மனோகரா….மண்டைய போட்றாத… - கலைஞருக்கு சில கேள்விகள்…
தலைப்பை பாத்துட்டு நீங்களே ஏதாவது கற்பனை பண்ணீராதீங்க….இந்த பதிவு ரெண்டு பகுதியா இருக்கு…முதல்ல
என் ஆருயிர் நண்பன் மனோகரனை பத்தி… அப்புறம் நம்ம தானை தலைவர், தமிழன தலைவர் கலைஞருட்ட எனக்கு தெரியாத விஷயத்தை கேட்டு தெரிஞ்சுகலாம்னு…
மனோகரன்
என் ஆருயிர் நண்பன். அவன் நேத்து டீவில கலைஞர் உண்ணாவிரதம் இருக்குறத பாத்துட்டு அவனும் இருக்க ஆரம்பிச்சவந்தாங்க… இன்னும் அவன் நிறுத்தல….அவருக்காது ரெண்டு பொண்டாடியும் வந்து சூசு குடுத்தாங்க…. இவனுக்கு இன்னும் கல்யாணமே ஆகல…. யாரு வந்து சூசு குடுக்க… நான் போயி குடுக்க போனதுக்கு இலங்கைல யாரோ கோத்த பயலோ கோட்டி பயலோ ஓருத்தன் இருக்கானாம்ல அவன் வந்து நாங்க சண்டய நிப்பாட்டிடோம்னு பத்திரத்துல கையெழுத்து போட்டு தந்தாதான் முடிப்பேன்னு சொல்லுறான்.. இவனுக்கு ஏற்கனவே அல்சர் இருக்கு….. அதுபோக உடம்புல சொல்ல படாத இன்னும் பல வியாதில்லாம் இருக்குல்லா… அதான் அவன பாத்து சொல்லுறேன் மனோகரா….மண்டைய போட்றாத…
சாமி.. எனக்கு ஓரு உண்மை தெரிஞ்சாகணும்……
கலைஞரிடம் சில கேள்விகள்..
1) இலங்கைல போர் நிறுத்தற வரைக்கும் உண்ணாவிரதம்னு இருந்திய….ரொம்ப சந்தோஷம்.. ஆனா பாருங்க..இந்த சோனியா புள்ளயும் இந்த சிதம்பரம் பயலும் சேந்து உங்க கிட்ட பொய் சொல்லி உண்ணாவிரதத்த முடிச்சு புட்டாப்ல…. ஆனா அந்த விளங்காத பய ராஜபக்ஷே என்னன்னா போர் முடியலன்னு சொல்லிட்டான். இப்ப நீங்க மறுபடியும் உண்ணாவிரதம் இருப்பியளா… இல்ல என்ன பண்ணுவிய சொல்லும்..?
2) உங்க உடன்பிறப்புக்கெல்லாம் நேத்து காலைல 6 மணில இருந்து தமிழ் உணர்வு பீ…றிட்டு வந்து அங்கங்க உண்ணாவிரதம் இருந்தாங்க.. இப்ப அவங்க அந்த உண்ர்வ எங்கிட்டு வச்சுட்டு இருக்கானுக சொல்லும் ??
3) இந்த சிதம்பரம் பய மேலயும், சோனியா புள்ள மேலயும் பொய் சொல்லிடானுவன்னு சொல்லி போலிஸ் காரனுவட்ட போய் கேஸ் குடுப்பியளா.???
4) இந்த ராஜபக்ஷேயும் , கோட்டி பயலும் சேந்துகிட்டு போரை நிப்பாட்ட மாட்டன்னு சொல்லிட்டு இருக்கானுவ….. பின்ன இங்க இருந்து ரெண்டு தூது பயலுவ.. அங்க போயி என்ன புடுங்கிட்டு வந்தானுவ ???
5) அப்புறம் நம்ம கனிமொழியக்கா..இந்த விஷயத்துக்காக நேத்து ஏதும் உங்ககிட்ட ராஜினாமா லெட்டர் ஏதும் குடுத்துச்சா..????? குடுத்துன்னா எங்ககிட்ட சொல்லிருங்கப்பு.. நாங்களும் தெரிஞ்சுகுடுவோம்ல..