Thursday, April 1, 2010

அகிள உளக தமில்கொலைபதிவற்கல் சங்கம்

பிரபல பதிவர் கவிபேரரசு குசும்பன் ஆரம்பித்த அகில உலக தமிழ்வலைபதிவர்கள் சங்கத்தில் சிலபல குறைகள் இருப்பதாலும் குறைந்தபட்ச பதிவர்களின் தேவையை அது பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எக்கி நிற்பதாலும், பிரபல பதிவர்களை மட்டுமே அவர்கள் குறிப்பிடுவதாலும், பிரபலமல்லாத பதிவர்களின் நலனை மட்டுமே மனதில் வைத்து போட்டி சங்கம் அமைக்க முடிவெடுத்தாகி விட்டது. ஆம் உங்கள் நலனை முன்னிட்டு “அகிள உளக தமில்கொலைபதிவற்கல் சங்கம்” ஆரம்பிக்க படுகிறது.

 

இந்த சங்கத்தில் யாரெல்லாம் சேரலாம்நான் தினமும் பல பேருக்கு கமெண்ட் போடுகிறேன் ஆனால் யாருமே எனக்கு கமெண்ட் போட வில்லையே என கவலைபடுவரா நீங்கள்..???

எனக்கு தமிழில் சரியாக டைப்ப வரவில்லை ஆனால் நினைத்தை எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவரா..???

ஓரு வாக்கியம் டைப் செய்யவே நாக்கு தள்ளுதே.. எப்பிடிதான் பக்கம் பக்கமா டைப் செய்றாங்களோன்னு வாய் பிளப்பவரா..???

சீரியஸான பதிவில் நீங்கள் எதையாவது சொன்னால் வாசிப்பனுவம் பத்தாது, அது இதுன்னு சொல்லி உங்களை சிரிப்பு போலிஸ் ஆக்குறாங்களா..???

உங்களை யாராவது மானங்கெட்ட தனமா ஏசி கமெண்ட் போட்டதும் ரத்தம் சூடாகி திட்டலாம் என டைப்ப ஆரம்பித்தால் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருகிறதே என வருத்தப்படுபவரா,,????

இதில் குறிப்பிடபடாத இன்னும் பலவற்றையும் செய்பவரா நீங்கள்….?????


கவலையை விடுங்கள்.. உங்கள் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுதான் அகிள உளக தமில்கொலைபதிவற்கல் சங்கம்.

இதில் சேர்பவர்களுக்கு பதிவு காத்தாடாமல் இருக்க ஆள் வைத்து பின்னூட்டமும் ஓட்டும் போட ஏற்பாடு செய்யப்படும்.

பிரபல பதிவர்களுக்கு நீங்கள் போடும் பின்னூட்டத்திற்கு பதில் சொல்ல வில்லையென்றால் சங்கத்தின் மூலம் அவர்களுக்கு இம்போசிஷன் போட ஏற்பாடு செய்யப்படும்

பிரபலபதிவர்கள் உங்களுக்கு பின்னூட்டத்தில் ஸ்மைலி மட்டும் போட்டு சென்றால் அவர்களை தக்க விதத்தில் தட்டி கேட்கப்படும்.

இதன் சங்கத்து உறுப்பினர்களை ஏன் தவறாக டைப்பிகிறாய் என கேட்டால் கேட்டவர்களின் மூக்கில் குத்த ஆட்கள் நியமிக்கப்படும்.

ஏதேனும் பிரச்சனை என்றால் எஸ்ஸாவது எப்பிடி? யாராவது மானம் கெட்ட கேள்வி கேட்டாலும் கொஞ்சம் கூட சூடு, சொரணையில்லாமல் இருப்பது எப்படி? போன்றவைகள் பதிவர்பட்டறையில் சொல்லிதரப்படும் என்பதையும் இங்கு தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் ஆலோசனைகள் தற்போது சங்கத்துல எவனுமே சேராததால.. சேர்ந்தஉடன் ஆலோசித்து பிறகு சொல்லப்படும்.


உடனே முந்துங்கள். முதலில் வரும் 10 அதிர்ஷ்டசாலி நேயர்களுக்கு பஸ்ஸுல் ஜன்னலோர சீட் வழங்கப்படும் என்பதையும் சங்கத்தின் சார்பில் தெரிவிக்க கடமை பட்டுள்ளோம்டிஸ்கி:

இந்த சங்கத்தில் எல்லாருமே தலைவர்கள்தான். எத்தனை நபர்கள் சேருகிறார்களோ அத்தனை பிராஞ்ச் ஆரம்பித்து அனைவருக்கும் தலைவர் பதிவு அளிக்கப்படும் என்பதையும் இதன் மூலம் தெரிவிக்க கடமைபட்டிருக்கிறோம்.62 comments:

vaaalpaiyan said...

naan irukken... tamila English la mattume type panna therinja enna maadhiri appavingaluku edhachu sangam aarambikureengala nu sollunga..

pappu said...

ஹா. ஹா... கெளப்புங்க!

நாஞ்சில் பிரதாப் said...

அப்ப நீருதானாவே அது.... பதிவுலக மக்களே நம்பிராதீங்க... சமீபத்தில் தமிழகமக்களை ஏமாற்றிய தமிழக போலிசாரால் தேடப்பட்டுவரும் பிரபல கிரிமினல் பதிவர் இவர்தான்...நம்பி இறங்கிறாதீங்க... இப்போ வர்ற டெம்ப்பேளேட் பின்னூட்டங்களும் வராம போயிரும்....
உஷார்....உஷார்....

வால்பையன் said...

என்னையும் சேர்த்துங்கங்க பாஸ் ப்ளீஸ்!
என்னையும் காமெடி பீஸ் ஆக்குறாங்க!

துபாய் ராஜா said...

//இந்த சங்கத்தில் எல்லாருமே தலைவர்கள்தான். எத்தனை நபர்கள் சேருகிறார்களோ அத்தனை பிராஞ்ச் ஆரம்பித்து அனைவருக்கும் தலைவர் பதிவு அளிக்கப்படும் என்பதையும் இதன் மூலம் தெரிவிக்க கடமைபட்டிருக்கிறோம்.//


தலை இருக்க ஆள் எல்லாரும் தலைவன்தான்யா நம்ம சங்கத்திலே...

நாடோடி said...

என்னையும் ஆட்ட‌த்துல‌ சேர்த்துக்குங்க‌.. நானும்,... நானும்..

Anonymous said...

இந்த பொழப்பு பொழக்க நாண்டுக்குட்டு சாகலாமே தோழர்

Chitra said...

உடனே முந்துங்கள். முதலில் வரும் 10 அதிர்ஷ்டசாலி நேயர்களுக்கு பஸ்ஸுல் ஜன்னலோர சீட் வழங்கப்படும் என்பதையும் சங்கத்தின் சார்பில் தெரிவிக்க கடமை பட்டுள்ளோம்

.......எனக்கு ஒரு ஜன்னலோர சீட், ப்ளீஸ்

சைவகொத்துப்பரோட்டா said...

இந்த சங்கத்துல நானும் சேரனும்,
மெயில் சங்கத்தோட I.D கொடுங்க.

KISHORE said...

மச்சான் .. நானும் சேர்ந்துகுறேன்டா..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

நண்பர் கண்ணா,
செம தில்லான சரவெடி காமெடி பதிவு.
அப்போ நானும் தலைவனா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:)))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆஹா போட்டி சங்கமா :)

செம கலக்கல் :) தூள்!

பிரியமுடன்...வசந்த் said...

கலக்கல் கலாய்..

:))

என்.ஆர்.சிபி said...

//இந்த சங்கத்தில் எல்லாருமே தலைவர்கள்தான். எத்தனை நபர்கள் சேருகிறார்களோ அத்தனை பிராஞ்ச் ஆரம்பித்து அனைவருக்கும் தலைவர் பதிவு அளிக்கப்படும் என்பதையும் இதன் மூலம் தெரிவிக்க கடமைபட்டிருக்கிறோம்.
//

இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

எறும்பு said...

கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா?.. போட்டி சங்கம் போட்டி சங்கம்னு உங்க போட்டிய யாரும் உருவாம இருக்கனும்.

;))

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://thalaivan.com/


Hello

You can put our logo and voting button on your blogspot and get more visitors

http://thalaivan.com/

கோவி.கண்ணன் said...

இநத சங்கத்தை திறக்க நமீதா வருவாங்களா ?

malar said...

என்ன டமில் மேல் திடீர் பட்டு?

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைசர் ?
உள்ளேன் ஐயா
(ஏதோ கோசம் பாது பண்ணுங்க , உங்க அக்கவுன்ட் நம்பர எனக்கு மெயில் பண்ணுங்க .....(ஹி ..ஹி..ஹி...))

gulf-tamilan said...

இதன் தலைமை?? எங்கேயிருக்கிறது?

gulf-tamilan said...

கும்மி பதிவுக்கு கூட மாட்டுறுத்தலா??:(((

அக்பர் said...

அப்போ எனக்கு ஜன்னலோர சீட் கிடையாதா.

சவுதி கிளை எங்களுக்குதான்.

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

http://www.thalaivan.com/button.html


Visit our website for more information http://www.thalaivan.com

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அடடா கச்சேரி களகட்டுதுபோல.. நடக்கட்டும் நடக்கட்டும்..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கண்ணா உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளுங்கள்.

கண்ணா.. said...

அட ரெண்டு வால்பையனா....

இதுல யாரு ஓரிஜினல்... யாரு போட்டி வால்பையன்

கண்ணா.. said...

@vaaalpaiyan

நீங்களே ஆரம்பிங்க தல... நாங்கெல்லாம் சேருறோம்

கண்ணா.. said...

@வால்பையன்

என்ன தல ... நீங்க இப்பிடி சொல்லலாமா...

நீங்கதான தல இப்போ மிகப்பிரபலம்

கண்ணா.. said...

@நாஞ்சில் பிரதாப்

வா மக்கா...நீருதானா.. இந்த மாதிரி புரளியை கிளப்பி போட்டி சங்க வளர்ச்சிக்கு தடையாக இருந்தது.. நல்லாருவே...

கண்ணா.. said...

@pappu


வா பப்பு...கெளப்பியாச்சுல்ல.....

கண்ணா.. said...

@துபாய் ராஜா

வாங்கண்ணே.... உங்க கமெண்டையே சங்கத்து பஞ்ச் டையலாக் ஆக்கலாம்.

கண்ணா.. said...

@நாடோடி

வாங்க ஸ்டீபன், சங்கத்துல சேர்த்தாச்சு..சேர்த்தாச்சு...

இனி ஏதும் பிரச்சனைன்னா சொல்லு தல பிரிச்சு மேய்ஞ்சுரலாம்.

கண்ணா.. said...

@kummiyadi

வாங்க தோழர். இதுக்கெல்லாம் கோவப்படாம தொடர்ந்து கடமை ஆற்றணும்ங்கறதுதான் சங்கத்தோட முக்கிய கொள்கையே...

நீங்களும் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடுறதால சங்கத்துல சேருறதை பத்தி ஏன் யோசிக்க கூடாது..?????

கண்ணா.. said...

@Chitra

வாங்க.. உங்களுக்கு சீட் போட்டாச்சு... ஆனா நீங்க பிரபலபதிவராயிட்டதால சங்கத்துல சேக்கலாமா...வேண்டாமான்னு பொதுக்குழுவை கூட்டித்தான் முடிவெடுக்கணும்

கண்ணா.. said...

@சைவகொத்துப்பரோட்டா

வாங்கண்ணே... பத்து புரோட்டா ஓசில குடுத்தாதான் சங்கத்தோட iD கொடுக்க முடியும். :)

கண்ணா.. said...

@KISHORE

மச்சி நீ என் இனமடா.....உனக்கெல்லாம் எப்போதும் சங்கத்தில் இடம் உண்டு

கண்ணா.. said...

@கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

வாங்க நண்பா... ஆமா தல.... எல்லாருமே தலைவர்தான்..

கண்ணா.. said...

@ஜ்யோவ்ராம் சுந்தர்

வாங்கண்ணே... வந்து பாராட்டிதற்கு நன்றி

கண்ணா.. said...

@பிரியமுடன்...வசந்த்

வாங்க வசந்த் ஸ்மைலியோட நிப்பாட்டமா கமெண்டும் போட்டதால சங்க நடவடிக்கைல இருந்து தப்பிச்சீங்க...:))

கண்ணா.. said...

@என்.ஆர்.சிபி

வாங்கண்ணே... உங்க அப்ரோச்சும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

கண்ணா.. said...

@எறும்பு

வாங்க ராஜகோபால்..

இன்னோரு லட்ட திங்க விடமாட்டிங்களா..?!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கண்ணா.. said...

@thalaivan

வாங்க தலைவன்.. உணர்ச்சி வசப்பட்டு ஓரே பதிவுக்கு ரெண்டு தடவ வந்துட்டீங்க...

வைரஸ் பயத்துனால நிறைய பேரு புது குழும ஓட்டு பட்டையெல்லாம் வைக்க ரொம்ப யோசிக்குறாங்க... பிரபல பதிவர்கள் வைக்க ஆரம்பித்தார்களானால் எல்லாரும் துணிஞ்சு வைப்பாங்க..

கண்ணா.. said...

@கோவி.கண்ணன்

வாங்கண்ணே.. சங்கம் ஏற்கனவே தொறந்தாச்சு... பின்னாடி சங்க கட்டிடம் தொறக்கும் போது இந்த அம்மிணியை கூப்டுக்கலாம்..

கண்ணா.. said...

@malar

வாங்க மலரக்கா... நம்மை பற்றி யாருமே யோசிக்காததன் விளைவுதான் நமக்காக நாமே உருவாக்கிய “அகிள உளக தமில்கொலைபதிவற்கல் சங்கம்”

கண்ணா.. said...

@மங்குனி அமைச்சர்

வாங்க அமைச்சரே... பேங்க் அக்கவுண்ட் நம்பரையா கேக்குறீங்க..? அது இன்னும் பிரபல பதிவர் ஆன உடனே அக்கவுண்ட் நம்பரை பதிவிலேயே போட்டு அமவுண்ட் கேக்குறேன்.. அனுப்பி விடவும்

கண்ணா.. said...

@gulf-tamilan

வாங்கண்ணே... தலைமை இருக்க வேண்டிய இடத்துல இருக்கு.. ஓண்ணு சொல்லவா.. கேள்வி கேக்குறது ரொம்ப் ஈஸி... பதில் சொல்லி பாருங்க... அப்போதான் தெரியும் அதோட கஷ்டம் ..அவ்வ்வ்வ்


மட்டுறுத்தல் பதிவுக்காக இல்ல. நான் பதிவ போட்டுட்டு ஒரு 4-5 மணி நேரம்லாம் பாக்க வரவே மாட்டேன். அதுக்குள்ள யாராவது வேலில போற ஓணானை இழுத்து வேட்டிக்குள்ள விட்டுட்டா என்ன பண்ணுறது..

அதுக்குதான்...நீங்க கோவிச்சுகிடாதீங்க....:))

கண்ணா.. said...

@அக்பர்

வாங்கண்ணே... உங்களுக்கும் ஸ்டார்ஜனுக்கும் எப்பிடி பிரான்ஞ் பிரிக்குறதுன்னு.. அமீரக சத்வா தலைமை கொஞ்சம் குழம்பி போய் உள்ளது..

கண்ணா.. said...

@Starjan ( ஸ்டார்ஜன் )

வாங்கண்ணே.. விருதுக்கு நன்றிண்ணே.... கச்சேரில ஐக்கியமாயிடுங்க....

அன்புடன் மலிக்கா said...

ஆகா இப்படியெல்லாம் கிளம்பியிருக்கீங்களா.

கருத்தும் ஓட்டும் போட எவ்வளவு பீஸு கேப்பீங்க தலைவரே.
அத வெளியில சொல்லமாட்டோம்.

வேகமா ஓடிவாங்க பதிவர்வெற்கலே
முந்தியவங்களுக்கு மீன் ஆணமும்[குழம்பு] சோறும்.
பிந்தினால் புளியானமும் சோறும் எப்புடி..

ஹுஸைனம்மா said...

எல்லாஞ்செரிதான்; ஆனா, இதுதான் இடிக்குது..

//இந்த சங்கத்தில் எல்லாருமே தலைவர்கள்தான். எத்தனை நபர்கள் சேருகிறார்களோ அத்தனை பிராஞ்ச் ஆரம்பித்து அனைவருக்கும் தலைவர் பதிவு அளிக்கப்படும்//

என்னை ஹெட் ஆஃபிஸுக்குத் தலைவியாப் போடுவீங்கன்னா சேந்துக்குறேன்; இல்ல நானும் தனி சங்கம் ஆரம்பிச்சுக்கிறேன்.

கண்ணா.. said...

@அன்புடன் மலிக்கா

வாங்க..கம்பெனி சீக்ரட்ட இப்பிடி பப்ளிக்கா சொல்ல கூடாது...

அந்த மீன ஆணமும், புளிஆணமும் பார்சல் அனுப்புங்க.

கண்ணா.. said...

@ஹுஸைனம்மா

வாங்க, போட்டி சங்கத்துக்கே..போட்டி சங்கமா...??!!

புலவர்களுக்குள் சச்சரவு இருக்கலாம், சண்டை இருக்கலாமோ....!! உங்களுக்கு என்ன பதவி வேணுமோ எடுத்துங்கோங்க....அமெளண்ட் மட்டும் செட்டில் பண்ணிருங்க..

அக்பர் said...

விருது பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்

http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html

மின்னல் said...

சங்கத்துல என்னையும் சேர்த்துகுங்க

Priya said...

வாவ் சிம்பிலி சூப்பர்ப்! ரசிச்சு படித்தேன்!

ம்ம்... சங்கத்துல எனக்கு ஒரு சீட் ரெடி பண்ணுங்க பாஸ்:)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

எனக்கும் தலைவர் பதவி கிடைக்குமா....?

"தலைவர் சாமகோடங்கி வாழ்க...!!"

ஆஹா கேட்கவே எவ்வளவு நல்லா இருக்கு...

ரேஷன் ஆபீசர் said...

ஆஹா !
அருமையான பதிவு!!

கண்ணா.. said...

@அக்பர்

வாங்க தல,

விருதுக்கும், அன்பிற்கும் நன்றி தல

கண்ணா.. said...

@மின்னல்

வாங்க... உங்களுக்கு இல்லாததா..!! எடுத்துக்கோங்க...

கண்ணா.. said...

@Priya

வாங்க, உங்களுக்கும் சீட் உண்டு...

வருகைக்கு நன்றி

கண்ணா.. said...

@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

வாங்க தல..

உங்களுக்கு இல்லாதாதா...சீக்கிரம் ஜோதில ஐக்கியமாயிடுங்க....

கண்ணா.. said...

@ரேஷன் ஆபீசர்

வாங்க ஆபிசர்...

வருகைக்கு நன்றி