Monday, December 14, 2009

திரும்பி விட்டேன்...

நல்லா வாசிங்க. திருந்திவிட்டேன்னு தப்பா புரிஞ்சுக்காதீங்க... அதுக்கெல்லாம் கம்பெனி பொறுப்பாகாது.. இந்தியாவில் இருந்து வந்து ஓரு மாதம் ஆகிறது.. இப்பெல்லாம் கம்பெனியில் நிறைய ஆணிகள் புடுங்க வேண்டி இருப்பதாலும், பதிவுலகத்தில் இல்லாத இந்த ஐந்து மாதங்கள் தேவையில்லாத மன உளைச்சல் இல்லாததாலும் பதிவை எட்டி பார்க்க ஆர்வம் இல்லாமல் போனது..

இன்னும் சாரு, இளையராஜா , விஜய் அஜீத், மற்றும் பலரை குறித்து சண்டைகள் நடந்து கொண்டுதானே இருக்கிறது..? யாரும் திருந்திரலேல்லே.

அப்புறம் இன்னமும் துபாய் பதிவர் சந்திப்பில் சுந்தர் அண்ணன் வடை கொண்டு வருகிறார்களா? கலை இன்னும் வடையை ஆட்டையை போடுகிறானா? வினோத்தும் கிஷோரும் சண்டை போடுறதை நிப்பாட்டி விட்டார்களா?

இப்பிடி நிறைய கேள்விகள் மனதில் இருந்தாலும் சபை நாகரீகம் கருதி அதனை கேக்காமல் நான் வந்துட்டேன்னு சொல்லிக்கறேன்.

முதல்ல ஊருக்கு போன உடனே தும்முனா, இருமுனா, முக்குனா எல்லாத்தையும் பதிவா போட்றலாமேன்னு தோணுச்சு.... இப்போதான் அந்த நினைப்புல்லாம் இல்லாம எல்லாத்தையும் செய்யுறேன்.. இப்போ மறுபடியும் ”ஐ ம் பேக்”

முதல்ல துபாய்ல இருந்து பதிவை படிக்கறப்போ பரவால்லயே எல்லா முக்கிய செய்திகளும் இதுலயே கிடைக்குதேன்னு நினைச்சேன்.. ஆனா ஊருக்கு போன உடனேதான் தெரிஞ்சுது.. பதிவுலகம் ஊர் நடப்புக்கு சம்பந்தமே இல்லாம் தனி உலகமா இருக்குன்னு..


பதிவர்களுக்கு ஓரு வேண்டுகோள்

ப்ளாக் நமக்கு ஓசில கிடைக்குங்குறதுக்காக ஓவரா மொக்கைகளை போட்டு இதனை இன்னும் தனித்து விடவேண்டாம்.

உங்களை யாரும் தினமும் பதிவு போட்டுதான் ஆகணும்னு கட்டாயபடுத்தலை.. அப்பிடி போட்டு வர்ற ஹிட்ஸை வச்சு நாக்கு கூட வளிக்க முடியாது...

நல்ல பொழுதுபோக்கான , உபயோகமான தகவல்களை பகிருங்கள்... இன்னைக்கு பதிவுலகில் மொக்கைகள்தான் பெருவாரியாக உள்ளது. அதிலயே போய் பத்தோடு பதினொன்னா ஆகுறதுக்கு பதில் .. உபயோகமான தகவல்களை பகிர்ந்து தனித்து தெரியலாமே.. அப்பிடி பட்ட தகவல்கள் கிடைக்குற வரைக்கும் நம்ம பதிவே போடலேன்னாலும் ஓண்ணும் ஆக போறதில்ல... ஆகவே பதிவு போடுறதுக்கு முன்ன ஓருமுறை யோசிச்சுங்கோங்க...

33 comments:

kishore said...

ஹாய்.. welcome back .. இந்தியாவுல இருந்தாலும் பரவா இல்ல.. நீ இருக்கியா இல்லையானே தெரியாம போச்சி.. திருந்தாம திரும்பி மட்டும் வந்ததுல சந்தோசம்.. ஆனாலும் பிளாக்கர் பத்திய உன்னோட கருத்துக்கு டபுள் ஜே.. அப்பட்டமான உண்மை..

நானும் வினோத்தும் சண்டை போட்டோம்னு உனக்கு யாரு சொன்னது?

நீ நல்லா இருக்கியா? அப்போ அப்போ பிளாக்கர் பக்கம் வந்து போ.. பொழுது போகும்ல..

கண்ணா.. said...

நன்றி கிஷோர்

வருகைக்கும் மறக்காமல் நினைவில் வைத்ததற்கும்...

//நானும் வினோத்தும் சண்டை போட்டோம்னு உனக்கு யாரு சொன்னது? //

நீங்க ரெண்டு பேரும் கமெண்ட் பண்ணுவதை சொன்னேன்...

kishore said...

அதெல்லாம் சும்மா மச்சி.. எனக்கும் அவனுக்கும் இதுவரைக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்ல .. சீக்கிரம் நடக்கணும்னு வேண்டிக்கோ..

கண்ணா.. said...

@ கிஷோர்,


அது எனக்கும் தெரியும். நீங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

ஓரு வார்த்தை சொன்னா . சரின்னு கேட்டுக்கணும்... சும்மா ஆராய கூடாது..

க‌ரிச‌ல்கார‌ன் said...

//உங்களை யாரும் தினமும் பதிவு போட்டுதான் ஆகணும்னு கட்டாயபடுத்தலை.. அப்பிடி போட்டு வர்ற ஹிட்ஸை வச்சு நாக்கு கூட வளிக்க முடியாது...//
ச‌கா அத‌ வ‌ச்சுதானே பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்னு சொல்றாங்க‌!!!!!!!!!!-):

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ப்ளாக் நமக்கு ஓசில கிடைக்குங்குறதுக்காக ஓவரா மொக்கைகளை போட்டு இதனை இன்னும் தனித்து விடவேண்டாம்.//

அது.மாச‌ம் ஒரு அம‌வுண்ட் க‌ட்ட‌னும்னு சொன்னா 90% எஸ்கேப் ஆயிருவாங்க‌ (வோம்)

கண்ணா.. said...

வாங்க கரிசல்காரன்,

தளத்திற்கு தங்களின் முதல் வருகைக்கும் கமெண்டிற்கும் நன்றி

கோவில்பட்டி சிங்கமா நீரு..?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

Welcome Back.. Khanna..

கலையரசன் said...

வா மச்சி... உன் வரவு, நல்வரவாகுக!!

//இன்னைக்கு பதிவுலகில் மொக்கைகள்தான் பெருவாரியாக உள்ளது.//
இதுக்கு எங்க எல்லேரையும்.. பதிவை இழுத்து மூடிட்டு ஓடி போன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாம்!!

//உபயோகமான தகவல்களை பகிர்ந்து தனித்து தெரியலாமே.. அப்பிடி பட்ட தகவல்கள் கிடைக்குற வரைக்கும் நம்ம பதிவே போடலேன்னாலும் ஓண்ணும் ஆக போறதில்ல... ஆகவே பதிவு போடுறதுக்கு முன்ன ஓருமுறை யோசிச்சுங்கோங்க...//

வந்துட்டாருய்யா... விஜயக்குமாரு வாரிசு!
டம்பிஇஇஇ.. சட்டியில (ஜட்டி என்று வாசித்தால் கம்பெனி பொறுப்பாகாது..) இருந்தாதானே அகப்பையில வரும்..?

வெற்றி-[க்]-கதிரவன் said...

வாங்க வாங்க,

கண்ணா.. said...

@ வாங்க செந்தில்வேலன்

வரவேற்பிற்கு நன்றி..

கண்ணா.. said...

வாடா கலை

வருகைக்கு நன்றி

//இதுக்கு எங்க எல்லேரையும்.. பதிவை இழுத்து மூடிட்டு ஓடி போன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாம்//

எங்கன்னு சொல்லி என்னை பிரிச்சுராதீங்க...

இங்க மட்டும் என்ன வாழுச்சாம்...


இதை பத்தி விரிவாவே பேசலாம்..

கண்ணா.. said...

வாங்க [ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன்

வருகைக்கு நன்றி..


நான் போய்ட்டு வர்றதுகுள்ள என்ன இது உங்க பேர் இப்பிடி மாறிட்டு....

kishore said...

அப்போ சரி.. கண்ணா சொன்னா கரெக்ட்ஆ தான் இருக்கும்..

வினோத் கெளதம் said...

வாங்க கண்ணா ..
Welcome back.

//நானும் வினோத்தும் சண்டை போட்டோம்னு உனக்கு யாரு சொன்னது? //

அதானே..யாரு சொன்னது..

//ப்ளாக் நமக்கு ஓசில கிடைக்குங்குறதுக்காக ஓவரா மொக்கைகளை போட்டு இதனை இன்னும் தனித்து விடவேண்டாம்.//

யாரையோ சொல்லுறன்னு தெரியுது ஆனா யாருன்னு தான் தெரியுல :)

கண்ணா.. said...

வாங்க வினோத்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..


நான் பொதுவாக சொன்னேன்..

கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவன அல்ல

Chitra said...

பதிவுகளை குறித்த உங்கள் கருத்துக்கள் வித்தியாசமா இருந்துச்சு. அப்படியும் யோசிக்கலாமோ?

கண்ணா.. said...

வாங்க சித்ரா,

தங்களின் முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி

Sarathguru Vijayananda said...

அண்ணே நீங்க சொல்றது மிகச் சரி. யாரோ ஒருத்தர் கருத்துரையில் மாசாமாசம் பணம் கட்டணும்னு சொன்னா ஓடிப்போயிடுவாங்கன்னு சொல்லியிருக்காரு. சூப்பர் ஸ்ட்ராட்டர்ஜி.

நான் பணம் கட்டித்தான் என் ப்ளாக் வெச்சிருக்கேன். வந்து பாருங்க. நீங்க சொல்ற உபயோகமான பதிவரா இல்ல மொக்கையான்னு கருத்துரையும் போடுங்க. எதிர்பார்க்கிறேன் உங்கள் நண்பர்களோடு(வினோத் மற்றும் கிஷோர்).

http://www.manalkayiru.com

Sarathguru Vijayananda said...

உங்கள் பதிவிற்கு கருத்துரை சேர்க்க நேம் அண்ட் யுஆர்எல் ஆப்ஷனையும் சேருங்கள். எங்களைப் போன்றோர்க்கு கஷ்டமாக உள்ளது. நன்றி.

பல பதிவர்கள் (ப்ளாக்ஸ்பாட்) இந்த ஆப்ஷனை வைத்திருக்கவில்லை. படித்து ரசித்து கருத்துரையிடலாம் என்று எண்ணி தண்ணீ கூட குடிக்காம உட்கார்ந்து கமெண்டு போட்டுபார்த்தா “நீங்கள் கருத்துரை சேர்க்க லாயக்கில்லாதவர்” என்று திட்டுகிறது.

கண்ணா.. said...

வாங்க Sarathguru Vijayananda,

தளத்திற்கு முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல..

இதோ உங்க தளத்திற்கு வந்து கொண்டே இருக்கிறேன்....

அந்த ஆப்சனையும் விரைவில் மாற்றி விடுகிறேன். தகவலுக்கு நன்றி

divyahari said...

நிறைய கேள்விகள் மனதில் இருந்தாலும் சபை நாகரீகம் கருதி அதனை கேக்காமல் நான் வந்துட்டேன்னு சொல்லிக்கறேன்.

ivlo thaana innum irukka ketkaatha list? i think u r ottai vaai or all india radio. anything..

chumma joke..

pathivu nalla iruku brother.. keep it up..

apram..

க‌ரிச‌ல்கார‌ன் said...

அது.மாச‌ம் ஒரு அம‌வுண்ட் க‌ட்ட‌னும்னு சொன்னா 90% எஸ்கேப் ஆயிருவாங்க‌ (வோம்)

ean ean.. intha kola veri nanba..

கண்ணா.. said...

வாங்க சகோதரி திவ்யாஹரி,

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

divyahari said...

இதோ... வந்துட்டேன்...
word verification-ஐ எப்படி remove பண்ணுவது நண்பா?

divyahari said...

நன்றி கண்ணா.. உங்களை நண்பனாக (flower) சேர்க்க என்ன செய்யணும் நண்பா.. அதையும் சொல்லிடுங்க.. "இன்னைக்கு" இந்த ஒரே ஒரு doubt தான்..

அன்புடன் மலிக்கா said...

உண்மைய சொல்லிட்டீங்க இதோ உங்களுக்கு பெரிய பூங்கொத்து.. அப்படின்னெல்லாம் சொல்லமாட்டேன் சரியாதான் சொல்லிரிக்கீங்கன்னு சும்மா சொல்லுவேன்..


என்ன குழப்பிட்டேனா சரி சரி விடுங்க..
முதல் முதலாவந்தேன் பிளாக்கில் அழகான செல்லத்தைக்கண்டேன் [பேபி] ஒரு கருத்தை சொல்லிட்டு போகிறேன் அவ்வளவிதான்..

http://niroodai.blogspot.com

கண்ணா.. said...

வாங்க அன்புடன் மலிக்கா,

தளத்திற்கு முதல் வருகைக்கும், வந்துட்டு அப்பிட்யே போகாம கமெண்ட் போட்டுட்டு போனதிற்கும் நன்றிகள் பல..

//என்ன குழப்பிட்டேனா சரி சரி விடுங்க..//

நான் குழப்பினதை விட நீங்க கொஞ்சம் கம்மியாதான் குழப்பி இருக்கீங்க..

சேம் ப்ளட்

geethappriyan said...

முதல்ல துபாய்ல இருந்து பதிவை படிக்கறப்போ பரவால்லயே எல்லா முக்கிய செய்திகளும் இதுலயே கிடைக்குதேன்னு நினைச்சேன்.. ஆனா ஊருக்கு போன உடனேதான் தெரிஞ்சுது.. பதிவுலகம் ஊர் நடப்புக்கு சம்பந்தமே இல்லாம் தனி உலகமா இருக்குன்னு..//

சரியாக சொன்னீங்க சிங்கம்.
நான் இப்போ ரொம்பவே திருந்தி அனியாயத்துக்கு பதிவு போடுவதையே குறைத்துவிட்டேன்.
இது காலத்தை விழுங்கும் பதிவுலகம்னு புரிஞ்சுகிட்டேன். இனி மாசத்துக்கு ஒரு 10 பதிவு தான்.
லேட்டா அட்டனன்சு போட்டதுக்கு மன்னிக்கவும்:)

கண்ணா.. said...

வாங்க கார்த்தி,

உங்களின் முதல் வருக்கைக்கு நன்றி...

லேட்டா வந்தாலும் வந்து உடனே ஓட்டு போட்டதுக்கு மிக்க நன்றி

Prathap Kumar S. said...

மொக்கை இல்லாமல் ஒரு பதிவா... என்னோட கொள்கைக்கே வேட்டு வைக்க பார்க்கிறீங்க...?

அமீரக பதிவர்ல இப்படி ஒரு சிங்கமா எனக்குத்தெரியமா போச்சே...
ஆங்... பை தி வே அ எம்
நாஞசில் பிரதாப்... கிளாட் டு மீட் யு...(மேஜர் சுந்தர்ராணன் பாணியில் வாசிக்கவும்)...

ஓட்டு வச்சிட்டேன்... வேட்டு வச்சிட்டேன்னு படிச்சா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

கண்ணா.. said...

வாங்க நாஞ்சிலாரே...


முதல் வருகைக்கு மிக்க நன்றி..


பாஸ் உங்களோட கொள்கை மட்டுமல்ல அது என்னோட கொள்கையையும் கூடத்தான்.


வெரி க்ளாட் டு மீட் யு

விரைவில் நேரில் சந்திப்போம்

நன்றி

ஹுஸைனம்மா said...

//பதிவுலகம் ஊர் நடப்புக்கு சம்பந்தமே இல்லாம் தனி உலகமா இருக்குன்னு//

ஆமா, இதுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாம இருக்குது. ஆனா பாருங்க, பிரயோஜனமே இல்லைன்னாலும் நம்ம ராமதாஸ் எங்கே மக்கள் சோர்ந்துருவாங்களோன்னு நெதம்மும் ஒரு அறிக்கை விடராறோ அதே போல நமக்கும் ஒரு பதிவு போட்டாத்தான் உலகம் நிக்காம சுத்தும்னு நம்பிக்கையாகிப்போச்சு.

கண்ணா.. said...

வாங்க ஹுஸைனம்மா

வருகைக்கு மிக்க நன்றி

//ராமதாஸ் எங்கே மக்கள் சோர்ந்துருவாங்களோன்னு நெதம்மும் ஒரு அறிக்கை விடராறோ அதே போல நமக்கும் ஒரு பதிவு போட்டாத்தான் உலகம் நிக்காம சுத்தும்னு நம்பிக்கையாகிப்போச்சு.//

பதிவுலகில் பெண்களின் பதிவுகள் மிகமிக குறைவு. அதனால் நீங்களெல்லாம் ஓரு நாளைக்கு 4,5 பதிவுகள் போடவேண்டும்
:)