Wednesday, February 10, 2010

தேவதை எனப்படுபவள் யாரெனில் தபுசங்கர் கவிதைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவளேதான்...

காதலர் தினத்துக்காக பதிவுலகமே கவிதைகளா எழுதி பரபரப்பா இருக்கறத பாத்த உடனே நானும் முடிவு பண்ணிட்டேன்.. நாமளும் கவிதை எழுதிரணும்டான்னு..   பேனாவை தொறந்து வச்சு வானத்தை பாத்த மேனிக்கு கண்ணை மூடிகிட்டு யோசிக்கறேன்..    ங்கொய்யால..  ஓண்ணுமே தோண மாட்டுக்கு... சரி என்னடா இது சத்திய சோதனைன்னு நினைச்சுகிட்டு... பெட்டிகுள்ள இருந்து பைஜாமால்லாம் போட்டு வைரமுத்து ரேஞ்சுக்கு நடந்து பாக்குறேன்... அப்பயும் கவிதை வருவனான்னு அடம் பிடிக்குது... பேசாம இதையெல்லாம் எண்டர் தட்டி கவிதைன்னு லேபிள் வைச்சுரலாமான்னு  (?!!!!)   யோசிச்சுகிட்டே பாத்தா தபுசங்கர் ஞாபகத்துக்கு வந்தார். அவர்தான் தேவதைகளின் கவிஞர் ஆச்சே..அவரோட கவிதையே எடுத்து போடலாம்னு முடிவு பண்ணி.. எனக்கு பிடித்த அவரின் சில கவிதைகளை பதிவிடுகிறேன்.  என்ஜாய் மக்கா..

-----------------------------------------------------------------

தபுசஙகரின் கவிதைகளில் எனை கவர்ந்தவைகள்


ஓரே ஓரு முறைதான்

எனினும்

உன் உன்னத நிழல்

என்மீது பட்ட போதுதான்

நான் ஓளியூட்டப்பட்டுக்

கவிஞனானேன்!



அற்புதமான காதலை

மட்டுமல்ல

அதை உன்னிடம்

சொல்ல முடியாத

அதி அற்புதமான

மெளனத்தையும்

நீதான் எனக்குத்

தந்தாய்


அழகான பொருட்களெல்லாம்

உன்னை நினைவு படுத்துகின்றன.

உன்னை நினைவுபடுத்துகிறவை எல்லாமே

அழகாகத்தான் இருக்கின்றன."




"உன்னிடம் பேச எவ்வளவு

ஆசைப்படுகிறேனோ அவ்வளவு

ஆசை உன்னிடம் பேசுபவர்களிடமும்

பேச வேண்டும் என்பதில்."




"நான் எது கேட்டாலும் வெட்கத்தையே

தருகிறாயே...வெட்கத்தைக் கேட்டால்

என்ன தருவாய்?."



காதல்தான்

நான் செய்யும் தவம்

என் கடுந்தவத்தைக் கலைத்து

என்ன வரம் வேண்டும் என்று

எந்த தெய்வமும்

என்னை கேட்காமலிருக்கட்டும்..

என் தவத்தைவிட

சிறந்ததாய்

எந்த வரத்தையும்

எந்த தெய்வத்தாலும்

தந்துவிட முடியாது!



'ஒரு நிமிடத்தில்


உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க

தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே' என்று

கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்...


'நீ கூடத்தான்

ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக

ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!'


நீ எப்போதும்

தலையை குனிந்தே

வெட்கப்படுவதால்

உன் மதிப்புமிக்க

வெட்கத்தையெல்லாம்

இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க

முடிகிறது!


ஓரேயொரு முறை

கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி

வெட்கப்படேன்..


வெகுநாட்களாய்

உன் வெட்கத்தைத் தரிசிக்க

துடிக்கிறது

வானம்!


என்னை

உடைப்பதற்காகவே

என் எதிரில்

சோம்பல் முறிப்பவள் நீ


நீ யாருக்கோ செய்த

மெளன அஞ்சலியைப்

பார்தத்தும்..
.
எனக்கும்

செத்துவிடத் தோன்றியது



அன்று

நீ குடை

விரித்தற்காக்க்

கோபித்துக் கொண்டு

நின்றுவிட்ட

மழையைப்

பார்த்தவனாகையால்


இன்று


சட்டென்று மழை

நின்றால்

நீ எங்கோ குடை

விரிப்பதாகவே

நினைத்துக்

கொள்கிறேன்


உன் அழகு

வெட்டி வைத்திருந்த

ஆழ்துளைக் கிணற்றில்

விழுந்த சிறுவன் நான்



‘என்னை எங்கு பார்த்தாலும்

ஏன் உடனே நின்று விடுகிறாய்:’

என்றா கேட்கிறாய்

நீ கூட்த்தான்

கண்ணாடியை எங்கு பார்த்தாலும்

ஓரு நொடி நின்று விடுகிறாய்

உன்னைப் பார்க்க உனக்கே

அவ்வளவு ஆசை இருந்தால்

எனக்கு எவ்வளவு இருக்கும்




கரையில் நின்றிருந்த

உன்னைப் பார்த்ததும்

கத்திவிட்டன

கடல் அலைகள்...

'கோடான கோடி ஆண்டுகள்

எம்பி எம்பிக் குதித்து

கடைசியில் பறித்தே

விட்டோமா

நிலவை!' என்று.



உன்னிடம்

என் இதயத்தைத் தொலைத்துவிட்டதாக

எப்போதும் புலம்பியதில்லை நான்.

எனக்குள் இருந்த இதயத்தைக்

கண்டுபிடித்துக் கொடுத்தவளே நீதான்


பல நூற்றாண்டுகள் ஆகுமாமே

ஒரு வைரம் உருவாக.

நீ மட்டும் எப்படி

பத்தே மாதத்தில் உருவானாய்?


உன்னைக் கடித்த எறும்புகளெல்லாம்

'தேவதையைக் கடித்த எறும்புகள் சங்கம்' என்று

ஒரு சங்கம் வைத்திருக்கிறதாமே



நீ ஆற்றில் குளிப்பதை

நிறுத்திவிட்டு

வீட்டுக்குள் குளியலறை கட்டிக்

குளிக்க ஆரம்பித்தாய்.

வறண்டு போனது

ஆறு.



சின்ன வயதிலிருந்து என்னை

தொட்டுப் பேசும் பழக்கத்தை

நீ நிறுத்திக்கொண்ட போதுதான்

தெரிந்துகொண்டேன்...

நீ என்னைக் கட்டிக்கொள்ள

ஆசைப்படுவதை!

31 comments:

Prabhu said...

சாமி, ஏன் இப்படி?

geethappriyan said...

லாரி பேக்கரின் கட்டிடத்தின் செலவுகளை குறைக்க உதவும் தொழில் நுட்பம் அடுத்த பாகத்தில் வரும்னு இருந்தேன் சரி,எதற்கடுத்த பாகம்னு சொல்லலேல்ல.
ஃபார்மாலிட்டி டன்

கண்ணா.. said...

வாங்க பப்பு

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

பிகு: இன்னும் நீ ஓட்டு போடலை...நற..நற....

கண்ணா.. said...

வாங்க கார்த்தி

வருகைக்கும் கருத்திற்கும் ஃபார்மலிட்டிக்கும் நன்றிகள் பல

//லாரி பேக்கரின் கட்டிடத்தின் செலவுகளை குறைக்க உதவும் தொழில் நுட்பம் அடுத்த பாகத்தில் வரும்னு இருந்தேன் சரி,எதற்கடுத்த பாகம்னு சொல்லலேல்ல//

ஹா..ஹா...தகவல்கள் ஓரு 5 பதிவுக்கு தேவையான அளவு திரட்டி விட்டேன்.. ஆனால் சுவாரஸ்யமான எழுத்து நடைதான் கொஞ்சம் பிரச்சினை....எல்லாம் எழுதி பார்த்து எனக்கே படிக்க போரடிக்குது... அதான் லேட்..... ஸாரி...

நாடோடி said...

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு....ரெம்ப தேடியிருக்கீங்க...

கண்ணா.. said...

வாங்க நாடோடி

ஆமாங்க படம்லாம் ரொம்ப நேரம் தேடினேங்க...பிடிச்சிருக்கா..:)


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Prathap Kumar S. said...

தல எல்லாப்படமும் சூப்பர்... இப்படி படஙகளைப்போட்டுட்டு கவிதையைப்படின்னா எப்படி படிக்கிறது?

எங்களை மச்சான்னு கூப்பிடுற ஒரே தேவதை நமீதாவின் படத்தை போடாததை வன்மையாக கண்டிக்கிறோம்....

வினோத் கெளதம் said...

தமன்னா மற்றும் பாவானா படங்கள் ரெண்டு தடவை வந்துள்ளது..
அப்புறம் சோனாலி பிந்த்ரே 'கிழவி' ஆகி நிறையா வருஷம் ஆகுது..

Chitra said...

உன்னிடம்

என் இதயத்தைத் தொலைத்துவிட்டதாக

எப்போதும் புலம்பியதில்லை நான்.

எனக்குள் இருந்த இதயத்தைக்

கண்டுபிடித்துக் கொடுத்தவளே நீதான்

...........உங்க இதயம் "துடிக்கும்" சத்தம், கவிதையில் கேட்க முடிந்தது.
நல்லா இருங்க, மக்கா.

வோட்டு போட்டாச்சு.

Prathap Kumar S. said...

ஹீஹீஹீ

கண்ணகி said...

அற்புதமான காதலை
மட்டுமல்ல
அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மெளனத்தையும்
நீதான் எனக்குத்
தந்தாய்

"உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு
ஆசை உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேச வேண்டும் என்பதில்

நீ ஆற்றில் குளிப்பதை
நிறுத்திவிட்டு
வீட்டுக்குள் குளியலறை கட்டிக்
குளிக்க ஆரம்பித்தாய்.
வறண்டு போனது
ஆறு.


அழகான கவிதைகள் அழகா....

நீங்கள் தேடிதேடிப்போட்டிருக்கும் படங்கள் அழகா....

படங்கள் மற்றுமொரு கவிதை...

malar said...

உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க

தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே' என்று

கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்...


'நீ கூடத்தான்

ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக

ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!'


அனுபவம் பேசுதோ....

படங்கள் எல்லாம் சூப்பர்..
பெண்னே பெண் சூப்பர் என்றால் ஒரு ஆண் ஏன் சொல்ல மாட்டான்.

ஆமாங்க படம்லாம் ரொம்ப நேரம் தேடினேங்க...பிடிச்சிருக்கா..:)

பொம்பள படம்னா நால்லா தேடுவிஹ...

கண்ணா.. said...

வாங்க நாஞ்சில் பிரதாப்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

//தல எல்லாப்படமும் சூப்பர்... இப்படி படஙகளைப்போட்டுட்டு கவிதையைப்படின்னா எப்படி படிக்கிறது?

எங்களை மச்சான்னு கூப்பிடுற ஒரே தேவதை நமீதாவின் படத்தை போடாததை வன்மையாக கண்டிக்கிறோம்....//

எப்பிடிய்யா இது .... எவ்ளோ கவிதை பீல் பண்ணி போட்றுக்கேன்..அதையெல்லாம் படிக்காம படத்தை பாத்து கமெண்ட் போட்றுக்க....

உன் கண்டத்தை ஏற்று கொண்டு அந்த படங்கள் மெயிலில் அனுப்பபடும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்

கண்ணா.. said...

வாடா வினோத் ,

//தமன்னா மற்றும் பாவானா படங்கள் ரெண்டு தடவை வந்துள்ளது..
அப்புறம் சோனாலி பிந்த்ரே 'கிழவி' ஆகி நிறையா வருஷம் ஆகுது..//

போன பதிவை படிச்சே பாக்காம கமெண்ட் போட்ட....இந்த பதிவுலயும் படத்தை மட்டும் பாத்துட்டு கமெண்ட் போட்றுக்க....அதுலயும் பாவ்னா, தமன்னா படத்தை எண்ணியிருக்க... என்னா...வில்லத்தனம்....!!!


அப்புறம் சோனாலி பிந்த்ரே படம் உன் ஏஜ் குரூப்புக்காக...என்ஜாய்.....

கண்ணா.. said...

வாங்க சித்ராக்கா...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

வோட்டு போட்டதுக்கு நன்றியோ நன்றி


//உங்க இதயம் "துடிக்கும்" சத்தம், கவிதையில் கேட்க முடிந்தது.
நல்லா இருங்க, மக்கா//

சத்தியமா இந்த கவிதையை நான் எழுதல....தபுசங்கர்தான் எழுதினார்...

இந்நாள் மனைவியை கவர்வதற்காக முன்னால் தேடி தொகுத்த கவிதைகள் இதெல்லாம்.....

கண்ணா.. said...

நாஞ்சில் பிரதாப்பின் மீள் வருகைக்கும் ஹீ..ஹீ..ஹீக்கும் :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


நன்றி

கண்ணா.. said...

வாங்க கண்ணகி,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

நீங்கதான் கவிதைகளை நல்லா படிச்சுருக்கீங்கன்னு தெரியுது....

தொடர்ந்து வாங்க

கண்ணா.. said...

வாங்க மலர்


வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல

//அனுபவம் பேசுதோ....//

அனுபவமேதான்.....


//பொம்பள படம்னா நால்லா தேடுவிஹ...//

அய்யய்யோ வீட்டுலயும் இதெல்லாம் படிப்பாங்க...நீங்க பாட்டுக்கு கோர்த்து விட்டு போயிறாதீங்க...

balu said...

tabu sankar kavithikal really superb.
also photos for the kavithai kal also nice

எவனோ ஒருவன் said...

எம்மா கொன்னுட்டிங்க...

" டேய் டேய் note பண்ணுங்கடா note பண்ணுங்கடா..."

உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு

கண்ணா.. said...

வாங்க balu

//tabu sankar kavithikal really superb.
also photos for the kavithai kal also nice//

Thanks...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.. தொடர்ந்து வாங்க..

கண்ணா.. said...

வாங்க BULLET மணி,



//" டேய் டேய் note பண்ணுங்கடா note பண்ணுங்கடா..."

உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு//

அடுத்தவன் கவிதையை உருவி போட்டா பெரிய எதிர்காலமாஆஆ....


பட் எனக்கு இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு.......

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தொடர்ந்து வாங்க

அப்துல்மாலிக் said...

தபூசங்கர் வரிகளுக்கு நான் அடிமை

அவ்வளவு வியக்க வைப்பார் வரிகளில்

பகிர்வுக்கு நன்றி தல‌

திவ்யாஹரி said...

காதலர் தினத்துக்காக பதிவுலகமே கவிதைகளா எழுதி பரபரப்பா இருக்கறத பாத்த உடனே நானும் முடிவு பண்ணிட்டேன்.. நாமளும் கவிதை எழுதிரணும்டான்னு.. பேனாவை தொறந்து வச்சு வானத்தை பாத்த மேனிக்கு கண்ணை மூடிகிட்டு யோசிக்கறேன்.. ங்கொய்யால.. ஓண்ணுமே தோண மாட்டுக்கு... சரி என்னடா இது சத்திய சோதனைன்னு நினைச்சுகிட்டு... பெட்டிகுள்ள இருந்து பைஜாமால்லாம் போட்டு வைரமுத்து ரேஞ்சுக்கு நடந்து பாக்குறேன்... அப்பயும் கவிதை வருவனான்னு அடம் பிடிக்குது... பேசாம இதையெல்லாம் எண்டர் தட்டி கவிதைன்னு லேபிள் வைச்சுரலாமான்னு (?!!!!)

ஹா ஹா ஹா எப்போதும் இப்படி தானா கண்ணா?..

கண்ணா.. said...

வாங்க அபுஅப்ஸர்,

தபுசங்கர் வரிகளுக்கு மயங்காதோர் உண்டோ.....


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க தோழி

//ஹா ஹா ஹா எப்போதும் இப்படி தானா கண்ணா?..//

எப்பவும் இப்படி இல்லை அப்பப்போ இப்பிடி...:)

malar said...

'''''''பேசாம திருநெல்வேலி தமிழ்நாட்டின் தலைநகரமா ஆக்கசொல்லி போராடுவோம்...''''


நல்ல தான் ஆப்பு வைக்கிறேங்க....

கலைஞர் ஜெய்லலிதா எல்லாரும் என்ன பன்னுவாஹா?போயஸ்ஸுயும் கோபாலபுரம் ,SIT காலனி சகிதம் வந்து இறங்குவார் அதை தொடர்ந்து விஜயகாந்த்,ராமதாஸ் .......அரசியல் இத்தியாதி எல்லாம் வந்து திருநெல்வேலி வந்து இறங்குவாஹ உங்களுக்கு அத்த ஒட்டி கான்ரேக்ட் பிஸ்னஸ் நடக்கும் பார்கிரீரோ விட்டுறவமாக்கும் ....

சிநேகிதன் அக்பர் said...

தபு சங்கர் கவிதை பிடிக்கும்.
அதுக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த படங்கள் ரொம்ப பிடிக்கிறது.

அன்புடன் மலிக்கா said...

கவிதை வரிகள் அத்தனையும் அழகு.

அம்மாடியோ படித்து முடித்துவிட்டேன்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அனைத்து கவிதைகளும் அருமை.. :)

நட்புடன் ஜமால் said...

எழுத்துகளுக்குள்
புதைத்து கொ'ல்'ள கவிஞர்களால் மட்டுமே இயலும்
.
சில
நேரம் இரசிகர்களாலும்