Monday, July 5, 2010

சுடச்சுட......நெல்லை பதிவர் சந்திப்பு செய்திகள் புகைப்படங்களுடன்...!!!

இரண்டு மாதங்களுக்கு முன், அதிகாலை 10 மணி அளவில் போன்.. ஓரு குரல் நான் ராஜா பேசுறேன் என்றது. எந்த ராஜா என்றதும் நாந்தான் துபாய் ராஜா என்றது அதேகுரல். ஆஹா நம்ம அண்ணந்தான் கூப்ப்டுறாரான்னு வழக்கமான நலம் விசாரிப்புகளுக்கு பிறகு நான் திருநவேலி வாரேன்... நாம மீட பண்ணலாமான்னு கேக்கவும் சரின்னு புது பஸ்ஸ்டாண்டு முன்னாடி உள்ள அருணா ஸ்விட்ஸை ஸ்பாட்டா முடிவு செய்து சந்திக்க தயாரானோம்.


ஓரு மணி நேரம் கழித்து மறுபடியும் போன்.. வந்தாச்சுன்னு... சரி வாரேன்னு பைக்கை எடுத்து கிளம்பினா ஓரு சந்தேகம் அவரை எப்பிடி அடையாளம் கண்டுபிடிக்க...அவரு புரோபைல் போட்டோவில் ஷேக் டிரஸ்ஸோட பாத்தது. ஓரு பார்ட்டி போட்டோவிலும் மொட்டை அடிச்சிருந்தாரு அதை தவிர வேறு ஓண்ணும் தெரியாதேன்னு காதல் கோட்டை அஜித்குமார் தேவயானியை பாக்க போற மாதிரி யோசனை பலமாதிரி ஓட ஆரம்பித்தது. பைக்கை நிப்பாட்டி விட்டு போன் பண்ணினால் கட் பண்ணி விட்டு ஆறடி உயர ஆள் கை காட்டுறாரு...(என்னா உசரம்ணே....!!! உங்க ஹைட்டுக்கு நீங்க பாஸ்ட் பெளலிங்க் போட்டா....பேட்டிங் பண்ணுறவன் செத்தான்) ஆஹா ராஜா கூப்பிட்டுடாரே...மீ த பர்ஸ்ட்டேய் சொல்லிறலாமான்னு வாய் வரைக்கும் வந்ததை நாகரீகம் கருதி அடக்கி கொண்டேன்.


பல விஷயங்களை சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தோம். திருநெல்வேலியில் இருந்து எவ்வளவு பதிவர்கள் என இருவரின் ஆச்சர்யங்களையும் பகிர்ந்து கொண்டோம். நாஞ்சிலுக்கு போன் பண்ணலாம் என கால் பண்ணினால் அவர் போனை வைத்து விட்டு கேரளா வரைக்கும் போயிருக்கிறார் என அவர் வீட்டில் தகவல் சொன்னார்கள். சரி அப்டின்னா.. மறுபடியும் எக்ஸ்பிரஸ் மலையாள மங்கையிடம் மயங்கி விட்டது. திருமப பார்ட்டி துபாய் வந்ததும் மலையாளப்பட விமர்சனம் கண்டிப்பாய் இருக்கும்னு மனசுல நினைச்சுகிட்டேன்.


அப்புறம் ஓரு ஜுஸை குடித்து கொண்டே உரையாடி கொண்டிருந்தோம். அவர் ஐந்து வருடமாக பதிவெழுதுவதையும் இப்போதுதான் அதிக அளவில் புதிய பதிவர்கள் வருவதையும், ஓரு முறை அம்பை பஸ் ஸ்டாண்டில் ஆடுமாடு என்ற பெயரில் பதிவெழுதும் பதிவரை பார்த்து விட்டு “நீங்கதானே ஆடுமாடுன்னு” எப்படி கேக்க என குழம்பி பின் அறிமுக படுத்தி பேசிய சுவாரஸ்யமான சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார். பின் அவரை பாளை பஸ் நிலையத்தில் டிராப் செய்து விட்டு நான் ஜங்சனுக்கு சென்றேன். திருநெல்வேலி நிறைய மாறிவிட்டது நிறைய மாறாமல் அப்படியே இருக்கிறது. அதையெல்லாம் பத்தி எழுதி ஓரு பத்து பதிவாது தேத்திறணும்னு நினைச்சுகிட்டேன்.


அதன் பிறகு ஓரு பத்து நாள் கழித்து நண்பர் பதிவர் எறும்பு ராஜகோபால் அண்ணனும் போனில் பேசினார்கள். ஊருக்கு வந்திருப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் நான் அப்போது தஞ்சாவூரில் இருந்ததால் அவரை சந்திக்க முடியாமல் போனது.


பதிவர் சந்திப்பு புகைப்படங்கள்


பதிவர் சந்திப்பை பற்றி எழுதினால் புகைபடங்கள் பதிவிட வேண்டும் என்ற தொன்று தொட்டு வரும் பாரம்பரியத்தை பின்பற்ற வில்லையென்றால் வரலாற்றுபிழை ஏற்பட்டு விடக்கூடாது என்பதாலும்  எங்களின் தன்னடக்கத்தின் காரணமாக நாங்கள் புகைப்படம் எடுக்காமல் விட்டதாலும் கூகுளில் இருந்து களவாண்ட படங்கள் உங்கள் பார்வைக்கு..43 comments:

KISHORE said...

ithu oru nallllllllllllaaaaa pathivar santhipu..

நாஞ்சில் பிரதாப் said...

ஹீஹீஹீ... என்னவே இப்படி போட்டோ போடாம ஏமாத்தீட்டீரு....

அன்னைக்கு நான் வீட்டுக்கு வந்ததும் அம்மா சொன்னாங்க ராஜா கூப்பிருந்தாருன்னு. கூப்பிட்டு பேசுனேன். நீரு அப்போ ஊருக்கு வந்து ரெண்டு வாரம் கழிச்சும் என்னை கூப்பிடவே இல்ல. நேர்ல பாத்திருந்தா அசிங்க அசிங்கமா கேட்ருப்பேன்...போகட்டும்... எங்கப்போயிடபோரீரு...:))

//கூகுளில் இருந்து களவாண்ட படங்கள் உங்கள் பார்வைக்கு..//

இந்த களவாங்குற புத்தியை ஊர்போனப்புறமும் விடலையாக்கும்...

நாடோடி said...

//அதிகாலை 10 மணி அளவில் போன்//

த‌ல‌..இது உங்க‌ளுக்கே ஓவ‌ரா தெரிய‌ல... ப‌த்து ம‌ணி உங்க‌ளுக்கு அதிகாலையா?

நாடோடி said...

//மறுபடியும் எக்ஸ்பிரஸ் மலையாள மங்கையிடம் மயங்கி விட்டது.//

அப்ப‌டியா இந்த‌ க‌தை ந‌ல்ல சுவ‌ர‌ஸ்ய‌மா இருக்கும் போல.... நீங்க‌ ஏன் த‌ல‌ இதை ப‌ற்றி ஒரு தொட‌ர் ப‌திவு எழுத‌ கூடாது..

நாடோடி said...

ப‌திவ‌ர் ச‌ந்திப்பு என்று போட்டுவிட்டு, ப‌திவ‌ர்க‌ளின் போட்டோவை போடாம‌ல் இருட்டுக‌டை போட்டோ.... என்ன த‌ல‌ இதுக்கு பேர்தான் அல்வா கொடுக்கிற‌தா?.

☀நான் ஆதவன்☀ said...

யோவ்வ்வ் நீங்க ரெண்டு பேரும் இருக்குற போட்டோவை போடாம ஏதேதோ போட்டோவை போட்டிருக்கீங்க?

ரெண்டு பேர் மீட் பண்ணினதுக்கு ஒரு பதிவா? தல நெல்லையில வேற யாருமே இல்லையா?

செ.சரவணக்குமார் said...

அதிகாலை பத்துமணியா? ரைட்டு..

நாஞ்சில் எக்ஸ்பிரஸ்?????? பிரதாப்பு. டாப்பு.

சந்திப்பை நல்ல முறையில் விவரித்துள்ளீர்கள்.

பை தி வே கண்ணா எப்படியிருக்கீங்க? ஊர்ல போய் செட்டிலாயாச்சு. மனமார்ந்த வாழ்த்துகள்.

செ.சரவணக்குமார் said...

// நாடோடி said...

//மறுபடியும் எக்ஸ்பிரஸ் மலையாள மங்கையிடம் மயங்கி விட்டது.//

அப்ப‌டியா இந்த‌ க‌தை ந‌ல்ல சுவ‌ர‌ஸ்ய‌மா இருக்கும் போல.... நீங்க‌ ஏன் த‌ல‌ இதை ப‌ற்றி ஒரு தொட‌ர் ப‌திவு எழுத‌ கூடாது..//

ஸ்டீபன் அண்ணாச்சி ஏன் இப்பிடி??

நாஞ்சில் நல்லவரு... விட்டுருங்க ப்ளீஸ்.

அக்பர் said...

கலக்கல் சந்திப்பு தல.

இந்த நாஞ்சிலு எப்பவுமே இப்படித்தானா. அடிக்கடி மலையாளக்கரையோரம் ஒதுங்குறாரு. :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

//ஹீஹீஹீ... என்னவே இப்படி போட்டோ போடாம ஏமாத்தீட்டீரு....//
//ரெண்டு பேர் மீட் பண்ணினதுக்கு ஒரு பதிவா? தல நெல்லையில வேற யாருமே இல்லையா?//

ரிப்பீட்டு நண்பர்களா!!!
துபாய் ராஜாவை மஃப்டியில் பார்க்கலாம் என்றால் இப்படியா?:))
பதிவு நல்லா சுவாரஸ்யமா இருந்தது.
நாஞ்சிலுக்கு இதே வேலையா?
கேரளா மாப்பிள்ளையா?

எறும்பு said...

//ஓரு பத்து நாள் கழித்து நண்பர் பதிவர் எறும்பு ராஜகோபால் அண்ணனும் போனில் பேசினார்கள். //

நான் உங்களுக்கு அண்ணனா...அவ்வவ் நான் ரெம்ப சின்ன பையன்..

எறும்பு said...

//யோவ்வ்வ் நீங்க ரெண்டு பேரும் இருக்குற போட்டோவை போடாம ஏதேதோ போட்டோவை போட்டிருக்கீங்க? //

விடுங்க ஆதவன்.. நீங்க பயந்துடுவீங்க

:)

மதார் said...

கண்ணா பயணம் அருமையா ? நிஜம்தான் நெல்லை நிறையவே மாறிட்டு . ஆறு மாசத்துக்கு ஒருமுறை போற எனக்கே மாற்றங்கள் நிறையத் தெரியுது . நாலு வருசமா நெல்லையின் ஒரு ரோடு விடாமல் சுத்திருக்கோம். இப்போ அந்த இடங்களை எல்லாம் பார்க்கும்பொழுது நண்பர்கள் , கதை பேசிக்கொண்டே கூட்டமாய் நடந்து போன பாதைகள் என ஆட்டோக்ராப் மாதிரி மனசுல வரும்போது "வளராமலே இருந்திருக்கலாம் இல்ல BE ஒரு கூட இரண்டு வருடம் இருந்திருக்கலாம் என்று தோணும் . நிறைய மாற்றங்களை பார்த்த இடம் வண்ணாரப்பேட்டை ரவுண்டானா மட்டுமே . சென்னையில் பிரியாணி சாப்பிடும்போதெல்லாம் பரணி ஹோட்டல் , எம் எச் ஹோட்டல் பிரியாணியும் கண்ணுல வரும் அப்போ சொல்லிப்போம் இதுக்கு பேரு பிரியாணியாம் என்னக் கொடுமை ?

goma said...

அடடா பிறந்த ஊரில் பதிவர்கள் கூட்டம்.சிந்துபூந்துறையில்,எங்கள் வீடு தாண்டி போயிருக்கிறீர்கள்.....நான் அங்கே இல்லாமல் போய்விட்டேனே...
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

goma said...

ரெண்டு பேர் மீட் பண்ணினதுக்கு ஒரு பதிவா? தல நெல்லையில வேற யாருமே இல்லையா

நான் ஆதவன் கேட்டது.
நம்ம வெடிவாலு சகாதேவன் அங்கேதானே இருக்கார்

ராம்ஜி_யாஹூ said...

google photos are also old nellai photos.

Chitra said...

திருநெல்வேலி நிறைய மாறிவிட்டது நிறைய மாறாமல் அப்படியே இருக்கிறது. அதையெல்லாம் பத்தி எழுதி ஓரு பத்து பதிவாது தேத்திறணும்னு நினைச்சுகிட்டேன்.


...... கூல்! கண்டிப்பாக எழுதுங்க.... சந்திப்பு நல்லா போச்சு போல....

Zen the Boss said...

கண்ணன் பாளையம்கோட்டை பத்தி எழுதுக நான் அதிகமா மிஸ் பன்ரனின் அதை

கண்ணா.. said...

வாடா கிஷோரு...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...

கண்ணா.. said...

வாலே மக்கா நாஞ்சிலு,

//ஊருக்கு வந்து ரெண்டு வாரம் கழிச்சும் என்னை கூப்பிடவே இல்ல. நேர்ல பாத்திருந்தா அசிங்க அசிங்கமா கேட்ருப்பேன்//

நான் துபாய்ல இருந்தப்போ மட்டும் அடிக்கடி பேசின மாதிரி சொல்றியே....

பொதுவாகவே நான் பதிவுலக நண்பர்களிடம் பதிவின் மூலம்தான் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறேன். அது தவிர சாட்டிலோ, போனிலோ நான் அதிகம் பேசியதில்லை. அதுதான் காரணம். மன்னிச்சுக்கோவே... இனி அடிக்கடி இம்சை கொடுக்கப் படும்

:)

வருகைக்கும் உரிமையான கருத்திற்கும் நன்றி மக்கா..

கண்ணா.. said...

வாங்க ஸ்டீபன்@நாடோடி,

என்னா பாஸ் இது 10 மணி அதிகாலை இல்லையா.??!!! அதுக்குள்ள மாத்திட்டாங்களா..??!!!

//அப்ப‌டியா இந்த‌ க‌தை ந‌ல்ல சுவ‌ர‌ஸ்ய‌மா இருக்கும் போல.... நீங்க‌ ஏன் த‌ல‌ இதை ப‌ற்றி ஒரு தொட‌ர் ப‌திவு எழுத‌ கூடாது//

தல அதெல்லாம் சும்மா ஓரு பில்டப்புக்காக எடுத்து விடுறேன்... நீங்க அதை போயி நம்பிட்டு இருக்கீங்களே...

//ப‌திவ‌ர் ச‌ந்திப்பு என்று போட்டுவிட்டு, ப‌திவ‌ர்க‌ளின் போட்டோவை போடாம‌ல் இருட்டுக‌டை போட்டோ.... என்ன த‌ல‌ இதுக்கு பேர்தான் அல்வா கொடுக்கிற‌தா?//

அதேதான் தல...நீங்க ஓரு ஆளுதான் கரெக்டா பாயிண்டை புடிச்சீங்க...

:)

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க நான் ஆதவன் @ சூர்யா,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

//ரெண்டு பேர் மீட் பண்ணினதுக்கு ஒரு பதிவா? தல நெல்லையில வேற யாருமே இல்லையா?//

தல பப்ளிக்கா இப்பிடி பேசிறாத... எங்கூரு பயலுவயெல்லாம் மோசமானவ...படக்குன்னு முதுகுல வச்சுருக்குற அருவாள தூக்கிற போறான்...

:)

நிறைய நெல்லை பதிவர்கள் இருங்காங்க பாஸ்... எல்லாரும் ஊர்ல இல்லாம வேலை நிமித்தமாகவோ, குடும்ப சூழல் நிமித்தமாகவோ வெளியூரில், வெளிநாட்டில் இருக்காங்க தல..

எனக்கு தெரிந்த சில நெல்லை பதிவர்கள்
1. அக்பர்
2. ஸ்டார்ஜன்
3. எறும்பு ராஜகோபால்
4. துபாய் ராஜா
5. கோமா
6. ராம்ஜி யாகூ
7. வெட்டி பேச்சு சித்ரா
8. ஹுசைனம்மா
9. தமயந்தி
10. நெல்லை நண்பன்
11. மீன்துள்ளியான்
12. நெல்லை சரவணகுமார்
13. அன்புடன் ஆனந்தி
14. உணவு உலகம்
15. s.ம்காராஜன்
16. திரவிய நடராஜன்
17. நெல்லை காந்த்

இன்னும் நிறைய பேரு இருக்காஙக் பாஸு...நாங்கெல்லாம் தமிழிஷ், தமிழ்மணத்துல இடஓதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போது இப்பிடி கேட்டு புட்டியே தல...

கண்ணா.. said...

வாங்க செ.சரவணகுமார்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

//சந்திப்பை நல்ல முறையில் விவரித்துள்ளீர்கள்.

பை தி வே கண்ணா எப்படியிருக்கீங்க? ஊர்ல போய் செட்டிலாயாச்சு. மனமார்ந்த வாழ்த்துகள்//

நல்லாயிருக்கேன்..நீங்க எப்பிடி இருக்கீங்க.?? வாழ்த்துக்களுக்கு நன்றி

கண்ணா.. said...

வாங்க அக்பர்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஆமா தல நாஞ்சில் எக்ஸ்பிரஸ் அடிக்கடி கேரளாவுல தடம் புரண்டு விழுது... என்னா காரணம்னு கண்டுபுடிக்கணும் தல....

கண்ணா.. said...

வாங்க கார்த்தி,

திருநெல்வேலி பதிவர் லிஸ்ட் மேலே ஆதவனுக்கு சொன்ன மறுமொழியில் இருக்கு தல...

ஊர்ல பதிவர் சந்திப்புக்கு என்றெல்லாம் கூட வில்லை தல... ராஜா கூப்பிட்டாரு மீட் பண்ணினோம்.. அத வழக்கம் போல நாந்தான் பதிவர் சந்திப்புன்னு பில்ட் அப்பை ஏத்தி விட்டேன்...

கண்ணா.. said...

வாங்க எறும்பு @ ராஜகோபால் அண்ணா,

நானும் ச்சின்னபையன்தான் அண்ணா...

ஆதவனுக்கு பதில் சொல்லியாச்சு தல.. கூடிய சீக்கிரம் நெல்லையில் பதிவர் சந்திப்பை கூட்டுங்க தல.. இட ஓதுக்கீடு கேட்டு போராட்டத்தை ஆரம்பிச்சுருவோம்....

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க மதார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... நீங்க திருச்செந்தூர்னு புரோபைலில் போட்டுருந்தீங்க... நெல்லையில்தான் படிச்சீங்களா?? எந்த காலேஜ்?

சாப்பாடு விஷயத்தில சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா?

கண்ணா.. said...

வாங்க கோமா,

நீங்க நெல்லைன்னு தெரியும்.. ஆனா சிந்துபூந்துறைதானா..? நானும் சிந்துபூந்துறை செல்விநகரில்தான் இருந்தேன். இப்போது என் ஜி ஓ ‘பி’ காலணிக்கு மாறிவிட்டோம்.

அடுத்த முறை எல்லாருக்கும் தோதாண ஓரு நாளில் சந்தித்து விடுவோம்

:)

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க ராம்ஜி யாகூ,

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

பழைய போட்டோதான்...கூகிளில் தேடிய போது கிடைத்தது.

:)

கண்ணா.. said...

வாங்க சித்ராக்கா,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

எழுதிருவோம்.... வேற நேரம் போக வேண்டாமா ஆபிஸ்ல

:)

அஹமது இர்ஷாத் said...

சரியான அல்வாங்க கண்ணா... பதிவர் ஃபோட்டோ இருக்கும்னு பார்த்தா... என்ன விளையாட்டு சகா..


//நாடோடி said...
//அதிகாலை 10 மணி அளவில் போன்//

த‌ல‌..இது உங்க‌ளுக்கே ஓவ‌ரா தெரிய‌ல... ப‌த்து ம‌ணி உங்க‌ளுக்கு அதிகாலையா?//

KKK KKKK

ஆடுமாடு said...

ராஜா சாரை மீட் பண்ணினதை பத்தி இங்க எழுதியிருக்கேன்.

http://aadumaadu.blogspot.com/2010/05/blog-post_20.html

கண்ணா.. said...

வாங்க zen the Boss

//
கண்ணன் பாளையம்கோட்டை பத்தி எழுதுக நான் அதிகமா மிஸ் பன்ரனின் அதை//

எழுதிருவோம் மக்கா.....

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க அஹமது இர்ஷாத்

//சரியான அல்வாங்க கண்ணா... பதிவர் ஃபோட்டோ இருக்கும்னு பார்த்தா... என்ன விளையாட்டு சகா//

தல நேரம் போகாம ஆபிஸ்ல சும்மா உக்காந்து மோட்டுவளையவே குறுகுறுன்னு பாத்துட்டு இருந்தா இப்பிடிதான் தல யோசிக்க தோணுது... நான் என்ன பண்ண முடியும்..??

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க கோபிநாத்,

உங்கள் பதிவையும் படித்தேன்....விரைவில் சந்திப்போம்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிண்ணே...

ராம்ஜி_யாஹூ said...

கண்ணா அருமை,

தாமிரபரணி தீரத்தில் ஒரு பதிவர் சந்திப்பு (மாநாடு) ஏற்பாடு செய்து விடுவோம்:
எனக்கு தெரிந்து விடுபட்ட சில பதிவர்கள்:

கல் தோன்றா மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த பதிவர் (வலை உலக கமலஹாசன், உன்னால் முடியும் தம்பி பத்மஸ்ரீ , ஆருயிர் சகோதரன்- டுபுக்கு.

எட்டயபுரம் என்ற பெயரில் எழில் மிகு நெல்லையை எமக்கு எழுத்தில் அளிக்கும்- கலாப்ரியா

எங்கள் தெருவின் இறுதி இல்லத்தில் இருக்கும் எதிர் வரிசை இல்லத்து காரர் நெல்லை கண்ணன்

மதார் said...

ME MISSING N NELLAI LIST ? WT THIS KANNA?

மதார் said...

திருசெந்தூர் , தூத்துக்குடி , நெல்லை எல்லாமே நெல்லை என்ற ஒரு குடையின் கீழேயே . ஆங்கிலேயர்களால் ஆள முடியாமல் தூத்துக்குடி என்று நெல்லையின் சில பகுதிகளை பிரித்து விட்டனர் . அதுக்காக என்னை நெல்லை பதிவர்கள் லிஸ்டில் சேர்க்காமல் விட்டது ரொம்ப பாவம் . நெல்லையில் நான்கு வருடம் படித்தது அரசு பொறியியற் கல்லூரி .ஊருக்கு போகும்போதும் வரும்போதும் நெல்லை மண்ணை மிதிக்காமல் இருக்க முடியுமா ? முதல் முறை டீலக்ஸ் பஸ் நெல்லையில் பார்த்து என்ன ஆண்கள் எல்லாம் பெண்கள் இருக்கையில் இருக்காங்க என்று சென்னை நினைப்புலையே இருந்தேன் . இது சென்னை அல்ல நெல்லை என்று கொஞ்சம் லேட்டா மண்டைக்கு புரிஞ்சது .இன்னும் இன்னும் ....................

கண்ணா.. said...

@ மதார்,

நீங்கள் திருச்செந்தூர் என்றல்லவா நினைத்தேன். திருச்செந்தூர் என்றால் தூத்துகுடி மாவட்டம் அல்லவா...

அதனால்தான் குறிப்பிடவில்லை. பக்கத்து மாவட்டத்தையும் சேர்த்தால் இன்னும் கூட கூடும்

நாகர்கோவிலில் நாஞ்சில் பிரதாப், நாடோடி ஸ்டீபன், மலர், இன்னும் பல பேரை இணைக்கலாம்.

சரி இப்போ என்ன? இது ஓண்ணும் பைனல் லிஸ்ட் இல்லையே....சும்மா ஆதவனுக்கு சாம்பிள் காட்டத்தான் குறித்தேன்...
பைனல் லிஸ்ட்டில் உங்களையும் இணைத்து விடுகிறேன்.

:)

கண்ணா.. said...

@ ராம்ஜி யாஹூ,

நெல்லை கண்ணனை தெரியும் ஆனால் மறந்து விட்டேன்.

நீங்களும் திருநெல்வேலி டவுணா?

நான் ஐந்தாம் வகுப்பு முடிக்கும் வரை திருநெல்வேலி பாரதியார் தெருவில் உச்சிமாகாளி அம்மன் கோவில் பக்கம்தான் இருந்தேன்.

ஏதோ ஓரு தேர்தல் சமய கலவரத்தில் நெல்லை கண்ணனின் காரை உடைந்த சம்பவத்தின் போது அதே இடத்தில் அதிர்ந்து போய் நின்று கொண்டிருந்தேன்..

பழைய நினைவுகளை அசை போடுவதே தனிசுகம்தான்

மீள்வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ராம்ஜி_யாஹூ said...

கண்ணா அந்த தேர்தல் நெல்லை கண்ணன்- காங்கிரஸ், உதயம் முத்துசாமி- சேவல், மாசானமுத்து- இரட்டை புறா, ஈ எல் சுப்பிரமணியன்- உதயசூரியன்

பாரதியார் தெருவா, அப்போ அப்சர முடி திருத்தகம், மகா கணபதி உணவகம் அருகிலா வீடு

மதார் நீங்க இல்லாமலா. உங்க தலைமைல தானே ஊர்வலமே

சௌந்தர் said...

நாஞ்சில் எக்ஸ்பிரஸ் மலையாள மங்கையிடம் மயங்கி விட்டதுஎக்ஸ்பிரஸ் மலையாள மங்கையிடம் மயங்கி விட்டது

கிசுகிசு நல்ல இருக்கே நாஞ்சில் பற்றி இன்னும் பதிவு போடுங்கள். பதிவரின் சேட்டை......

திவ்யாஹரி said...

//அதிகாலை 10 மணி அளவில் போன்//

ஹா..ஹா..ஹா.. தெளிவா தான் இருக்கீங்க என்னை போல..