Wednesday, April 15, 2009

சரத்பாபு.....அக்னி குஞ்சொன்று கண்டேன்.....


அரசியல் ஒரு சாக்கடை என நாமெலலாம் புலம்பி கொண்டே இருக்க... ஒருவன் மட்டும் சுத்த படுத்த களத்தில் இறங்கி விட்டான்...
இத்தனை நாள் எதிர்பார்த்த மாற்றம் இதுதான்! தென்சென்னை வாக்களர்களுக்கு ஒரு வேண்டுகோள்! நமது நண்பர்களையும், உறவினர்களையும் இவருக்கு வோட்டு போட வைப்பது, நம்மை ஆட்சி செய்ய திறமையற்ற பொறுக்கிகளை தேர்ந்தெடுப்பது நிறுத்தப்பட வேண்டும் என்று நினைக்கும் அனைவரது கடமை! இன்ஃபொசிஸ் நாரயணமூர்த்தி அவர்கள், தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் ஜெயிப்பது மக்களுக்கு நல்லது என்று சொல்லியிருப்பது அர்த்தம் பொதிந்தது!ஒரு நல்ல இளைஞனை மக்களுக்கு அறிமுகப்படுத்திய விகடனுக்கு நன்றி.


இந்த வார ஜீ வியில் தென்சென்னை வேட்பாளர்..சரத்பாபு வை பற்றி படித்து வியந்து போனேன்..


ஜீ வியில் வந்தவை




''என்னோட சின்ன வயசில எங்க அம்மா சாப்பாடு வேணாம்டானு சொல்லிட்டு, அடிக்கடி தண்ணி குடிச்சுக்கிட்டே இருப்பாங்க. 'தண்ணின்னா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கு'னு சின்னப் பையன் நானும் நினைச்சுட்டு இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது, இட்லி கடையில் கிடைக்கிற வருமானத்தை வச்சு அம்மா, நான், ரெண்டு அக்கா, ரெண்டு தம்பினு ஆறு பேர் எப்படி சாப்பிட முடியும்? அதான் எங்க அம்மா தண்ணீரை குடிச்சே வயித்தை நிறைச்சுட்டு இருக்காங்க.

இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க 'யூத் ஐகான்' விருதும் பெற்றவர் சரத்பாபு. ஐ.ஐ.எம்-மில் படித்தவர்களெல்லாம் பல லட்சம் மாத சம்பளத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களில் உயர் பதவிகளில் செட்டில் ஆவது வழக்கமாக இருக்க... சரத்பாபு எடுத்தது மாறுபட்ட முடிவு. பொதுவாக ரிப்பன் வெட்டும் எந்த நிகழ்ச்சிக்கும் போகாத இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, சரத்பாபு முதல் முதலாக காலேஜ் ஒன்றில் கேன்டீன் துவங்கியபோது அதன் துவக்க விழாவுக்கு வந்து இவரை உற்சாகப்படுத்தினார்.
நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) எம்.பி.ஏ. பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற 'பிட்ஸ்-பிலானியில்' இன்ஜினீயரிங் பட்டமும் வாங்கியவர். ஐ.ஐ.எம்-மிலும், பிட்ஸ்-பிலானியிலும் படித்த அத்தனை பேரிடம் இல்லாத ஒரு கூடுதல் 'தகுதி' சரத்பாபுவுக்கு உண்டு.
ஆம். சரத்பாபு மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர்! அவருடைய அம்மா மடிப்பாக்கத்தில் தெருவோரம் சிறு இட்லி கடை நடத்தியவர். அதன்மூலம் கிடைத்த வருமானத்தில்தான் இத்தனை பட்டங்களையும் பெற்றார் சரத்பாபு.


Hindu வில் வந்தவை..




“Amma could have sent me to work and made her life much easier. But, she chose to make me study... I had to give my best”




Mr. Sarathbabu attributes his career growth to the calculated risks he took at the beginning. He started off with two people.




“We did the organising and also doubled up as waiters and served the food to clients. Part of me kept asking, you’re an IIM-A product, should you be doing this?... And the other part of me kept saying, it does not matter what you do, just do it well.”


ஒரு சாதாரண வேலைக்கு கூட...எத்துனை கேள்விகள்...படிப்பு..முன் அனுபவம்..திறமை...என்று கேட்கிறார்கள்...நமக்காக உழைக்க ஒருவனை அனுப்பும் போது சரத்பாபு போன்ற படித்த, கஷ்டமும்,நிஜமும்,சூழ்நிலைகளும் நன்கு தெரிந்த ஒருவனை அனுப்பி வைக்க பத்திரிகைகளும் உதவ வேண்டும். நாளைய இந்தியாவிற்கு...இதுவே முதல் மையில் கல்லாக இருக்கட்டுமே...

எனக்கு தெரிந்து ஜூ.வி சமிபத்தில் செய்த பெரிய விஷ்யம் இது போன்றவர்களை பற்றி கட்டுரை எழுதியது.

8 comments:

Anonymous said...

அற்புதமான பகிர்வுக்கு நன்றி. சரத்பாபு வெற்றிக்கு வித்திடுவோம்.

தமிழ். சரவணன் said...

அன்புச் சகோதரனே சாக்கடையில் இறங்கிய முத்தே வாழ்க பல்லாண்டு... நாங்களலேலம் வேடிக்கை மனிதனைபோல் தின்று கலிந்து செத்துக்போகின்றோம்.. பாரதி கண்டவன் நீ... வாழ்க வளமுடன் வளர்க மக்கள் பலமுடன்...

கண்ணா.. said...

நன்றி குளோபன், தமிழ்.சரவணன்,

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்....

Tech Shankar said...

சரத்பாபு மற்றும் பதிவைப் பகிர்ந்த வெங்கடேஷ்-கண்ணாவுக்கு வாழ்த்துகள்

கண்ணா.. said...

தமிழ் மண நட்சத்திரம்...தமிழ் நெஞ்சத்தின்..வருகைக்கும்... வாழ்த்துக்கும்....நன்றி

அடிக்கடி கடை பக்கம் வாங்க.....

Anonymous said...

நானும் தான் சரத் பாபு பக்கம் நிற்பவன்:
http://rammohan1985.wordpress.com/2009/04/15/sarath-babu/

Suresh said...

Mr Kannan very good post, i saw ur comments in both athisaha and luckylook blog.

Your comments and my comments are same, i dont know why these guys are making cheap publicity for a good candidate and they were using romba mosamana varthaigal

Good to see your post i am becoming ur follower

sundar said...

Hi sarath,
my vote for you.all the best