Wednesday, August 18, 2010

ரத்து செய்.. ரத்து செய்... உமாசங்கர் சஸ்பெண்டை ரத்து செய்...



தருமி ஐயாவின் வேண்டுகோளுக்கிணங்க இந்த புதன் கிழமை திரு உமாசங்கர் ஐஏஎஸ் அவர்களுக்கு ஆதரவாக அவர் சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து இந்த சிறிய பதிவை எழுதுகிறேன்..

உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.


அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.


( நன்றி தருமி ஐயா, வால் பையன்)

11 comments:

Unknown said...

உமாசங்கருக்கு என் ஆதரவு. அரசுக்கு என் கண்டனம்.

Anonymous said...

நேர்மையான அதிகாரியின் சொல் நிச்சயம் அம்பலத்தில் ஏறும்

Prathap Kumar S. said...

எனது கண்டனங்களும்...

உமக்கும் என் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்... இந்த பதிவை தாமதமாக வெளியிட்டதற்கு.

ஜெய்லானி said...

உள்ளேன் ஐயா

செ.சரவணக்குமார் said...

எனது கண்டனங்களும். பகிர்வுக்கு நன்றி கண்ணா.

geethappriyan said...

நண்பர் சாத்தூர் மாக்கான் - இராமசாமியும் ஒரு பதிவு இது பற்றி போட்டிருக்கார்.
உமாசங்கர் செய்த நல்லவற்றை ஒரு சிறு பட்டியல் இட்டிருக்கலாம்,அல்லது லிங்காவது கொடுத்திருக்காலாம் நண்பரே.அது அவரை பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும்.

எப்படி ஆற்காடு வீராசாமிஎன்றால் சிக்ஃபேஸ், தொடர் மின்வெட்டு நினைவுக்கு வருமோ
உமாசங்கர் என்றால் நேர்மை தொலைநோக்கு பார்வை நினைவுக்கு வரும். பள்ளிக்குடம் படத்தில் வந்த நரேன் பாத்திரத்துக்கு உமாசங்கர் தான் இன்ஸ்பிரேஷன் என தங்கர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

geethappriyan said...

கொடுத்த பணத்தை திரும்ப கேட்க வந்த பெண்ணை சுமார் 9பேரோடு சேர்ந்து கேங் ரேப் செய்து அதை வீடியோவும் எடுத்து மிரட்டிய ராமேஸ்வரம் திமுக கவுன்சிலரும்,அவரை பிடித்து உள்ளே போட புகாரை ஏற்றுக்கொள்ளாத பெண் கமிஷ்னர்,கடைசியில் நிலமை விபரீதமாக போக போனாபோகுது ,அரெஸ்ட் பண்றாமாதி பண்ணுவோம்,போட்டோ புடிப்போம் ,அதன் பின் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிடுங்கள் என்று ஆலோசனை சொல்லுபவர்களே ஆளும் வர்க்கம்

நாடோடி said...

நான் த‌னி ப‌திவாக‌ எழுதாம‌ல் என‌து ந‌ண்ப‌ரின் த‌ள‌ம் என்ற‌ முறையில் அர‌சுக்கு எதிராக‌ என‌து க‌டுமையான‌ க‌ண்ட‌ன‌ங்க‌ளை இங்கு ப‌திவு செய்கிறேன்..

சிநேகிதன் அக்பர் said...

எனது கண்டனங்களும்...

Chitra said...

அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

.... Yes!

Ahamed irshad said...

எனது கண்டனங்களும்...