Monday, March 29, 2010

வீரபாண்டியன் IAS ஐ பதிவுலகிற்கு வரவேற்போம்

கடந்த வருடம் மே மாதம் ’’ வீரபாண்டியன் IAS - வறுமையை தாண்டிய போராட்டம்...!! புரோட்டா கடையிலிருந்து ஓரு IAS.. !! சாதித்த சட்ட கல்லூரி மாணவர்...!! ’’ என்று ஓரு பதிவிட்டு இருந்தேன். அந்த பதிவை படித்து விட்டு இதை தொடருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.படிக்கும் போது வறுமையின் காரணமாக புரோட்டா கடையில் பகுதி நேரமாக வேலையும் பார்த்து கொண்டு ப்ளஸ் டூவில் மாநில அளவில் ரேங்க் எடுத்ததோடு மட்டுமில்லாமல் IAS ஆகி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை இலட்சியமாக கொண்டு அதனை சாதித்தார். ஆம் IAS தேர்வில் அகில இந்திய அளவில் 53வது இட்த்தை பிடித்தார். வறுமையை தாண்டிய அவரின் போராட்டம் என்னை கவர்ந்ததால் அவ்வாறு பதிவிட்டிருந்தேன். அதன் பிறகு ஆனந்த விகடனில் அவரின் காதல் திருமணம் குறித்து போட்டிருந்த்தை படித்த்தும் சரியான ஆளை பற்றிதான் எழுதியிருக்கிறோம் என நினைத்து கொண்டிருந்தேன். ஏனெனில் காதலுக்காகவும் மனிதர் பல ஆண்டுகள் போராடி வென்றிருக்கிறார்.





இரண்டு நாள்களுக்கு முன்னால் அதே வீரபாண்டியன் IAS யிடம் இருந்து “intha seithiyai veliyittorukkum matrum vaazhthu therivitha anaivarukkum nenchaarntha nanrikal” என்று ஓரு பின்னூட்டம் வந்திருந்தது. பார்த்தவுடன் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. எப்போதும் மொக்கைகளையே எழுதி கொண்டிருக்கும் எனது ப்ளாக்கில் எப்போதாவது இது போல எழுதுவேன். அதற்கும் மொக்கைகளுக்கு உரியதை விட குறைந்த வரவேற்பே இருக்கும். ஆனால் ஓரு வருடம் கழித்தும் இது போல பதிவுகள் கவனிக்கப்படும் எனத்தெரியும் போது உருப்படியான விஷயங்கள் அடிக்கடி எழுதலாம் எனத்தோன்றுகிறது. அப்போதெல்லாம் இது போன்ற பதிவுகளுக்கும் தொடர்ந்து வந்து என்னை ஊக்கமூட்டிய நண்பர்கள் வினோத் மற்றும் கிஷோருக்கும் இந்நேரத்தில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

வீரபாண்டியன் IAS ம் பதிவு எழுத ஆரம்பித்து இருக்கிறார். இரண்டு பதிவு ஆரம்பித்து இருந்தாலும் ஓரு பதிவில் தான் எழுதியிருக்கிறார். அவருடைய பதிவின் முகவரி http://veerapandiang.blogspot.com/ தேர்தலை குறித்து சிறிய கவிதையொன்றை எழுதியிருக்கிறார். வறுமையை தாண்டி போராடிய ஓருவர் பதிவு எழுத ஆரம்பித்து இருக்கிறார். அவரை நாம் ஊக்குவிப்போம். இது அவரின் புரோபைல் பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட்.


தொழில் சமூகசேவை என குறிப்பிட்டு இருக்கிறார். பதிவுலகிற்கு அவரை வரவேற்போம். இவரை போன்றவர்கள் தொடர்ந்து ஆர்வமுடனும், தொடர்ந்த ஊக்கத்துடனும் உழைக்கும் போதுதான் சமூகத்தில் வறுமையோடு போராடி கொண்டிருக்கும் பல பேருக்கு நம்பிக்கை குறையாமல் இருக்கும்.

32 comments:

வடுவூர் குமார் said...

welcome Mr Veera Pandiyan.

திவ்யாஹரி said...

இப்படி ஒரு தன்னம்பிக்கை நிறைந்த மனிதரை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றிகள் கண்ணா.. வினோத், கிஷோர் மட்டும் இல்ல.. எப்போதும் நானும் உங்களை பின் தொடர்வேன்..

நாடோடி said...

ரிய‌ல் ஹீரோவை அறிமுக‌ப்ப‌டுத்திய‌த்ற்கு ந‌ன்றி த‌ல‌..

மதார் said...

சூப்பர் கண்ணா , இந்த மாதிரி மனிதர்களின் வாழ்க்கை பற்றி தெரியும்போதுதான் நமக்குள் இருக்கும் போராட்ட குணம் இன்னும் அதிகரிக்கும் .

ஹுஸைனம்மா said...

அறிமுகத்திற்கு நன்றிங்க. “சோஷியல் செர்வண்ட்” - நம்பிக்கை தருது.

☀நான் ஆதவன்☀ said...

ஆகா... நல்ல விசயம் தான். வரவேற்போம் அவரை.

தேவன் மாயம் said...

வருக வருக!!!

சைவகொத்துப்பரோட்டா said...

அறிமுகத்திற்கு நன்றி கண்ணா.

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப நல்ல விசயம் கண்ணா.

வாருங்கள்.வரவேற்கிறோம்.

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு கண்ணா. திரு.வீரபாண்டியன் IAS அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு கண்ணா. திரு.வீரபாண்டியன் IAS அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கண்ணா.. said...

நான் அறிமுகபடுத்தினேன்னு சொல்லுறது சூரியனுக்கே டார்ச் அடிக்கற மாதிரி..

அவருடைய பதிவு சுட்டியை மட்டும்தான் கொடுத்திருக்கிறேன்

திவ்யாஹரி said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள் கண்ணா..

இராகவன் நைஜிரியா said...

நன்றி கண்ணா... அறிமுகப் படுத்தியதற்கு

Prathap Kumar S. said...

நன்றிவே... அறிமுகப்படுத்துனதுக்கு...

அடிக்கடி இந்தமாதிரி யாரையாவது அறிமுப்படுத்துவே...பழக்கதோஷத்துல என்னை அறிமுகப்படுத்திடபோறீரு....

பனித்துளி சங்கர் said...

அறிமுகத்துக்கும் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி!!

Radhakrishnan said...

:) நன்றி

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அவர் பதிவின் சுட்டியைக் கொடுத்திருக்கலாமே...

கண்ணா.. said...

வாங்கஅறிவன்

வருகைக்கு நன்றி

அவரின் சுட்டி ஏற்கனவே கொடுத்திருக்கிறேனே... அதில் கிளிக் பண்ணுங்கள்

வினோத் கெளதம் said...

வரட்டும் நல்ல விஷயம் தான்.. என்னா மச்சி நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு இது என் கடமை ..

ராஜ நடராஜன் said...

பதிவுலகின் முகம் இப்படியாக மெதுவாக மாறுவது மகிழ்ச்சிக்குரியது.வரவேற்பு வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ்க்கு மாத்திரமல்ல.தகவல் சொன்ன உங்களுக்கும்.

geethappriyan said...

நண்பர் கண்ணா,
மிக அருமையான அறிமுகம்.
திரு.வீரபாண்டியன் IAS.ஐ வரவேற்ப்போம்.இது போல தன்னம்பிக்கை உள்ள நபர்கள் நம் நட்பு சூழலில் மிகவும் அவசியம்.

smart said...

வருக வருக!!

கண்ணா.. said...

வாங்க வடுவூர் குமார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

வாங்க திவ்யா ஹரி

தொடர்வதாக சொன்னதற்கு நன்றி. இப்போது நிறைய இணைய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் வினோத்தையும், கிஷோரையும் குறிப்பிட்டது அந்த பதிவின் போது இவர்களும் தீப்பெட்டி, ஜோ போன்ற சிலரே நண்பர்களாக இருந்தார்கள்.அதனால்தான் குறிப்பிட்டேன்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.


வாங்க நாடோடி@ ஸ்டீபன்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க மதார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

வாங்க ஹுசைனம்மா

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

வாங்க நான் ஆதவன் சூர்யா

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க தேவன்மாயம்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி


வாங்க சைவகொத்து புரோட்டா

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி


வாங்க அக்பர்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க துபாய் ராஜா,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி



வாங்க திவ்யாஹரி

மீள்வருகைக்கும் விருதிற்கும் நன்றி



வாங்க ராகவன் அண்ணே,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாலே மக்கா பிரதாப்பு,

உன்னய அறிமுகபடுத்திட்டாலும்..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி


வாங்க பனித்துளிசங்கர்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி


வாங்க வி.ராதாகிருஷ்ணன்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க அறிவன்

சுட்டி பார்திட்டீங்களா..?

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி


வாடா வினோத்,

ஊக்கமளித்தற்கு நன்றி கூட சொல்லலேன்னா..எப்பிடி..?

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி


வாங்க ராஜநடராஜன்

தொடர் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க கார்த்தி

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி


வாங்க ஸ்மார்ட்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ராஜ நடராஜன் said...

கண்ணா!உங்கள் மூலமாகவே வீரபாண்டியன் தளத்திற்கு போனேன்.

அறிமுகத்திற்கு உங்களுக்கு நன்றி சொல்ல மறந்து விட்டதற்காக இந்த பின்னூட்டம்.

malar said...

நல்ல ஒருவரை அறிமுகப்படுதியதற்கு ....நன்றி...