முதலில் என்போன்ற புதிய பதிவரின் அழைப்பை ஏற்று சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கலையரசன் முதல் ஆளாக 5.20 கெல்லாம் அங்கே வந்து விட்டு போன் செய்தார். நானும் வினோத்தும் அப்போதுதான் அறையை விட்டு வெளியே வந்தோம். அதன்பின் டாக்ஸி பிடித்து அடுத்த 15 நிமிடத்தில் அங்கே சென்றோம்.பின் சுந்தர் அவர்கள் வீட்டில் தயார் செய்த வடையுடன் வந்தடைந்தார். பின் பார்க்கில் தோதான இடம் பார்த்து உக்கார்ந்தோம்.அதன்பின் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.
மொத்தம் 14 நபர்கள் வந்திருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அவரவர்களின் அறிமுகத்திற்கு பின் கலந்துரையாடல் ஆரம்பித்தது. அய்யனார் மற்றும் ஆசாத் சிறப்பாக ஆரம்பித்தனர். பின் அனைவரும் சகஜமாக பேசி உரையாடலை சுவாரஸ்யமாக ஆக்கினர்.
பல பதிவுகளை பற்றி குறிப்பிட்டனர். அதையெல்லாம் உடனடியாக படிக்க வேண்டும் என நினைத்து கொண்டேன்.
அண்ணன் திரு ராகவன் நைஜீரியாவில் இருந்து வரும் 21ம் தேதி பதிவர்களை சந்திக்க விரும்பி துபாய் வருவதால் அனைவரும் வரவேண்டும் என கேட்டுகொள்ளபட்டது… 21ம் தேதி ஞாயிற்றுகிழமை வேலை நாள் என்பதால் 8 மணிக்கு ஏதாவது ஒரு ஹோட்டலில் சந்திக்கலாம் எனவும் விவாதிக்கபட்டது.

அய்யனார்
http://www.ayyanaarv.blogspot.com/
அபுல்கலாம் ஆசாத்
http://www.ennam.blogspot.com/
சுந்தர்
http://trichisundar.blogspot.com/

சரவணன் @ குசும்பன்
http://www.kusumbuonly.blogspot.com/
சிவராமன்
http://sivaramang.wordpress.com/

லியோ சுரேஷ்
அசோக்குமார்
செந்தில்வேலன் http://senthilinpakkangal.blogspot.com/

கலையரசன்
http://www.kalakalkalai.blogspot.com/

பிரதீப் குமார்
http://www.oviya-thamarai.blogspot.com/

வினோத் கெளதம்
http://julykaatril.blogspot.com/

கண்ணா @ வெங்கடேஷ்
http://venkatesh-kanna.blogspot.com/

நாகா
இனி சில குழுபடங்கள்
நான் பல விதமாக போஸ் கொடுத்த போட்டோக்களையெல்லாம் அனுப்பாமல் சதி செய்து மறைத்து வைத்த கலையரசனுக்கு என் கடும் கண்டங்கள். நீங்களும் உங்கள் கண்டனங்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இது போன்ற விஷமிகளுக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள்
அமீரகத்தில் இதற்குமுன் நடந்த பதிவர் சந்திப்பு புகைபடங்களை கீழ் உள்ள லிங்கில் கிளிக்கி பார்க்கலாம்
http://s189.photobucket.com/albums/z261/alif007/?action=view¤t=24082007417.jpg














