Saturday, April 25, 2009

ஈழத்து சிறுமி...









சாகக் கிடக்கிறான்
என் அண்ணன்
சிரித்து கொண்டே….

ஏன் சிரிக்கிறாய் ?
கேட்டதற்கு சொன்னான்.
நண்பர்கள் எல்லாம்
சிங்கள குண்டுகளால்
செத்து மடிகையில்

அவனின்
மார்பை துளைத்தது
இந்திய குண்டுகளாம்…

எனக்கு
விளங்க வில்லை
இந்தியாவில் இருந்து
காப்பாற்ற அல்லவா
வருவார்கள் என சொன்னான்…

சிரித்து கொண்டே
மரித்து போனான்…

என்னால் சிரிக்க
முடிய வில்லை .......................



ஈழம்..





ஈழம்..

மனிதன் மரத்து
போனதின் காயம்

மனிதம் மரித்து
போனதின் சாயம்…..

இரத்தங்களற்ற விடியலும்…..
யுத்தங்களற்ற பூமியும்
ஏன் ஈழனுக்கு இல்லை?

ஈழப் பிறவிகள் - என்ன
ஈனப் பிறவிகளா?

முன்னொரு காலத்தில்
மனிதன் என்றொரு
உயிரினம் இருந்ததாம்
இப்போது அவன்
எங்கே என்று
தெரிய வில்லை…

நாங்கள். யாரிடம்
போய் புலம்ப ……..

7 comments:

வினோத் கெளதம் said...

kanna

valikintra variyil irukkinthrathu kavithai.

கண்ணா.. said...

நன்றி வினோத்...

தீப்பெட்டி said...

நன்றாக உள்ளது...
தொடர்ந்து எழுதவும்.

கண்ணா.. said...

நன்றி தீப்பெட்டி,

வருகைக்கும், கருத்துக்கும்...

நல்லதா நாலு வார்த்தையை கேட்கும் போது .. மனசு சந்தோஷமா இருக்கு.....

Suresh said...

//மனிதன் மரத்து
போனதின் காயம்

மனிதம் மரித்து
போனதின் சாயம்…..//

உங்கள் கவி வலியின் உண்மையை சொல்லி இருக்கு
கண்கள் அழுகின்றது

Suresh said...

/சிரித்து கொண்டே
மரித்து போனான்…

என்னால் சிரிக்க
முடிய வில்லை .........//

:-( என்னாலும் சிரிக்க முடியவில்லை

கண்ணா.. said...

நன்றி சுரேஷ்,

உங்கள் வருகைக்கு

உங்கள் 50வது பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்