Monday, June 7, 2010

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா..!!!

கடந்த மாதம் அமீரகத்திலிருந்து கிளம்பும் போதே ஏதோ கல்யாணமாகி போகும் பெண்களை போல கட்டிடம் கட்டாந்தரையெல்லாம் பார்த்து உணர்ச்சிகள் குபீர் குபீர்னு பெருக்கெடுத்துச்சு.. அப்பவே எனக்கு மைல்டா சந்தேகம் வந்துச்சு. ஆனா இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சுது நான் சந்தேகப்பட்டது சரிதான்னு. சில குடும்ப செளகரிய காரணங்களுக்காக நான் இன்னும் குறைந்தது ஓரு வருடமாவது இந்தியாவில் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால் தீவிரமாக வேலை தேட வேண்டிய அவசியமும் ஏற்பட்டு விட்டது ( ஐயகோ...!! ) இந்தியாவுல வேலை கிடைச்சா கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் வேலை பாக்க சொல்லுவாய்ங்களேன்னு பயத்தோடயே அப்ளிகேஷன் அனுப்ப ஆரம்பிச்சா.. உடனேயே கால் லெட்டரும் வந்து இண்டர்வ்யூம் சக்ஸஸ் ஆகிடுச்சு (இன்னுமாடா உன்ன இந்த உலகம் நம்புது...அவ்வ்வ்). போஸ்டிங் பெங்களூருன்னு சொன்னாய்ங்க....அங்க கிளைமேட்டும் நல்லா இருக்கும்ங்கறதால நானும் ஓகே சொல்லிட்டேன்.

அப்பிடியே ஓரு பத்து பதினைஞ்சு நாளு ஆகுதுங்க நானும் இங்க பெங்களூரு வந்து....ஹும்... இது வரைக்கும் பெங்களூருல நான் தங்கி இருக்கற வீட்டையே முழுசா சுத்தி பாக்க முடியாத அளவுக்கு வேலை பெண்ட நிமுத்துறாங்க. ஆனா என்னதான் கஷ்டப்பட்டாலும் ஏதோ ஓரு வெள்ளக்காரபயலுக்கு வேலை பாக்காம நம்மூருகாரனுக்குதான் வேலை பாக்குறோம்கற நிம்மதி இருக்கு பாருங்க அது அனுபவிச்சாதாங்க தெரியும். அட...அட...அட....

நட்பின் பலம்



இங்க வந்து வீடு பாக்க ஆரம்பிக்கும் போதுதான் நட்போட பலம் தெரியுது. இங்க நான் என் இரண்டு பள்ளிகால நண்பர்களை குறிப்பிடலேன்னா நன்றி கெட்டவனாயிருவேன். செந்தில், விஜயகுமார் ப்ளஸ் டூவில் என்கூட படித்த நண்பர்கள். சாப்ட்வேர் லையனில் சென்று முறையே AOL, IBM நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். பெங்களூரில் அவர்கள் வசிப்பதால் அவர்களை தொடர்பு கொண்டேன். அப்போது நண்பர் விஜயகுமார் டெல்லியில் இருந்தார் ஆனாலும் நண்பர், நண்பரின் நண்பர் என பலரையும் தொடர்பு கொண்டு எனக்கான இடத்தேடலில் மும்முரமாக இடுபட்டார். நன்றி விஜய். பின் கம்பெனி கெஸ்ட் கவுஸில் ஓரு வாரகாலம் தங்க அனுமதி கிடைத்ததும் வீடு தேட நண்பர் செந்தில் வண்டியை எடுத்து வந்து தெரு தெருவாக தேட ஆரம்பித்தார். இறுதியில் ஓரு வீட்டை அமர்த்திவிட்டுதான் ஓய்வெடுத்தார். நன்றி செந்தில். இது போன்ற நண்பர்கள் கிடைத்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்லி கொல்கிறேன்.

என் குடும்ப பிரச்சினை



இப்போ ரெண்டு நாளு முன்னாடிதான் மறுபடி ப்ளாக்கையே ஓப்பன் பண்ணேன். (ஏன்...ஏண்டா... இவ்ளோ நாளு நிம்மதியாதான இருந்தே...) ஆனா ஓப்பன் பண்ணாமலே இருந்துருக்கலாம் நினைக்க வைச்சுடாங்க. அதுவும் முகில் எழுதுகிறார்ங்கற இடுகையை செந்தழில் ரவியின் தளத்தில் படிச்சதும் எனக்குள் பயங்கர அதிர்வை ஏற்படுத்துச்சு. அதிலிருந்து மீண்டு வரவே ரொம்ப நேரம் ஆச்சு. சந்தன முல்லை அவர்கள் எவ்ளோ பாதிக்க பட்டிருப்பாங்கன்னு அதோட வீரியத்தை எனக்கு உணர்த்தியது முகிலின் எழுத்தை படிக்கும் போதுதான். அதுவரையில் மேலோட்டமாக அந்த விஷயத்தை படித்து கொண்டிருந்தவன் லிங்க் தேடி மூலமும் படிக்க நேர்ந்தது. அந்த பூக்காரி இடுகை படிச்சா நர்சிம் இப்பிடில்லாம் எழுதுவாராங்கற அதிர்ச்சிதான் அதிமாச்சுது. பெண்ணை எதிர் கொள்ள இந்த கேவலமான ஆயுதம்தானா உங்களுக்கு கிடைச்சுது நர்சிம்.

ஆனால் அதை வைச்சு எழுதின மற்றவர்களின் பதிவை படிச்சால் என்னவோ அவங்களோட தனிப்பட்ட பழைய பகையை தீர்த்துக்கற மாதிரிதான் தெரியுது. ஆனா இதை ஜாதி ரீதியா பாக்குறவங்க யாரா இருந்தாலும் அவங்களுக்கு என் கடும் கண்டங்கள். சந்தன முல்லை அவர்களும் இதை இழுத்து கொண்டு போவதும் எனக்கு சரியாக படவில்லை. ஆணாதிக்கம் மிகுந்த உலகில் இதை வைத்து மற்றவர்கள் திருந்துவார்கள் என்றோ அல்லது இனிமேல் இது போல நடக்காது என்றோ யாராலும் உறுதியாக கூறமுடியாது. நர்சிம்மை என்ன பண்ண வேண்டும் என்று நீங்கள்தான் முடிவு பண்ண வேண்டும். மற்ற நாட்டாமைகளை உள்ளே விட்டால் அவர்களுடைய தனிப்பட்ட பகை ஆட்களை உள்ளே இழுத்து குட்டையை குழப்பி கொண்டுதான் இருப்பார்கள். ஏனெனில் வினவு லீனா விஷயத்திலும், செந்தழில் ரவி கிருபாநந்தினி மற்றும் கவிதா அவர்கள் விஷயத்திலும் இது போன்ற தவறை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே இது குறித்து வாதம் புரிவது எதிர்வாதங்களுக்கு இடமளிக்கிறது. நீங்களும் உங்கள் கணவரும் கலந்து ஆலோசித்து என்ன பண்ண வேண்டுமென்று உங்கள் தளத்தில் குறிப்பிடுங்கள் அதுதான் அடுத்தடுத்த ஆரோக்யமான தீர்வுக்கு வழி வகுக்கும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. இதை உங்களுக்கான முடிவை நான் எடுப்பதாக நீங்கள் கருதினால் மன்னித்து கொள்ளுங்கள்.

25 comments:

வினோத் கெளதம் said...

kanna enna ithu oru vaarthai solala ESCAPE aayitinga...!!!

geethappriyan said...

கண்ணா,
பெங்களூரு எப்படி இருக்கு?
புதிய வேலைக்கு வாழ்த்துக்கள்.தெறமக்காரனுக்கு எந்தூரும் சொந்தௌஊர்தான்,வீடு தேடிக்கொடுத்த நண்பருக்கும் நன்றி,

====
சர்ச்சை விஷயத்தில் உங்க கருத்தே தான் அநேகம் பேர் கருத்தும்.ஹாலி பாலா சைட்டை விஸிட் பண்ணீங்களா?நீங்க போய்ட்டிங்கன்னு 2 மாசம் லீவு விட்டுட்டார்.

Prathap Kumar S. said...

//நண்பர்களை குறிப்பிடலேன்னா நன்றி கெட்டவனாயிருவேன்.//

நீரு என்னைக்குவே நல்லவனா இருந்தீரு...???
---
அதான் ஆளுக்காளு சொம்பைத்தூக்கி சொம்பே நெளிஞ்சுப்போய்டுச்சே...விட்டுத்தள்ளுத்தல இல்லன்னா சுட்டுத்தள்ளு.... நாறிப்போன மேட்டரைப்பத்தி இன்னும் ஏன் நாறடிச்சுக்கிட்டு...

---
அப்போ இனி கொஞ்சநாளு அமீரகத்துல இருக்கமாட்டீரு... அமீரகம் உருப்பட்ரும்டோய்....

ஹுஸைனம்மா said...

பெங்களூருலயா இப்ப? வேலை ஈஸியா கிடைக்குதா இப்ப அங்கயும்? நாங்களும் இடமாறுதல் குறித்து யோசிக்க ஆரம்பிச்சிருக்கோம் இப்ப.

ஆமா, பெங்களூருல இப்ப கிளைமேட் மாறிடுச்சுதுன்னு சொல்றாங்களே, அப்படியா?

நாடோடி said...

என்ன‌ த‌ல‌ சொல்லாமா கொள்ளாம‌ பெங்க‌ளூரு ப‌க்க‌ம் போய்டீங்க‌... புது வேலைக்கு வாழ்த்துக்க‌ள்... வ‌ழ‌க்க‌ம் போல‌ எழுதி த‌ள்ளுங்க‌..

Vijayashankar said...

நானும் பெங்களூரு தான்!

டிவிட்டரில் ஒரு மெச்செஜ் போடுங்க, மீட் பண்ணலாம்!

@vjshankar

சிநேகிதன் அக்பர் said...

புது வேலையை சிறப்பாக செய்ய வாழ்த்துகள்.

வெளிநாடு போனதான் உள்ளூர் அருமை தெரியும் போல (என்னையைச் சொன்னேன் :))

‍‍‍‍====

பதிவுல பிரச்சனை குறித்து உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

====

வாழ்த்துகள் தல! கலக்குங்க. நாஞ்சிலு கூட இல்லாதது ரொம்ப சந்தோசமா இருக்குமே! (ஏதோ என்னால முடிஞ்சது.

Ahamed irshad said...

பதிவின் தலைப்பை பார்த்ததும் எனக்கு இந்த
http://bluehillstree.blogspot.com/2010/03/blog-post_27.html

பதிவு மாதிரி இருக்கும்'னு நினைத்தேன்

கண்ணா.. said...

@????????????

வாங்க கல்யாண மாப்ளே....

தெரிஞ்சா சொல்ல மாட்டனா..?எனக்கே இங்க வந்துதான தெரியும் அங்க வரமுடியாதுன்னு....

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிடா

கண்ணா.. said...

வாங்க கார்த்தி,

பெங்களூரு இப்போதைக்கு நல்லாத்தான் இருக்கு. நான் இப்போதானே வந்திருக்கேன்.. இனி எப்டியிருக்கும்னு தெரியலை...

ஹாலி பாலி ப்ளாக்குக்கு போனேன் ஆனா அந்த அறிவிப்பை பாக்கலையே....போன கையோட ஒரு கமெண்ட்டை போட்டுட்டு வந்துட்டேன்

கண்ணா.. said...

வாடா நாஞ்சிலு,

உங்கூட சேந்தா நா எப்டிலே நல்லவனா இருக்க முடியும். முதல்ல கண்ணாடிய மாத்தும்வே.. நான் நல்லவன்னு சொல்லலை.. நன்றியை பத்தி சொன்னேன்...

//அப்போ இனி கொஞ்சநாளு அமீரகத்துல இருக்கமாட்டீரு... அமீரகம் உருப்பட்ரும்டோய்//

நல்லா உருப்படட்டும் என்னை இவ்ளோ நாள் வாழ வைச்ச பூமில்லாவே....நீயும் அங்கன இருந்து வந்துட்டேன்னா சீக்கிரம் உருப்புட்ரும்

கண்ணா.. said...

வாங்க ஹுஸைனம்மா,

இப்போ இந்தியாவில் நிறைய புது புராஜட்க்ஸ் ஆரம்பிச்சுருக்காங்க...வேலையெல்லா ஈஸியா கிடைக்குது.. எனக்கே கிடைக்குதுன்னா பாத்துகுங்க..:)

கிளைமேட் முன்ன மாதிரி இல்ல வெயிலுன்னு இங்க உள்ளவங்க சொல்லுறாங்க.. ஆனா எனக்கு தமிழ்நாட்டை விட இங்க வெயில் கம்மியா இருக்கற ஃபீலீங்தான்

கண்ணா.. said...

வாங்க நாடோடி @ ஸ்டீபன்,

ஆமா தல வந்தாச்சு. இனி வழக்கம் போல மொக்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான்

:)

கண்ணா.. said...

வாங்க விஜயசங்கர்,

நானு இன்னும் டிவிட்டர்ல்லாம் யூஸ் பண்ணல தல.

சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க தல மீட் பண்ணுவோம்.

:)

கண்ணா.. said...

வாங்க அக்பர்,

உண்மைதான் தல.. வெளிநாடு வந்த அப்புறம்தான் எனக்கெல்லாம் உள்ளூர் அருமை தெரிய ஆரம்பிச்சது.

நீங்கதான் தல கரெக்டா பாயிண்டை புடிச்சிட்டீங்க..

:)

கண்ணா.. said...

வாங்க அஹமது இர்ஷாத்,

தலைப்பில் இருவருக்கும் உள்ள ஓற்றுமை ஆச்சர்யமா இருக்கு. நீங்க நல்லா தலைப்புக்கு ஏத்த மாதிரி எழுதியிருக்கீங்க..

நானெல்லாம் சும்மா கண்ட மேனிக்கு எழுதி ஏதாவது ஓரு தலைப்பு வைக்குற ஆளு பாஸு...

kishore said...

welcome to india

மங்குனி அமைச்சர் said...

வந்த உடனே பாலிடிக்ஸா ? அசத்துங்க

அது ஒரு கனாக் காலம் said...

கண்ணா ...வாழ்த்துக்கள், சந்தர்பம் இருந்தால் அங்கு சந்திக்கலாம் .....

Chitra said...

ஹும்... இது வரைக்கும் பெங்களூருல நான் தங்கி இருக்கற வீட்டையே முழுசா சுத்தி பாக்க முடியாத அளவுக்கு வேலை பெண்ட நிமுத்துறாங்க. ஆனா என்னதான் கஷ்டப்பட்டாலும் ஏதோ ஓரு வெள்ளக்காரபயலுக்கு வேலை பாக்காம நம்மூருகாரனுக்குதான் வேலை பாக்குறோம்கற நிம்மதி இருக்கு பாருங்க அது அனுபவிச்சாதாங்க தெரியும். அட...அட...அட....



......... ok. ok. .....கொடுத்து வச்சவரு...... அனுபவிங்க......!
Congratulations!!!

கண்ணா.. said...

@KISHORE

வா மச்சி.

வரவேற்பிற்கு நன்றி

கண்ணா.. said...

வாங்க மங்குனி அமைச்சரே,

நீங்களெல்லாம் கூட இருக்கும் போது பாலிடிக்ஸ்க்கு நேரம் காலம் பாக்கலாமா...எப்போ வேணா எழுத வேண்டியதுதான்

கண்ணா.. said...

வாங்க சுந்தர் அண்ணே,

கண்டிப்பா பெங்களூர் வந்தா சந்திப்பு உண்டு

கண்ணா.. said...

வாங்க சித்ராக்கா,

வாழ்த்துக்கு நன்றி

Unknown said...

வாழ்த்துக்கள் கண்ணா! ஆகஸ்ட் மாதம் இந்தியா பக்கம் வரலாம் என்று இருக்கிறேன். முடிந்தால் சந்திப்போம்.
நேரம் இருப்பின் Architect R. L. Kumar அவர்களை சந்திச்சு ஒரு பதிவு போடுங்கள். அவர் "பேக்கர்" பாணி கட்டிடங்கள் பல வடிவமைத்துள்ளார்.
அவரின் வலைப்பக்கம் இங்கே:
http://www.vernarch.com/projects.htm