Tuesday, April 27, 2010

பேச்சுலர் சமையலும்.. ஊருக்கு போதலும்..!

மூன்று வருடங்களுக்கு முன்பு கத்தாரில் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். வழக்கமா வெள்ளிகிழமை பக்கத்துல இருக்கற நேஷன்ல்ங்கற எடத்துக்கு இட்லி, தோசை சாப்பிடறதுக்காக போவோம். 10 ரியால் இட்லி தோசைக்கு 15 ரியால் டாக்ஸி சார்ஜ் கொடுத்து போவோம்னா நாங்க எப்பிடி காய்ஞ்சு போய் கிடந்திருப்போம்னு கற்பனை பண்ணிகிடுங்க. அப்பிடியான ஓரு சுபயோக சுபதினத்தின் போது நான் திடீரென கூட்டத்தில் ஏண்டா , நாம சமைக்க ஆரம்பிச்சா என்ன்ன்னு நான் வாயை திறக்க சனி சரியாக என் நாக்கில் வந்து உக்காந்த்து. உடனே நான் என்ன சொன்னாலும் எதிர்வாதம் பண்ணுற ஓரு பய குறுக்க புகுந்து கெக்கே பிக்கேன்னு சிரிக்க ஆரம்பிக்க.. எனக்கு வந்த கோவத்துல என நாக்குல உக்காந்துருந்த சனி நல்லா சுகமா பாயை விரிச்சு படுத்துகிச்சு. இது என்னடா பெரிய விஷயம் அரிசியை கழுவி தண்ணி ஊத்தி அடுப்புல வச்சா சாதம்.. இதெல்லாம் ஓரு மேட்டரான்னு எதிர்பதிவு போட்டேன்.

அவனும் அசரலை வெறும் சோறை வச்சு என்ன பண்ணுவேன்னு கவுண்டர் பண்ணினான். தயிர்ல மஞ்ச பொடி போட்டு கொதிக்க வச்சா மோர் குழம்பு, பருப்ப அவிச்சு மிளகா பொடி மஞ்ச பொடி போட்டா சாம்பாருன்னு எதிர்த்து பேச சனி என நாக்குல உக்காந்து கும்மி அடிக்க ஆரம்பிச்சது. காய்ஞ்சு போய் கிடந்த மத்த பசங்க்ளெல்லாம் இதையெல்லாம் கேட்ட உடனே எல்லாரும் நீ ஏண்டா உனக்கு சமைக்க தெரியுற விஷயத்தை முன்னாடியே சொல்ல்லைன்னு சண்டைக்கு வர.. நானும் பதிலுக்கு நான் சமைச்சதில்லை ஆனா பக்கத்துல இருந்து பாத்துருக்கேன் சொல்ல என்னை ஆபத்பாந்தவனா பாக்க ஆரம்பிச்சாங்க. அப்புறமா அமைச்சரவையை கூட்டி மறுநாள் இருந்து சமைக்க ஆரம்பிக்கலாம். ஆளாளுக்கு நான் காய்கறி நறுக்கி தாரேன், நான் பாத்திரம் கழுவித்தாரேன்னு துறை பிரிக்க ஆரம்பிச்சாங்க. தேவையான எல்லா சாமான்கள் காய்கறிகள், பாத்திரங்கள் போன்றவற்றை வாங்கி மறுநாள் வெள்ளிகிழமையில் இருந்து ஆரம்பிக்கலாம் பெரிய கனவோட எல்லாரும் போய் படுத்து தூங்கினாங்க.


மறுநாள் அதிகாலை 12 மணிக்கு தூங்கிட்டு இருந்த என்னை ஓருத்தன் எழுப்பினான். என்னடான்னு கேட்ட்துக்கு சமைக்கணும்லன்னு சவுண்ட் விட்டான். ங்கொய்யால .. சவுண்டா விடுற போய பாத்திரத்த கழுவுடான்னு பயல அனுப்பி விட்டு சமையலுக்கான ஆயத்தங்களை பண்ண ஆரம்பித்தேன். என்ன பண்ணலாம்னு தீவிரமா ஆலோசனை பண்ணி சாம்பார் வைக்கலாம்னு முடிவெடுத்தோம். அதுக்குள்ள ஓருத்தன் அவன் பிரெண்டுக்கு போன் பண்ணி மச்சி எங்க ரூம்ல சமைக்க ஆரம்பிக்கிறோம்டா.. மதியம் சாப்பிட வந்துருன்னு சொன்னான். நானும் அடுப்ப பத்த வைச்சு பாத்திரத்தை மேல வைச்சு அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்குறதுக்குள்ள பாத்திரத்துல இருந்து குபீர்னு புகை வர ஆரம்பிச்சுது. இங்கயே மத்த எல்லாரும் கொஞ்சம் எதிர்பார்ப்பு குறைய ஆரம்பிச்சது. சமையல் முடிஞ்ச உடனே யாரு முகத்துலயும் ஈயாடலை. நாந்தான் எல்லாருக்கும் தைரியம் குடுத்து சாப்பிட உக்கார சொன்னேன். அதுக்குள்ள போன் பண்ணிய பிரெண்டு வந்து சாம்பார் சட்டிய பாத்துட்டு ரசம் சூப்பரா வந்திருக்கே கமெண்ட் குடுத்தான். ஏற்கனவே பீதியிலயே சாப்பிட உக்காந்திருந்த ரெண்டு பேரு தட்டை பின்னாடி எடுத்தாங்க. அவன் சும்மா அதோட விடாம சாம்பரை எடுத்து ஊத்திட்டு சாரி பாஸ் காரகொழம்பா நான் ரசம் நினைச்சு சொல்லிட்டேன்னு அடுத்த கமெண்டும் போட பீதில உக்காந்துருந்த ரெண்டு அப்பாவிங்க தட்டை கழுவிட்டு நாங்க இன்னைக்கு விரதம்னு சொல்லீட்டாங்க.

மறுநாளில் இருந்து என்னை பாத்திரம் கழுவுகிற டிபார்ட்மெண்ட்டுகு மாத்திட்டாங்க... எந்த நேரத்துல என்னை அந்த டிபார்ட்மெண்டுக்கு மாத்தினாங்கலோ நானும் இது வரைக்கும் ஆறு ரூம் மாறிட்டேன் வேற வேற ஆட்கள் ஆனா எல்லாரும் என்னை அதே டிபார்ட்மெண்டிலேயே வேலை செய்ய விடுறாங்க. வீட்டுல உக்காந்த இட்த்த விட்டு எந்திரிக்காம தட்டை கூட கழுவாம அம்மாவை திட்டின பாவம்தான் என்னை விரட்டி விரட்டி பழிவாங்குதுன்னு நினைக்குறேன்.

அதற்கப்பறம் லீவில் வீட்டுக்கு போகும் போது குத்தம் குறை சொல்லாம நான் சாப்பிட்ட்தை பார்த்து எங்கம்மாவே ஆச்சர்யப்பட்டாங்க..ஏன்னா அதுக்கு முன்னாடி அந்தளவுக்கு ஆட்டம் போட்ருக்கேன். தோசை சூடு ஆறிட்டுன்னா, சோறு லேசா குழைஞ்சிட்டுன்னா, தண்ணி எடுத்து வைக்கலைன்னா... சவுண்ட் கொடுத்தே டார்ச்சர் பண்ணிருக்கேன்.

இதெல்லாம் எதுக்கு ஞாபகம் வருதுன்னா இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு போறேன். இனி கொஞ்ச நாளுக்கு வீட்டு சாப்பாடு சந்தோசமா சாப்பிடலாம்.

டிஸ்கி:

கல்யாணம் ஆக போகுற வினோத், கிஷோர் மாதிர் ஆளுங்களெல்லாம் இதை பாத்து மெர்ச்ல்லாக வேண்டாம். கல்யாணம் ஆனபின் உங்களுக்கு நல்லா சமைக்க தெரிந்து விடும். டோண்ட் வொர்ரி... பி ஹேப்பி...

பதிவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

அதனால கொஞ்ச நாளுக்கு என்னாடா இது மொக்க பதிவு குறைஞ்சிட்டே... அனானி கமெண்ட் வரலையே நினைக்குறவங்களுக்கெல்லாம் நான் ஓண்ணே ஓண்ணு சொல்லிக்க ஆசை படுறேன்..
நான் ஊருக்கு போறேன்.. நான் ஊருக்கு போறேன்.. நான் ஊருக்கு போறேன்..

24 comments:

நாடோடி said...

//நானும் அடுப்ப பத்த வைச்சு பாத்திரத்தை மேல வைச்சு அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்குறதுக்குள்ள பாத்திரத்துல இருந்து குபீர்னு புகை வர ஆரம்பிச்சுது.///
சிரிப்பு தாங்க‌ல‌ த‌ல‌.... என‌க்கும் இந்த‌ அனுப‌வ‌ம் எல்லாம் ஊண்டு....

நாடோடி said...

ஊருக்கு ந‌ல்ல‌ ப‌டிய‌ போயிட்டு என்‌ஜாய் ப‌ண்ணிட்டு வாங்க‌ த‌ல‌... ஊர்ல‌ எவ்வ‌ள‌வு நாட்க‌ள் இருப்பீர்க‌ள்... மொபைல் நெம்ப‌‌ர் போன்ற‌ த‌க‌வ‌ல்க‌ளை என்னுடைய‌ மெயிலுக்கு சொல்லுங்க‌ த‌ல‌.. நானும் அடுத்த‌ மாத‌ம் ஊருக்கு வ‌ருவேன்..முடிஞ்சா பார்க்க‌லாம்.
amdbabu2010@gmail.com

ஜெய்லானி said...

நானும் கொஞ்ச நாள் அந்த டிப்பாட்மெண்ட்ல தான் இருந்தேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

வெளிநாட்டுல சமைக்கிறதுதான் ரொம்ப கஷ்டம். நானும் வந்தபுதுசுல எனக்கு சமைக்கத் தெரியாது. அப்புறம் நானா பார்த்து பார்த்து சமைக்க கத்துக்கிட்டேன். இப்போ ஏதோ சாப்பிட்டா நல்லாருக்குன்னு சொல்றஅளவுக்கு சமைக்கத்தெரியுது. சமையல் பெரிய கம்பசூத்திரமெல்லாம் கிடையாது. வீட்டுல சுகமா சாப்பிட்டிருந்த நமக்கு இங்கே எவ்வளவு அனுபவத்தை கொடுத்திருக்கு.

ஊருக்கு நல்லபடியா போயிட்டுவாங்க கண்ணா. லீவ நல்லா என்ஜாய் பண்ணுங்க.. அப்புறம் எத்தன மாசம் லீவு?.. போன் நம்பர் தெரியப்படுத்துங்க.. நாம் தொடர்பு கொள்ளலாம். அப்படியே பிரதாப் ஊருக்குபோனா பிரதாப்பை கேட்டதா சொல்லவும்.

வாழ்த்துக்கள் கண்ணா..

ஜெய்லானி said...

பயணம் சிறப்பா அமைய வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா said...

//அம்மாவை திட்டின பாவம்தான் என்னை விரட்டி விரட்டி பழிவாங்குதுன்னு//

அதேதான்!!

ஹுஸைனம்மா said...

//என்ன பண்ணலாம்னு யோசிக்குறதுக்குள்ள பாத்திரத்துல இருந்து குபீர்னு புகை வர ஆரம்பிச்சுது.//

அவ்ளோஓஓஓஓஒ நேரமா ’ஓ’சிச்சீங்க?

சைவகொத்துப்பரோட்டா said...

சமையல் அனுபவம் ஹா..........ஹா...........
உங்கள் விடுமுறை நாட்கள், மிக இனிதாய்
அமைய வாழ்த்துக்கள் கண்ணா.

ஹுஸைனம்மா said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
வெளிநாட்டுல சமைக்கிறதுதான் ரொம்ப கஷ்டம். ..இப்போ ஏதோ சாப்பிட்டா நல்லாருக்குன்னு சொல்றஅளவுக்கு சமைக்கத்தெரியுது. //

இவ்வளவையும் சொல்லிட்டு,

/சமையல் பெரிய கம்பசூத்திரமெல்லாம் கிடையாது.//

இதையும் சொல்றீங்க பாருங்க!!

ஆயில்யன் said...

//பக்கத்துல இருக்கற நேஷன்ல்ங்கற எடத்துக்கு இட்லி, தோசை சாப்பிடறதுக்காக போவோம். 10 ரியால் இட்லி தோசைக்கு//

இப்ப அங்க இருந்த கடையெல்லாம் சுத்தமா காலி செஞ்சுட்டாங்க பாஸ் :(

ஆனா வசந்த பவன் சரவணபவன் வந்திருச்சேய்ய்ய்ய் அங்கதான் தோசை இன்னபிற திங்கிற ஆசையெல்லாம் தீர்த்துக்கிடறோமாக்கும் :)


ஜாலியா என்ஜாயுங்க ! :))

சிநேகிதன் அக்பர் said...

//10 ரியால் இட்லி தோசைக்கு 15 ரியால் டாக்ஸி சார்ஜ் கொடுத்து போவோம்னா நாங்க எப்பிடி காய்ஞ்சு போய் கிடந்திருப்போம்னு கற்பனை பண்ணிகிடுங்க.//

கற்பனை என்ன பண்றது. நாங்களும் அனுபவிக்கிறோமே.

தல நல்ல படியாக போய் வாருங்கள். ஊரில் பிரதாப், துபாய் ராஜா பார்த்தால் நலம் விசாரித்ததாக சொல்லவும்.

கட்டடத்தொடரை பாதியிலேயே விட்டுட்டு போறது வருத்தமாயிருக்கு. பரவாயில்லை வந்து தொடருங்கள்.

எத்தனை மாசம் லீவு?

மின்மினி RS said...

ஊருக்கு நல்லபடியா போயிட்டுவாங்க கண்ணா.. வாழ்த்துகள்.

செ.சரவணக்குமார் said...

சமையல் அனுபவத்தை அருமையா எழுதியிருக்கீங்க. நல்லபடியா ஊருக்குப் போய்ட்டு வாங்க கண்ணா.

malar said...

பதிவு படித்து சிரிப்பு தாங்கல்ல ...

பாவம் சும்மா விடாது...தொறத்தும்லா

malar said...

சமையல் பெரிய கம்பசூத்திரமெல்லாம் கிடையாதாம்

அவரகூப்பிடுங்க சமைக்க தினம் நெய் சோறும் கறியும் தான்....

அப்துல்மாலிக் said...

Wish you happy journey

Unknown said...

விமான பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.விடுமுறையும் சிறப்பாக அமையட்டும்.

ஹரீகா said...

சமையலில் இவ்வளவு விவரணை அடங்கி இருக்கா. ஐயோ பாவம் என் அம்மாஆஆஆ. இனிமேல் தான் எனக்கும் இருக்கோ. திக் திக் திக்

Unknown said...

"வீட்டுல உக்காந்த இட்த்த விட்டு எந்திரிக்காம தட்டை கூட கழுவாம அம்மாவை திட்டின பாவம்தான் என்னை விரட்டி விரட்டி பழிவாங்குதுன்னு நினைக்குறேன்."

Super venkat.. same experience i have also...
wish you happy journey....

நிலாமதி said...

நல்ல படியா ஊருக்கு போயிடு வாங்க அம்மா கிட்ட சமத்தா கொஞ்சம் கத்துகிட்டு வாங்க பினாடி உதவும். அப்படியே ஒரு சமையல்காரியையும்..( ஆத்துக் காரி )கூட மாட ஒத்தாசைக்கு கூடி வாங்க

Chitra said...

அதற்கப்பறம் லீவில் வீட்டுக்கு போகும் போது குத்தம் குறை சொல்லாம நான் சாப்பிட்ட்தை பார்த்து எங்கம்மாவே ஆச்சர்யப்பட்டாங்க..ஏன்னா அதுக்கு முன்னாடி அந்தளவுக்கு ஆட்டம் போட்ருக்கேன். தோசை சூடு ஆறிட்டுன்னா, சோறு லேசா குழைஞ்சிட்டுன்னா, தண்ணி எடுத்து வைக்கலைன்னா... சவுண்ட் கொடுத்தே டார்ச்சர் பண்ணிருக்கேன்.

இதெல்லாம் எதுக்கு ஞாபகம் வருதுன்னா இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு போறேன். இனி கொஞ்ச நாளுக்கு வீட்டு சாப்பாடு சந்தோசமா சாப்பிடலாம்.



....... enjoy........ Have a safe and fun trip!

geethappriyan said...

கண்ணா வாழ்த்துக்கள்
நான் ஊருக்கு (sharjah
)வரபோறேன்.வரபோறேன்.வரபோறேன்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Superr Kanna.. Sema experience than pola irukku..

ok ok.. oorukku poyi nalla saapittu vittu vaanga.. :)

Jaleela said...

சரியான காமடி,சிரிப்பு சிரிப்பு,


நானும் பேச்சுலர்கள் சமைக்கும் போதுசமையலில் எல் கேஜி யில் உள்ளவர்களை , பாத்திரம் தேய்க்கும் டிபாட்மெண்டுக்கும், கிலீனிங் டிபாட்மெண்டுக்கும் தான் போடுவாங்க, ஹிஹி


அம்மாவை பிரிந்து வாழ்ந்து விட்டு மறுபடி போய் அவர்கள் கையால் வெரும் ரசம்சாதம் சாப்பிட்டாலும் பேச்சுலர்களுக்கு தேவாமிர்தமாக இருக்கும்.