வரும் காலத்தில் பசுமை கட்டிடங்கள் (கீரீன் பில்டிங்) உலகம் வெப்பமயமாதலை தடுக்க மிக முக்கிய பங்கு ஆற்றவிருக்கிறது. முதலில க்ரீன் பில்டிங்ன்னா என்னன்னா இயற்கையிலியே நமக்கு கிடைக்க கூடிய சக்திகளை சரியாக உபயோகிப்பதின் மூலம் செயற்கை மற்றும் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய பொருள்களை குறைக்க கூடிய அமைப்பில் கட்ட படும் கட்டிடங்களைத்தான் பசுமை கட்டிடங்கள் என கூறுகிறார்கள்.
புவி வெப்பமடைதல் குறித்து ஒரு சிறுபார்வை
பூமியின் சராசரி வெப்பநிலை பூமியை ஒட்டியுள்ள மேற்பரப்பிலும், காற்றிலும் நீர்நிலைகளிலும் அதிகரிப்பதே புவி வெப்பமடைதல் என்கிறோம். பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்பதை விஞ்ஞானிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். 0.74 டிகிரி செல்சியஸ் வெப்பம் கடந்த நூற்றாண்டில் உயர்ந்துள்ளது. ஐ.நா.,வின் பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச கூட்டமைப்பு (யு.என்.எப்.சி.சி.சி.,) அறிக்கையின் படி, பூமியிலிருந்து வெளியேறும் மாசுக்களால்தான் புவி வெப்பமடைவது நிரூபிக்கப்பட்டது.
18 ஆண்டுகளாக அமெரிக் காவின் நாசா நிறுவனம் புவி வெப்பத்தை அளவிட்டு வருகிறது. இந்த ஆய்விலும் வெப்பமடைவது கண்டறியப்பட்டுள்ளது. காற்றில் கார்பன் டை ஆக்சசைடு அதிகரித்திருப்பதே இந்த பிரச்னைக்கு அடிப்படையான காரணம்.
வளர்ந்த தொழில்மயமான நாடுகள் இதுவரை 20,900 கோடி டன் கார்பன் டை ஆக்சைடை காற்றுமண்டலத்தில் சேர்த்துள்ளன. இந்நாடுகள் 1990ம் ஆண்டில் வெளியிட்ட அளவுக்கு தங்களுடைய கார்பன் வெளியேற்றத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா., கூறி வருகிறது. 1990க்குப் பின் அதிகரித்த கார்பன் வெளியேற்றத்தில் 80 சதவீத அளவு 2050ம் ஆண்டுக்குள் குறைக்க வேண்டும் என்று வானிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். காற்று மண்டலத்தில் நீராவி, உப்பு, மண், கனி மங்கள், கார்பன் உள்ளிட்ட மாசுத் துகள்கள், வைரஸ், பாக்டீரியா, உள்ளிட்ட துகள்கள் மிதக்கின்றன. காற்றுமண்டலத்தில் மிதக்கும் பத்து லட்சம் துகள்களில் 450 துகள்கள் மாசுத்து கள்களாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் முன்னர் கூறினார்கள். அப்படியானால், 2050ல் புவியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியசுக்கு மேல் உயராது. இல்லாவிட்டால் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துவிடும். இப்போது நாம் சந்திக்கும் பிரச்னை களைவிட ஏராளமான பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும் என்றார்கள்.
காற்று மண்டலத்தில் மாசு துகள்களின் எண்ணிக்கை 350க்குள் இருக்க வேண்டும் என்று தற்போது விஞ்ஞானிகள் அந்த எண்ணிக்கையை மாற்றியிருக்கிறார்கள். அப்போதுதான், புவியின் வெப்பநிலை 2டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் உயராது. துருவப்பகுதியில் உள்ள பனித்தட்டுகள் உருகி உடையாமல் இருக்கும் என்று கருதுகிறார்கள். அப்படியானால், 1990க்குப் பின் அதிகரித்த கார்பன் வெளியேற்றத்தில் 97 சதவீததத்தை குறைத்தால்தான் இந்த இலக்கை எட்ட முடியும்
ஓரு சிறிய உதாரணம், நாம் கட்டிடத்திற்கு உபயோகப்படுத்தும் சிமெண்ட் 1 டன் உற்பத்தி செய்வதற்கு 1 டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளிவிடப்படுகிறது. மேலும் கம்பி (steel) 1 டன் உற்பத்தி செய்வதற்கு 2 டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளிவிடப்படுகிறது. இது போன்று பலவகைகளில் வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடுகளால் பூமியின் வெப்பம் 0.74 டிகிரி செல்ஷியஸ் உயர்ந்துள்ளது.
இன்றைய நாட்களில் நாம் கட்டுமானத்திற்கு இந்த இரண்டு பொருள்களையும் (சிமெண்ட், கம்பி) தேவைக்கும் அதிகமாகவே பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். இவற்றை மிக தேவையான அளவு மட்டும் பயன்படுத்தி இவற்றின் உபயோக அளவை குறைக்கலாம் என வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள். உற்பத்தியை குறைப்பது என்பது தேவைகளை குறைப்பதன் மூலமே சாத்தியம் என்பதால், தேவைகளை குறைக்க மாற்றுவழிகளை ஆராய்ந்து வருகிறார்கள்.
கீரின் பில்டிங் அடிப்படைகளை குறிக்கும் படம் கீழே USGBC எனும் அமைப்பு LEED (Leadership in Energy and Environmental Design) புள்ளிகளை கணக்கிட்டு அதன் மூலம் பசுமை கட்டிடத்திற்கான சான்றிதழ் வழங்குகிறார்கள். கீரீன் பில்டிங் ரேட்டிங் முறையில் LEED Points முக்கியமானது. இதில் 100க்கு 65 புள்ளிகளுக்கு மேல் வாங்கும் கட்டிடங்கள் கீரீன் பில்டிங் என சான்றளிக்கிறார்கள்.
உலக வெப்பமயமாதலை தடுக்க கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றுவதை குறைப்பதற்காக அனைத்துலக நாடுகளும் தற்போது தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனை நம் அன்றாட வாழ்க்கையில் ஓப்பிட்டு பார்த்தால் சமீபத்தில் எவ்வளவு மாறியிருக்கிறோம் என்பது தெரிகிறது.
பத்தாண்டுகளுக்கு முன்னால்
Ø எங்கள் வீட்டில் சைக்கிள்தான் மிகமுக்கிய
வாகனம். மோட்டார் சைக்கிள் வாங்கும் முனைப்பில் இருந்தோம்
Ø மின்சாதன பொருள்கள் இப்போதை விட மிக
குறைவு.
Ø பஸ் டைமிங் எங்களுக்கு அத்துபடி.
Ø வாஷிங் மெஷின் இல்லை. மிக்ஸியும்
கிரைண்டரும் அப்போதுதான் எங்கள் வீட்டிற்கு புதிய உறுப்பினராக வந்திருந்தன.
Ø செல் போன்கள் இல்லை (யாரிடமாவது அவசர
தகவல் சொல்ல வேண்டுமென்றால் அதற்கு பின்படும் முறைகள், தற்போது செல் போன்கள்
இருந்தும் கூடமுடியவில்லை )
இப்போது எங்கள் வீட்டு சைக்கிள் எங்கே இருக்கிறது என தெரியவில்லை. தற்போது மிக அருகில் இருக்கும் கடைக்கு கூட மோட்டார் சைக்கிள்தான். நடந்து போனால் எதிரில் பார்பவர்கள் துக்கம் விசாரிப்பார்கள். இப்போது தூர தொலைவு பயணங்கள் தவிர்த்து பஸ்ஸில் என்றால் எங்கள் வீட்டில் யாரும் வருவதில்லை. எங்கள் ஊரில் மோட்டார் சைக்கிள், கார் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றியை கூட்டி கொண்டே வந்திருக்கிறோம்.
வருங்கால சந்ததிகளை மனதில் கொண்டு நம்மால் முடிந்த அளவில் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றுவதை குறைப்போம்.
கட்டிடத்தை பொறுத்தவரை லாரி பெக்கர் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பே சிமெண்ட் மற்றும் கம்பிகளை குறைவாக பயன்படுத்தி பல கட்டிடங்களை கட்டி இருக்கிறார். அவருடைய கட்டுமான முறைகள் குறித்து தகவல் சேகரித்து தனி பதிவாக விரைவில் போடுகிறேன்.