Monday, June 14, 2010

உறங்கத்தான் உன்னினைவு விடுவதில்லை..




வானவில்
வாழ்க்கையொன்று வாழ்ந்தேன்….

வாழ்வின்
அர்த்தம் தெரியாமல்…

உறங்கத்தான்
உன்னினைவு விடுவதில்லை..

சுட்டாலும்
சூரியன் மறைவதில்லை..

எழுதபடாத
என்னிதயத்தில்
வடிக்கபட்ட காவியமே..!!!

என்
வாழ்வின் அர்த்ததை
தெளிய வைத்த ஓவியமே…!!!

காலம்
எழுதிய காதல்பக்கங்களில்
இப்போது நீயும் நானும்…………..

இம்மென்று
சொல் இறுதிவரை
இணை பிரியா திருப்போம்…!!!

இல்லையென்று
சொன்னால்
இடுகாட்டில் தான்என் உறக்கம்……

என்
இறுதிபயணம் இமயத்தில்
அல்ல உன் இதயத்தில்……………!!

என் அஸ்தி
கரையவேண்டியது கங்கையில்
அல்ல உன் கண்ணீரில்…………….!!

இரக்கம்
கொள் உறங்காத
என் இதயம் உன்னருகில்……………….!!!!!!



டிஸ்கி:  இது ஓரு மீள் பதிவு. முன்னாடி பல பேர் இதை கவனிக்காததால் திரும்பவும். நிறைய பேரின் கருத்துக்களை அறிய வேண்டி இப்போது...

31 comments:

அன்புடன் நான் said...

கவிதை மிக அருமையாக வந்துள்ளது
பாராட்டுக்கள்.

அன்புடன் நான் said...

இம்மென்று
சொல் இறுதிவரை
இணை பிரியா திருப்போம்…!!!

இல்லையென்று
சொன்னால்
இடுகாட்டில் தான்என் உறக்கம்……//

இவ்வரிகள் டூயட் படத்தை வைரமுத்து எழுதியதை ஒத்து உள்ளது.
கவிதையின் வார்த்தைகள் அதே பொருள் கொண்டுள்ளது.... இவைதவிற்கப்பட வேண்டும். (இது என் தாழ்மையான கருத்துங்க)

Chitra said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க..... :-)

கண்ணா.. said...

வாங்க சி.கருணாகரசு,

முதல் வருகைன்னு நினைக்குறேன். வருகைக்கு நன்றி.

உங்கள் கருத்துக்கள் சரியானதுதான். இனி அதிக கவனமுடன் எழுத உங்கள் வரிகள் ஊக்கமளிக்கிறது

நன்றி.

பிகு: இது பல வருடங்களுக்கு முன் நான் ’டூயட்’ பாட முயற்ச்சித்த போது எழுதியது

நாடோடி said...

என்ன‌ த‌ல‌ இவ்வ‌ள‌வு அழ‌க‌ க‌விதை எழுதுறீங்க‌... அப்புற‌ம் ஏன் இப்ப‌ எழுதுற‌து இல்ல‌?..

நாடோடி said...

மேல‌ கேட்ட‌ கேள்விக்கு பிர‌தாப்பு ப‌தில் சொல்லிட்டாரு தல‌... இது க‌ல்யான‌த்துக்கு முன்னாடி எழுதின‌தாமே.....ஹி..ஹி..

நாடோடி said...

///இல்லையென்று
சொன்னால்
இடுகாட்டில் தான்என் உறக்கம்//

த‌ல‌ இப்ப‌ சுடுகாட்டுக்கே இட‌ம் இல்லையே.... அப்புற‌ம் எங்க‌ இடுகாடு?...

கண்ணா.. said...

வாங்க சித்ராக்கா,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க நாடோடி@ஸ்டீபன்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது போன்ற அதிரகசிய தகவல்களை எல்லாம் இப்பிடி பப்ளிக்கா சொல்ல கூடாது தல.. :)

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

சிநேகிதன் அக்பர் said...

கவிதை நல்லா இருக்கு கண்ணா. அடிக்கடி எழுதுங்க.

//மேல‌ கேட்ட‌ கேள்விக்கு பிர‌தாப்பு ப‌தில் சொல்லிட்டாரு தல‌... இது க‌ல்யான‌த்துக்கு முன்னாடி எழுதின‌தாமே.....ஹி..ஹி..//

//எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது போன்ற அதிரகசிய தகவல்களை எல்லாம் இப்பிடி பப்ளிக்கா சொல்ல கூடாது தல.. :)//

இது ரொம்ப நல்லாயிருக்கு ஹி..ஹி..ஹி...

வினோத் கெளதம் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு அட்டகாசம் , அனல் பறக்குது..

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை கண்ணா... கலக்கிட்டீங்க.. படமே ஆயிரம் கவிதைகள் சொல்லுதே.. வரிகள் மிக அருமை.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை மிக அருமை

ஜெகதீஸ்வரன்.இரா said...

உணர்ந்து எழுதியிருக்கீறீர்கள். காதலியின் சம்மதத்திற்க்கு காத்திருக்கிறீர்களா..? அவர்களை தொலைத்து தேடிக்கொண்டிருக்கிறீர்களா என்னைப் போல்..??

மிகவும் அருமை.

நிலாமதி said...

உங்க கவி வரிகள் படிச்சணுங்க நன்றாக் இருக்குங்க.

geethappriyan said...

கண்ணா கவிதையும் அருமை.
பலகலை வித்தகரா நீங்க?:)
பிளாக் ஓபனாக நேரம் எடுக்கிறதே?
பார்க்க..மீள்பதிவுன்னாலும் பெஸ்டு

அன்புடன் நான் said...

வாங்க சி.கருணாகரசு,

முதல் வருகைன்னு நினைக்குறேன். வருகைக்கு நன்றி.

உங்கள் கருத்துக்கள் சரியானதுதான். இனி அதிக கவனமுடன் எழுத உங்கள் வரிகள் ஊக்கமளிக்கிறது

நன்றி.

பிகு: இது பல வருடங்களுக்கு முன் நான் ’டூயட்’ பாட முயற்ச்சித்த போது எழுதியது//

இதே போல் எனக்கும் நடந்ததுண்டு
அது பெரிய சர்ச்சையாகி... பின் என்னை நான் நிருபித்தேன்... ஆனால் அந்த கவிதையை எனது நூலில் ஏற்ற வில்லை.
அந்த காரணத்திற்ககத்தான்....
பொறுப்பாக பதில் தந்தமைக்கு நன்றி.

Prathap Kumar S. said...

அட...பார்யா...என்னவே...
எப்பருந்து இதெல்லாம்...

கண்ணா.. said...

வாங்க வேலு,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

உங்கள் பக்கத்தில் உள்ள கவிதைகளும் படங்களும் மிக அருமை

கண்ணா.. said...

வாங்க அக்பர்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

நீங்க வேற அதையே காப்பி பேஸ்ட் பண்ணுறீங்களே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கண்ணா.. said...

வாங்க வினோத்து,

டேய் நான் இத்த முன்னாடி போட்ட பதிவிலயும் இதே மாதிரி டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்ட இப்பவுமா.....?!!!!

நீ இன்னும் திருந்தவே இல்லையா....அவ்வ்வ்வ்

கண்ணா.. said...

வாங்க ஸ்டார்ஜன்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. வரிகள் மற்றும் படத்தை ரசித்ததற்கும் நன்றி தல...

கண்ணா.. said...

வாங்க உலவு.காம்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

கண்ணா.. said...

வாங்க ஜெகதீஸ்வரன்.இரா

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

//காதலியின் சம்மதத்திற்க்கு காத்திருக்கிறீர்களா..? //

எனக்கு திருமணம் ஆகிவிட்டது :(

இதுக்கு மேல தேட முடியுமா??!! இது சும்மா ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி எழுதினது. ப்ளாக் ஃபிரீயா கிடைச்சுதேன்னு இங்கனயும் பதிஞ்சு வைச்சேன்...

நீங்கள் தேடிகொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்

கண்ணா.. said...

வாங்க நிலாமதி,

ஏனுங்க..நீங் ஈரோடு or கோயம்புத்தூருங்களா... பாஷை அப்டி வருதேன்னு கேட்டனுங்க..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க

கண்ணா.. said...

வாங்க கார்த்தி,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

பல்கலை வித்தகரெல்லாம் இல்ல தல... முன்னாடி கவிதை மட்டும்தான் எழுதி டைரியில் வச்சுகிட்டு இருப்பேன். இப்பவெல்லாம் முடியறதில்ல...

ப்ளாக்கில் தேவையில்லாத டெம்ப்ளேட்டையெல்லாம் நீக்கலாம்னு இருக்கேன். குறிப்பிட்டதற்கு நன்றி தல

கண்ணா.. said...

வாங்க சி.கருணாகரசு,

மீள் வருகைக்கு நன்றிகள் பல.

நானெல்லாம் கத்துகுட்டி..உங்களை போன்றோரின் கருத்துக்கள் என்னை செம்மை படுத்தத்தான் செய்யும். அதை நீங்கள் குறிப்பிட்டதற்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும்.

தொடர்ந்து வாங்க... நன்றி

கண்ணா.. said...

வாலே பிரதாப்பு,

இதெல்லாம் முன்னாடிவே....இப்ப எங்க....ம்.. அதெல்லாம் ஓரு காலம்.....

Ahamed irshad said...

கவிதை நல்லாயிருக்கு கண்ணா தொடருங்கள்..

இன்னொன்று உங்க ப்ளாக் ஓப்பன் செய்வதற்குள் நான் போய் சாப்பிட்டுவிட்டே வந்துட்டேன்.. என்ன காரணம்.. கடுமையா சுத்துது... தேவையில்லாத விட்ஜெட்டை தூக்கிருங்க...

மங்குனி அமைச்சர் said...

எல்லாம் நெகடிவ் வரிகள் (அது தான் அட்ராக்சன்)