Wednesday, March 10, 2010

சாரு பெரியாரிஸ்டா – ஜுவி காமெடி

இவ்வார ஜுனியர் விகடனில் வெளிவந்த சாரு பேட்டியை விட அவரை குறித்த ஜுவியின் அறிமுகம்தான் பயங்கர சிரிப்பை வரவழைத்த்து. சாருவை பெரியாரிஸ்ட் என அறிமுகப் படுத்தி சிரிப்பு மூட்டி இருந்த்து. எந்த பெரியாரிஸ்ட் சாமியாருக்கு சொம்பு தூக்கியிருக்கிறார். கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாமல் இந்த அடைமொழியை கொடுத்திருக்கிறார் ஜுவி நிருபர்.



இதில் வழக்கம் போல் சாரு சரவெடி காமெடிகளை உதிர்திருக்கிறார். இதுவரை நாலாயிரம் ஏமாந்தேன் என்றவர் இப்போது அவர் இருபத்து ஐந்தாயிரமும் அவர் மனைவி ஒரு இலட்சமும் ஏமாந்து இருக்கிறார் என கூறுகிறார்.

யோவ் நித்தி ஒழுங்கா இப்பவே உண்மையை ஒத்துக்கோ...இல்லேன்னா போக போக அமெளண்ட் ஏறிரும்.

அவரின் அந்த கேள்வியும் பதிலும் கீழே.

கேள்வி:

'நீங்கள் சாமியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் புகழ் புராணம் பாடியதாகவும், இப்போது அதை மறைப்பதற்காக சாமியார் மீது வழக்குப் போடப் போவதாகவும் சொல்லப்படுகிறதே?''

பதில்:

''பணம் சம்பாரிக்கணும்னா நான் எப்படி வேணும் னாலும் சம்பாரிச்சிருப்பேன். எவ்வளவு வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன். சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு பல தடவை அவனுக்கு நான்தான் தண்டம் அழுதிருக்கேன். புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்கு பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு. இதுக்கிடையில கும்ப மேளாவுக்கு போறதுக்காக என் மனைவி ஒரு லட்ச ரூபாயை அவன்கிட்ட கொடுத்திருக்கா. அதையெல்லாம் திருப்பித் தரச் சொல்லித்தான் அவன் மேல நான் வழக்குப் போடப் போறேன். மத்தபடி சில மாமா பயலுக கிளப்பிவிடுற கதைக்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்!''

அடங்கொன்னியா... அடங்கவே மாட்டியான்னு கேட்க தோணுதுங்க... அட அவன விடுங்க..  எழுத்தாளர் எல்லாம் புத்திசாலி, காவி உடுத்தரவனெல்லாம் சாமியார்ன்னு நம்புற ஜனங்க இருக்குற வரைக்கும் இவனுங்க கல்லா கட்டிகிட்டேதான் இருப்பாங்க.

இப்போ நித்தி – ரஞ்சிதா விஷயத்தில் குமுதமும், ஜூவியும் கல்லா கட்ட ஆயத்தமாகி விட்டது. அதை வைத்து இவரும் குமுதம் ரிப்போர்ட்டரில் தொடர் எழுதப்போவதாக கேள்வி. இப்பொதெல்லாம் இவரை விடவும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

46 comments:

திவ்யாஹரி said...

//யோவ் நித்தி ஒழுங்கா இப்பவே உண்மையை ஒத்துக்கோ...இல்லேன்னா போக போக அமெளண்ட் ஏறிரும்.//

ஹா..ஹா..ஹா..

//எழுத்தாளர் எல்லாம் புத்திசாலி, காவி உடுத்தவனெல்லாம் சாமியார்ன்னு நம்புற ஜனங்க இருக்குற வரைக்கும் இவனுங்க கல்லா கட்டிகிட்டேதான் இருப்பாங்க//

சரியாச் சொன்னீங்க கண்ணா.. திருந்தவே மட்டங்க.. அடுத்ததா ஒரு சத்தியானந்தம் வருவார் பாருங்க..

கோவி.கண்ணன் said...

//சாருவை பெரியாரிஸ்ட் என்று நக்கலடித்திருக்கிறார்கள் விகடனில். நித்தியானந்தா மாட்டியதற்கு முன்பா அல்லது பின்பா என்று தெரியவில்லை.//

சாரு போன்ற சாமியார் புகழ்பாடிகளை ஜூவி பெரியாரிஸ்டாக காட்ட முயற்சிப்பதற்கு வழக்கமான பெரியார் மீதான வெறுப்பாகத் தான் இருக்கும்

Chitra said...

//எழுத்தாளர் எல்லாம் புத்திசாலி, காவி உடுத்தவனெல்லாம் சாமியார்ன்னு நம்புற ஜனங்க இருக்குற வரைக்கும் இவனுங்க கல்லா கட்டிகிட்டேதான் இருப்பாங்க//

........ :-)

ஹுஸைனம்மா said...

அப்பப்ப கையில காசில்ல; யாராவது என் அக்கவுண்ட்ல காசு போடுங்கன்னு எழுதுவார்; இதுக்கெல்லாம் எப்படி கிடைச்சுதாம்?

தேடுதல் said...

யேய்..என்னாங்கடா இது..ரூட்ட குடுக்கிறீங்களா...

என்னமோ சரக்கு அடிக்க காசில்லங்கிறீங்க..அப்புறம் திரும்பி வீட்டுக்கு வர்ரதுக்கு ஆட்டோக்கு அம்பது ரூவா கூட இல்லன்னு அழுவுரீங்க..

இப்ப என்னடான்னா இருபதாயிரம், ஒரு லட்சம்ன்னு அள்ளி குடுத்ததா சொல்றீங்க.. என்னாங்கடா.......


சாமியார் கூட ரெண்டு மாசமாத்தான் பழக்கம்னு சொல்லிரீங்க அதுக்குள்ள அவன நம்பி இவ்வளவு பணம் குடுக்கமுடியுதாம். இவ்வளவு வருச தண்ணி பழக்கத்துக்கு காசில்லையாம். யப்பா நீங்க சொன்ன காசெல்லாம் கூட்டிப் பாத்தா வருசம் புல்லா யாரிட்டயும் பிச்ச எடுக்காம சரக்க அடிச்சுகிட்டே இருக்கலாமேப்பா..

ஆனா ஒன்னு....ஜெமோ சாருக்கு புனைவு எழுத்தே வராது பத்தி எழுத்தாளர்ன்னு சொல்றாரு. அது தப்பு ஒரிஜினல் புனைவு எழுத்தாளர்ன்னா அது சாருதான்.

ஈரோடு கதிர் said...

நேத்து சாரு ஒரு அறிவிப்பு கொடுத்திருக்கிறாரு... அது இன்னும் காமடி...

நாடோடி said...

//இப்பொதெல்லாம் இவரை விடவும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. //

உண்மை தான் ...

ரவி said...

கெடக்கறது கெடக்கட்டும் கெழவிய தூக்கி மனையில வை..!!!

உமர் | Umar said...

//சாமியைப் பார்க்க ஐயாயிரம்//

கார்ல போகும்போதும் பாத்ததா சொன்னீங்களே; அதுக்கும் பணம் கொடுத்தீங்களா அப்பு? இவ்வளவு ஏமாளியா இருக்கியளே! உங்கள நம்பி ஒரு தம்பி வேற செல்போனைத் தூக்கி வீசப் போறன்னு சொல்லிக்கிட்டுத் திரியுது.

உமர் | Umar said...

//புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்கு பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு. இதுக்கிடையில கும்ப மேளாவுக்கு போறதுக்காக என் மனைவி ஒரு லட்ச ரூபாயை அவன்கிட்ட கொடுத்திருக்கா//

அந்த பழைய பாக்கில கழிச்சிக்க சொல்ல வேண்டியதுதானே அப்பு? வெவரம் தெரியாத ஆளா இருக்கீயளே!

உமர் | Umar said...

//அதையெல்லாம் திருப்பித் தரச் சொல்லித்தான் அவன் மேல நான் வழக்குப் போடப் போறேன்.//

அது போடறத விட ஆள் கொணர்வு மனுவா போடுங்க! ஒங்களுக்குப் புண்ணியமாப் போகும்! போலிஸ் வேற கண்ணுல என்னென்னமோ விட்டுட்டுத் தேடுறாங்களாம். ஆளு அம்புடமாட்டங்கிறப்லாயாம்.

உமர் | Umar said...

//மத்தபடி சில மாமா பயலுக கிளப்பிவிடுற கதைக்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்!'//

அட ஒங்கத் தொழில் என்னங்குரதுதான் எல்லாருக்கும் தெரியுமே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பாவம் விடுங்கையா? அவரை
நானும் மின்னஞ்சலில் இவர் குமுதம் தொடர் பற்றிக் கேட்டபோது; மிக ஆத்திரப்படுகிறார்.
மகாபாரத ஸ்லோகம் எல்லாம் ஒப்புவிப்பராமே! ஆசாமி. அதனால் அவர் கடவுளாம்.
இப்போ மொத்தத் திருக்குறளையும்; ஒப்புவித்த எத்தனையோ குழந்தைகள் தொலைக்காட்சியில்
வருகிறார்களே! அவர்கள் கடவுளா?
சங்கீத ராகங்கள் அத்தனையையும் இனம் காணும் குழந்தைகள்; இருக்கிறார்களே! அவர்கள்
கடவுளா?
இப்போது கூட தடியால் தொட்டார்; வலி மறைந்தது எனப் பீலா விடுகிறார்.
பெரியார் பாவம்...
நடந்த அல்லோகல்லத்தில்; இவர் தலையும் உருண்டதும்; ஆள் கலங்கி...இப்போ அதிகம் பேட்டி எனும்
பெயரில்
பிசத்துவதுகிறார். ஆவி; குமுதம் கல்லாக் கட்ட தயாராகிவிட்டது. இவரும் மனம் மாறி விட்டார்.

அன்புடன் நான் said...

அந்த பேட்டியில சாருவேட வீட்டுகாரம்மாவை நித்தி ஒரு தடவ தொட்டதுமே வியாதி குணமாகிவிட்டதாம்......சொன்னவர் பெரியாரிஸ்ட்....

அய்யோ... அய்யோ!

சிநேகிதன் அக்பர் said...

கண்ணா நீங்க சொன்ன மாதிரி எழுத்தாளருன்னா புத்திசாலியா இருக்கணும்னு அவசியம் இல்லை. ஆனால் சில பேர் எழுத ஆரம்பித்து நாலு புத்தகம் வெளியாகிவிட்டாலே தன்னை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

அறிஞர்கள் தங்களை அவ்வாறு கூறிக்கொள்வதில்லை. அவர்களுக்கு அது அவசியமும் இல்லை.

அவரின் எழுத்துக்களுக்கு வேண்டுமானால் வாசகர்கள் இருக்கலாம். அவரின் செயல்களுக்கு அல்ல.

அப்புறம். நீங்க அமைதியானவரு இந்த மாதிரி மேட்டர் எழுத மாட்டிங்கன்னு நினைத்தேன். நீங்களும் ரவுடிதான்னு உறுதிபடுத்திட்டிங்க. :)

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)))))))))))))))))))

puduvaisiva said...

அந்த மொக்க கூட்டத்தை நினைச்சா கவலையா இருக்கு.

வால்பையன் said...

அதான் இம்புட்டு காசு இருக்குல்ல!
பிறகு ஏன் ஜட்டி வாங்க காசில்ல, புட்டி வாங்க காசிலில்லன்னு புலம்பனும்!

geethappriyan said...

கண்ணா
தொப்பி தொப்பி
ஒரெ சிரிப்பு
அப்போ ஜூவியும் காமெடி பீஸா?
ஹஹஹஹாஹஹஹா
ஜூவிக்கு பதிவுலகத்துல என்ன நடக்குன்னே தெரியாதோ?
இப்போ தான் சாருவை ஒவ்வொரு ஆட்டொவில ஏத்தி மூத்திர சந்தா பார்த்து அடிச்சாய்ங்க,அந்த காயம் ஆறுவதற்குள்ளா?
ஐயகோ சாறு

வினோத் கெளதம் said...

ஆமாம் சாரு சாருனு சொல்றிங்களே மேத்ஸ் சாரா, சயின்ஸ் சாரா இல்லை PT சாரா ..!!

- யெஸ்.பாலபாரதி said...

//அதான் இம்புட்டு காசு இருக்குல்ல!
பிறகு ஏன் ஜட்டி வாங்க காசில்ல, புட்டி வாங்க காசிலில்லன்னு புலம்பனும்!//

ரொம்ப நாளைக்கு அப்புறம் ரிபிட்டு சொல்லவைத்த பின்னூட்டம் இது. வாலு... அசத்துற போப்பா..! :)

Prathap Kumar S. said...

தல சாருவோட யோக்கியம் என்னங்கிறதுதான் நமக்கு தெரிஞ்சவிசயமாச்சே... அவரு பேட்டியெல்லாம் படிச்சுட்டு பதிவு வேற போடுறீராக்கும்... ஏன் வலைப்புவை அசிங்கப்படுத்தறீரு...

தோழி said...

என்னக்கு சாரு அவங்களோட இணையத்தள முகவரி தாங்க....

கண்ணா.. said...

@ தோழி,

சாருவின் இணையதள முகவரி

http://charuonline.com/blog/

மைதீன் said...

கண்ணா, நீங்க படிச்சது நம்ம பள்ளிதானா? ரொம்ப சந்தோசம். பள்ளி அதானே ஒழிய படிப்பு அதிகமில்ல. ஒன்பதாம் வகுப்போட நிறுத்திட்டேன் வீட்டு சூழ்நிலையால அது எண்பத்தெட்டாம் வருடம் .அண்ணே என்று கூப்பிட தகுதி உள்ளவனா என்று கணக்குப்போட்டு பார்த்துக்கொள்ளவும்.உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது .நன்றி!

Unknown said...

Why can't Charu be a bonafide periyaarist?After all ,any tamil cutlet can be a swine.For your information the following cutlet community are recognized periyarists.
Yellow Towel,Suramani,seeman,Dr ramdoss and his offspring,govi.kannan,naxal guys like Vinavu and co and vinavus new found love Rudhran and uma rudhran etc etc.When these guys can call themselves periyarists why cant charu call himself a periyarist?

மதி.இண்டியா said...

//அதான் இம்புட்டு காசு இருக்குல்ல!
பிறகு ஏன் ஜட்டி வாங்க காசில்ல, புட்டி வாங்க காசிலில்லன்னு புலம்பனும்!//

என்னங்க கேள்வி இது ? அப்புறம் எப்படி ஏமாந்த இணைய வாசகர்கள் ICICI அக்கவுண்ட்ல பணம் கட்டுவாங்களாம் ?

☀நான் ஆதவன்☀ said...

//கண்ணா.., March 10, 2010 7:57 PM

@ தோழி,

சாருவின் இணையதள முகவரி

http://charuonline.com/blog/
//

இந்த பாவம் உன்னைய சும்மா விடாது தல :))

பாலா said...

இந்த சாரு, ஏகப்பட்ட பேரை (NRI) ஏமாத்தி, பஞ்சப் பாட்டுப் பாடியே காசு புடுங்கியிருக்குன்னு நினைக்கிறேன்.

வீடியோ நல்லாயிருந்தாலும் பரவாயில்லை. இவனுங்களை சகிச்சிக்கலாம்.

சனியம் பிடிச்சவனுங்க. அதையும் சரியா எடுக்க மாட்டேங்கறானுங்க. நித்தி மத்தவனுக்கு க்ளாஸ் எடுக்கறதுக்கு முன்னாடி.. மொதல்ல கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.

என்னை குருவா ஏத்துக்கலாம்! :) :) :)

கண்ணா.. said...

@ வாங்க தோழி திவ்யா ஹரி

நன்றி. அப்படியே சொல்லி திருந்திட்டாலும்..........


@ வாங்க கோவி கண்ணன்

நன்றி. இருக்கலாம்

@ வாங்க சித்ரா,

நன்றி

கண்ணா.. said...

@ வாங்க ஹுசைனம்மா,

சாரு மேல நிறைய பேரு கொல வெறிலதான் இருக்காங்களா.? எனக்குத்தான் தெரியாம இருக்கா?

வருகைக்கு நன்றி

@ வாங்க தேடுதல்

ஆமாங்க அவருதாங்க ஓரிஜினல் புனைவு எழுத்தாளர்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

@ வாங்க ஈரோடு கதிர்,

ஆமாங்க அதை நானும் பார்த்தேன்... என்னத்த சொல்ல

வருகைக்கு நன்றி

christianbrahmin said...

http://chillsam.wordpress.com/2010/03/11/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D/

வெட்டவெளிச்சமாக வெட்கமில்லாமல் தன்னை 'வுமனைஸர்' (விபச்சாரி..?) என்று சொல்லிக்கொள்வது தான் முற்போக்குக்(பெரியாரிஸம்?)கொள்கையா..?

கண்ணா.. said...

@ நாடோடி,

வருகைக்கு நன்றி

@ செந்தழல் ரவி

இதை விடவும் உங்க கவுண்டர் அட்டகாசம்.

வருகைக்கு நன்றி

@ கும்மி,

வந்து கும்மியதற்கு நன்றிகள் பல..

கண்ணா.. said...

@ யோகன் பாரிஸ்(Johan-Paris)

வாங்க வருகைக்கு நன்றி....

//பாவம் விடுங்கையா? அவரை
நானும் மின்னஞ்சலில் இவர் குமுதம் தொடர் பற்றிக் கேட்டபோது; மிக ஆத்திரப்படுகிறார்//

பின்ன....வேறென்ன பண்ண முடியும்..:)

@ சி. கருணாகரசு

வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

..பட் உங்க டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு

@ அக்பர்

வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

என்னையவே...அமைதியானவன் நினைச்சிட்டீங்களாக்கும்... நீங்க உண்மையிலயே அப்பாவிதான்..

:))

கண்ணா.. said...

@ வெற்றி கதிரவன்,

வாங்க வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி

@ புதுவை சிவா

வாங்க வருகைக்கு நன்றி.
உங்களுக்கு கவலையா இருக்கு...எனக்கு பாவமா இருக்கு

@ வால்பையன்,

வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
உங்க கேள்வியெல்லாம் அவரு படிச்சு பதில் சொல்ல முயற்சி பண்ணாருன்னா...... நினைச்சு பாக்கவே பயங்கர காமெடியா இருக்கு :))

Sunantha said...

//எனக்கு பத்து லட்சமோ, இருபது லட்சமோ நித்யானந்தாவிடமிருந்து கிடைத்திருப்பதாக உத்தமத் தமிழ் எழுத்தாளன் எழுதியிருக்கிறார் என்று என் நண்பரிடம் குறிப்பிட்டேன். அதற்கு ஏன் இப்படி சீப்பான ஆளா இருக்கிறான் அவன்? நினைப்பதைக் கூட லட்சத்தில் நினைக்கிறான். விலை போவதாக இருந்தால் பிச்சைக்கார காசு 20 லட்சத்துக்கா விலை போவான் ஒருத்தன்? பத்து கோடி இருபது கோடி என்று நினைக்கக் கூடாதா?//

இந்த ஆள் எப்பேர்ப்பட்ட டுபாக்கூர் என்று புரிந்துகொள்ள இந்த ஒரு ஸ்டேட்மென்ட் போதும்..எங்கே ஜெயமோகன் இப்படி சொல்லியிருக்கிறார்? பொதுவில் எழுதும் எழுத்தாளனது கருத்துக்களையே இவன் இப்படி திரிப்பான் என்றால் இவன் எழுதும் மற்ற விஷயங்கள் எவ்வளவு புருடாவாக இருக்கும் என்று பாருங்கள்...

கண்ணா.. said...

@ கார்த்தி

வாங்க தல

ஜூவில்லாம் எப்பவோ காமெடி பீஸ் ஆயாச்சு...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

@ வினோத்

வாடா மச்சி

சாரை தெரியாதா...சரி... நம்பிட்டோம் :))

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

@ பாலபாரதி

முதல் வருகைன்னு நினைக்குறேன். நன்றி

@ வே நாஞ்சிலு

வாவே...இல்லேன்னாலும் வலைப்பூ நாறாமத்தான் இருக்குதாக்கும்....

kishore said...

சரியாய் சொன்ன மச்சி.. செருப்பால அடிச்ச மாதிரி .. ஆனா சொம்பு நசுங்குனாலும் தூக்குறத விட மாட்டனுங்க..

லேட் கமெண்ட் பண்ணுனதுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.. :(

கண்ணா.. said...

@ தோழி

சாரு பதிவு என்னன்னு கேட்டு அவர பயங்கரமா கேவலப்படுத்தீட்டீங்களே.....

வருகைக்கு நன்றி

@ மைதீன்

திருநெவேலிகாரவுகள பதிவுல பாக்குறது சந்தோஷம்லா...நீங்க 1988 ல் 9ம் வகுப்பா அப்போ அண்ணன் தான்

வருகைக்கு நன்றிண்ணே.....

@chinnappenn2000 said...

வாங்க வருகைக்கு நன்றி

நீங்க சொல்லுறது சரியா புரலங்க...

கண்ணா.. said...

@ மதி இண்டியா,

வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

@ நான் ஆதவன்,

ஆமா தல இந்த பாவத்துக்கு என்ன பரிகாரம் பண்ணனும்..??

வருகைக்கு நன்றி தல

@ ஹாலிவுட் பாலா

வாங்க தல.. வருகைக்கு நன்றி

//சனியம் பிடிச்சவனுங்க. அதையும் சரியா எடுக்க மாட்டேங்கறானுங்க//

:-)))))))))))

கண்ணா.. said...

@ christianbrahmin

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

@ Sunantha

வாங்க அந்த டுபாக்கூரை ஜீரணிக்க முடியாமத்தானே இந்த பதிவே....

வருகைக்கு நன்றி

@ கிஷோர்

வாடா மச்சி,

லேட்டா வந்தாலும் ....... வந்தியே அதுவே போதும்...........

geethappriyan said...

http://chillsam.wordpress.com/2010/03/11/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D/

இதை படிக்கவும் செம கிழி

Prabu M said...

நண்பா..
உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன் (பிடித்த பத்து பெண்கள்)
சுட்டி: http://vasagarthevai.blogspot.com/2010/03/blog-post_12.html
ஓகே தானே :)

கண்ணா.. said...

@பிரபு . எம்

நன்றி நண்பா அழைப்பிற்கு

ப.கந்தசாமி said...

எனக்கு ஒண்ணு தெளிவாத்தெரியுதுங்க. இன்னிக்குத்தேதியில சாருவ விட பிரபல பதிவர், எழுத்தாளர், ........, (இங்கே என்ன வேணும்னாலும் எழுதிக்கலாம்) யாரும் இல்லை.

அவரைத்திட்டறதா நெனச்சு அவர் "டிஆர்பி" ரேட்டை எக்கச்சக்கமா ஏத்தியாச்சு.

ராஜ நடராஜன் said...

அடிச்சு துவைச்சுப் போட்ட விசயம்.அப்படியிருந்தும் கூட்டம்....ரொம்ப கூட்டம்.