Wednesday, April 21, 2010

என் கதைக்கு மொக்கை என பெயர் வை

சிறு வயதில் கதை கேட்ட அனுபவததை பகிர சொல்லி தொடர் பதிவுக்கு அழைத்த அண்ணன் ஸ்டார்ஜனுக்கு நன்றி.

இப்பிடி ஓரு மொக்கையை வாழ்நாளில் படிச்சதில்லைன்னு நறநறன்னு உங்களுக்கு கோவம் வந்துச்சுன்னா.. அப்பிடியே மனசுக்குள்ள வைச்சுருக்காதீங்க அது உடம்புக்கு நல்லதில்ல. நான் இதுக்கு காரணமில்லை. அதனால இதுக்கு காரணமான ஸ்டார்ஜனை திட்டி உங்க கோவத்த தணிச்சுகிடுங்க. :) 


எப்பவுமே கொலை பண்ணியவனை விட அதுக்கு காரணமாக இருந்தவர்தான் அதிக தண்டனைக்குரியவர்னு இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்லுது


--------

திருநெல்வேலி டவுணில் வளவும் வளவு சார்ந்த இடத்தில்தான் என்னுடைய ஆரம்பகாலங்கள். சின்ன பசங்க ஒரு பத்து பேருக்கு மேல இருப்போம். காலையில் பக்கத்துல இருக்கற புளியந்தோப்புக்கு போனோம்னா மதியம் சாப்பிட வீட்டுல கம்போட வந்து அடிச்சு இழுத்துட்டு போனாத்தான் உண்டு. ஆனா இருட்டின உடனே வளவோட இருக்கற திண்ணைல உக்காந்து பக்கத்துவீட்டு அக்கா, ஆச்சியெல்லாம் சொல்லுற கதை கேக்குற அனுபவம் ஓரு அற்புதமான விஷயம். அந்த வளவு, அந்த திண்ணை, பகிர்ந்து சாப்பிடும் சாப்பாடு, அங்க கேக்குற கதை, இதையெல்லாம் நினைக்கும் போது இன்னொரு தடவை அந்த காலமெல்லாம் திரும்பி வாராதான்னு இருக்கு.

அதுல சுந்தர் ஆச்சின்னு ஓருத்தங்க சொல்லுற கதைக்கு நாங்கெல்லாம் பயங்கர பேன். அவங்க ஓரு ஊர்ல ஒரு பெரிய்ய்யய… ராஜான்னு ஆரம்பிச்சா அவரோட பிரம்மாண்டம் எங்க எல்லாரோட கற்பனையிலும் விரிய ஆரம்பிக்கிற அளவுக்கு இருக்கும் அவங்களோட கதை சொல்லும் திறன். சொல்லப்போனால் அவங்ககிட்ட கதை கேக்குறதுக்குகாகவே சாயங்காலங்களில் திண்ணைகளில் கூடுவதை வழக்கமாகவே வைத்திருந்தோம். அப்பிடி ஓரு பெளர்ணமி நாளில் நிலவை காட்டி அங்க ஓரு பாட்டி காலை நீட்டி உக்காந்து வடை சுட்டுகிட்டு இருக்கான்னு (பாருங்க எவ்ளோ புத்திசாலின்னு, பாட்டி வடை சுட்ட கதை லொகேஷனை நிலாவில் வைச்சுட்டாங்க) சொன்னதை கேட்டு நிலவை பார்த்தால் அந்த பாட்டி உருவம் அப்பிடியே தெரிய ஆரம்பித்தது. அப்புறம் ஓவ்வொரு பெளர்ணமியிலும் நிலவை பார்க்கும் போதும் எனக்கு சுந்தர் ஆச்சிதான் நினைவுக்கு வருவார்கள்.
பின்னாட்களில் பள்ளியில் ஆர்ம்ஸ்டார்ங்தான் நிலவுக்கு முதலில் போனவர்னு படிக்கும்போது அவரு அந்த பாட்டிய பாத்திருப்பாரோ, பாட்டி அப்பவாச்சும் நீட்டிய காலை மடக்கியிருக்குமா என பலவாறு எனக்கு யோசனைகள் விரிய தொடங்கின. அதுவும் அவர்கள் சொன்ன மூணு கண்ணன் கதை எங்களில் பலபேரை ரொம்ப நாள்கள் பயத்தில் வைத்திருந்தன.


--------------
அந்த ஆச்சி பல கதைகள் சொல்லியிருந்தாலும் எனக்கு மறக்காம இருக்கற ஓரு கதையை மட்டும் இந்த தொடர் பதிவுக்கு எடுத்து கொள்கிறேன்.

ஓரு பெரிய்ய்ய்ய காடு அதில மரமெல்லாம் அடர்த்தியா இருக்கும். கொஞ்சம் கூட வெளிச்சமே உள்ள வராத அளவுக்கு நெருக்கமான மரங்கள் நிறைஞ்ச காடு அது.

ம்ம் (அங்கங்க மானே தேனேன்னு போடுற மாதிரி ம்ம் கொட்டுறது நாங்கதான். நீங்களும் ம்ம் கொட்டிகிட்டே படிங்க )

அந்த காட்டுல ஓரு புறா இருந்துச்சு. அது சாப்பிடுறதுக்காக காடு முழுதும் சுத்தி மரத்தில உள்ள பழங்களையெல்லாம் சாப்பிட்டு தண்ணி குடிக்கறதுக்காக ஓரு ஆத்தங்கரைக்கு வந்திச்சு.

ம்ம்


அப்போ ஆத்துல ஓரு எறும்பு தண்ணில தத்தளிச்சுட்டு இருந்த்தை பார்த்து மரத்தில உள்ள ஓரு இலையை எடுத்து அந்த எறும்பு பக்கத்துல போட்டுச்சு. எறும்பும் அதுல ஏறி உயிர் பிழைச்சதாம்.

ம்ம்அப்புறம் கொஞ்சநாள் கழிச்சு ஓரு வேடன் வேட்டைக்கு காட்டுக்கு வந்தான். அவன் மரத்து மேல உக்காந்து இருக்கற புறாவை பார்த்தது சத்தம் போடாமல் மெதுவா அம்பை எடுத்து வில்லில் பூட்டி குறிபார்த்தான்.


அச்சச்சோ….


அவன் அந்த புறாவை அடிக்க போற சமயத்தில் அங்க வந்த எறும்பு அவன் காலை ‘நறுக்குன்னு’ கடிச்சு வைக்க அவன் குறி தப்பி புறா உயிர் பிழைச்சிட்டாம்.

அய்யா :)

அவ்ளோதான் முடிஞ்சுது
39 comments:

Chitra said...

அந்த எறும்பு, இப்போ எங்கே? வந்து கண்ணா காலை நறுக்குனு கடி. அப்போ நாங்க உயிர் பிழைத்திடுவோம் !!!

நாடோடி said...

ந‌ல்ல‌ பில்ட‌ப்பு த‌ல‌.... எப்ப‌டியோ தொட‌ர்ப‌திவை முடிச்சாச்சி......ய‌ப்பாஆஆஆ

☀நான் ஆதவன்☀ said...

கண்டிப்பா மொக்கை தான் இது :)

☀நான் ஆதவன்☀ said...

மரண மொக்கைன்னு கூட வச்சுக்கலாம் போலயே தல :))

சைவகொத்துப்பரோட்டா said...

டைட்டில மாத்துங்க தல, சுந்தர் ஆச்சி
கோவிச்சிக்கிட போறாங்க :))

கண்ணா.. said...

@Chitra

எங்க பிட்டை எங்ககிட்டயே திருப்பி போட்டீங்களே...


வருகைக்கும், கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

@நாடோடி

தல இதுக்கே அசந்தா எப்பூடிடி..???!!

இன்னொரு தொடர்பதிவு வேற பெண்டிங்க்ல இருக்கு..... நாளைக்கு ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன்... நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே..... உங்களெல்லாம் பாத்தா பாவமா இருக்கு :)))))))

கண்ணா.. said...

@☀நான் ஆதவன்☀

வாங்க சூர்யா...வந்து கமெண்ட் போட சொன்னா பயபுள்ள சர்டிபிகேட் கொடுத்துட்டு போகுது..... :)))

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தல

கண்ணா.. said...

@சைவகொத்துப்பரோட்டா

வாங்க பாஸ்.. டைட்டிலை மாத்துனா இங்க நிறைய பேரு கொந்தளிச்சுருவாய்ங்களே... அதான் தல பயமாயிருக்கு

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தல

சசிகுமார் said...

எப்படி அப்பு இப்படி கலக்குறீங்க நல்ல திரைக்கதை எழுதி இருக்கீங்க கண்ணா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

A.சிவசங்கர் said...

சரி மொக்கை என்று பேர் வைத்து விட்டோம்

malar said...

பிரதாபு இல்லேன்னு தைரியமா?

மொக்கைகே ஒரு மொக்கையா?

Siva said...

டிவில ஒரு படத்த எத்தன தடவ போட்டாலும் திரும்ப திரும்ப பாக்குற நமக்கு இதெல்லாம் இருட்டுக்கடையில அல்வா வாங்கி அங்குனயே சாப்புடுற மாதிரி.சரி டவுனுல வீடு எங்குன?

துபாய் ராஜா said...

சிறுவயதில் கேட்ட கதைக்கு சிறப்பான படங்கள் அருமை.

துபாய் ராஜா said...

சிறுவயதில் கேட்ட கதைக்கு சிறப்பான படங்கள் அருமை.

குறிப்பு: இது மொக்கை பின்னூட்டம் அல்ல...ல்ல..ல. :))

செ.சரவணக்குமார் said...

ரைட்டு தல.

அன்புடன் அருணா said...

சரி வைச்சுட்டோம்...மொக்கைன்னு!

மின்மினி said...

இந்த கதை ரெண்டாப்போ மூணாப்பிலோ படிச்ச கத மாதிரி இருக்கே... இருந்தாலும் கதை ரொம்ப சூப்பர்...

tr manasey said...

eleay, tholai uricchi puduven jaakkrathai......ha ha ha ha

tr manasey said...

eleay tholai uricchi puduven jaakkirathai...... ha ha ha ha ha ha

கண்ணா.. said...

@சசிகுமார்

வாங்க தல இப்பிடி எழுதினா புகழ் மென்மேலும் உயர்ந்திருமா பாஸு...

இவ்ளோ நாளு இந்த பொறாமை புடிச்ச பயலுவ எல்லாம் சொல்லவே இல்ல பாஸு.... இனி இப்படியே எழுதி புகழை உயர்த்திருவோம் பாஸு :))

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தல

கண்ணா.. said...

@A.சிவசங்கர்

வாங்க நண்பா...

ஓரு பேச்சுக்கு சொன்னா எல்லாரும் அப்பிடியே பேரு வைச்சுருதீங்களே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

@malar

வாங்க அக்கா, கொஞ்ச நாளாச்சும் நிம்மதியா இருக்காலாம்னு பார்த்தா பிரதாப்பை ஞாபகபடுத்துறியேக்கா.....

ஓரு உலக இலக்கியத்த பார்த்து மொக்கைன்னு சொல்லுறீங்களே இது நியாயமா???

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

@Siva

வாங்கண்ணே... அருணகிரி தியேட்டர் போற வழில இருக்குல்லா பாரதியார் தெரு அங்கனதான் சின்ன வயசுல இருந்தேன். இப்போ என்.ஜி.ஓ. ‘பி’ காலனில வீடு இருக்கு. :)

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா

கண்ணா.. said...

@துபாய் ராஜா

வாங்கண்ணே... நீங்களாச்சும் அருமைன்னு சொன்னீங்களே... என்னாது நீங்களும் படத்தைதான் சொன்னீங்களா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிண்ணே...

கண்ணா.. said...

@செ.சரவணக்குமார்


வாங்க நண்பா,

அப்பிடியும் சொல்லாம,இப்பிடியும் சொல்லாம தெளிவா சொன்னீங்க பாத்தீங்களா.... இந்த டீலிங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :))

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

@அன்புடன் அருணா

வாங்க. நான் வைக்க சொன்ன உடனே எல்லாரும் வைச்சுருதாங்களே..... பாவம் எவ்ளோ நாள்தான் எல்லாரும் சகிச்சுகிடுறது

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

@மின்மினி

வாங்க நீங்களாவது சூப்பரா இருக்குன்னு சொன்னீங்களே.....


நன்றி..நன்றி..நன்றி..

கண்ணா.. said...

@tr manasey

வாங்கண்ணே...நீங்க என்ன பண்ணாலும் எனக்கும் ஒக்கேதாண்ணே....

எனக்கும் வாழைப்பழ தோலை யாராவது உரிச்சு தரமாட்டாங்களான்னு இருக்கும். நீங்க உதவ வந்ததுக்கு நன்றிண்ணே....


ஆனா இன்னைக்கு வந்த ரெண்டு மூணு பேருக்கு ப்ளாக்கர் புரோபைல் நாட் அவைல்லபிள்னு வருதே.... எல்லாரும் நாந்தான் இந்த வேலை பண்ணுறேன்னு சந்தேகபடுவாய்ங்களே.... :))


வருகைக்கும் கருத்திற்கும் நன்றிண்ணே

சசிகுமார் said...

என்ன தல இப்படி போடுற மொக்க தாங்கல,

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

எத்தன பேர் இப்படி கிளம்பிருக்கீங்க கண்ணா... :)))

அக்பர் said...

தல எப்படி இப்படியெல்லாம் முடியல!

Priya said...

கதையும் தலைப்பும் ஓகே ஓகே:) நைஸ்!

கண்ணா.. said...

@சசிகுமார்

வாங்க தல...அதெல்லாம் சும்மா ஜாலிக்கு தல... நீ மெர்ச்சலாவாத

மீள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா :)

கண்ணா.. said...

@Starjan ( ஸ்டார்ஜன் )

வா குரு

இப்போதைக்கு நான் ஒண்டிதான். :)))

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தல

கண்ணா.. said...

@அக்பர்

வா தல

இதுக்கே மெர்ச்சல்லானா எப்பூடி....இன்னும் ஓரு தொடர்பதிவு வேற இருக்கே...


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தல

கண்ணா.. said...

@Priya

வாங்க வாங்க...

நீங்களாவது நைஸ்ன்னு சொன்னீங்களே..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Ananthi said...

ஹ்ம்ம்.. கதை ரொம்ப நல்லா இருக்கு... (என்ன பில்ட் அப்பு.. )

ஸ்டார்ஜன்..............(echooooo )
எனக்கும் உங்க ஊர் தான்.. திருநெல்வேலி... :)

Jaleela said...

மொக்க கத ஜூப்பரு, அதானே பிரதாப் இல்லையின்னு தைரியமா போட்டு இருக்கீங்களே