Monday, August 28, 2017

மெழுகு பிள்ளையார்

விநாயகர் சதுர்த்தின்னாலே சின்ன வயதில் நிறைய்ய பசங்களோட சேர்ந்து மெழுகு பிள்ளையார் பண்ணுவோம். எப்பிடின்னா,



வயக்காட்டுல போயி களிமண் நிறைய்ய எடுத்துட்டு வந்து தடிமனா ஒரு பிள்ளையார் சிலையை அழுத்தும் அளவுக்கு தட்டி வச்சுக்குவோம்.

பின்ன யார் வீட்டுல இருந்தாவது பிள்ளையார் சிலையை எடுத்துட்டு வந்து, களிமண் தடிமனில் வச்சு அழுத்தி , பிறகு பிள்ளையார் சிலையை எடுத்துருவோம். அதனால பிள்ளையார் அச்சு களிமண்ணில் தெளிவாக பதிச்சுரும்

நிறைய்ய மெழுகுவர்த்தி துகளை சேமிச்சு வச்சுருப்போம். மெழுகுவர்த்தியில் இருந்து வழிஞ்ச துகளாத்தான் பெரும்பாலும் இருக்கும்

அதை ஒரு சட்டியில் போட்டு நல்லா சூடு பண்ணினால், மெழுகு உருகி திரவ நிலைக்கு வந்துரும்.

பின் அதை களிமண் மோல்டில் ஊத்தி, நல்லா ஆறி மெழுகு திட நிலைக்கு வந்த பின் களிமண்ணை எடுத்து கழுவி மெழுகு பிள்ளையாரை ரெடி பண்ணிருவோம்.

பிள்ளையார் சதுர்த்திக்கு அதை வைச்சு பூஜை பண்ணிட்டு, மறுநாள் மெழுகு பிள்ளையாரை சட்டியில் போட்டு சூடு பண்ணினால் பிள்ளையார் கரைந்து மெழுகாவே இருக்கும்.

#நாங்கல்லாம் அப்பவே அப்புடி
#வில்லேஜ் விஞ்ஞானி :-))

No comments: