Saturday, December 26, 2009

சூடாகும் பூமி - Green Building ன் தேவைகள் - ஓரு பார்வை

வரும் காலத்தில் பசுமை கட்டிடங்கள் (கீரீன் பில்டிங்) உலகம் வெப்பமயமாதலை தடுக்க மிக முக்கிய பங்கு ஆற்றவிருக்கிறது. முதலில க்ரீன் பில்டிங்ன்னா என்னன்னா இயற்கையிலியே நமக்கு கிடைக்க கூடிய சக்திகளை சரியாக உபயோகிப்பதின் மூலம் செயற்கை மற்றும் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய பொருள்களை குறைக்க கூடிய அமைப்பில் கட்ட படும் கட்டிடங்களைத்தான் பசுமை கட்டிடங்கள் என கூறுகிறார்கள்.புவி வெப்பமடைதல் குறித்து ஒரு சிறுபார்வை

பூமியின் சராசரி வெப்பநிலை பூமியை ஒட்டியுள்ள மேற்பரப்பிலும், காற்றிலும் நீர்நிலைகளிலும் அதிகரிப்பதே புவி வெப்பமடைதல் என்கிறோம். பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்பதை விஞ்ஞானிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். 0.74 டிகிரி செல்சியஸ் வெப்பம் கடந்த நூற்றாண்டில் உயர்ந்துள்ளது. ஐ.நா.,வின் பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச கூட்டமைப்பு (யு.என்.எப்.சி.சி.சி.,) அறிக்கையின் படி, பூமியிலிருந்து வெளியேறும் மாசுக்களால்தான் புவி வெப்பமடைவது நிரூபிக்கப்பட்டது.
18 ஆண்டுகளாக அமெரிக் காவின் நாசா நிறுவனம் புவி வெப்பத்தை அளவிட்டு வருகிறது. இந்த ஆய்விலும் வெப்பமடைவது கண்டறியப்பட்டுள்ளது. காற்றில் கார்பன் டை ஆக்சசைடு அதிகரித்திருப்பதே இந்த பிரச்னைக்கு அடிப்படையான காரணம்.
வளர்ந்த தொழில்மயமான நாடுகள் இதுவரை 20,900 கோடி டன் கார்பன் டை ஆக்சைடை காற்றுமண்டலத்தில் சேர்த்துள்ளன. இந்நாடுகள் 1990ம் ஆண்டில் வெளியிட்ட அளவுக்கு தங்களுடைய கார்பன் வெளியேற்றத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா., கூறி வருகிறது. 1990க்குப் பின் அதிகரித்த கார்பன் வெளியேற்றத்தில் 80 சதவீத அளவு 2050ம் ஆண்டுக்குள் குறைக்க வேண்டும் என்று வானிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். காற்று மண்டலத்தில் நீராவி, உப்பு, மண், கனி மங்கள், கார்பன் உள்ளிட்ட மாசுத் துகள்கள், வைரஸ், பாக்டீரியா, உள்ளிட்ட துகள்கள் மிதக்கின்றன. காற்றுமண்டலத்தில் மிதக்கும் பத்து லட்சம் துகள்களில் 450 துகள்கள் மாசுத்து கள்களாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் முன்னர் கூறினார்கள். அப்படியானால், 2050ல் புவியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியசுக்கு மேல் உயராது. இல்லாவிட்டால் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துவிடும். இப்போது நாம் சந்திக்கும் பிரச்னை களைவிட ஏராளமான பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும் என்றார்கள்.

காற்று மண்டலத்தில் மாசு துகள்களின் எண்ணிக்கை 350க்குள் இருக்க வேண்டும் என்று தற்போது விஞ்ஞானிகள் அந்த எண்ணிக்கையை மாற்றியிருக்கிறார்கள். அப்போதுதான், புவியின் வெப்பநிலை 2டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் உயராது. துருவப்பகுதியில் உள்ள பனித்தட்டுகள் உருகி உடையாமல் இருக்கும் என்று கருதுகிறார்கள். அப்படியானால், 1990க்குப் பின் அதிகரித்த கார்பன் வெளியேற்றத்தில் 97 சதவீததத்தை குறைத்தால்தான் இந்த இலக்கை எட்ட முடியும்

ஓரு சிறிய உதாரணம், நாம் கட்டிடத்திற்கு உபயோகப்படுத்தும் சிமெண்ட் 1 டன் உற்பத்தி செய்வதற்கு 1 டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளிவிடப்படுகிறது. மேலும் கம்பி (steel) 1 டன் உற்பத்தி செய்வதற்கு 2 டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளிவிடப்படுகிறது. இது போன்று பலவகைகளில் வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடுகளால் பூமியின் வெப்பம் 0.74 டிகிரி செல்ஷியஸ் உயர்ந்துள்ளது.

இன்றைய நாட்களில் நாம் கட்டுமானத்திற்கு இந்த இரண்டு பொருள்களையும் (சிமெண்ட், கம்பி) தேவைக்கும் அதிகமாகவே பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். இவற்றை மிக தேவையான அளவு மட்டும் பயன்படுத்தி இவற்றின் உபயோக அளவை குறைக்கலாம் என வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள். உற்பத்தியை குறைப்பது என்பது தேவைகளை குறைப்பதன் மூலமே சாத்தியம் என்பதால், தேவைகளை குறைக்க மாற்றுவழிகளை ஆராய்ந்து வருகிறார்கள்.


கீரின் பில்டிங் அடிப்படைகளை குறிக்கும் படம் கீழே
USGBC எனும் அமைப்பு LEED (Leadership in Energy and Environmental Design) புள்ளிகளை கணக்கிட்டு அதன் மூலம் பசுமை கட்டிடத்திற்கான சான்றிதழ் வழங்குகிறார்கள். கீரீன் பில்டிங் ரேட்டிங் முறையில் LEED Points முக்கியமானது. இதில் 100க்கு 65 புள்ளிகளுக்கு மேல் வாங்கும் கட்டிடங்கள் கீரீன் பில்டிங் என சான்றளிக்கிறார்கள்.

உலக வெப்பமயமாதலை தடுக்க கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றுவதை குறைப்பதற்காக அனைத்துலக நாடுகளும் தற்போது தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனை நம் அன்றாட வாழ்க்கையில் ஓப்பிட்டு பார்த்தால் சமீபத்தில் எவ்வளவு மாறியிருக்கிறோம் என்பது தெரிகிறது.


பத்தாண்டுகளுக்கு முன்னால்
Ø எங்கள் வீட்டில் சைக்கிள்தான் மிகமுக்கிய
வாகனம். மோட்டார் சைக்கிள் வாங்கும் முனைப்பில் இருந்தோம்

Ø மின்சாதன பொருள்கள் இப்போதை விட மிக
குறைவு.

Ø பஸ் டைமிங் எங்களுக்கு அத்துபடி.

Ø வாஷிங் மெஷின் இல்லை. மிக்ஸியும்
கிரைண்டரும் அப்போதுதான் எங்கள் வீட்டிற்கு புதிய உறுப்பினராக வந்திருந்தன.

Ø செல் போன்கள் இல்லை (யாரிடமாவது அவசர
தகவல் சொல்ல வேண்டுமென்றால் அதற்கு பின்படும் முறைகள், தற்போது செல் போன்கள்
இருந்தும் கூடமுடியவில்லை )
இப்போது எங்கள் வீட்டு சைக்கிள் எங்கே இருக்கிறது என தெரியவில்லை. தற்போது மிக அருகில் இருக்கும் கடைக்கு கூட மோட்டார் சைக்கிள்தான். நடந்து போனால் எதிரில் பார்பவர்கள் துக்கம் விசாரிப்பார்கள். இப்போது தூர தொலைவு பயணங்கள் தவிர்த்து பஸ்ஸில் என்றால் எங்கள் வீட்டில் யாரும் வருவதில்லை. எங்கள் ஊரில் மோட்டார் சைக்கிள், கார் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றியை கூட்டி கொண்டே வந்திருக்கிறோம்.

வருங்கால சந்ததிகளை மனதில் கொண்டு நம்மால் முடிந்த அளவில் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றுவதை குறைப்போம்.

கட்டிடத்தை பொறுத்தவரை லாரி பெக்கர் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பே சிமெண்ட் மற்றும் கம்பிகளை குறைவாக பயன்படுத்தி பல கட்டிடங்களை கட்டி இருக்கிறார். அவருடைய கட்டுமான முறைகள் குறித்து தகவல் சேகரித்து தனி பதிவாக விரைவில் போடுகிறேன்.

37 comments:

KISHORE said...

நல்லா இருக்கு டா.. இது மாதிரி நிறைய எழுது..

கலையரசன் said...

அய்ய... பதிவெல்லாம் பச்சையா எழுதியிருக்க..? ஆய் பையன்!

KISHORE said...

தமிலிஷ்ல எத்தன தடவ vote பண்ணுனாலும் vote போல் ஆகா மாட்டுது

கலையரசன் said...

அடங்கோ.. இதுல கமெண்ட் மாடுரேஷன் வேறயா???
அம்மாம் பெரிய பதிவராயிட்டியா?? ரைட்டு...

சரி.. சரி.. நீ இஞ்சினியர்தான்னு ஒத்துக்குறோம்!
அதுக்குன்னு செங்கல்லு, சிமெண்ட்டு, கம்பின்னு
கல்லறை கட்டுற மாதிரியே கணக்கு சொல்லுறியே ஏண்டா???

கலையரசன் said...

நல்லா இருக்கு டா.. இது மாதிரி நிறைய எழுது..

இதைதானே எதிர் பார்த்தாய் கண்ணே "கண்ணா"!!
போட்டாச்சு போட்டாசு நிம்மதிய படுத்து தூங்கு..

சங்கர் said...

நல்ல பதிவு, வாழ்த்துக்கள்

வினோத்கெளதம் said...

நல்ல பதிவு..ஆனா இது நடைமுறை அமைப்பில் சாத்தியமா..வளர்கின்ற நாடுகள் இந்த Green buliding அமைப்பை பின்ப்பற்ற இன்னும்
எத்தனை ஆண்டுகள் எடுக்கும்..மேலும் இதேப்போன்ற விஷயங்கள் எதாவது ஒரு பன்னாட்டு அமைப்பின் வளர்சிக்கு வேண்டும் என்றால் வழி வகுக்கலாம்..
Green building அமைப்பில் எத்தனை சதவிகித சிமெண்ட் மற்றும் கம்பிகள் குறைக்க முடியும் தற்பொழுது கையாளும் முறையில் இருந்து..

வினோத்கெளதம் said...

Moderation !!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அருமை நண்பர் கண்ணா,
மிக நல்ல இடுகை,இன்றைய தேதிக்கு மிகவும் பயனுள்ள இடுகை, மொக்கை போட ஆளுங்க அதிகம் பேருண்டு,இதுபோல பயனுள்ள இடுகை எழுதினால் மிகவும் உபயோகமாகவும் சிந்திக்கவும் வைக்கும்.

கண்ணா.. said...

வாடா கிஷோர்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

//நல்லா இருக்கு டா.. இது மாதிரி நிறைய எழுது..//

டிரை பண்ணலாம்.

கண்ணா.. said...

அட்டு கலை

அடங்கவே மாட்டியா..???

கண்ணா.. said...

@ சங்கர்

வாங்க Excel சங்கர், வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி

உங்கள் Excel குறித்த தமிழ் பதிவு நான் விரும்பி படிக்கும் ஓன்று

கண்ணா.. said...

@ வினோத்,

வருகைக்கும், கேள்விக்கும் நன்றி

தற்போதைய நிலையில் உடனடியாக 20% வரை உபயோகிப்பதை குறைக்க முடியும்.

விரைவில் அது குறித்தும் பதிவிடுகிறேன்.


ஓத்துக்கறேன்..நீ படிச்சிட்டுதான் கமெண்ட் போட்ருக்கேன்னு....

கண்ணா.. said...

@ வினோத், கலை

மாடுரேஷன் முன்பே உள்ளது.

//அம்மாம் பெரிய பதிவராயிட்டியா?? ரைட்டு... //

ச்சும்மா கேட்டுகினே இருப்பானுவ...

ஓத்துங்கோங்கப்பா...............

கண்ணா.. said...

வாங்க கார்த்தி

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

//கட்டிடத்தை பொறுத்தவரை லாரி பெக்கர் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பே சிமெண்ட் மற்றும் கம்பிகளை குறைவாக பயன்படுத்தி பல கட்டிடங்களை கட்டி இருக்கிறார். அவருடைய கட்டுமான முறைகள் குறித்து தகவல் சேகரித்து தனி பதிவாக விரைவில் போடுகிறேன்.//

நல்ல முயற்சி கண்ணா,
இவர் எனக்கு மிகவும் பிடித்த ஆர்கிடெக்ட்,ஏழைகளுக்கும் ஆர்கிடெக்சரை கொண்டு சேர்த்த மகான்.கடைசி காலம் வரை கேரளாவிலேயே தங்கி தொண்டு செய்தவர். இவரின் குறைந்த விலை கட்டிட மூல பொருட்கள் உலகப்பிரசித்தி பெற்றவை, கம்பிக்கு பதிலாக இவர் மூங்கில் பயன்படுத்துவார், காங்ரீட்டை குறைக்க இவர் மங்களூர் ஓட்டை பயன்படுத்துவார், இவரின் சீடர்கள் நிறைய பேர் ஆரோவில்லில் இருந்து தொழில் செய்கின்றனர்.
என் பழைய ஓனர் பென்னி குரியாகோஸின் குரு இவர், நேற்றே இதை எழுத நினைத்தேன் உடம்பு சரியில்லாததால் பின்னூடமிடமுடியவில்லை. உங்கள் தொலை நோக்கு பார்வையை தொகுத்தளிக்கவும்

கண்ணா.. said...

@ கார்த்தி

//நல்ல முயற்சி கண்ணா,
இவர் எனக்கு மிகவும் பிடித்த ஆர்கிடெக்ட்,ஏழைகளுக்கும் ஆர்கிடெக்சரை கொண்டு சேர்த்த மகான்.கடைசி காலம் வரை கேரளாவிலேயே தங்கி தொண்டு செய்தவர். இவரின் குறைந்த விலை கட்டிட மூல பொருட்கள் உலகப்பிரசித்தி பெற்றவை, கம்பிக்கு பதிலாக இவர் மூங்கில் பயன்படுத்துவார், காங்ரீட்டை குறைக்க இவர் மங்களூர் ஓட்டை பயன்படுத்துவார்//

ம் ஆமாம் குரு எனக்கும் மிகவும் பிடித்த ஆர்க்கிடெக்ட் இவரே.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால் இங்கு அபுதாபியில் கட்டபடவிருக்கும் ஜீரோ கார்பன் சிட்டியில் இவரின் பல தொழில்நுட்பங்களை அப்படியே காப்பி அடித்ததோடு மட்டுமில்லாமல் உலகின் முதன் முறையாக என்ற முத்திரையும் குத்துகிறார்கள்.

மாதேவி said...

" சூடாகும் பூமி- க்ரீன் பில்டிங்" பயனுள்ள நல்ல பதிவு.

வால்பையன் said...

மரங்களை வெட்டி போட்டுட்டு, இன்னைக்கு கோடி கோடியா செலவு பண்றாங்களே தல! வருத்தமா தான் இருக்கு! நாளை சந்ததியினரை நினைத்தால்!

வால்பையன் said...

KISHORE said...

தமிலிஷ்ல எத்தன தடவ vote பண்ணுனாலும் vote போல் ஆகா மாட்டுது//

கள்ளஓட்டு ட்ரை பண்ணிங்களா?
முதலில் வாக்காளர் அடையாள அட்டைய காட்டுங்க!

pappu said...

அய்ய... பதிவெல்லாம் பச்சையா எழுதியிருக்க..? ஆய் பையன்!///

இந்த எமிரேட்ஸ் காரய்ங்க தொல்லைதாங்கல. மொக்க பார்ட்டீஸ்!


இங்கயும் வந்துட்டோம்ல!

pappu said...

இன்னும் மாடரேஷனா?
கும்மிக்கு அது ஆகாதே! இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லயா?

நாகா said...

வாங்க கண்ணா. ரொம்ப நாளக்கு அப்புறம் உங்களோட எழுத்துக்கள்! முடிந்தால் நேரில் சந்திப்போம்.

கண்ணா.. said...

வாங்க மாதேவி,

வருகைக்கு நன்றி

கண்ணா.. said...

வாங்க வால்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

//கள்ளஓட்டு ட்ரை பண்ணிங்களா?
முதலில் வாக்காளர் அடையாள அட்டைய காட்டுங்க!//

ஆமா...ஆமா...நல்லா விசாரிங்க........

:)

கண்ணா.. said...

வாங்க பப்பு

வந்ததற்கும் ஃபாலோவர் ஆனதிற்கும் நன்றிகள் பல

கண்ணா.. said...

வாங்க நாகா,

வருகைக்கு நன்றி, அடிக்கடி சந்திப்போம்.

இப்போ எங்க இருக்கீங்க.. துபாயா? தாய்மண்ணா..?

Joe said...

நல்ல பயனுள்ள இடுகை, கண்ணா!
//
கட்டிடத்தை பொறுத்தவரை லாரி பெக்கர் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பே சிமெண்ட் மற்றும் கம்பிகளை குறைவாக பயன்படுத்தி பல கட்டிடங்களை கட்டி இருக்கிறார். அவருடைய கட்டுமான முறைகள் குறித்து தகவல் சேகரித்து தனி பதிவாக விரைவில் போடுகிறேன்.
//
விரைவில் எதிர்பார்க்கிறோம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஹுஸைனம்மா said...

புதிய தகவல்களோடு நல்ல பதிவு கண்ணன்!! இன்னும் விவரங்களோட பதிவுகள் எழுதுங்க.

அப்புறம், படங்களை கிளிக்கிப் பெரிதாக்கிப் பார்க்கமுடியவில்லையே?

திருநெல்வேலி காலேஜ் எந்த வருஷ batch நீங்க?

கண்ணா.. said...

வாங்க ஜோ,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க ஹுஸைனம்மா

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.


//அப்புறம், படங்களை கிளிக்கிப் பெரிதாக்கிப் பார்க்கமுடியவில்லையே?//

படமே சின்ன படமாத்தான் கிடைச்சுது அதனாலதான். :)


//திருநெல்வேலி காலேஜ் எந்த வருஷ batch நீங்க?//

நான் 2006ல் பார்ட் டைம் முடிச்சேன்..

புரொபசர் திரு. தாமோதரசாமி சிவில் HOD & VP ஆ இருந்தார்.

நீங்க் எந்த பேட்ச்..?

யுவகிருஷ்ணா said...

கடுமையான உழைப்பை கச்சாப் பொருளாக கொண்டு பதியப்படும் இதுபோன்ற பதிவுகள் பெரும்பான்மையான தமிழ் வலை வாசகர்களால் வாசிக்கப்படுவதில்லை என்பது இணையத் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் சாபக்கேடு :-(

//கட்டிடத்தை பொறுத்தவரை லாரி பெக்கர் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பே சிமெண்ட் மற்றும் கம்பிகளை குறைவாக பயன்படுத்தி பல கட்டிடங்களை கட்டி இருக்கிறார். அவருடைய கட்டுமான முறைகள் குறித்து தகவல் சேகரித்து தனி பதிவாக விரைவில் போடுகிறேன்.//

இந்தப் பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்!

ஹுஸைனம்மா said...

/நான் 2006ல் பார்ட் டைம் முடிச்சேன்..//

ஓ அப்படியா. என் வீட்டுக்காரர் அங்கே 1991 மெக்கானிக்கல் (ரெகுலர்). UAEயில நடந்த GCE meetingsக்கு வந்ததுண்டா?

அப்புறம் நிச்சயம் க்ரீன் பில்டிங்ஸ் குறித்த பதிவுகள் தொடர்ந்து எழுதுங்க. புதிய விஷயங்கள் தெரிந்துகொள்ள ஆவலோடு இருக்கிறேன்.

கண்ணா.. said...

வாங்க யுவகிருஷ்ணா,

வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி.


இதில் கடுமையான உழைப்பு இல்லையென்றாலும் நிறைய வலை வாசகர்களால் வாசிக்க படாத போது சற்று என்ர்ஜி குறைவது உண்மைதான்.

:)

லாரி பெக்கர் குறித்த தகவல்களுடன் பதிவை விரைவில் பதிகிறேன்

நன்றி

கண்ணா.. said...

வாங்க ஹுஸைனம்மா

மீள்வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல.

//UAEயில நடந்த GCE meetingsக்கு வந்ததுண்டா? //

இதுவரை இல்லை இனி கலந்து கொள்வோம். :)

//அப்புறம் நிச்சயம் க்ரீன் பில்டிங்ஸ் குறித்த பதிவுகள் தொடர்ந்து எழுதுங்க. புதிய விஷயங்கள் தெரிந்துகொள்ள ஆவலோடு இருக்கிறேன்//

அய்யய்யோ.....எனக்கு பயமா இருக்கே...... மொக்கையா வராம அந்த பதிவு கொஞ்சம் உருப்படியா வரணும்னு.....:)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

வலைச்சரம் மூலமாக வந்தேன், ஸ்டார்ஜனுக்கு நன்றி

கண்ணா.. said...

@SUREஷ் (பழனியிலிருந்து)

வாங்க டாகடர், வருகை தந்து கருத்து சொன்ன உங்களுக்கும், ஸ்டார்ஜனுக்கும் நன்றிகள் பல