Monday, April 19, 2010

வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் “லாரி பேக்கர் தொழில்நுட்பம்” - 02

வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் லாரி பேக்கர் தொழில்நுட்பம்தொடரின் இதற்கு முந்தைய  பகுதியை படிக்காதவர்கள் இந்த சுட்டியில் பார்த்துக் கொள்ளலாம்

இன்றைக்கு வீடு கட்டும் செலவில் மிக அதிகமான செலவை உறிஞ்சகூடியதும் கட்டிடத்தின் மிக முக்கியமான கூரை அமைப்பை பற்றி லாரி பேக்கரின் தொழில்நுட்பத்தை இந்த பதிவிற்கு எடுத்து கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கு ஓன்று தெரியுமா? நாம் இப்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் ரூப் ஸ்லாப் காங்கிரீட் முறைதான் அதிக ஸெல்ப் வெய்ட் கொண்ட முறை. அதாவது அதிக எடை கொண்ட கூரையை வடிவமைத்து அந்த எடையை தாங்கும் அளவிற்கு சுவர்கள் மற்றும் அஸ்திவாரத்தின் வடிமைப்பதின் மூலம் கட்டிடத்தின் செலவுகளை நாமாகவே கூட்டி கொண்டிருக்கிறோம். நான் சில கட்டிடத்தில் பழைய மெட்ராஸ் டெர்ரஸ் ரூப் ஐ இடித்து காங்கிரீட் ஸ்லாப் மாற்றும் வேலைகளை பார்த்திருக்கிறேன். அவ்வளவு உறுதி வாய்ந்த கூரையை இடிப்பதே கஷ்டமான வேலை. மேலும் அதில் உள்ள பொருள்கள் பலவும் வீணாகாமல் ரீயூஸ் செய்யமாறும் இருக்கும் (உதா.) உத்திரகட்டைகள், செங்கல், சுண்ணாம்பு. சொல்லப்போனால் 20% பொருள்கள் வேண்டுமானால் வீணாகும். ரீயூஸிங் மெட்டிரியல் (Reusing Material)  இன்றைய சுற்றுசூழலுக்கு உகந்த கட்டிடங்களின் முதல் கோட்பாடு. நமது பழமையான கட்டிட முறைகளில் எப்படி பொருந்தி வருகிறது என்பதை நினைத்தால் நம் மூதாதையர்களின் மீது பெருமதிப்பும், அதையெல்லாம் நாகரீக பூச்சால் மறைத்துவிடுகிற நம் தலைமுறையின் மீது கோபமும் ஓரு சேர வருகிறது. இப்ப கூட பாருங்க சொல்ல வந்த விஷயத்த விட்டு ஆதங்கம் வேறு எங்கெங்கோ செல்கிறது.

லாரி பேக்கரின் ஃபில்லர் ஸ்லாப் (Filler Slab) முறையில் எடை குறைந்த பொருள்களை கம்பிகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் கூரையின் ஸெல்ப் வெயிட்டை குறைக்கலாம். இதற்காக இவர் பரிந்துரைப்பது மங்களூர் ஓடுகள். இரண்டு மங்களூர் ஓடுகளை படத்தில் குறிப்பிட்ட அமைப்பில் கம்பிகளுக்கு இடையில் வைப்பதின் மூலம் கூரையின் எடையை 30% வரை குறைக்கமுடியும் என லாரி பேக்கர் கூறுகிறார்.

Filler  Slab

இதை படித்தவுடன் எனக்கு இது குறித்து எனக்கு சந்தேகம் இருந்த்து. இந்த ஓடுகளின் மேல் காங்கிரீட் விழும் போது அந்த காங்கிரீட்டின் எடைகளை ஓடுகள் தாங்குமா என்ற சந்தேகம்தான். இது குறித்து எனது பொறியியல் கல்லூரி விரிவுரையாளரிடம் கேட்ட போது அவர் சொன்னார் ”That is the power of arc shape”அதாவது ஆர்க் அமைப்பில் சாதாரண அமைப்பை விட அதிக எடையை தாங்கும் என்பது ஸ்டரக்சுரல் அடிப்படை என்பதுதான் அவரின் அந்த வார்த்தைக்கு அர்த்தம். அதை நுட்பமாக தனது ஃபில்லர் ஸ்லாப் முறையில் இணைத்த லாரி பேக்கரின் திறமையை வியக்காமல் இருக்க முடிய வில்லை.

இந்த முறைப்படி கம்பிகளுக்கு இடையே 30 x 50 cm அளவில் இடைவெளி இருக்க வேண்டும். அந்த இடைவெளியில் இரண்டு மங்களூர் ஓடுகளை ஃபில்லராக பயன்படுத்த வேண்டும். பின்னர் இதன் மேல காங்கிரீட் போட வேண்டும். இதன் மூலம் காங்கிரீட்டின் அளவு குறைவதோடு, கட்டிடத்திற்கு குளுமையும் கிடைக்கிறது. இந்த கூரை அமைப்பில் வழக்கமாக கூரையின் மேல் போடப்படும் வெதரிங்கோர்ஸும் குறைந்த அளவே தேவைப்படும்.
ஃபில்லர் ஸ்லாப் படி அமைக்கப்பட்ட வீட்டின் உட் புற தோற்றம்


இந்த தொடர்களில் பலரும் கேட்கும் சந்தேகம் இப்பிடி கட்டிய வீடுகள் உறுதியானதாக இருக்குமா என்பதும் பார்ப்பதற்கு அழகாக இருக்குமா என்பதும் முக்கிய கேள்விகளாக உள்ளது. அதற்காக அவர் கட்டிய சில கட்டிட போட்டோக்களை இங்கு இணைத்துள்ளேன். மேலும் புகைப்படங்கள் லாரிபேக்கரின் தளத்தில் உள்ளது.

48 comments:

கண்ணா.. said...

நண்பர் மீனாட்சி சுந்தரம் அவர்களும் லாரி பேக்கரின் பார்வை குறித்து ஒரு அருமையான தொடர் எழுத ஆரம்பித்திருக்கிறார்இந்த சுட்டியில்அதையும் பார்த்து உங்கள் கருத்தை தெரிவித்தால் நல்ல ஊக்கம் கிடைக்கும்

Chitra said...

I heard about him through my husband. One of Solomon's favorite architects.

Thank you for the nice photos and info. . :-)

வடுவூர் குமார் said...

க‌ண்ணா
இதிலும் ஒரு ச‌ந்தேக‌ம்....
கூரையின் க‌ம்பி 50x30 அள‌வில் செவ்வ‌க‌மாக‌ காண்பித்து அத‌ன் ந‌டுவில் ம‌ங்க‌ளூர் ஓடுக‌ளை பொருத்த‌ச்சொல்கிறார்.இவ்வ‌ள‌வு பெரிய‌ ஸ்பேசிங் க‌ம்பி கூரைக்கு ஒத்து வ‌ருமா? ந‌ம்மூரில் வீடுக‌ளுக்கு போடும் கூரையில் கூட‌ 20க்கு 20 அல்ல‌து 15க்கு 15 சி.மீட்ட‌ர் என்ற‌ அள‌வில் தான் போட்டுவ‌ருகிறார்க‌ள்.அவ‌ர் சொன்ன‌ அள‌வில் போட்டா ச‌ப்போர்ட் அருக‌ருகே வ‌ருமா?நிறைய‌ ச‌ந்தேக‌ம் வ‌ருது.
நில‌ந‌டுக்க‌ம் ஏற்ப‌டும் இட‌ங்க‌ளுக்கு இம்முறை ஒத்துவ‌ராது என்று நினைக்கிறேன்.

கண்ணா.. said...

@Chitra

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. சாலமன் அண்ணனுக்கும் இவரை பிடிக்குமா.. கேட்க சந்தோஷமாய் இருக்கிறது

கண்ணா.. said...

@வடுவூர் குமார்

வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

இவர் இதே முறையில் பலமாடி கட்டிடங்களை கட்டியிருக்கிறார். இதில் உள்ள ஓரு சிறிய குறைபாடு என்னவென்றால் மாடியில் ரூம் கட்டும் போது கீழே சுவர் இருக்கும் இடத்தையே மாடியிலும் சுவர் கட்ட வேண்டியிருக்கும்.

இது zone 3 நிலநடுக்க ஏரியாவில் இது ஓத்து வரும். தமிழ்நாட்டில் பெரும்பாலான ஏரியா zone 3யில் தான் வருகிறது.

இவருடைய முகவரி

www.lauiebaker.net ல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கின்றன. படித்து பாருங்கள்

அக்பர் said...

வேண்டுகோளை ஏற்று தொடர்ந்ததற்கு மிக்க நன்றி கண்ணா.

நீங்கள் கூறும் ஒவ்வொரு விசயங்களும் வியக்கதக்க அளவில் உபயோகமாக உள்ளது. இன்னும் விரிவாக எழுதுங்கள். வாசிக்க ஆவலுடன் இருக்கிறோம்.

கண்ணா.. said...

@அக்பர்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அக்பர்.

ஆமாம் நீங்க ஞாபகப்படுத்தியதால்தான் இந்த பதிவு உடனே வந்தது. அதற்கு ஸ்பெஷல் நன்றிகள் உங்களுக்கு

:))

மோகன் குமார் said...

ரொம்ப நல்ல பதிவு நண்பா; உங்கள் வலை தளம் இன்று தான் கண்டேன். தமிழ் மணத்தில் இணைத்துலீர்களா?

அமுதா கிருஷ்ணா said...

அருமையான பதிவு..வீடு கட்ட போகும் எனக்கு தொடர்ந்து படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது..

நாடோடி said...

ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ள் தல... வீடுக‌ட்டுவ‌தில் இவ்வ‌ள‌வு இருக்கா?..... தொட‌ருங்க‌ள்

சைவகொத்துப்பரோட்டா said...

எளிமையான விளக்கங்கள்,
அருமை கண்ணா.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்லா தெரிந்து கொண்டோம் லாரிபேக்கர் தொழில்நுட்பம் பத்தி.. இன்னும் நிறைய தெரிஞ்சிக்க ஆவல்.. தொடருங்கள் கண்ணா..

செந்தழல் ரவி said...

இந்த மாதிரி மற்ற துறைகளில் இருப்பவர்கள் தங்களது துறை பற்றி பிரிச்சு மேய்ஞ்சா தானே நாங்களும் பல விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியும்..

நன்றி கண்ணா....

ஹுஸைனம்மா said...

ஊரில் வெயில் கொளுத்துவதாகவும், கரண்ட் கட் வேறு பாடாய்ப் படுத்துபதாகவும் சொல்கின்றனர். இதற்காகவே இம்முறையில் ஒரு வீடு கட்ட வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது.

சுவாரசியாமாக இருக்கீறது. தொடருங்கள்.

ஹுஸைனம்மா said...

//”That is the power of arc shape”//

உண்மை, பழங்காலக் கட்டிடங்கள் மற்றும் இரானிய, முகலாயக் கட்டிடக் கலையில் ஆர்ச் வளைவுகளுக்கு முக்கிய பங்குண்டு!!

ஹுஸைனம்மா said...

கடந்த இடுகையைப் போலவே, இந்த இடுகையிலும் நண்பர்களின் டெக்னிக்கல் சந்தேக/ விளக்கங்களைக் காண ஆர்வமாய் இருக்கிறேன்.

infopediaonlinehere.blogspot.com said...

this is an interesting article...interesting to see blogs on civil work...good job

மீனாட்சி சுந்தரம் said...

அன்பு நண்பர் கண்ணா,

முதலில் என் கட்டுரையை உங்கள் பின்னூட்டத்தில் இணைத்ததற்கு மிக்க நன்றி.

Filler Slab பற்றி மிக எளிமையாக விளக்கி இருக்கிறீர்கள். உலக வெப்பமயமாவதற்கு இந்த கான்கரிட் ஒரு முக்கிய காரணம். பேக்கர் எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து உபயோகித்தார்.

Filler Slab இல் இன்னொரு தொழில் நுட்பமும் அடங்கி இருக்கிறது. கான்கரிட் நல்ல அழுந்து சக்தி (Compressive Force) தாங்கக் கூடியது ஆனால் அதற்க்கு இழு சக்தி (Tensile Force) தாங்கக் கூடிய தன்மை கிடையாது அதனால் தான் இழு சக்தி தாங்குவதற்கு இரும்புக் கம்பி உபயோகிக்கிறோம். கான்கரிட் சிலாபில் மேல் பாதி அழுத்தமும் கீழ் பாதி இழுவையும் ஏற்படுகிறது அதனால் கீழ் பாதியில் இரும்பை பாதுகாக்கும் அளவு கான்கரிட் இருந்தால் போதும் மீதம் எல்லாம் கண்ணா சொன்னது மாதிரி வெறும் சுமையே. ஓடு தவிர கொட்டாங்குச்சி, அரை மண்சட்டி போன்றவற்றையும் சிலர் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். தொடருங்கள் கண்ணா வாழ்த்துக்கள்.

ஆங்கில வழிக் கல்வி கற்றதால் தமிழில் தொழில்நுட்பக் கலைச் சொற்கள் தெரியவில்லை. தவறு இருந்தால் நண்பர்கள் திருத்தவும்).

துபாய் ராஜா said...

அழகான படங்களோடு அருமையான விளக்கங்கள்.தொடருங்கள். தொடர்கிறோம்.

கண்ணா, வெகுநாட்களாக ஒரு சந்தேகம்.எனக்கு தெரிந்து நமது ஊரில் சிமெண்டுடன் ஆற்றுமணல் மட்டுமே கலந்து வீடுகளும், கட்டடங்களும் கட்டப்படுகின்றன. ஆனால் பாலைவனநாடுகளில் ஆற்றுமணல் கிடையாது அல்லவா... அவர்கள் பாலைவன மணலைத்தானே உபயோகித்து பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டுகிறார்கள். நமது நாட்டிலும் ஒன்றுக்கும் உதவாத பாலைவனமணலை உபயோகப்படுத்த தொடங்கினால் ஆற்றுப்படுகைகள் சுரண்டப்படுவது குறையும் அல்லவா..

தனிப்பதிவிலோ, மறுமொழியிலோ விளக்கம் எதிர்பார்த்து....

அன்புடன் மலிக்கா said...

கண்ணா அசத்துறீங்க தொழில் நுட்ப்பத்தில்.

நேரம்கிடைக்கும்போது இதையும் பாருங்க..

http://fmalikka.blogspot.com

இனிய பாதையில்..

கண்ணா.. said...

@மீனாட்சி சுந்தரம்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

உங்கள் தள சுட்டியை பதிவிலேயே இணைக்க நினைத்திருந்தேன். ஆனால் ப்ளாக்கர் எரர்லில் முடியவில்லை. அதனால்தான் பின்னூட்டத்தில் இணைத்தேன்.

உங்கள் விளக்கமும் அருமை. நான் பொதுவாக என்னால் முடிந்த அளவு எளிமை படுத்த முயற்ச்சிப்பேன். ஏனெனில் துறை சாராத மற்றவர்களுக்கும் அது போய் சேர வேண்டும் என்ற எண்ணம்தான். இன்னும் கூட சுவாரஸ்ய எழுத்து நடை அமையவில்லையே என கவலைபட்டு கொண்டிருக்கிறேன். அவைகள்தான் இன்னும் பலருக்கு படிக்க எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

நான் உங்களை ஆர்க்கிடெக்ட் என நினைத்து கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் ஸ்டரக்சுரல் விஷயங்களையும் தெளிவாக கூறுகிறீர்களே..!!

comp. force, tensile forec போன்றவற்றை தமிழ் படுத்த முயற்சித்தால்தான் படிக்க கடினமாக இருக்கும். அப்படியே எழுதினால் எழுத்து போக்கில் அதை புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன். நீங்கள் கூறியதில் ஓன்றும் தவறு இல்லை. தொடர்ந்து இது போன்று விவாதித்து விவாதத்தை ஆக்கபூர்வமாக மாற்றுங்கள்

நன்றி

கண்ணா.. said...

@மோகன் குமார்

வாங்க முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாங்க

:)

கண்ணா.. said...

@அமுதா கிருஷ்ணா

வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

சுட்டி கொடுத்துள்ள லாரி பேக்கரின் தளத்தில் நிறைய தகவல்கள் இருக்கின்றன. அதையும் பாருங்கள். உபயோகமாய் இருக்கும்.

கண்ணா.. said...

@நாடோடி

வாங்க ஸ்டீபன் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

@சைவகொத்துப்பரோட்டா

வாங்க நண்பா, தொடர் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி

கண்ணா.. said...

@Starjan ( ஸ்டார்ஜன் )

வாங்க நண்பா, தொடர் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி

கண்ணா.. said...

@செந்தழல் ரவி

வாங்க ரவி, முடிந்ததை முயற்ச்சிக்கிறோம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

@ஹுஸைனம்மா

ஆஹா...மூணு கமெண்டா...நல்லாயிருங்க.. :))

ஆம். ஆர்ச் அமைப்புகளுக்கு அவ்வளவு மதிப்பு. என் விரிவுரையாளர் சொன்ன எளிய உதாரணம் முட்டையை நேராக வைத்து ஆர்ச் அமைப்பில் உடைத்து பார்க்க சொன்னார். முயற்சி பண்ணி பாருங்கள் :))

கண்ணா.. said...

@துபாய் ராஜா

வாங்க ராஜா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

மணல் விஷயத்தில் மாற்று கொண்டு வரவேண்டியது அவசியம்தான்.

மணலின் முக்கிய உபயோகமே சிமெண்டுடன் எளிதல் கலந்து கலவை/Binding material ஆக மட்டுமே உபயோகப்படுகிறது. இதன் குவாலிட்டி ஸ்டாண்டர் உள்ள பொருள்களை மாற்றாக பயன்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் டிரான்ஸ்போர்டேஷன் செலவிற்காகத்தான் அருகாமையில் கிடைக்கும் பொருள்களை வைத்து நுட்பத்தை வளர்த்து வருகிறார்கள். ஆனாலும் ஆற்றுபடுகைகள் அதிகளவில் சுரண்டபடுவதால் இது குறித்தும் மாற்று யோசிக்க படவேண்டும்

கண்ணா.. said...

@அன்புடன் மலிக்கா

வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. கண்டிப்பா வந்து பார்க்கிறேன். இதோ வந்துகிட்டே இருக்கேன்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

நண்பர் கண்ணா
நான் வீடு கட்டினால் இப்படித்தான் ஃபில்லர் ச்லாபும்,எக்ஸ்போஸ்டு ப்ரிக் மேசன்ரியும்,ராட் டராப் பாண்டும் வைத்து கட்ட நினைத்துள்ளேன்.
நல்ல அருமையான பணி,உங்களுக்கும் மீனாட்சி சுந்தரத்திற்கும் வாழ்த்துக்கள்.
==========
இங்கு சென்னையில் தெருவுக்கு பத்து கட்டிட வேலையாவது நடக்கிறது,ஆனாலும் யாரும் செலவை குறைக்கும் இந்த வழியை பின்பற்றாதது வருத்தமே.இதை முன் மாதிரியாக என் வீட்டில் செய்து அதை வைத்துவிழிப்புணர்வு செய்யலாம் என நினைக்கிறேன்.நம்மைப்போன்ற கட்டிடக்கலையில் இருப்பவர்கள் ஒன்று திரள வேண்டும்.கலவை போட,கட்டுவேலை போட கவுரவம் பார்க்க கூடாது,அப்போது தான் ஒரு பெர்ஃபெக்ட் டீமிற்கு பயிற்சி அளிக்க முடியும்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

@வடுவூர் குமார்,
கம்பி கட்டும்போது
ஓடு வரும் இடங்களில் மட்டும் கம்பி ஸ்பேஸிங் 30x50வைத்து கட்டலாம்.என எண்ணியுள்ளேன்.இதே முறையில் லாரிபேக்கர் 3தளங்கள் வரை செய்துள்ளார்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

@துபாய்ராஜா
பாலைவனத்து மணலில் சிலிக்கா இருப்பதால் அதை கட்டுமானத்துக்கோ ரெடிமிக்ஸுக்கோ பயன்படுத்துவதில்லை.

மிக தொலைவிலிருந்து கொண்டுவரப்படும் மலை மண்ணையோ ஆற்று மண்ணையோ தான் பயன்படுத்துகின்றனர்.

ராஜ நடராஜன் said...

கவர்ந்த தலைப்பால் ஓடிவந்தா....
அட!நம்ம தல.

ரவுண்டு விட்டுட்டு பின்னூட்டத்துக்கு வருகிறேன்.

ராஜ நடராஜன் said...

ஆஹா!ஆககபூர்வமான தொழில் நுட்ப செய்திகள்.கூட வடூவூர் குமார் மத்தளமும் இடுகைக்கு அழகு.வாழ்த்துக்கள்.

கண்ணா.. said...

@கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

வாஙக தல.. ஆக்கபூர்வமான பின்னூட்டத்திற்கு நன்றி

திருநெல்வேலியில் என் நண்பன் ஃபில்லர் ஸ்லாப் முறையில் தான் அவனுடைய வீட்டை கட்டி இருக்கிறான். சொல்லப்போனால் அவன் மூலமாகத்தான் லாரி பேக்கர் குறித்த அறிமுகம் கிடைத்தது.


இந்த வெயிலுக்கு வீட்டினுள் இதமாக இருக்கிறதாம். இப்படி ஓரு சூழ்நிலைக்கு உகந்த கட்டிட தொழில் நுட்பத்தை நாம் மறந்து கொண்டிருப்பது அல்லது பயன்படுத்தாமல் இருப்பது வருந்தக்கூடிய விஷயம்.

அடுத்தமாதம் லீவில் ஊருக்கு செல்லும்போது நண்பனுடைய வீட்டையும் புகைப்படம் எடுத்து போடுகிறேன்.

துபாய் ராஜாவுக்கு நீங்கள் சொன்ன பதிலில் நானும் சில விஷயங்கள் தெரிந்து கொண்டேன்

நன்றி தல

கண்ணா.. said...

@ராஜ நடராஜன்

வாங்க நண்பா, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

வடுவூர் குமார் மட்டுமல்ல... நண்பர்கள் கார்த்திகேயன், மீனாட்சி சுந்தரம் போன்றவர்களும் தொழில் நுட்பமாக விவாதிப்பதிலும் விளக்கங்கள் கொடுப்பதிலும் சிறந்தவர்கள்.

பிரபு . எம் said...

ஹாய் கண்ணா...

கலக்குறீங்க...
லாரி பேக்கர் யாருன்னே போன பதிவுல தான் எனக்குத் தெரியும்...
என் தங்கை சிவில் ஸ்டூடண்ட்.... உங்க பதிவுக்கு இப்போ வாசகி ஆகிட்டாங்க :)
ரொம்ப நல்லா எழுதுறீங்க பாஸ்.... கண்டினியூ!! :)

மீனாட்சி சுந்தரம் said...

நண்பர் கண்ணா!

நான் கல்லூரியில் படிக்கும் போது (Mechanics and Structures) பாடம் சிவில் துறையில் இருந்து ஒரு ஆசிரியர் வந்து எடுப்பார். அவரைப் பார்த்தாலே பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிவிடுவோம். யுஎஸ் வந்த பிறகு ஒரு கடினமான "Structures" பரீட்சை பாஸ் செய்தால் தான் ஆர்கிடெக்ட் லைசென்ஸ் தரப்படும் என்று சொல்லிவிட்டார்கள். மரியோ சல்வதொரி என்கிற பொறியாளர் பள்ளி மாணவர்களுக்கு புரியும்படியான ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் அதை படித்ததும் பல Structural நுட்பங்கள் புரிந்தது. ஆனால் Calculations எல்லாம் நீங்கள் (Structural Engineer) தான் போடணும் :)

புத்தகத்தின் இணைப்பு இங்கே:
http://www.amazon.com/Why-Buildings-Stand-Up-Architecture/dp/0393306763/ref=sr_1_2?ie=UTF8&s=books&qid=1271786188&sr=1-2

மீனாட்சி சுந்தரம் said...

நண்பர் கார்த்திகேயன்!
மிக்க மகிழ்ச்சி, நீங்கள் பேக்கரின் பாணி வீடு கட்டுவதற்கு என் வாழ்த்துக்கள். உங்களை மாதிரி துறையில் இருப்பவர்கள் பல பேர் முன் வந்தால் தான் நம்மால் ஒரு சிறு மாற்றமாவது கொண்டுவரமுடியும். என் வாழ்வின் லட்சியமும் மரபார்ந்த மற்றும் பேக்கர் பாணி கட்டிடங்கள் உருவாகுவது தான்.

இங்கே பல நண்பர்களின் கேள்வி இம்முறைக் கட்டுமானம் வலுவானதாக இருக்குமா என்பது தான். பேக்கரின் பெரும்பாலான தொழில் நுட்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் முறையாக சோதனை செய்து உறுதி செயப்பட்டுள்ளது.

கண்ணா.. said...

@பிரபு . எம்

வாங்க நண்பா, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

உங்கள் தங்கையும் சிவில் துறையா மிக்க மகிழ்ச்சி...

லாரி பேக்கரின் தளத்திற்கும், நண்பர் மீனாட்சி சுந்தரத்தின் தளத்திற்கும் சுட்டி கொடுத்திருக்கிறேன். பார்க்க சொல்லுங்கள். சுவாரஸ்யமாய் இருக்கும். நிறைய தகவல்களும் தெரிந்து கொள்ளலாம்

கண்ணா.. said...

@மீனாட்சி சுந்தரம்

மீள் வருகைக்கும் புத்தக லிங்க்கிற்கும் நன்றி நண்பா :))

malar said...

இந்த பதிவை இன்று தான் பார்தேன் .
நல்ல பதிவு..இந்த மாதிரி வீடுகள் கட்டும் போது மாடி வைதால் ஃப்வுண்டேசன் தங்குமா?அதே சுவர்களுக்கு மேல் எழுப்பினாலும்?

உங்கள் பதிவில் ஓட்டுபட்டை இல்லை.

ஹுஸைனம்மா said...

கண்ணா, இன்று கண்ட இந்தத் தகவல் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

Sustainable construction scheme - first eco-villa in the country

ஹுஸைனம்மா said...

One more link:

Demolished buildings turned into new roads

1 said...

hello sir this is sundar i need your help regarding house buildind can u send ur e mail id and phone number please my email id is v_sundar85@yahoo.co.in

1 said...

hello sir this is sundar i need your help regarding house buildind can u send ur e mail id and phone number please my email id is v_sundar85@yahoo.co.in

1 said...

hello sir this is sundar i need your help regarding house buildind can u send ur e mail id and phone number please my email id is v_sundar85@yahoo.co.in