Wednesday, June 10, 2009

தமிழிஷ் ஓனர் யாரு..?

சக்கரை சுரேஷ் தமிழிஷில் இணைத்த ஓரு பதிவில் தமிழிஷில் விழுந்த பின்னூட்டங்களை இந்த தமிழிஷில் நடந்த விறுவிறுப்பான சண்டைகாட்சிகள் லிங்கில் பார்க்கவும்.


இந்த மாதிரி சண்டைலதான் பல உண்மைகள் வெளிவரும்கிறது காலம் காலமா நடக்குற விஷயம். அதனால தமிழிஷா, தமிழர்ஸா, நெல்லை தமிழா, தமிழ்10 ஆ, உலவா என நடந்த சண்டையில் தமிழிஷ் ஓனர் யாருன்னு சந்தேகத்தின் பேரில் நிறைய பேரை ஜீப்பில் ஏத்தலாம்.

தமிழர்ஸ் ஓனர் சக்கரை சுரேஷா, இல்லை போன வாரம் வரைக்கும் தமிழரா இருந்து இந்த வாரம் இங்கிலீஷ்காரரா மாறிபோன பிரியமுடன் வசந்தா இல்லை இந்த வாரம் மட்டும் தமிழரா இருக்கும் கடைகுட்டியா அப்பிடிங்கறதை தனிபதிவா போட்டு அலசலாம்.

இப்ப யாரையெல்லாம் ஜீப்ல ஏத்தலாம்னு பாக்கலாம். அந்த பின்னூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், tamilnenjam, sureshsakkarai, alwaysarafath, priya-win, true-tamil, kummachi, kilukku, karthigan, appavitamilan, globen

இதுல true-tamil கடைசிவரை சண்டை போட்டதால அவர் தமிழிஷ் ஓனரா இருக்க முடியாது. இருந்தாலும் அவரு போட்ட சண்டைலதான் பல மேட்டர் வெளிய வந்ததுனால அவரை ஜீப்புல ஏத்திருவோம்.

அப்புறம் நம்ம பின்னூட்ட பிசாசு (உபயம்: கலை) சக்கரை சுரேஷ் அவரு சமீபத்துலதான் தமிழிஷின் மோசடின்னு ஒரு பதிவு போட்டதுனால அவரும் இருக்க முடியாது. ஆனா சண்டைக்கு நடுவுல தமிழிஷ் ஓனர் என் கூட போன் பேசினாருன்னு வாக்குமூலம் கொடுத்ததால அவரையும் ஜீப்புல ஏத்தி முட்டிக்கு முட்டி தட்டுனா உண்மை தானா வெளிவந்துரும்.

கும்மாச்சி நடுவுல ஒரே ஒரு இடத்துல வந்து நியூஸ் பானைல எதும் பிரச்சனை இருக்கானு சண்டைக்கு சம்பந்தமே இல்லாத ஓன்னை பத்தி கேட்டதால அவருதான் நியூஸ் பானை ஒனரான்னு சந்தேகம் வலுக்கிறது. அது பத்தி தனியா ஒரு பஞ்சாயத்து வச்சுக்கலாம்


இதில் பிரியாவின் மற்றும் கார்த்திகன் விவாதத்தில் மிக தீவிரமாக கலந்து கொள்ளாததால் அவர்களின் மேல சந்தேகபார்வை அவ்வளவாக இல்லை. ஆனாலும் அவர்கள் வேற ஏதாவது ஓரு திரட்டிக்கு ஒனரா இருக்க கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

மீதம் இருப்பவர்கள் tamilnenjam, alwaysarafath, kilukku, appavitamilan, globen இதில் தமிழ்நெஞ்சம் இதுவரைக்கும் தமிழிஷில் 5000 ஓட்டுகளுக்கு மேல் போட்டிருப்பதாலும் அடிக்கடி தமிழிஷில் கமெண்ட் போடுறதாலும் இவர் மேல் சந்தேகம் வலுக்கிறது. கிலுக்கு பலபதிவை தமிழிஷில் இணைப்பதாலும் இந்த சண்டையில் மிக தீவிரமாக இருந்ததாலும் இவர் மேலும் சந்தேகம் வலுக்கிறது.

மத்தவங்க எல்லார் மேல சந்தேகம் இருந்தாலும்..alwaysarafath வந்து சண்டைக்கு நடுவுல அடிக்கடி வந்து என்னை யாரும் தமிழிஷ் ஓனரான்னு சந்தேகபடாதீங்க சந்தேகபடாதீங்க ன்னு அப்பப்போ கூவுறதால இவர் மேல பயங்கரமா சந்தேகம் வலுக்கிறது..ஏன்னா எங்க ஊருல இப்பிடிதான் யாராவது ஆடு களவாண்டத பத்தி பஞ்சாயத்துன்னா.. ஆடு களவாண்டவன்தான் “யார்ரா களவாண்டது” அப்பிடீன்னு ஓவரா சவுண்ட் விடுவான். அதனால அந்த அடிப்படையில பார்த்தா.. alwaysarafath மேல சந்தேகம் பயங்கரமா வருது.

அதனால உண்மையான தமிழிஷ் ஓனர்களே இந்த சந்தர்பத்திலாவது உண்மையை சொல்லிருங்க. இல்லேன்னா சில பன்னாடைங்க ஹிட்ஸ்க்காக வேண்டி தமிழிஷ் ஓனர் யாருன்னு பதிவும் போட்டு அதையும் தமிழிஷ்லயே இணைப்பாங்க பாத்துகிடுங்க..


டிஸ்கி:
இது முழுக்க முழுக்க நகைசுவைக்காக மட்டுமே எழுதபட்டது. யார் மனதையும் புண்படுத்த அல்ல. யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்

27 comments:

தீப்பெட்டி said...

இந்தாட்டைக்கு நா வரல..

தாவு தீருது பாஸ்..

குசும்பன் said...

என்ன கொடுமை இது?

என் பக்கம் said...

சிறந்த ஆழ்வு

ஏன் நீங்களா இருக்க கூடாது?

???????????

நட்புடன் ஜமால் said...

டிஸ்கி வச்சி காப்பாத்திக்கிறீங்க ...

கலையரசன் said...

இந்த பதிவ போட்டதால.. நீ இல்லன்னு ஆயிடுமா?

//“யார்ரா களவாண்டது” அப்பிடீன்னு ஓவரா சவுண்ட் விடுவான்.//

யோவ், நீயே வாய கொடுத்து.. ஏன்யா புண்ணாக்கிறே?

கலையரசன் said...

//டிஸ்கி:
இது முழுக்க முழுக்க நகைசுவைக்காக மட்டுமே எழுதபட்டது. யார் மனதையும் புண்படுத்த அல்ல.//

கவுண்டமணி: ஏன்?!? புண்பட்டா, நீ போயி பர்னால், டெட்டால் எல்லாம் போடப் போறியா, போடா போண்டாத் தலையா! போடா... (நன்றி ஜோ)

$anjaiGandh! said...

இந்த மேட்டர் எல்லாம் மொட்டை மாடி ஓனர்களுக்குத் தெரியுமா? :))

Kanna said...

வாங்க தீப்பெட்டி,

வருகைக்கு நன்றி

இதுக்கே தாவு தீர்ந்தா எப்பூடி.....

Kanna said...

வாங்க குசும்பன் அண்ணே...

அதான என்ன கொடுமை சரவணன் இது..?

Kanna said...

வாங்க என் பக்கம் பிரதீப்...

நானா...அடப்போங்க நீங்க வேற....நான் ப்ளாக்ல பதிவு போடறதுக்கே சோம்பல்தனம் பட்டுகிட்டு உக்காந்துருக்கேன்...நீங்க வேற...

Kanna said...

வாங்க நட்புடன் ஜமால்...

ஆமா தல் டிஸ்கிதான நம்மள காப்பாத்திட்டு இருக்கு.....

வருகைக்கு நன்றி

Kanna said...

@ கலை

வாடா மாப்பு..

ஏண்டா பதிவுல எவ்ளோ மேட்டர் சொல்லிருக்கேன்..அதையெல்லாம் விட்டுட்டு என்னையை கும்மறதுல ஏண்டா குறியா இருக்க...?

Kanna said...

//$anjaiGandh! said...
இந்த மேட்டர் எல்லாம் மொட்டை மாடி ஓனர்களுக்குத் தெரியுமா?//

வாங்க சஞ்சய்

வருகைக்கு நன்றி..

மொட்டைமாடி ஓனரா..?!!!

நமக்கு அதை பத்தில்லாம் ஒன்னும் தெரியாதுங்களே..

பித்தன் said...

என்னையும் இந்த கேம்ல சேத்துக்குங்க

KISHORE said...

உங்களுக்கு கிட்னி எங்கடா இருக்கு?

KISHORE said...

ச்சே.. எவ்ளவு இடைஞ்சல் பண்றான் இவன்...

வினோத்கெளதம் said...

அன்னிக்கு பார்த்தப்பவே நீங்களும் தமிலிஷ்ள பார்ட்னர் அப்படிங்கிற உண்மைய ஒத்துகிட்டிங்க அப்புறம் ஏன் இந்த விளம்பரம்..;))

வினோத்கெளதம் said...

அதை முழுசா உக்கார்ந்து படிச்சு இருக்கிங்களே உங்கள என்ன பண்றது..

Kanna said...

//பித்தன் said...
என்னையும் இந்த கேம்ல சேத்துக்குங்க//

வாங்க பித்தன்...

உங்களுக்கு எந்த திரட்டி வேணும் சொல்லுங்க...அடுத்த பதிவுல உங்களை அதுக்கு ஓனர் ஆக்கிருவோம்

Kanna said...

@ KISHORE said...

//உங்களுக்கு கிட்னி எங்கடா இருக்கு?////ச்சே.. எவ்ளவு இடைஞ்சல் பண்றான் இவன்...//

வாடா கிஷோரு....

வருகைக்கும், தொடர் ஆதரவிற்கும் நன்றியோ நன்றி

நேத்து புல்லா அங்க பயங்கரமா சண்ட நடந்திருக்கு... அத கூட வேடிக்கை பாக்கலன்னா நாமெல்லாம் என்னடா தமிழன்.

Kanna said...

வா வினோத்,

எனக்கும் பாட்னரா இருக்கனும் ஆசைதான்... ஆனா அதுக்கு முதல்ல ஓனர் யாருன்னு கண்டுபுடிக்கணுமே....

//அதை முழுசா உக்கார்ந்து படிச்சு இருக்கிங்களே உங்கள என்ன பண்றது..//

நான் தமிழன்டா யாராவது சண்டை போட்டு அதை கூட படிக்கலன்னா அப்புறம் எப்படி ஆபிஸ்ல பொழுது போகும்.....

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. என்னே ஒரு வில்லத்தனம்...

மத்தவங்க சண்டைப் போட்டா உங்களுக்கு அதுல ஒரு சந்தோஷமா...

நடக்கடும்..

ஒரு சின்ன விஷயம் - இது வரை நான் தமிழிஷில் போட்ட ஓட்டுக்கள் எவ்வளவுத் தெரியும் 7227 (இந்த இடுகைக்கு போட்ட ஓட்டையும் சேர்த்து)

Kanna said...

// இராகவன் நைஜிரியா said...
ஆஹா.. என்னே ஒரு வில்லத்தனம்...

மத்தவங்க சண்டைப் போட்டா உங்களுக்கு அதுல ஒரு சந்தோஷமா...

நடக்கடும்..

ஒரு சின்ன விஷயம் - இது வரை நான் தமிழிஷில் போட்ட ஓட்டுக்கள் எவ்வளவுத் தெரியும் 7227 (இந்த இடுகைக்கு போட்ட ஓட்டையும் சேர்த்து)//

வாங்க ராகவன் அண்ணா..

என்னது 7227 ஓட்டா ?!!!

அப்போ நீங்கதான் தமிழிஷ் ஓனரா ??

Anonymous said...

தமிழ்ஷ்க்கு யாரு ஓனர்னு தெரியவில்லை.

தமிழர்ஸ்க்கு நாங்க தான் ஓனர்.

Anonymous said...

சகா,
நல்ல நகைச்சுவை பதிவு.

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை மிக சுலபமாக நிறுவலாம்

இந்த சுட்டியை சொடுக்குங்கள்

தமிழர்ஸ் பிளாக்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்


Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.

Top Tamil Blogs

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்கள்

நன்றி.
தமிழர்ஸ் டாட் காம்.

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog


தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

வம்பு விஜய் said...

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்