Wednesday, June 3, 2009

இளையராஜா vs பழையராஜா



1990 க்கு முன்னாலான இளையராஜாவின் இசைக்கும் தற்போதைய இளையராஜாவின் இசைக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.. இத்தனைக்கும் நான் அதி தீவிர இளையராஜா ரசிகன். இப்போதும் என்னுடைய தனிமை பொழுதுகள் பழையராஜாவின் பாடலுடன்தான் கழிகிறது..அதனை கேட்கும் போது தெறிக்கும் உணர்வுகள், ஊசாலாடும் நினைவுகளை வடிக்க வார்த்தைகளை தேடி தோற்று போய்விடடேன். அதிலும் முக்கியமாக 80களில் வந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் அந்தந்த பாடலின் காட்சிகளே மனதிரையில் ஓட ஆரம்பிக்கும். இத்தனைக்கும் பல படங்கள் நான் பார்த்ததே இல்லை. பாடல் காட்சிகள் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அந்த பாடலின் வரிகளில் அந்தந்த சூழ்நிலையை அழகாக விளக்கியிருப்பார்கள். அதுவும் ஒரு முக்கிய காரணம்.



அவர் சிம்பொனி அமைத்தாரா..தலைகனம் பிடித்தவரா என்பது பற்றியெல்லாம் அவரை சுற்றி உள்ளவர்களுக்கு வேண்டுமானால் சுவாரஸ்யமாக இருக்கலாம். ஆனால் என் போன்றவர்களுக்கு அவரை பற்றி தெரிந்ததைவிட அவரின் இசையை பற்றிதான் அதிகம் தெரியும். அவர் எப்படிபட்ட குணத்தை கொண்டவர் என்பது பற்றிய கவலை எங்களுக்கு இல்லை.. என்னை பொறுத்த வரை எனக்கு எந்த இசையை பிடிகிறதோ அதை கேட்பேன். அது எந்த இசையமைப்பாளர் அமைத்தது என்றெல்லாம் வரையறையெல்லாம் எனக்கு கிடையாது. எனக்கு பிடித்திருக்கணும் அவ்வளவுதான்..

அந்த வகையில் பார்த்தால் இளையராஜாவின் பழைய பாடல்களில் உள்ள கம்பீரம் அவரின் சமீபத்திய பாடல்களில் இல்லையென்றுதான் தோன்றுகிறது. அவரின் சமீபத்திய பாடல்கள் சில கேட்கும் போது மனதை கவர்ந்தாலும் தொடர்ந்து என்னால் கேட்க முடியவில்லை. அது ஏன் என்று அலசும் அளவிற்கு எனக்கு இசை ரசனை இல்லாததால். என்க்கு பிடித்த பாடல்களை மட்டும் தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கிறேன். அதில் ரஹ்மான், யுவன், வித்யாசாகர், ஹாரீஸ் என பல பேர் வந்தாலும் இன்னும் பழையராஜாதான் என்னை ரசிக்க வைக்கிறார். இளையராஜா .! பழையராஜாவை மீட்டெடுங்கள்.

20 comments:

kishore said...

உண்மை தான் சமிபத்தில் வந்த அவரின் இசையில் அவரின் பழைய பாடல்களை நினைவு படுத்துகிறார்.. ஆனால் நவீன கருவிகள் இல்லாத காலத்தில் கூட இன்றைய இளம் இசை அமைப்பாளர்களின் இசையை அன்றே கொடுத்தவர்... சற்று அவர் விலகிஇருகிறார் என்று வேண்டுமானால் சொல்லாம்.. ஆனால் அவரிடம் புது சரக்கு இல்லை என்று சொல்லமுடியாது... அவரின் இசையை விமர்சிக்க எனக்கு தகுதி இல்லை..
he is a legend...

கண்ணா.. said...

வாங்க கிஷோர்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

//he is a legend...//

உண்மை.....

Athisha said...

உண்மைதான் கன்னா.. ராஜா சாரின் பழைய பாடல்கள் அளவுக்கு அவரது சமீபத்திய பாடல்கள் இல்லாமல் போய்தான் விட்டது.

புதிய தலைமுறையை தவறாய் புரிந்து கொண்டு மட்டமான இசையை தருகிறாரோ என்னவோ.


ஆனால் என்றுமே ராஜா ராஜாதான்

கண்ணா.. said...

//அதிஷா said...
உண்மைதான் கன்னா.. ராஜா சாரின் பழைய பாடல்கள் அளவுக்கு அவரது சமீபத்திய பாடல்கள் இல்லாமல் போய்தான் விட்டது.

புதிய தலைமுறையை தவறாய் புரிந்து கொண்டு மட்டமான இசையை தருகிறாரோ என்னவோ.


ஆனால் என்றுமே ராஜா ராஜாதான்//

வாங்க அதிஷா..

என் தளத்தில் உங்களின் முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல..

//ராஜா ராஜாதான்//

சந்தேகமேயில்லை...

வினோத் கெளதம் said...

வெங்கி

ஒருவரின் குணநலன்கள் அவருடுய விருப்பு வெறுப்பை பொருத்தது..பொது வாழ்க்கையில உள்ள ஒருவரின் அவர் சார்ந்த துறையின் செயல்களை ரசிக்கலாம்..அவருடுய செயல்கள் நம் கண் முனால் பெரிதாக தெரிய வாய்ப்பு இல்லை..நல்ல விஷயங்களை தவிர்த்து..

ராஜா ராஜா தான்..

அரவிந்த் said...

ராஜாவின் பலம், பலவீனம் இரண்டுமே அவர் தேர்வு செய்யும் படங்கள்தான். அவரின் ஆரம்ப காலம் முதல், 2000த்தின் இறுதி வரை, அவர் இசையமைத்த பாடங்களில் பாதிக்கு மேல் அவரின் இசைக்காக மட்டுமே அறியப்படுபவை. அவரின் பல நல்ல பாடல்கள் இது போல அறியப்படாத பாடங்களில் உள்ளன. 'புதுப்பாட்டு' என்ற ராமராஜன் படத்தில், 'நேத்து ஒருத்த ஒருத்தர் பாத்தோம்' என்ற ஒரு அட்டகாசமான பாடல். எனது நண்பன், [ரஹ்மானின் வெறியன்] அவனுக்கும் பிடித்த பாடல். அந்த பாடலை ஒரே ஒரு முறை பார்த்தோம். நானே கலங்கிப் போய் விட்டேன். இதே போல நிறைய பாடல்கள். ராஜா இசைதான். ஆனால், என்ன படம், யார் நடித்தது என்று தெரியாது. ராஜா மட்டும்தான் தெரிவார். அதுதான் ராஜா.

ராஜாவோ, எதை எடுப்பது, எதை விடுப்பது என்று தெரியாத அளவுக்கு அள்ளிக் கொடுத்து விடுகிறார். ஒருவேளை, ராஜாவுக்கு 34 வயதில் கிடைத்த முதல் வாய்ப்பு, ரஹ்மான் போல 25 வயதிலேயே கிடைத்திருந்தால், இன்னும் பல அருமையான பாடல்கள் கிடைத்திருக்கும். அவற்றில் பாதிக்கு மேல், ஒரு குறிப்பிட்ட மக்களுக்குள்ளேயே அடங்கியிருக்கும். அதாவது ராஜாவின் தீவிர ரசிகர்கள். ராஜாவின் சமீப கால பாடங்களில் கூட, தனம், அஜந்தா மற்றும் மது போன்றவை தீவிர ரசிகர்களால் மட்டுமே ரசிக்கப்பட்டன.

இவை என்னுடைய பதிவிலிருந்து (http://sivigai.blogspot.com/2009/02/blog-post_25.html) எடுக்கப்பட்டது. முடிந்தால் வந்து முழுதும் படித்து விட்டு, உங்கள் கருத்துகளை இடுங்களேன்.

கலையரசன் said...

Simple & Glittery!
சின்ன பதிவா இருந்தாலும், சொல்ல வந்த கருத்தை
அழகா, அருமையா சொல்லிட்ட..

என் பார்வையின் கருத்து என்னன்னா,
முன்பு இளையராஜா மட்டுமே..
இப்போ புதிய இசையமைப்பாளர்கள் வந்துட்டாங்க,
புதுசா பல இசைப்பரிமானங்களை நமக்கு அறிமுகப்படுத்துறாங்க..
அதனால, நாம இளையராஜாவையும் அவர்களையும்
கம்பேர் செய்யும் போது அது தோன்றுவது இயல்புதான்!

அவர் எப்போதும் பழைய இளையராஜாதான்!!
(சந்தேகம் இருந்தால் நந்தலாலா படப்பாடல் கேட்க..)

He is Myth, Saga, Legend, and Parable.
So, there is no be suspicious of concerning it!

கண்ணா.. said...

வாங்க வினோத்

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..

ராஜா எப்போதுமே ராஜாதான்...

கண்ணா.. said...

வாங்க அரவிந்த்

தளத்திற்கு முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல...

உங்கள் பதிவை பார்த்தேன். அருமையான அலசல்....தொடர்ந்து எழுதுங்கள்..

அதிலும் பின்னூட்டம் இட்டிருக்கிறேன்..

கண்ணா.. said...

//கலையரசன் said...
Simple & Glittery!
சின்ன பதிவா இருந்தாலும், சொல்ல வந்த கருத்தை
அழகா, அருமையா சொல்லிட்ட..

என் பார்வையின் கருத்து என்னன்னா,
முன்பு இளையராஜா மட்டுமே..
இப்போ புதிய இசையமைப்பாளர்கள் வந்துட்டாங்க,
புதுசா பல இசைப்பரிமானங்களை நமக்கு அறிமுகப்படுத்துறாங்க..
அதனால, நாம இளையராஜாவையும் அவர்களையும்
கம்பேர் செய்யும் போது அது தோன்றுவது இயல்புதான்!

அவர் எப்போதும் பழைய இளையராஜாதான்!!
(சந்தேகம் இருந்தால் நந்தலாலா படப்பாடல் கேட்க..)

He is Myth, Saga, Legend, and Parable.
So, there is no be suspicious of concerning it//

வா மாப்பு....

//இப்போ புதிய இசையமைப்பாளர்கள் வந்துட்டாங்க,
புதுசா பல இசைப்பரிமானங்களை நமக்கு அறிமுகப்படுத்துறாங்க..
அதனால, நாம இளையராஜாவையும் அவர்களையும்
கம்பேர் செய்யும் போது அது தோன்றுவது இயல்புதான்! //

எப்பிடி இப்பிடில்லாம்.....

நல்லா சொல்லியிருக்கே...

தீப்பெட்டி said...

//1990 க்கு முன்னாலான இளையராஜாவின் இசைக்கும் தற்போதைய இளையராஜாவின் இசைக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது..//

நானும் அடிக்கடி அதான் நினைப்பேன்..
பழையராஜாவைப் போல இன்றைய இளைய ராஜாவை முழுமையாக ரசிக்க முடியவில்லை..
ஒருவேளை அவர் இப்போ பாடல்களைவிட படத்தின் பின்னணி இசையில் அதிகம் கவனம் செலுத்துறாரோ என்னவோ...

Unknown said...

வணக்கம் நண்பா,

நானும் ராஜா ரசிகன்தான்.தீவிரமான என்று சொல்லலாம்.

// இளையராஜாவின் பழைய பாடல்களில் உள்ள கம்பீரம் அவரின் சமீபத்திய பாடல்களில் இல்லையென்றுதான் தோன்றுகிறது//

எல்லா கலைஞ்சனுக்குமே end of the road உண்டு.அவர்களின் திறமை மங்க ஆரம்பித்துவிடும்.காரணங்கள்:-

தலைமுறை மாற்றம்,ரசனை மாற்றம்,சரியான களம் இல்லாமை,திகட்டல்,வயது,உலகப் போக்கு என்றபடி...

ராஜாவைப் பொறுத்தவரை அவர் 1990ல் end of the road க்கு வந்து விட்டார்.ஏன்? இசையின் எல்லா பரி
மாணங்களையும் காட்டி விட்டார்.exhausted.

அதற்குப் பிறகு தனித்துவமான படங்களில்(பாரதி,மோகமுள்..)திறமைமிளிர்ந்தது.

சமிபப் படங்களில் போட்டதையே போடுகிறார்.காரணம்
exhausted.எல்லா பரிமாணங்களையும்
காட்டி விட்டார்.Second sales

அதனால் முதல் முயற்சி இனிக்கிறது.அதன் ரிப்பிட்டிஷன் பிடிக்கவில்லை.

ராஜாவைப் பற்றி என் பதிவுகளைப் படிக்க:-

http://raviaditya.blogspot.com/2008/12/2.html

கண்ணா.. said...

@ தீப்பெட்டி / கணேஷ்குமார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாஸ்..

கேள்வி பதில் தொடர்பதிவை சீக்கிரம் முடித்ததற்கு ஸ்பெஷல் நன்றிகள்..

கண்ணா.. said...

வாங்க கே.ரவிஷங்கர்


//நானும் ராஜா ரசிகன்தான்.தீவிரமான என்று சொல்லலாம்//

எனக்கு தெரிந்த பல பேர் இதைவெளிப்படையாக சொல்லுகிறார்கள்..

சில பேர் சொல்லாமல் அவர் பாடலை மட்டும் கேட்டு கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் பதிவிலும் சில அரிதான பாடலை குறிப்பிட்டு இருந்தீர்கள்..அருமை..

கோபிநாத் said...

அரவிந்த் அவர்கள் கருத்துக்கு 100% வழிமொழிக்கிறேன்.

கண்ணா.. said...

வாங்க கோபிநாத்,

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி

நானும் அவரின் கருத்தோடு ஒத்து போகிறேன்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

என்னைப் பொறுத்த வரையில் அவர் ஒரு legend. இப்போது அவர் தரும் பாடல்களும் குறை சொல்லும்படி இல்லை. எத்தனை வருடம் கழித்தும் அவருடைய இசையைக் கேட்டு முதன் முறை ரசித்தது போலவே ரசிக்கலாம் என்பதே அவர் பலம்.இப்பொழுதும் எப்பொழுதும் நான் அவரின் ரசிகன்தான்.

thamizhparavai said...

அதெல்லாம் விடுங்க தலை... யார் என்ன சொன்னாலும் ,அவர் இசை தரும் இன்பம் அலாதியானது...
எனது கருத்து என்னவெனில், ஆன்மீகப் பாதைக்குச் சென்ற பின் அவர் அவருக்குள் ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொண்டார்.. அதற்கு முன் இசையில் அவர் செய்த பரிசோதனைகளை, அந்தளவிற்குச் செய்வதில்லை. செய்தாலும் அவை வரம்பு மீறாமல் பார்த்துக் கொண்டார்...
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.. ஆனா அதெல்லாம் சொல்லணும்னு இப்போ தோணலை... இன்னமும் காது வலிக்காத இசை, மனசுக்குள் நுழையும் இசையில் ராஜாவின் இசையே முதலிடம்...அது பழசோ, புதுசோ...

கண்ணா.. said...

// ஸ்ரீதர் said...
என்னைப் பொறுத்த வரையில் அவர் ஒரு legend. இப்போது அவர் தரும் பாடல்களும் குறை சொல்லும்படி இல்லை. எத்தனை வருடம் கழித்தும் அவருடைய இசையைக் கேட்டு முதன் முறை ரசித்தது போலவே ரசிக்கலாம் என்பதே அவர் பலம்.இப்பொழுதும் எப்பொழுதும் நான் அவரின் ரசிகன்தான்.//


வாங்க ஸ்ரீதர்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

எனக்கு அவரின் தற்போதைய பாடல்களை விட பழையபாடல்கள்தான் மிகவும் பிடிக்கும்

கண்ணா.. said...

//தமிழ்ப்பறவை said...
அதெல்லாம் விடுங்க தலை... யார் என்ன சொன்னாலும் ,அவர் இசை தரும் இன்பம் அலாதியானது...
எனது கருத்து என்னவெனில், ஆன்மீகப் பாதைக்குச் சென்ற பின் அவர் அவருக்குள் ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொண்டார்.. அதற்கு முன் இசையில் அவர் செய்த பரிசோதனைகளை, அந்தளவிற்குச் செய்வதில்லை. செய்தாலும் அவை வரம்பு மீறாமல் பார்த்துக் கொண்டார்...
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.. ஆனா அதெல்லாம் சொல்லணும்னு இப்போ தோணலை... இன்னமும் காது வலிக்காத இசை, மனசுக்குள் நுழையும் இசையில் ராஜாவின் இசையே முதலிடம்...அது பழசோ, புதுசோ...//


வாங்க தமிழ்பறவை,

என் தளத்திற்கு வருகை தந்து கருத்துகளை பகிர்ந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..