற்கு உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல..

நட்புடன் ஜமால் said...

பகிர்வுக்கு நன்றிங்கோ ...

விடுத‌லைவீரா said...

வணக்கம். நலம் நலமறிய ஆசைதான்.
உங்கள் வலைப்பூ படித்தேன். அமீர பதிவர் சந்திப்பு பற்றி அறிந்தேன்.நானும் அமீரகத்தில் ராசல்கைமாவீல் இருக்கிறேன்.எனது நண்பர் நடத்தும் அதிகாலை இணையதளத்திற்கு என்னால் முடிந்த அமீரக செய்திகளை கொடுத்துவருகிறேன்...உங்கள் செய்திகளை வெளியிட தயாராக இருக்கிறோம்.நன்றி
தொடர்புக்கு--veera766@gmail.com

INDIAN said...

Hai Kanna,

I am Thileep. I also tried to attend this programe.But, I dont have yours Cont nos. Please give me nos. can I attend your future programe? My No.050-5684786

பழமைபேசி said...

தனிப்படங்கள் அபாரமா இருக்கு...

குசும்பன் - படம்: நல்லாவே பொருந்தி வருது!

செந்தில்: அழகு முருகனின் சாயலும் இருக்கு!

மத்தவங்களும் மன்மதனாட்டமாவே இருக்காங்க...

thevanmayam said...

பதிவர் சந்திப்பு
படங்கள் அருமை.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

புகைப்படங்கள் அருமை.. நன்றாக உள்ளது.. நன்றிகள்..

நண்பர் ஆஸாத் இவ்வளவு இளைஞராக இருப்பார் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.. இனிமே எழுத்தை வைச்சு ஆளை எடைபோடக் கூடாதுப்பா..

வினோத்கெளதம் புகைப்படத்தை பத்திரப்படுத்தியுள்ளேன். பின்னாடி எதுக்காச்சும் உதவும்..

எங்க அருமைத் தம்பி சென்ஷி வரலியா..?

அது யாரு அண்டங்காக்கா நிறத்துல.. சரவணன்னு பேரு வேற இமேஜோட நேமா வந்திருக்கு.. எதுக்கும் இருக்கட்டும்னு ஸேவ் பண்ணி வைச்சிருக்கேன்..

நன்றி கண்ணா..

vinoth gowtham said...

//வினோத் என்னமோ பொண்ணு பாக்குரமாதறி வந்திருக்கனே, எதாவது பிகரிடம் அயி லவ் யு சொல்லி அடிவாங்கினானா ?//

கடவுளே என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டுரங்கலே நான் என்ன சொல்லுவேன்..

மின்னுது மின்னல் said...

நல்லா இருக்கு

குசும்பனை பகலில் எடுத்து இருக்கலாம் :)

ச.செந்தில்வேலன் said...

வெங்கட்..

அருமையான சந்திப்பு.. மிகவும் மகிழ்ச்சி..

படங்கள் தொகுப்பு அழகு.. நம்ம படம் ஏதோ பற்பசை விளம்பரத்துக்கு எடுத்த மாதிரி இருக்கு!

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

புகைப்படங்கள் மிகவும் நல்லா இருக்கு! அமீரகத்தில் இத்தனை பேரா.. அசத்துறீங்களேப்பா..! கலக்குங்க!

மின்னுது மின்னல் said...

பழைய பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் இங்கே :)


http://s189.photobucket.com/albums/z261/alif007/?action=view&current=24082007417.jpg

vinoth gowtham said...

//வினோத்கெளதம் புகைப்படத்தை பத்திரப்படுத்தியுள்ளேன். பின்னாடி எதுக்காச்சும் உதவும்..//

அய்யா முருகா உண்மை தமிழா இதுல நிறையா உள்குத்து இருக்குற மாதிரி தெரியுதே..

Kanna said...

//வடுவூர் குமார் said...
கராமா பூங்காவில் இருக்கும் அந்த வேப்பமரங்களை பார்க்கும் போது பழைய ஞாபகங்கள் வருகிறது.
பல வெள்ளிக்கிழமை மாலைகளை அங்கு கழித்திருக்கேன்.//

வாங்க வடுவூர் குமார்..

இங்க துபாய்ல இருக்கற பாதி பேரோட வெள்ளிகிழமை இதுலதான கழியுது..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

இப்போது எங்க இருக்கீங்க..?

Kanna said...

//நட்புடன் ஜமால் said...
பகிர்வுக்கு நன்றிங்கோ ...//

வருகைக்கு நன்றியோ நன்றிங்கோ..

ஜமால்..உங்கள் உதவியால்தான் என் டெம்ப்ளேட்டில் பாலோயர் லிஸ்ட் கிடைக்க பெற்றேன்... அதற்கு ஸ்பெஷல் நன்றி..

Kanna said...

வணக்கம் விடுதலை வீரா

வருகைக்கு நன்றி..

தனிமடல் அனுப்பியிருக்கிறேன்..

Kanna said...

//INDIAN said...
Hai Kanna,

I am Thileep. I also tried to attend this programe.But, I dont have yours Cont nos. Please give me nos. can I attend your future programe? My No.050-5684786//

வாங்க திலீப்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்டிப்பாக நீங்களும் கலந்து கொள்ளலாம்.

என் அலைபேசி எண் 050 9253270

நான் உங்களை தொடர்புகொள்கிறேன்

Kanna said...

வாங்க பழமைபேசி

//தனிப்படங்கள் அபாரமா இருக்கு.//

நன்றிங்கோ...

//குசும்பன் - படம்: நல்லாவே பொருந்தி வருது!

செந்தில்: அழகு முருகனின் சாயலும் இருக்கு!//


செந்தில் ஏதும் உங்களை தனியா கவனிக்கலையே.....//மத்தவங்களும் மன்மதனாட்டமாவே இருக்காங்க...//


நெஞ்ச நக்கிட்டீங்க பாஸ்....முடியல.....

இதை மட்டும் மன்மதன் கேட்டார்னா..அவ்ளோதான்.....

Kanna said...

வாங்க thevanmayam

//பதிவர் சந்திப்பு
படங்கள் அருமை//

நன்றி..

இருந்தாலும் மதுரைகிட்ட வரமுடியுமா...

Kanna said...

வாங்க உண்மைத் தமிழன் அண்ணா,


//புகைப்படங்கள் அருமை.. நன்றாக உள்ளது.. நன்றிகள்..//

நன்றிக்கு நன்றிண்ணா...


//நண்பர் ஆஸாத் இவ்வளவு இளைஞராக இருப்பார் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.. இனிமே எழுத்தை வைச்சு ஆளை எடைபோடக் கூடாதுப்பா..//


உண்மைதான் அவர் எழுத்து மட்டுமல்ல எங்களை போன்ற புதியவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதிலும் அவர் சிறந்தவர்.

//வினோத்கெளதம் புகைப்படத்தை பத்திரப்படுத்தியுள்ளேன். பின்னாடி எதுக்காச்சும் உதவும்..//


அண்ணா...இந்த ஹீரோ சான்ஸ் மட்டும் குடுத்துராதீங்கண்ணா...

அதுக்கு அவரு போட்டோக்கு கீழ இன்னொரு ஆளு இருக்காரு....//எங்க அருமைத் தம்பி சென்ஷி வரலியா..?//

இந்த முறை அவரால் வரமுடியவில்லை. அடுத்த சந்திப்பிற்கு வருவதாக கூறியுள்ளார்

//அது யாரு அண்டங்காக்கா நிறத்துல.. சரவணன்னு பேரு வேற இமேஜோட நேமா வந்திருக்கு.. எதுக்கும் இருக்கட்டும்னு ஸேவ் பண்ணி வைச்சிருக்கேன்..//

அதுக்குதான் தல கலை மேல கொலவெறில இருக்கு...
ஏன்னா கலைதான் போட்டோல்லாம் எடுத்தது..

//நன்றி கண்ணா..//

நன்றி அண்ணா..

Kanna said...

வாங்க மின்னல்...

வருகைக்கு நன்றி..

அன்றைய சந்திப்புலயே முடிவு பண்ணியாச்சு ..

இனி அடுத்த டேரா fun cityல போட்டு உங்களை மொட்டை அடிச்சுரலாம்னு...

Kanna said...

வாங்க செந்தில்வேலன்

//அருமையான சந்திப்பு.. மிகவும் மகிழ்ச்சி..//

மறக்க முடியாத சந்திப்பாக அமைந்ததில் அனைவருக்கும் அளவில்லா சந்தோஷம்..

//படங்கள் தொகுப்பு அழகு.. நம்ம படம் ஏதோ பற்பசை விளம்பரத்துக்கு எடுத்த மாதிரி இருக்கு//

என்ன பாஸ் இப்பிடி சொல்லிடீங்க...நம்ம பழமைபேசி உங்களை பாத்தா அழகு முருகன் மாதிரி இருக்குன்னு சொல்லுறார்...

Kanna said...

//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
புகைப்படங்கள் மிகவும் நல்லா இருக்கு! அமீரகத்தில் இத்தனை பேரா.. அசத்துறீங்களேப்பா..! கலக்குங்க!//

வாங்க தல...

வருகைக்கு நன்றி..

இன்னும் நிறைய பேரு இருங்காங்க தல.....

அடுத்த சந்திப்பில் எல்லாரும் வருவாங்க தல...

Kanna said...

// மின்னுது மின்னல் said...
பழைய பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் இங்கே :)


http://s189.photobucket.com/albums/z261/alif007/?action=view&current=24082007417.jpg//

நன்றி மின்னல்..

இந்த லிங்கையும் சேர்த்து விடுகிறேன்..

Kanna said...

***********************************
vinoth gowtham said...
//வினோத்கெளதம் புகைப்படத்தை பத்திரப்படுத்தியுள்ளேன். பின்னாடி எதுக்காச்சும் உதவும்..//

அய்யா முருகா உண்மை தமிழா இதுல நிறையா உள்குத்து இருக்குற மாதிரி தெரியுதே..
***********************************

வாங்க வினோத்...

இதுபோல சந்திப்பு நடத்தலாம் என ஆரம்பித்து வைத்ததே நீதானே..அதற்கு நன்றிகள் பல.


உண்மைதமிழன் அண்ணன் உன்னை மைண்ட்ல வைச்சுட்டாரு...

ஆனா ஒரே ஒரு கண்டிஷன்...நான்லாம் அசின் ஹீரோயினா நடிச்சாதான் ஹீரோவா நடிப்பேன்...என்னை ரொம்ப கம்பெல் பண்ண கூடாது ..ஆமா

அக்னி பார்வை said...

மிக்க மகிழ்ச்சி

Suresh said...

சூப்பர் தலைவா முதலில் வாழ்த்துகள்

ரொம்ப மெணக்கடல் உங்க புகைப்பட தொகுப்பில் இருக்கு...

எல்லாம் அழகாய் சொல்லி வைத்தார் போல் கோளசப் படங்கள் ஒன்னு ...சும்மா ரீச்சா இருக்கு, நல்ல கேமிரா போலா

வினோத்து அழ்கா தெரிய என்ன காசு கொடுத்து கலர் பண்ணா சொன்னானா

:-)


ரொம்ப சந்தோசமா இருக்கு

கலை கேடி வாண்டட் :-) மாதிரி ஏண்யா முறைக்கிற ;)

பாவம் சின்ன புள்ள பயந்து போச்சு..

தெரியாத பலரையும் அறிமுகம் செய்து வைத்தர்க்கு நன்றிகள் நண்பா

உங்க கலாய் ரொம்ப நல்லா இருக்கு உங்கள மீட் பண்ணனும்

//புதிய பதிவரின் அழைப்பை//

மச்சான் நீ தானே பிரபல பதிவர் பதிவு போட்ட நீ பிரபலம் தான்

Suresh said...

போட்டோவில் வடையும் சூஸும் தெரியுது ஹீ ஹீ

வடுவூர் குமார் said...

இப்போது எங்க இருக்கீங்க..?
தற்போது சென்னையில் - விடுமுறையில்,திரும்ப சிங்கை போகனும்.

Anonymous said...

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.

Top Tamil Blogs

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்கள்

நன்றி.
தமிழர்ஸ் டாட் காம்.

கோபிநாத் said...

மிக்க மகிழ்ச்சி...உங்க அனைவரையும் நேரில் சந்திக்க முடியல ;(

போட்டோ எல்லாம் போட்டு கலக்கிட்டிங்க ;)

விரைவில் சந்திப்போம் ;)

என்றும் அன்புடன் said...

ஒரே நாள்ல எனக்கு பத்து friends கெடச்சாங்களே... :)

- நாகா

Kanna said...

வாங்க அக்னிபார்வை,

வருகைக்கு நன்றி

Kanna said...

//சுரேஷ் said

ரொம்ப சந்தோசமா இருக்கு

கலை கேடி வாண்டட் :-) மாதிரி ஏண்யா முறைக்கிற ;)

பாவம் சின்ன புள்ள பயந்து போச்சு..

தெரியாத பலரையும் அறிமுகம் செய்து வைத்தர்க்கு நன்றிகள் நண்பா

உங்க கலாய் ரொம்ப நல்லா இருக்கு உங்கள மீட் பண்ணனும்//


வா மச்சான் வருகைக்கும் நன்றிக்கும் நன்றிகள் பல..


கண்டிப்பா மீட் பண்ணலாம்


கலை முறைக்கற மாதிரிதான் இருக்காரு ஒத்துகிடுதோம்...ஆனா அதுக்காக நீ சந்தடி சாக்குல சின்னபையன்னு சொல்றதெல்லாம் ஒத்துக்க முடியாது...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Kanna said...

//வடுவூர் குமார் said...
இப்போது எங்க இருக்கீங்க..?
தற்போது சென்னையில் - விடுமுறையில்,திரும்ப சிங்கை போகனும்.//

மிகவும் மகிழ்ச்சி

சிங்கை நண்பர்களை கேட்டதாக சொல்லவும்

Kanna said...

வருகைக்கு நன்றி தமிழர்ஸ்

இணைச்சாச்சு....

கடைகுட்டிதான் இந்த வார தமிழர்னா...பிரியமுடன் வசந்து இந்த வாரத்துல இருந்து இங்கிலீஷ் காரரா..???!!!!

Kanna said...

//கோபிநாத் said...
மிக்க மகிழ்ச்சி...உங்க அனைவரையும் நேரில் சந்திக்க முடியல ;(

போட்டோ எல்லாம் போட்டு கலக்கிட்டிங்க ;)

விரைவில் சந்திப்போம் ;)//

வாங்க கோபிநாத்

வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல..

கண்டிப்பாக விரைவில் சந்திப்போம்..

Kanna said...

//என்றும் அன்புடன் said...
ஒரே நாள்ல எனக்கு பத்து friends கெடச்சாங்களே... :)

- நாகா//

வாங்க நாகா..அன்று நீங்கள் வந்து கலந்து கொண்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி..

RAGUL said...
This comment has been removed by the author.
KISHORE said...

வாழ்த்துக்கள் மச்சி...

Kanna said...

வாங்க ராகுல்,

வருகைக்கு நன்றி..

உங்கள் cv ஐ mk1venki@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்புங்கள். நான் என் நண்பர்களுக்கு பார்வேர்ட் செய்து முயற்சி செய்கிறேன்.

உங்களை நாளை அலைபேசியிலும் தொடர்பு கொள்கிறேன்.

Kanna said...

@ கிஷோர்

வா மச்சி...

என்ன உடம்பு எதும் சரியில்லயா..?

மணிரத்னம் படம் மாதிரி ரெண்டே வரில கமெண்ட் போட்ருக்க..

வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி மச்சி

நான் உன்னை குறித்து வினோத்திடம் விசாரித்தேன்..

இன்னும் உன்கிட்ட இருந்து ‘ஓன்பது ரூபாய் நோட்டு’ மற்றும் ‘பூ’ மேட்டர் பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்

KISHORE said...

//என்ன உடம்பு எதும் சரியில்லயா..?

மணிரத்னம் படம் மாதிரி ரெண்டே வரில கமெண்ட் போட்ருக்க..//
rendu naala oorla illa... athan comment panna mudiyala


//நான் உன்னை குறித்து வினோத்திடம் விசாரித்தேன்..

இன்னும் உன்கிட்ட இருந்து ‘ஓன்பது ரூபாய் நோட்டு’ மற்றும் ‘பூ’ மேட்டர் பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்//
ngoyala... yenda ungaluku intha kola veri?

siva said...

அன்பு கண்ணா

மிகுந்த நேரம் எடுத்துக்கொண்டு பொறுமையோடு புகைப்படங்களை தொகுத்த விதம் மிக அருமை. நன்றி.

தாமதமான பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன்.

சிவா.

கண்ணா.. said...

அன்பு சிவராமன்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல

இராயர் அமிர்தலிங்கம் said...

appadi yenna pesininga nu sonna nalla irukkum??


urs sincerely
trisha rasigar manra thalaivar
dubai