Friday, May 29, 2009

பிரபல பதிவரின் உண்மைமுகம்…

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


திருப்பதி ஆண்டவரை நினைத்து ஃபீல் பண்ணி ’வெங்கடேஷ்’ என்று அப்பா வைச்சது.எனக்கு பிடிக்கும் ஆனா இப்ப அப்பாதான் ஏன் வைச்சோம்னு ஃபீல் பண்ணுறதா கேள்வி


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

ஒரு வருடம் முன்பு…

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும்..

ஏன்னா நான் என்ன எழுதியிருக்கேன்னு வாத்தியாருக்கே புரியாம ஏதோ பக்கம் பக்கமா எழுதியிருக்கான்னு புல்லா அடிச்சிட்டு வஞ்சகமே இல்லாமல் ஒன்னு ரெண்டுன்னு மார்க் போட்டு பார்டர்ல பாஸ் செஞ்சதுக்கு காரணமான என் எழுத்து ரொம்ப பிடிக்கும் (ம்..டாக்டருக்கு படிச்சிருக்கலாம்..)

4).பிடித்த மதிய உணவு என்ன?

பிடிச்சது கிடைக்குதான்னு பாக்குறத விட கிடைக்குறத சாப்பிடனும்னு வள்ளில ரஜினி சொல்லலை சில்லி பய நானே சொல்லிகிட்டது (எது கிடைச்சாலும்…..களத்துல இறங்கிற வேண்டியதுதான்.)

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

எளிதில் பழகி விடுவேன்.. ஆனால் நெருக்கமான நட்பாக ரொம்ப காலம் எடுக்கும்..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டும் பிடிக்கும். அருவி குளியல் மிகவும் பிடிக்கும்…பாபநாசம், மணிமுத்தாறு போன்ற கூட்டமில்லாத இடங்களில் நெடுநேரம் குளிக்க பிடிக்கும்


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள் தான்..

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: தன்னம்பிக்கை.

பிடிக்காத விஷயம் : பிடிச்ச விஷயம் என்னனு கேட்டா. .. கொஞ்சம் கூட மன சாட்சியே இல்லாம தன்னம்பிக்கைன்னு பொய் சொல்லுறது



9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடிச்ச/பிடிக்காத விஷயம்: ஆக்ரமிப்பு. என்னை முழுசா ஆக்ரமித்திருப்பது

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?..

என் தங்கை பொண்ணு ஐஸ்குட்டி பக்கத்துல இல்லயேன்னு ரொம்ப ஃபீல் பண்ணுறேன்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெள்ளையா..பழுப்பான்னு தெரியாத ‘ஙே’னு பேய் முழி முழிச்சிட்டு இருக்கற ஒரு அழுக்கு பனியனும்…கருப்பு கலர் டவுசரும்

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

’உன் பார்வையில் பையித்தியமானேன்…
உன் வார்த்தையில் வாக்கியமானேன்…
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்.. மயங்கினேன்...’

சம்திங்.. சம்திங் படத்திலிருந்து… எனக்கு ரொம்ப பிடிச்ச பாடலும் கூட

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு.. எத்தனை வர்ணங்கள் இருந்தாலும் ஒரு சிறிய கரும்புள்ளிதான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது

14.பிடித்த மணம்?

அம்மாவின் கைமணம் (எங்க போனாலும் என் புத்தி சாப்பாட்டை தவிர வேறபக்கம் போகமாட்டுக்கு)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

தீப்பெட்டி @ கணேஷ்குமார்: சமீபத்தில் எழுத ஆரம்பித்து இருக்கிறார்.. தெளிவான அலசல் மற்றும் பின்னூட்டங்களுக்கு சொந்தகாரர்..

ஜோ..: பல பின்னூட்டங்களில் என் கருத்தும் இவர் கருத்தும் ஒத்து போவதின் மூலம் கிடைத்தது இவரின் அறிமுகம். மிக அருமையாக எழுதிவருகிறார்…பின்னூட்டங்களில் இவரின் தைரியம் மற்றும் நேர்மை எனக்கு மிகவும் பிடிக்கும்..

என்பக்கம் @ பிரதீப் அமீரகவாசி…ஒரு கம்பெனியை நடத்தி வருகிறார். துபாய் கட்டிட துறையை பற்றிய பல தகவல்களை பதிவிட்டு வருகிறார்…

நான் மேலே குறிப்பிட்ட மூன்று பேரும் இன்னும் சில நாள்களில் பதிவுலகில் தவிர்க்க முடியாத ஆட்களாக இருப்பார்கள்



16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

நண்பன் வினோத்தின் பதிவில் வந்து குங்குமத்திலும் பிரசுரமான “சில பருவங்கள் சில பார்வைகள்” ரொம்ப பிடிக்கும்
எல்லா தலைப்பிலும் எழுத கூடிய திறமை உள்ளவர். நல்ல நண்பர். என் சில காராமான பதிவால் கொஞ்சம் எதிர்ப்புகளை எதிர்கொண்டபோது என் பக்கம் நின்றவர்..பதிவின் மூலம் கிடைத்த சிறந்த நண்பன்

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட், செஸ், சீட்டுகட்டு

18.கண்ணாடி அணிபவரா?

இது வரை இல்லை.. ஏன்னா சின்ன வயசுல இருந்தே ரொம்ப படிக்கறது இல்ல…. கதை புக்குன்னாலும் படக்கதை மட்டும்தான்... என் ஏரியா..

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

இயல்பான வாழ்க்கையையும், சிறந்த திரைக்கதையையும் ஒருங்கிணைத்த திரைபடங்கள் மிகவும் பிடிக்கும்


20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன்..

21.பிடித்த பருவ காலம் எது?

மார்கழி காலை…

சுகமான தூக்கத்தின் நடுவில் அம்மா என்னை திட்டி எழுப்பி அவரை கோவிலில் கொண்டு போய் விடச்சொல்லி என்னிடம் நடத்தும் அழகான யுத்தம்… இந்த காலையில்தான்


22. படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

ஷிவ் கேராவின் “யு கேன் வின்”

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அடிக்கடி. எப்போதெல்லாம் என்னை கவரும் படங்கள் கிடைக்கிறதோ அப்போதெல்லாம்….

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் : நாங்க இந்த பேங்க்ல இருந்து பேசுறோம், உங்களுக்கு லோன் வேணுமா என் கூவும் கிளிகளின் சத்தம்

பிடிக்காத சப்தம்: வாங்குன லோனை கட்டச்சொல்லி பேசும் ஆபிஸரின் சத்தம்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அமீரகம் தான்….

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இருந்தா சொல்ல மாட்டனா??

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

இதையெல்லாம் படிச்சிட்டு தமிழிஷ், தமிழ்மணத்தில ஓட்டும் போடாம…கமெண்டும் போடாம போகுற ஆட்களின் மனநிலையை என்னால் ஏற்று கொள்ளவே முடியாது…

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பேறித்தனம்..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

பெளர்ண்மி இரவில்.. அம்மா பிசைந்து தரும் அந்த பழைய சோறுடன் ஊரில் என் வீட்டு மொட்டைமாடி

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

நான் நானாய் இருக்கனும்னு ரொம்ப ஆசை.. முடியவில்லை

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

நண்பர்களோடு ஊர் சுற்றுவது

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..

இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, அன்பு, பாசம், நட்பு, பிரிவு துரோகம், விரக்தி, வலி, உழைப்பு என அனைத்தையும் காண இறைவன் எனக்களித்த வாய்ப்பு..



டிஸ்கி:


பிரபலபதிவர் பற்றின்னு டைட்டில் குடுத்திட்டு உன்னை பற்றியே இருக்கேன்னு சின்னபுள்ளதனமா நீங்க கேப்பிங்கன்னுதான் ஹிட் கவுண்டருக்கு சூடு வச்சு 5 லட்சம் ஆக்கிட்டேன்.. 5 லட்சத்தை தாண்டியதுக்கும் வாழ்த்திட்டு போங்க மக்களே….

Wednesday, May 27, 2009

புலிகளின் வெற்றி

பிரபல எழுத்தாளரின் அரைகுறை புரிதல்.


இந்த பதிவில் வன்முறையின் தோல்வி எனும் கட்டுரையை முழுதும் படித்துவிட்டு வந்தால் என் கட்டுரை கொஞ்சம் புரியலாம்..

வன்முறையின் தோல்வி என சொல்லுபவர் வென்றது எது என சொன்னால் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்...

விடுதலை போராட்டங்களை வன்முறை என்ற அளவில் புரிந்திருக்கும் அவரின் புத்திசாலி தனத்தை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.. அதில் விடுதலை புலிகள் அத்தனைபேரும் கொல்லபட்டு விட்டார்கள் என்வும் கூறுகிறார். இவரை போய் பிரபல எழுத்தாளர் என்று என்னிடம் சொன்ன கஸ்மாலத்தை தேடிக்கிட்டு இருக்கேன்..அவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும்..அப்புறம் #^*%@#!##@***+##..

சரி அதை விடுங்க விஷயத்துக்கு வருவோம்.


எது வன்முறை.?


தன் இன விடுதலைக்காக, இன துரோகம் செய்தவர்களை கொல்வதின் பெயர் வன்முறை என்றால் ஒரு விடுதலை இயக்கத்தை போரில் வெல்ல உலக நாடுகளின் துணையுடன் பல்லாயிரகணக்கான அப்பாவி தமிழர்களை கொல்வதின் பெயர் என்ன.?










புலிகள் பல தலைவர்களை கொன்றார்கள், சக போராளிகளை கொன்றார்கள் என கூப்பாடு போடுபவர்கள் கூட அவர்கள் அப்பாவிகளை கொன்றதாக கூறுவதில்லை..




ஆனால் இப்போது ஸ்ரீலங்காவில் என்ன நடக்கிறது..அனைத்து உலக நாடுகளின் துணைகொண்டு அப்பாவிகளை அல்லவா அழித்து கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்களை புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என கூறுபவர்கள்.. பொதுமக்களின் மேல் ஸ்ரீலங்கா குண்டுகள் வீசுவதற்கு காரணம் கண்டுபிடிக்கிறார்கள். சரி ஓரு வாதத்திற்காக புலிகள் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்துவதாக கொண்டாலும் அதனால் பொது மக்களின் மேல் குண்டுகளை வீசுவதை நியாயபடுத்தலாமா..?

ஆனால், ஸ்ரீலங்கா அரசாங்கம் பொதுமக்களின் உயிர்களை மதிக்கவில்லை. மக்கள் மிகவும் குறுகிய நிலப்பரப்பில் செறிவாக இடம்பெயர்ந்து இருந்தபோதும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியிருந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது




விடுதலை புலிகளின் வெற்றி


என்வரையில் இது புலிகளின் வெற்றியாகவே கருதுகிறேன்.. உலக நாடுகளின் ஸ்ரீலங்காவிற்கு தமிழனுக்கு சம உரிமை கொடுக்கவேண்டும் என சொல்ல வைத்ததின் மூலம் புலிகள் தங்களின் போராட்டத்தில் பகுதி அளவு வெற்றி பெற்று விட்டார்கள் என்பதுதான் என் எண்ணம்..இந்த தற்போதைய பின்னடைவையும் நேர்கொண்டு வெகுவிரைவில் தங்களின் முழுவெற்றியையும் பெறுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் ( அங்க நாடாளுமன்றம்தானா.?!) ராஜ பக் ஷே வை தமிழர் உரிமைகள் பாதுகாக்கபடும் எனவும் சொல்ல வைத்ததை புலிகளின் இதுநாள் வரையிலான போராட்டத்தின் வெற்றியாகத்தான் நான் பார்க்கிறேன்..

புலிகள் தாங்கள் இதுவரையில் கையகபடுத்தியிருந்த நிலபகுதிகளை இழந்திருக்கலாம்..நம்பிக்கையை இழக்கவில்லை..மீண்டும் ஓயாத அலைகள் அடிக்கும்..இதையும் தாண்டி நிலபரப்புக்கள் கிடைக்கும்..அந்த நாளில் தமிழ் ஈழம் பிறக்கும்.




நாக்க புடுங்கிட்டு சாகலாம் போல இருக்கு பாஸ்


http://www.paristamil.com/tamilnews/?p=11924மேலே சொன்ன லிங்கில் போய் பார்த்த செய்தி

சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போரியல் குற்றங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை தேவை என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிலான நாடுகளும், இது அதற்கான தருணம் அல்ல என சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகளும் தெரிவித்திருக்கின்றன

சிறிலங்கா தொடர்பான விவாதத்தை சாதாரண கூட்டத்தில் விவாதிக்கலாம் என சிறிலங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் இந்தியாவுக்கான தூதுவர் தெரிவித்திருக்கின்றார்.
இந்தியாவுடன் இணைந்து சீனாவும், ரஸ்யாவும் சிறிலங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன.”

இந்த செய்தியை படிச்ச உடனே இந்தியனா பொறந்ததை நினைச்சி நாக்க புடுங்கிட்டு சாகலாம் போல இருக்கு பாஸ்