Monday, March 22, 2010

பத்து பெண்களாஆஆஆஆ......!!!!! தொடர்பதிவு...

என்னை இந்த தொடர்பதிவிற்கு அழைத்த அன்பு நண்பர் பிரபுவிற்கு நன்றிகள் பல. பிடித்த பெண்கள் பத்து பேரை மட்டும்தான் சொல்ல வேண்டும், சொந்தகாரர்களை சொல்ல கூடாது என்ற கட்டுப்பாடுகளை மட்டும் கடைபிடிக்கிறேன்.

பிடித்த பத்து பெண்கள் என்ற இப்பதிவை என்னை பெற்று, வளர்த்து, சமூகத்தில் போராட எல்லா மனவலிமையையும் குணங்களாக எனக்கு தந்த என் அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்.

சாதனை பெண்கள் குறைவாக உள்ளார்களே.. நிறைய பேரின் தொடர் பதிவில் திரும்ப திரும்ப ஒரே பெயர்களே வருகிறதே என நண்பர்கள் சிலர் வருத்தப்பட்டனர். ஆமாம் உண்மைதான் பெண்களெல்லாம் ஆண்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாலே அவர்கள் வெளிச்சத்திற்கு வரவில்லை. நீங்கள் எந்த சாதனையாளர்களை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். அவர்கள் ஓன்று பெண்களாக இருப்பார்கள், அல்லது வெற்றி பெற்ற ஆண்களின் பின்னால் இருப்பார்கள். அப்படி உங்களின், என்னின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து பெண்களுமே சாதனையாளர்கள்தான்.

இதையெல்லாம் தாண்டி பிரபலமான, எனக்கு பிடித்த பத்து பெண்களின் தொகுப்பு கீழே.

செல்லம்மாள் பாரதி


மகாகவி பாரதியாரின் மனைவி. ஊர் உலகிற்கெல்லாம் பெண் விடுதலை, சமூக புரட்சி என உரக்க சொன்னவரின் வீட்டை கட்டிகாத்தவர். வீட்டில் சமைக்க அரிசியில்லாமல் அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி வைத்த அரிசியை கூட பாரதி குருவிக்கு கொடுக்கும் போதும் பொறுமையாக அறிவுருத்திய பெண்மணி. இது போன்ற பல சம்பவங்களை கேள்வி பட்டதில் இருந்து எனக்கு பாரதியாரின் படங்களை பார்க்கும் போதெல்லாம் அவரின் வெற்றிக்கு காரணமான செல்லம்மாள்தான் நினைவிற்கு வரும்.

நளினி முருகன்


காதல் கணவனுக்காக கடுமையான ஜெயில் வாழ்க்கையையே திருமணப் பரிசாக ஏற்று இன்னமும் அவரின் மேல காதல் குறையாமல் வாழும் இவரின் மன உறுதிக்காகவே இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்

சோனியாகாந்தி


தான் வளர்ந்த தேசத்தை விட்டு இந்தியாவில் வாழ்வது பெரிய விஷயம்தான் திருமணத்திற்கு பின் இந்தியராக வாழ்ந்தது மட்டுமல்லாமல் தன் காதல் கணவன் மறைவிற்கு பிறகும் இந்தியராகவே வாழ்ந்து அசத்துகிறார். காதலுக்காக தன் நாட்டையே உதறி தள்ளிய, தனக்கு வந்த பிரதமர் பதவியையும் உதறிய இவரை பார்த்தால் வியப்புதான் வருகிறது

டி.பி.ராஜலெட்சுமி

தமிழில் முதல் பெண் இயக்குனர். 1936 ல் மிஸ். கமலா என்ற திரைப்படத்தையும் பின்பு 1938ல் மதுரைவீரன் படத்தையும் இயக்கியுள்ளார் (நன்றி அய்யனார் – இந்த தகவல் அவரின் பதிவில் இருந்துதான் தேடி எடுத்தேன்)

சி. வி. திலகவதி


சதர்ன் ரயில்வேயின் முதல் பெண் ஓட்டுனர். உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் முதல் பெண் ஓட்டுனர் என்றாலும் வரும்காலத்தில் நிறைய பெண் ஓட்டுனர்கள் வருவதற்கு உந்து சக்தியாக இருக்கிறார்.

சாவித்திரி


தர்மபுரியை சேர்ந்த இவர் சென்னை மாநகர பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். கடினமான வேலைகளுக்கு பெண்கள் வரமாட்டார்கள் என்ற மாயையை இவர், திலகவதி மற்றும் பல பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் நிருபித்து வருகிறார்கள்.

கவிஞர் தாமரை


எனக்கு இவரின் திரைபடபாடல்களில் இவரை பிடித்ததை விடவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் இவரின் பேச்சை கேட்டு இவரின் ரசிகன் ஆனேன். என்னா பேச்சு அது...!! ஸான்ஸே இல்லங்க... இப்ப கேட்டாலும் கைதட்ட தோணும்

சானியா மிர்சா


விளையாட்டு துறையில் இந்தியாவில் மிகபிரபலமான பெண் டென்னிஸ் வீராங்கனையாக இவர் உருவெடுத்த விதம் ஆச்சர்யமானது. ஆனால் அதற்கான இவரின் உழைப்புதான் என்னை கவர்ந்த்து.

ராதிகா


ராடான் மீடியா எனற நிறுவனத்தை வெற்றிகரமாக நட்த்தி வருபவர். இந்த துறையில் ஆண்களே நிறுவனத்தை நட்த்த திணறிவரும் இக்காலத்தில் வெற்றிகரமாக நடத்தி, பெண்களால் ஆண்களை விடவும் வெற்றிகரமாக செயல்படமுடியும் என நிருபித்து வருபவர்

ஜெயலலிதா


இவரின் தைரியத்திற்காக பிடிக்கும். தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியை ராணுவ கட்டுகோப்புடன் வழிநடத்தும் ஆளுமைதிறன், நிர்வாகத்திறன் எனக்கு இவரிடம் மிகவும் பிடித்தது.

இந்த தொடர்பதிவை தொடர விரும்புவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.


39 comments:

ஹுஸைனம்மா said...

கண்ணா, முன்னுரையைப் பார்த்து நீங்களுமான்னு நினைச்சேன். ஆனா, அழகா, இன்னும் புது சாதனையாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கீங்க, நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

அருமை கண்ணா.

தேர்வுகளும் அதற்குரிய காரணங்களும் அருமை.

geethappriyan said...

கண்ணா,
மிக அருமையான தேர்வுகள்,
அதிலும் அந்த நளினி,பொறுமையின் சிகரம்,19வருடத்துக்கும் மேலாய் சிறையில்,மகளை பார்த்தே எத்தனை வருடம் இருக்கும்,சிறையிலெயே படித்து 2முதுகலை வேறு முடித்தவர்.
=====
நானும் இந்த பதிவை சீக்கிரம் எழுத வேண்டும்.பகிர்வுக்கு நன்றி.

இராகவன் நைஜிரியா said...

அருமையான தேர்வு...

கீப் இட் அப்

kishore said...

அருமையான தொகுப்பு நண்பா..

☀நான் ஆதவன்☀ said...

நளினி - க்ளாப்ஸ்

ராதிகா - கொட்டு

சானியா - ஹி ஹி ஹி

சோனியா - கப்சிப்

சானியாவுக்காக ஓட்டு போட்டுட்டேன்பா :)

நாடோடி said...

//கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் இவரின் பேச்சை கேட்டு இவரின் ரசிகன் ஆனேன். என்னா பேச்சு அது...!! ஸான்ஸே இல்லங்க... இப்ப கேட்டாலும் கைதட்ட தோணும்///

உண்மைதான் தல... சன்சே இல்ல... நானும் அந்த வீடியோவை பார்த்தேன்... அப்படியே அவங்க கவிதையும் படிச்சுடுங்க.... பதிவு நல்லா இருக்கு..

எறும்பு said...

//தன் காதல் கணவன் மறைவிற்கு பிறகும் இந்தியராகவே வாழ்ந்து அசத்துகிறார். காதலுக்காக தன் நாட்டையே உதறி தள்ளிய, தனக்கு வந்த பிரதமர் பதவியையும் உதறிய இவரை பார்த்தால் வியப்புதான் வருகிறது//

Hi hi... Joke..

ராமலக்ஷ்மி said...

அதிகம் தெரியாத சிலரையும் அறிமுகப்படுத்தியிருப்பது அருமை. பாராட்டுக்கள்.

Prathap Kumar S. said...

//காதலுக்காக தன் நாட்டையே உதறி தள்ளிய, தனக்கு வந்த பிரதமர் பதவியையும் உதறிய இவரை பார்த்தால் வியப்புதான் வருகிறது//

இன்னுமா இப்படி நம்பிட்டு இருக்கீயே... இப்படி ஒரு ராஜவாழ்க்கை கிடைக்கும்னா காதலுக்காக உகான்டாவுக்கே போலாம்... இந்தியாவுக்கா வரமுடியாது... பிரதமர் பதவி வேணாம்னு சொன்னதுல்லாம் ஒரு பாலிடிக்ஸ் ஸ்ராட்டர்ஜீ... இந்தியன் ஒரு ஏமாளின்னு ப்ருப் பண்ணிட்டீருவே....

Prathap Kumar S. said...

//ஆனால் அதற்கான இவரின் உழைப்புதான் என்னை கவர்ந்த்து.//

உண்மையாவா???? சரிவே நம்பிட்டேன்...

தமிழ் உதயம் said...

நான் சொல்ல நினைத்த பெண்... நளினி முருகன். நான் தவிர்த்தேன். நீங்கள் சொல்லி விட்டீர்கள்.

வினோத் கெளதம் said...

Claps..

வினோத் கெளதம் said...

அப்புறம் அந்த பக்கத்து வீட்டு ’லட்டு’ கொடுத்த பொண்ன விட்டுட்டியே..:)

Chitra said...

பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு:
கண்ணாவின் பதில்: எட்டு - சானியா மிர்சா

கண்ணா.. said...

@ஹுஸைனம்மா

வாங்க. பதிவுல ஒண்ணுமே இல்லன்னாலும் தலைப்பை டெரரா வைக்குறதுதானே குல வழக்கம் அதான்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

கண்ணா.. said...

@அக்பர்

வா மக்கா...

தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிலே

கண்ணா.. said...

@கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

வாங்க..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஆமாம் நளினியிடம் அந்த விஷயமும் எனக்கு பிடித்தது.

கண்ணா.. said...

@இராகவன் நைஜிரியா

வாங்கண்ணே.... நீங்க என் பதிவுக்கு வந்து எம்புட்டு நாளாச்சு...

அடிக்கடி வாங்கண்ணே..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

@KISHORE

வா மச்சி

தொடர் பதிவிற்கு உன்னையும் வினோத்தையும் மாட்டி விடலாம்னு நினைச்சேன்.... ஆனா நிறைய பேரு இந்த தலைப்பு குறித்து சலிச்சுகிட்டதால யாரையும் குறிப்பிட வில்லை..

நீ தொடரேன் மச்சி....

கண்ணா.. said...

@☀நான் ஆதவன்☀

வாங்க சூர்யா,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா

முக்கியமா சானியாவுக்காக ஓட்டு போட்டதுக்கு (நல்ல வேளை சானியா படத்த போட்டேன்.. இல்லன்னா ஓரு ஓட்டு போயிருக்கும்)


ஆனாலும் ராதிகாவுக்காக நீங்க கொட்டுனது வலிக்கலியே....வலிக்கலியே........

கண்ணா.. said...

@நாடோடி

வாங்க ஸ்டீபன், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா

எனக்கு அவரின் கவிதைகளும் பிடிக்கும். ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டது அந்த தைரியம்

கண்ணா.. said...

@எறும்பு

வாங்க ராஜகோபால், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

நான் சீரியஸாத்தான் சொல்லுறேன் தல...

நாம என்னத்தான் சீரியஸா சொன்னாலும் சிரிப்பு போலிசாவே பாக்குறாய்ங்களே..........

கண்ணா.. said...

@ராமலக்ஷ்மி

வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

தொடர்ந்து வாங்க

கண்ணா.. said...

@நாஞ்சில் பிரதாப்

வா மக்கா, வருகைக்கும் கருத்திற்கும் நன்றிலே..

//இன்னுமா இப்படி நம்பிட்டு இருக்கீயே... இப்படி ஒரு ராஜவாழ்க்கை கிடைக்கும்னா காதலுக்காக உகான்டாவுக்கே போலாம்... இந்தியாவுக்கா வரமுடியாது... பிரதமர் பதவி வேணாம்னு சொன்னதுல்லாம் ஒரு பாலிடிக்ஸ் ஸ்ராட்டர்ஜீ... இந்தியன் ஒரு ஏமாளின்னு ப்ருப் பண்ணிட்டீருவே....//

காங்கிரஸ் புல் மெஜாரிட்டில ஜெயிச்ச உடனே இவரு பிரதமர் பதவியை ஏற்பேன்னு சொல்லியிருந்தால் சும்மா வாய் சவடால் விடுறவங்க என்னலே புடுங்கியிருக்க முடியும்.

அதுதான் எனக்கு இவரிடம் பிடித்தது.

கண்ணா.. said...

@தமிழ் உதயம்

வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

நளினி முருகன் விஷயத்தில் நிறைய பேர் அப்படி நினைத்திருக்கிறோம் என்பதை நினைத்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

கண்ணா.. said...

@வினோத்கெளதம்

வா மச்சி

லட்டு கொடுத்த பொண்ணு எனக்கு பிடிக்காத பொண்ணு லிஸ்டில் வருவாள் :))

கண்ணா.. said...

@Chitra

வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

போட்டோ பெருசா.. போட்டது ஓரு குத்தமா..அவ்வ்வ்வ்

மதார் said...

கலக்குறீங்க கண்ணா , தேர்வுகள் நல்லா இருக்கு . எனக்கு பிடித்த பெண்களும் இதில் இருக்காங்க .

கண்ணா.. said...

@மதார்

வாங்க , வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

உங்களுக்கு பிடித்த பெண்களும் இதில் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி

:)

Prabu M said...

Excellent post நண்பா...

// ஆமாம் உண்மைதான் பெண்களெல்லாம் ஆண்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாலே அவர்கள் வெளிச்சத்திற்கு வரவில்லை. நீங்கள் எந்த சாதனையாளர்களை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். அவர்கள் ஓன்று பெண்களாக இருப்பார்கள், அல்லது வெற்றி பெற்ற ஆண்களின் பின்னால் இருப்பார்கள். அப்படி உங்களின், என்னின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து பெண்களுமே சாதனையாளர்கள்தான்.//

அழகாக சொன்னீர்கள்....

தேர்வுகள் மட்டுமின்றி அதற்கான குறிப்புகளும் அருமை...

malar said...

ந்ல்ல பதிவு ..

பெண்களை நல்ல தேர்ந்து எடுத்து போட்டிருக்கிரீர்கள்...

கண்ணா.. said...

@பிரபு . எம்

வாங்க நண்பா.. நீங்கள் அழைத்ததால்தானே இந்த பதிவே..அதற்கு நன்றி.

கண்ணா.. said...

@malar

வாங்க மலரக்கா, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

Starjan (ஸ்டார்ஜன்) said...

கண்ணா, உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

கண்மணி/kanmani said...

சிலரை ஏத்துக்க பிடிக்கலைன்னாலும் சாய்ஸ் உங்களுடையது என்பதால் நோ கமெண்ட்ஸ்

கண்ணா.. said...

@Starjan ( ஸ்டார்ஜன் )

நன்றி ஸ்டார்ஜன்....என்னை வலைசரத்தில் அறிமுகபடுத்தியதற்கு.

கண்ணா.. said...

@கண்மணி/kanmani

வாங்க டீச்சர். மாற்று கருத்தென்றாலும் அதை சொல்லிவிட்டு என் மாற்று கருத்திற்கும் மதிப்பளித்த உங்க நேர்மை பிடிச்சிருக்கு.

:))

கவி அழகன் said...

நல்ல தெரிவு அன்ன உங்க அம்மாவை விடுடின்களே எல்லாருக்கும் அம்மா தான் முதல் பெண்மணி