Thursday, December 31, 2009

2010க்கு சில பதிவர் தீர்மானங்கள்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எனக்கு மெயில் வந்த ஓரு சுவாரஸ்யமான படங்கள் மற்றும் கமெண்டுகள் சற்று தமிழ் படுத்தி உங்கள் பார்வைக்கு..



2009 is going 2 finish (மச்சி 2009 முடிய போகுது..)





Now, we need to face 2010 (இனி 2010 நாம சமாளிக்கணும்)





There may be risks involved ( ஏகப்பட்ட நாதாரிகளை சமாளிக்கணும் )





We may need to face roadblocks ( எதிரிகள் வைரஸை ஏவி விட்டு நம்ம ப்ளாக்கை முடக்க பார்ப்பார்கள்)






So stay alert ( அதனால உஷாரா இருக்கணும்)






Share time with friends ( ஓட்டு போட, கும்மி அடிக்க ஆள் சேர்த்துக்கோ )






Jump over obstacles ( எவனாவது திருப்பி அடிச்சான்னா உடனே இடத்தை விட்டு எஸ்கேப் ஆயிறணும்)





With care ( ரொம்ப ஜாக்கிரதையா.. )






And caution ( ரொம்ப எச்சரிக்கையா.. )






Face challenges ( அனானிகளை சமாளிக்க தெரியணும்)






Remember to laugh ( யாரு எவ்ளோ திட்டினாலும், வெட்கம் மானமில்லாம சிரிச்சுகினே இரு )






Cooperate ( கும்மி அடி )






Discover ( யாரு யாருல்லாம் நமக்கு ஓட்டு போட்றுக்கா, யாரு போடலைன்னு கண்டுபிடி )






Make new friends ( கும்மிக்கு புதுசா ஆள் சேர்த்துக்கோ )






Above all...be ready for adventure ( மேல சொன்னதுல்லாம் ப்ளாக் வியாபாரம் நடக்குறதுக்கு )







Don't forget to relax and enjoy ( நல்லா தூங்கு, நல்லா கும்மு எஞ்சாய்.. )

.

.

.





Saturday, December 26, 2009

சூடாகும் பூமி - Green Building ன் தேவைகள் - ஓரு பார்வை

வரும் காலத்தில் பசுமை கட்டிடங்கள் (கீரீன் பில்டிங்) உலகம் வெப்பமயமாதலை தடுக்க மிக முக்கிய பங்கு ஆற்றவிருக்கிறது. முதலில க்ரீன் பில்டிங்ன்னா என்னன்னா இயற்கையிலியே நமக்கு கிடைக்க கூடிய சக்திகளை சரியாக உபயோகிப்பதின் மூலம் செயற்கை மற்றும் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய பொருள்களை குறைக்க கூடிய அமைப்பில் கட்ட படும் கட்டிடங்களைத்தான் பசுமை கட்டிடங்கள் என கூறுகிறார்கள்.







புவி வெப்பமடைதல் குறித்து ஒரு சிறுபார்வை





பூமியின் சராசரி வெப்பநிலை பூமியை ஒட்டியுள்ள மேற்பரப்பிலும், காற்றிலும் நீர்நிலைகளிலும் அதிகரிப்பதே புவி வெப்பமடைதல் என்கிறோம். பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்பதை விஞ்ஞானிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். 0.74 டிகிரி செல்சியஸ் வெப்பம் கடந்த நூற்றாண்டில் உயர்ந்துள்ளது. ஐ.நா.,வின் பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச கூட்டமைப்பு (யு.என்.எப்.சி.சி.சி.,) அறிக்கையின் படி, பூமியிலிருந்து வெளியேறும் மாசுக்களால்தான் புவி வெப்பமடைவது நிரூபிக்கப்பட்டது.
18 ஆண்டுகளாக அமெரிக் காவின் நாசா நிறுவனம் புவி வெப்பத்தை அளவிட்டு வருகிறது. இந்த ஆய்விலும் வெப்பமடைவது கண்டறியப்பட்டுள்ளது. காற்றில் கார்பன் டை ஆக்சசைடு அதிகரித்திருப்பதே இந்த பிரச்னைக்கு அடிப்படையான காரணம்.




வளர்ந்த தொழில்மயமான நாடுகள் இதுவரை 20,900 கோடி டன் கார்பன் டை ஆக்சைடை காற்றுமண்டலத்தில் சேர்த்துள்ளன. இந்நாடுகள் 1990ம் ஆண்டில் வெளியிட்ட அளவுக்கு தங்களுடைய கார்பன் வெளியேற்றத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா., கூறி வருகிறது. 1990க்குப் பின் அதிகரித்த கார்பன் வெளியேற்றத்தில் 80 சதவீத அளவு 2050ம் ஆண்டுக்குள் குறைக்க வேண்டும் என்று வானிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். காற்று மண்டலத்தில் நீராவி, உப்பு, மண், கனி மங்கள், கார்பன் உள்ளிட்ட மாசுத் துகள்கள், வைரஸ், பாக்டீரியா, உள்ளிட்ட துகள்கள் மிதக்கின்றன. காற்றுமண்டலத்தில் மிதக்கும் பத்து லட்சம் துகள்களில் 450 துகள்கள் மாசுத்து கள்களாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் முன்னர் கூறினார்கள். அப்படியானால், 2050ல் புவியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியசுக்கு மேல் உயராது. இல்லாவிட்டால் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துவிடும். இப்போது நாம் சந்திக்கும் பிரச்னை களைவிட ஏராளமான பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும் என்றார்கள்.

காற்று மண்டலத்தில் மாசு துகள்களின் எண்ணிக்கை 350க்குள் இருக்க வேண்டும் என்று தற்போது விஞ்ஞானிகள் அந்த எண்ணிக்கையை மாற்றியிருக்கிறார்கள். அப்போதுதான், புவியின் வெப்பநிலை 2டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் உயராது. துருவப்பகுதியில் உள்ள பனித்தட்டுகள் உருகி உடையாமல் இருக்கும் என்று கருதுகிறார்கள். அப்படியானால், 1990க்குப் பின் அதிகரித்த கார்பன் வெளியேற்றத்தில் 97 சதவீததத்தை குறைத்தால்தான் இந்த இலக்கை எட்ட முடியும்





ஓரு சிறிய உதாரணம், நாம் கட்டிடத்திற்கு உபயோகப்படுத்தும் சிமெண்ட் 1 டன் உற்பத்தி செய்வதற்கு 1 டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளிவிடப்படுகிறது. மேலும் கம்பி (steel) 1 டன் உற்பத்தி செய்வதற்கு 2 டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளிவிடப்படுகிறது. இது போன்று பலவகைகளில் வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடுகளால் பூமியின் வெப்பம் 0.74 டிகிரி செல்ஷியஸ் உயர்ந்துள்ளது.

இன்றைய நாட்களில் நாம் கட்டுமானத்திற்கு இந்த இரண்டு பொருள்களையும் (சிமெண்ட், கம்பி) தேவைக்கும் அதிகமாகவே பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். இவற்றை மிக தேவையான அளவு மட்டும் பயன்படுத்தி இவற்றின் உபயோக அளவை குறைக்கலாம் என வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள். உற்பத்தியை குறைப்பது என்பது தேவைகளை குறைப்பதன் மூலமே சாத்தியம் என்பதால், தேவைகளை குறைக்க மாற்றுவழிகளை ஆராய்ந்து வருகிறார்கள்.


கீரின் பில்டிங் அடிப்படைகளை குறிக்கும் படம் கீழே








USGBC எனும் அமைப்பு LEED (Leadership in Energy and Environmental Design) புள்ளிகளை கணக்கிட்டு அதன் மூலம் பசுமை கட்டிடத்திற்கான சான்றிதழ் வழங்குகிறார்கள். கீரீன் பில்டிங் ரேட்டிங் முறையில் LEED Points முக்கியமானது. இதில் 100க்கு 65 புள்ளிகளுக்கு மேல் வாங்கும் கட்டிடங்கள் கீரீன் பில்டிங் என சான்றளிக்கிறார்கள்.

உலக வெப்பமயமாதலை தடுக்க கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றுவதை குறைப்பதற்காக அனைத்துலக நாடுகளும் தற்போது தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனை நம் அன்றாட வாழ்க்கையில் ஓப்பிட்டு பார்த்தால் சமீபத்தில் எவ்வளவு மாறியிருக்கிறோம் என்பது தெரிகிறது.


பத்தாண்டுகளுக்கு முன்னால்




Ø எங்கள் வீட்டில் சைக்கிள்தான் மிகமுக்கிய
வாகனம். மோட்டார் சைக்கிள் வாங்கும் முனைப்பில் இருந்தோம்

Ø மின்சாதன பொருள்கள் இப்போதை விட மிக
குறைவு.

Ø பஸ் டைமிங் எங்களுக்கு அத்துபடி.

Ø வாஷிங் மெஷின் இல்லை. மிக்ஸியும்
கிரைண்டரும் அப்போதுதான் எங்கள் வீட்டிற்கு புதிய உறுப்பினராக வந்திருந்தன.

Ø செல் போன்கள் இல்லை (யாரிடமாவது அவசர
தகவல் சொல்ல வேண்டுமென்றால் அதற்கு பின்படும் முறைகள், தற்போது செல் போன்கள்
இருந்தும் கூடமுடியவில்லை )




இப்போது எங்கள் வீட்டு சைக்கிள் எங்கே இருக்கிறது என தெரியவில்லை. தற்போது மிக அருகில் இருக்கும் கடைக்கு கூட மோட்டார் சைக்கிள்தான். நடந்து போனால் எதிரில் பார்பவர்கள் துக்கம் விசாரிப்பார்கள். இப்போது தூர தொலைவு பயணங்கள் தவிர்த்து பஸ்ஸில் என்றால் எங்கள் வீட்டில் யாரும் வருவதில்லை. எங்கள் ஊரில் மோட்டார் சைக்கிள், கார் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றியை கூட்டி கொண்டே வந்திருக்கிறோம்.

வருங்கால சந்ததிகளை மனதில் கொண்டு நம்மால் முடிந்த அளவில் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றுவதை குறைப்போம்.

கட்டிடத்தை பொறுத்தவரை லாரி பெக்கர் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பே சிமெண்ட் மற்றும் கம்பிகளை குறைவாக பயன்படுத்தி பல கட்டிடங்களை கட்டி இருக்கிறார். அவருடைய கட்டுமான முறைகள் குறித்து தகவல் சேகரித்து தனி பதிவாக விரைவில் போடுகிறேன்.

Thursday, December 24, 2009

கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்


அனைவருக்கும் கிருஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்





- கண்ணா

Monday, December 14, 2009

திரும்பி விட்டேன்...

நல்லா வாசிங்க. திருந்திவிட்டேன்னு தப்பா புரிஞ்சுக்காதீங்க... அதுக்கெல்லாம் கம்பெனி பொறுப்பாகாது.. இந்தியாவில் இருந்து வந்து ஓரு மாதம் ஆகிறது.. இப்பெல்லாம் கம்பெனியில் நிறைய ஆணிகள் புடுங்க வேண்டி இருப்பதாலும், பதிவுலகத்தில் இல்லாத இந்த ஐந்து மாதங்கள் தேவையில்லாத மன உளைச்சல் இல்லாததாலும் பதிவை எட்டி பார்க்க ஆர்வம் இல்லாமல் போனது..

இன்னும் சாரு, இளையராஜா , விஜய் அஜீத், மற்றும் பலரை குறித்து சண்டைகள் நடந்து கொண்டுதானே இருக்கிறது..? யாரும் திருந்திரலேல்லே.

அப்புறம் இன்னமும் துபாய் பதிவர் சந்திப்பில் சுந்தர் அண்ணன் வடை கொண்டு வருகிறார்களா? கலை இன்னும் வடையை ஆட்டையை போடுகிறானா? வினோத்தும் கிஷோரும் சண்டை போடுறதை நிப்பாட்டி விட்டார்களா?

இப்பிடி நிறைய கேள்விகள் மனதில் இருந்தாலும் சபை நாகரீகம் கருதி அதனை கேக்காமல் நான் வந்துட்டேன்னு சொல்லிக்கறேன்.

முதல்ல ஊருக்கு போன உடனே தும்முனா, இருமுனா, முக்குனா எல்லாத்தையும் பதிவா போட்றலாமேன்னு தோணுச்சு.... இப்போதான் அந்த நினைப்புல்லாம் இல்லாம எல்லாத்தையும் செய்யுறேன்.. இப்போ மறுபடியும் ”ஐ ம் பேக்”

முதல்ல துபாய்ல இருந்து பதிவை படிக்கறப்போ பரவால்லயே எல்லா முக்கிய செய்திகளும் இதுலயே கிடைக்குதேன்னு நினைச்சேன்.. ஆனா ஊருக்கு போன உடனேதான் தெரிஞ்சுது.. பதிவுலகம் ஊர் நடப்புக்கு சம்பந்தமே இல்லாம் தனி உலகமா இருக்குன்னு..


பதிவர்களுக்கு ஓரு வேண்டுகோள்

ப்ளாக் நமக்கு ஓசில கிடைக்குங்குறதுக்காக ஓவரா மொக்கைகளை போட்டு இதனை இன்னும் தனித்து விடவேண்டாம்.

உங்களை யாரும் தினமும் பதிவு போட்டுதான் ஆகணும்னு கட்டாயபடுத்தலை.. அப்பிடி போட்டு வர்ற ஹிட்ஸை வச்சு நாக்கு கூட வளிக்க முடியாது...

நல்ல பொழுதுபோக்கான , உபயோகமான தகவல்களை பகிருங்கள்... இன்னைக்கு பதிவுலகில் மொக்கைகள்தான் பெருவாரியாக உள்ளது. அதிலயே போய் பத்தோடு பதினொன்னா ஆகுறதுக்கு பதில் .. உபயோகமான தகவல்களை பகிர்ந்து தனித்து தெரியலாமே.. அப்பிடி பட்ட தகவல்கள் கிடைக்குற வரைக்கும் நம்ம பதிவே போடலேன்னாலும் ஓண்ணும் ஆக போறதில்ல... ஆகவே பதிவு போடுறதுக்கு முன்ன ஓருமுறை யோசிச்சுங்கோங்க...