Monday, August 16, 2010

வீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D

நீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். இது இலவசமாக கிடைக்கும் இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் இந்த மென்பொருளின் சிறப்பாக சொல்லலாம். கட்டில் சேர் போன்ற இண்டீரியர் பொருட்களின் ஸ்டேண்டர்ட் அளவுகளின் பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால் நம் தேவைக்கேற்ப பொருத்தி பார்த்து அறையின் அளவுகளை மாற்றி கொள்ளவும் மிக எளிதாக இருக்கிறது.நீங்கள் ஆட்டோகேட் அல்லது 3D Home Architect உபயோகித்திருந்தால் இந்த மென்பொருளை உபயோகிக்க எந்தவித சிரமமும் இருக்காது. அது தெரியாதவர்கள் உபயோகிப்பதற்காக சிறிய அறிமுக விளக்கம் மட்டும். இதில் உள்ள அளவுகள் அனைத்தும் செமீ ல் உள்ளீடு செய்ய வேண்டும். 10அடிக்கு 10 அடி எனில் அதை முதலில் செமீக்கு மாற்றிக்கொள்ளுங்கள் 10 அடி = 305 செமீமேல் வரிசையில் plan மெனுவில create walls என்பதை க்ளிக் செய்யவும். பின் வலது பக்க பேனலில் க்ளிக் செய்து அறை அளவுகளை கொடுத்து வரைய ஆரம்பியுங்கள். ஓரு அறை போன்ற அமைப்பு மட்டும் வந்தால் போதும் மற்றவற்றை எடிட் பண்ணும் வசதி இருக்கிறது. எந்த சுவரை எடிட் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த சுவரை டபுள் க்ளிக் செய்தால் அந்த சுவரின் அளவுகள் தனி விண்டோவில் தெரியும் அதில் நமக்கு தேவையான நீளம், அகலம் மற்றும் உயர்த்தை மாற்றி கொள்ளலாம்.

சைடு பாரில் இருக்கும் டோர்ஸ் அண்ட் வின்டோஸ் ஆப்ஷனை பயன்படுத்தி தேவைப்படும் கதவை தேர்ந்தெடுத்து ட்ராக் செய்து ப்ளானில் தேவைப்படும் இடங்களில் வைத்து விடுங்கள். விண்டோவிற்கும் இதே முறையில் செய்யுங்கள்

இதில் பெட்ரூம், பாத்ரூம், சமையலறை மற்றும் ஹால்களுக்கான பர்னிச்சர் செட்கள் இன்பில்ட் ஆக இருப்பதால் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து வைத்து பார்த்து கொள்ளலாம்.எடிட் ஆப்ஷனை தேர்வுசெய்து நமக்கு தேவையான அளவுகளை மற்றூம் கலர்களை மாற்றி பார்த்து கொள்ளலாம். புதிதாக வீடு கட்ட போகிறவர்கள் மற்றும் வீடு கட்டி கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான மென்பொருள். குறிப்பாக இண்ட்டீரியர் டிஸைனுக்கு இது மிகவும் உபயோகமான மென்பொருள். இது முற்றிலும் இலவசமாகவே கிடைக்கிறது. இந்த சுட்டியில் தரவிறக்கி இன்ஸ்டால் செஞ்சுகோங்க.
18 comments:

நாஞ்சில் பிரதாப் said...

கலக்கல்வோய்...

நீரு ஒரு hitech கொத்தனாருன்னு நிருபிச்சுட்டிருவோய்... மைன்டுல வச்சுருக்கேன்.... :))

மதார் said...

super kanna , i will try it soon .

நாடோடி said...

இவ்வ‌ள‌வு வ‌ச‌தி வ‌ந்திடுச்சா த‌ல‌.. நானும் ஒரு வீடு க‌ட்ட‌னும், இதில் பிளான் ப‌ண்ணி பார்க்கிறேன். ப‌கிர்விற்கு ந‌ன்றி த‌ல‌.. ஏதாவ‌து ட‌வுட்டுனா உம‌க்கு தான் மொத‌ மெயிலு..

Chitra said...

ஆஹா.... இது சூப்பர் ஐடியாவா இருக்கே!

ஜிஎஸ்ஆர் said...

நல்ல பதிவு இதே போல இன்னும் மூன்று மென்பொருள்கள் இருக்கின்றன விரைவில் தங்களுக்கு அறிய தருகிறேன்

எஸ்.கே said...

நல்ல மென்பொருள் கூகுள் கூட ஒரு 3டி மென்பொருள் தருவதாய் கேள்விப்பட்டேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

அறிமுகத்துக்கு நன்றி கண்ணா,
அவசியம் முயன்று பார்க்கிறேன்

கண்ணா.. said...

வாலே மக்கா நாஞ்சிலு,

மைண்டுலயே வச்சுரும்.... வேலையை மட்டும் குடுத்துறாதீரும்...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க மதார்

டிரை பண்ணி பாருங்க...ரொம்ப நல்லா இருக்கு...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க நாடோடி அலைஸ் ஸ்டீபன்

டிரை பண்ணுங்க நல்லா இருக்கும்... எந்த டவுட்டுன்னாலும் எப்ப வேணாலும் மெயில் பண்ணுங்க..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க சித்ராக்கா..

இது அடுத்தவங்க ஐடியா அதான் நல்லாருக்கு

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க ஜிஎஸ்ஆர்

தொழில் நுட்ப குருவே.! சீக்கிரம் தாங்க அந்த மென்பொருள்களை

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க எஸ் கே,

ஆமா கூகிளிலிலும் இதே போல் இருக்கு ஆனா இது அதை விடவும் எனக்கு எளிமையா இருக்கு. அதனால்தான் பகிர்ந்தேன்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க கார்த்தி,

இன்னும் இதை முயற்ச்சிக்கலையா.... டிரை பண்ணி பாருங்க... நல்லா இருக்கும்....

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க கண்ணா,

எல்லாத்துக்கும் பதில் கமெண்ட் போடுறீங்க உங்களை யாரும் பாராட்ட மாட்றாங்களே.... அதனால் நானே உங்களை பாராட்டிற்றேன்....

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

உபயோகமுள்ள தகவல் கண்ணா.

அப்புறம் அந்த தொடர் என்னாச்சு?

d.vinoth said...

இன்று தான் முதன்முதலில் இத்தளத்திற்கு வருகிறேன். அருமை... இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து வெளியிடவும். பிறவற்றைவிட தொழில்நுட்ப கட்டுரைகளை அதிகம் வெளியிடவும்.

balaji .m said...

Hi kanna,
This is the useful information to all civil engineers. Thank you for your info.