Tuesday, March 16, 2010

வாஸ்து மூலைகளும் மனித மூளைகளும்



சூரிய வெளிச்சம், காற்று போன்றவற்றை தேவையான அளவு வீட்டிற்குள் கொண்டு வருவதே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையாக இருந்து வந்திருக்கிறது. அதையே வாஸ்து பகவான் தன் தலையை ஈசான்ய மூலையிலும் (வடகிழக்கு) கால் பகுதியை கன்னி மூலையிலும் (தென் மேற்கு) வைத்து குறுக்காக படுத்திருப்பதாக கூறி ஒரு வரைமுறைகளை வகுத்து பின்படுத்த அறிவுறுத்தினர்.  பழைய காலங்களில் மக்களின் வாழ்வு முறையையும் தட்ப வெப்ப நிலையையும் கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை எவ்வளவோ காலங்கள் கடந்தும் மக்களின் வாழுவு முறைகள் பெரும்பாலும் மாறிவிட்ட நிலையிலும் அதை பயன்படுத்த நினைப்பதை விட முட்டாள்தனமான செயல் வேறு இருக்க முடியாது. இது இந்த காலத்தில் செடி கொடிகளை உடைகளாக பயன்படுத்துவதற்கு சமமான டிராஜடி.


இதை விடவும் பெரிய காமெடி மனையடி சாஸ்திரத்தையும் இதில் புகுத்தி இந்த அளவுதான் இருக்க வேண்டும் என பயமுறுத்துவது. மனையடி சாஸ்திரத்தில் ஓரு அடி என்பது வீட்டு தலைவனின் காலடி என தெளிவாக குறிக்கப் பட்டுள்ளது. அந்த வீட்டு தலைவரின் காலடி அளவிற்கு ஓரு தச்சு செய்து அதை கொண்டுதான் நீள அகலம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இப்போது பொதுவான டேப் அளவு வந்து விட்ட்தால் இதன் அடிப்படையே மாறி விடுகிறது. ஆனால் அதை வைத்து காசு புடுங்கும் கும்பலை பார்த்தால் ஆச்சர்யமாக வருகிறது. ஆதாரமோ, நிருபணமோ இல்லாமல் அப்பாவிகளின் குழப்பமான நிலையை பயன்படுத்தி எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள். இவர்களது இந்த திறமையெல்லாம் வேறெதிலாவது காட்டினால் இந்தியா இந்நேரம் வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டத்தில் சேர்ந்திருக்குமே எனத்தோன்றுகிறது

வாஸ்து மூலைகளும் மனித மூளைகளும்


அக்னி மூலை – தென் கிழக்கு

அக்னிமூலையில்தான் அடுப்பு இருக்க வேண்டும் என வாஸ்து கூறுகிறது. அந்த காலத்தில் விறகு அடுப்புதான் பயன்படுத்தினார்கள். அச்சமயத்தில் வெப்பம் வீட்டிற்குள் அதிகம் வராமல் இருக்கவும், தீ அணையாமல் நன்றாக எரியவும் காற்றின் திசைகேற்ப தென்கிழக்கில் சமையறை அமைத்தார்கள். நவீன யுகத்தில் கேஸ் அடுப்பை பயன்படுத்தும் காலத்திலும் அதையே சொல்லி காசு பறிக்கும் கும்பலை என்ன செய்யலாம்.?

ஈசான்ய மூலை – வட கிழக்கு

மனையில் ஈசான்யமூலைதான் சுத்தமாகவும், தண்ணீர் தொட்டி போன்றவைகளும் இருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மழை நீர் வடிவதற்கு வாகாகவும், தண்ணீர் வழிந்தோட ஏதுவாகவும் இந்த மூலையானது மற்ற மூலைகளை விட பள்ளமாக இருக்க வேண்டும் என வரையறுக்க பட்ட்து. தண்ணீர் இருக்க வேண்டும் என்பதற்காக மீன் தொட்டிகளையெல்லாம் விற்பனை செய்து வருகிறார்கள்

கன்னிமூலை – தென்மேற்கு

தென்மேற்கு மூலைதான் மேடாக இருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த மூலை மேடாக இருந்தால்தான் இதற்கு நேரேதிர் மூலையான ஈசான்யத்திற்கு தண்ணீர் வழிந்தோட வசதியாக இருக்கும். இதையே சொல்லி ஓவர் ஹெட் டேங்க் கூட கன்னிமூலையில்தான் இருக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.

வாயு மூலை – வடமேற்கு

வாயு மூலையில்தான் கழிவு நீர் தொட்டிகள் அமைய வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இதுவும் ஈசான்ய மூலைக்கு சொன்ன மாதிரிதான் நீர் வழிந்தோட ஏற்ற வகையில் ஈசான்ய மூலையில் தண்ணீர் தொட்டியும் வாயு மூலையில் கழிவு நீர் தொட்டியும் அமைய வேண்டும் என அறிவுறுத்துகிறது. தற்போதைய பைப்பிங் சிஸ்டம் மூலம் நமக்கு வேண்டிய இடங்களில் வாட்டம் கொடுத்து விடலாம் என்பதால் இதுவும் இங்கு தேவையில்லாமல் போகிறது.

எந்தெந்த மூலையில் என்னென்ன அறைகள் வரலாம் என்பதை குறிக்கும் வாஸ்து வரைபடம் கீழே



மேலே குறிப்பிட்டதும் கூட வாஸ்துவை காட்டி இவர்களாக வரைந்தவைதான். நமக்கு என்ன தேவையோ, எது வசதியோ அதை கருத்தில் கொண்டு வீட்டை அமையுங்கள். மற்றபடி வாஸ்து பயமுறுத்தல்கள் எல்லாம் இந்த மெயிலை 100 பேருக்கு பார்வேர்ட் செய்யாவிட்டால் அவ்வளவுதான் என வரும் மெயிலுக்கு சமானம்தான்


= = =
 இந்த சுட்டியில் பார்த்த சில பயமுறுத்தல்கள்

”இயற்கையாகவே தென்கிழக்கு (அக்னி) மூலையில் நீராதாரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி நீராதாரங்கள் இருந்தால் அந்த வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு அடிக்கடி நோய் தாக்குதல் ஏற்படும். வீட்டிற்குள் சிறிய மருந்துக்கடை நடத்த வேண்டிய நிலை வரலாம். அக்னி மூலை பாதிப்பு காரணமாக ஒரு சிலருக்கு வாரிசு இல்லாமல் போகலாம்”

“சில வீடுகளில் ஆண் சந்ததியே இல்லாமல் இருப்பதும் உண்டு. அதற்கு அந்த வீட்டின் ஈசானிய மூலையை அடைத்து வைத்திருப்பதே முதன்மைக் காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதும் உண்டு”

= = =

மனையில் நல்ல காற்றோட்டம் வரும் வகையில் வீட்டை அமையுங்கள். நன்கு உழையுங்கள் நல்ல பலன்கள் தேடி வரும்.

44 comments:

Chitra said...

பழைய காலங்களில் மக்களின் வாழ்வு முறையையும் தட்ப வெப்ப நிலையையும் கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை எவ்வளவோ காலங்கள் கடந்தும் மக்களின் வாழுவு முறைகள் பெரும்பாலும் மாறிவிட்ட நிலையிலும் அதை பயன்படுத்த நினைப்பதை விட முட்டாள்தனமான செயல் வேறு இருக்க முடியாது. இது இந்த காலத்தில் செடி கொடிகளை உடைகளாக பயன்படுத்துவதற்கு சமமான டிராஜடி.



.............இதை விட விளக்கமா சொல்லி புரிய வைக்க முடியாது. தெளிவாக விளக்கங்கள் பதிவில் சொல்லி இருக்கீங்க. Super!

பி.கு. இந்த பதிவு லிங்க் எடுத்து, இருபது பேருக்கு forward செய்தா சீக்கிரம் ஒரு வீடு கிடைக்கும் வாய்ப்பு உண்டு.........

வினோத் கெளதம் said...

மாமூ அடிச்சு தூள் கிளப்பு..

Prathap Kumar S. said...

வாஸ்து பேரை சொல்லி ஏமாத்துறவங்களுக்கு நெத்தியடி தல...

வாஸ்துல நம்பிக்கை இல்லாத பலபேரு சொந்தமா வீடு கட்டும்போது வாஸ்து பார்க்க ஆரம்பிச்சுடுறானுங்க...

நான் கட்டப்போறவீட்டுக்கு நீருதாவே கொத்தனாரு... பிக்ஸ்பண்ணியாச்சு...

geethappriyan said...

கண்ணா,
அருமையான பதிவு.
நாஞ்சில் சொன்னபடி இப்போ நம்பிக்கை இல்லாதவர்கள் கூட நிலம் வாங்கி வீடு கட்டும் பேச்சை எடுக்கும்போது வாஸ்து பாக்க ஆரம்பிச்சுடுறார்கள்.
1.தெற்கு பார்த்த வாசப்படி தலைவனுக்கு ஆபத்தை சம்பவிக்குமாம்,அப்படின்னு ஒரு கிலி
2.வடகிழக்குல பூஜை,ஹால் மட்டும் வரனுமாம்
படுக்கை அறை வந்தால்.புத்திர சோகம் விளையுமாம்.
3.தென் மேற்குல குழந்தைகள் அறை வரக்கூடாதாம்,அப்படி வந்தால் புள்ளைங்க மேட்டர்ல கெட்டியாகி,படிப்பை கோட்டை விடுமாம்.
3.தென்கிழக்குல படுக்கை அறை இருந்தால் தலைவனுக்கு அலசர்லயே பணம் செலவாகுமாம்.கேன்சரும் வருமாம்.
அதுவும் கட்டிடத்துக்கு நடுவில் வரும் பிரம்மஸ்தானத்துல எதுவுமே கட்டுமானம்,குறிப்பா படிக்கட்டு வரக்கூடாதாம்.ஐயோ ஐயோ.
4.தென் கிழக்குல,வடமேற்குல மட்டும் தான் போர்டிக்கோ வரனுமாம்,அதுவும் காரை தெற்கு பார்த்து தான் நிறுத்தனுமாம்.கிழக்கு பார்த்து நிறுத்தினால் கார் அடிக்கடி ரிப்பேர் ஆகுமாம்.வடக்கு பார்த்து நிறுத்தினால்
பயணம் செய்துக்கொண்டே இருக்குமாம்.
கொடுமைங்க
5.படிக்கட்டை தென்மேற்குல மட்டும் தான் போடனுமாம்,அதுவும் கிழக்க,வடக்க பார்த்து தான் ஏறனுமாம்.
====
எங்கேருந்தோ கிளம்பி கழுத்தறுக்கறானுங்க.
அப்போ தெற்கு பார்த்த நிலத்துக்கு,டெனண்ட் மாதிரி சுத்தி போய் மெயின் டோர்ல நுழையனுமாம்.
கொடுமைங்க.
பேஸிக்கா,ஃபன்க்‌ஷனலா எல்லாம் ஒத்து வருவது போல வடிவமைக்கனும்ங்க.
அதை விட்டுட்டு இன்றைய சூழ்நிலையில இடம் விற்கும் விலையில் அநியாயமாக இடத்தை வீணாக்க கூடாது.

நாடோடி said...

ச‌மூக‌ மூட‌ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ளில் ஒன்றாகிய‌ வ‌ஸ்து ச‌ஸ்திர‌த்திற்கு ந‌ல்ல‌ ச‌வுக்க‌டி... ந‌ல்லா இருக்கு ந‌ன்ப‌ரே..

குலவுசனப்பிரியன் said...

வாஸ்த்துவின் தென்மேற்கு மூலையில் நன்றாக உதைத்து விரட்டி இருக்கிறீர்கள்.

சிநேகிதன் அக்பர் said...

அருமையான விளக்கம் கண்ணா.

மூததையர்கள் சில காரணங்களுக்காக ஏற்படுத்திய பழக்கவழக்கங்கள் இன்று காரணமில்லாமலேயே தொடர்வது வருந்ததக்கது.

ஆனா ஒரு வருத்தம். இந்த தொடரை தொடர்ந்து எழுதாமல் தாமதம் ஏன். (வேலை அதிகமா)

kishore said...

சூப்பர் மச்சி.. இந்தியா வந்தா உனக்கு வாஸ்துபடி நல்ல எதிர்காலம் இருக்குடா ..

மைதீன் said...

வாஸ்து வாஸ்துன்னு நிறைய பயக கிறுக்கு புடிச்சு அலையுதானுவ்ல்லோ, வீட்ல காத்து கூட வராம சீக்கு புடிச்சு அலையிதானுவ.நல்லா சொன்னீருவே.

கண்ணா.. said...

@Chitra

என்னது வீடு கிடைக்குமா அப்போ நான் இருநூறு பேருக்கு forward பண்ணுவேனே....

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

@வினோத்கெளதம்

வருகைக்கு நன்றிடா மச்சி

கண்ணா.. said...

@நாஞ்சில் பிரதாப்

வாலே..மக்கா...

//வாஸ்துல நம்பிக்கை இல்லாத பலபேரு சொந்தமா வீடு கட்டும்போது வாஸ்து பார்க்க ஆரம்பிச்சுடுறானுங்க//

வாஸ்தவம்தான்..:)

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

@கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

அட... நீங்க நிறைய வாஸ்து டிப்ஸை கைல வச்சுருக்கீங்களே....

அது எப்டி தல .. எந்த டாபிக்னாலும் பின்னூட்டத்துல கலக்குறீங்க...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தல

கண்ணா.. said...

@நாடோடி

நல்லா இருக்கா...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தல

கண்ணா.. said...

@குலவுசனப்பிரியன்

முதல வருகைக்கு நன்றி பிரியரே...

நாம எங்க எட்டி உதைக்க....அது நம்மை உதைக்காம இருந்தா சரிதான்..

:)

கண்ணா.. said...

@அக்பர்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தல..

//ஆனா ஒரு வருத்தம். இந்த தொடரை தொடர்ந்து எழுதாமல் தாமதம் ஏன். (வேலை அதிகமா)//

யாரை பார்த்து வேலை அதிகமான்னு கேட்டீங்க....என் ரத்தம் கொதிக்குது.....


நான் பேசிக்கலாவே சோம்பேறி...அதான் தல இந்த மாதிரி கேப்...

:))

கண்ணா.. said...

@KISHORE

வாடா மச்சி...

ஆரம்பிச்சுரலாமா..... இங்க வேற டேமேஜர் படுத்தி எடுக்கறான்....

கண்ணா.. said...

@மைதீன்

வாங்கண்ணே... என்ன சொன்னாலும் இங்கன ஒரு பயலும் கேக்க மாட்டுக்காங்கள்ளா ...என்ன பண்ண சொல்லுதிய....

ஹுஸைனம்மா said...

வாஸ்துவின் அடிப்படைகளை இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன். இடம், காலம், பொருள் (பணம்) வசதிப்படி அவசியமான வசதிகள் செஞ்சுக்கறதுதான் நல்லது.

அப்புறம் அந்த பயங்காட்டுற விஷயமெல்லாம் ஏன் சேத்திருக்கீங்க, அதுவும் சுட்டியோட? நீங்க ஒன் லைன்ல ஸ்டோரி சொன்னா, கார்த்திகேயன் விரிவா ஸ்டோரி டிஸ்கஷன் மாதிரி வெளக்குறார் பாருங்க!! பயமால்ல இருக்கு!!

Unknown said...

நல்லாச் சொன்னிங்க கண்ணா, இப்படி பல பேர் எழுதினதா தான் இந்த வாஸ்து தொல்லை ஒழியும்.

இந்த வாஸ்து பண்டிட்டுகளும் ஒரு விதத்தில் போலி சாமியார்கள் போலத்தான். மக்களின் அறியாமையை பயன்படுத்தி காசு பார்க்கும் கூட்டம். இவர்கள் அச்சு ஊடகங்களிலும் மற்றும் தொலைகட்சிகளிலும் ஊடுருவி மக்களை இன்னும் மூடனம்பிகையின் அடிமைகளாக வைத்துள்ளர்கள். இதுமட்டும் அல்லாமல் ஒரு குடும்பத்தில் உடல் நலக் குறை ஏற்பட்டாலோ, பொருளாதரக் குறை ஏற்பட்டாலோ வாஸ்து சரியில்லை என்று சுற்றத்தார்கள் குண்டை தூக்கிப் போடுகிறார்கள். இதனாலயே படித்த மற்றும் உலக அனுபவம் கொண்ட பலரும் இந்த கூத்திற்கு இரையாகிறார்கள்.

வாஸ்து நம் முன்னோர்கள் நவீன கட்டிடப் பொருட்கள் (சிமெண்ட்) இல்லாத காலத்தில் உபயோகபடுத்திய கலை. அதை அப்படியே தற்காலத்திற்கு இறக்குமதி செய்வது வீண் வேலை. வீடுகளில் மின் இயந்திரங்கள் பெருகிவரும் இக்காலத்தில், நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் நீர் அதிகம் தேங்காத (வியாதிகள் பரவுவதை தடுக்க) இருப்பிடமே நல் வாழ்விற்கு உகந்ததாகும். அன்பர்கள் வீடு கட்டும் போது பொறியாளரிடமோ, அல்லது கட்டிடக் கலைஞரிடமோ தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தாரின் தேவைகளை விவாதித்து வடிவமைப்பை பெறவேண்டும். எல்லாமே அவர்களுக்குத் தெரியும் என்று விடக் கூடாது.

அன்புடன்,
மீனாட்சிசுந்தரம்

கண்ணா.. said...

@ஹுஸைனம்மா

வாங்க. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

அந்த பயங்காட்டுற விஷயமெல்லாம் சேர்த்தது எவ்ளோ காமெடி நடந்துகிட்டு இருக்குன்னு சொல்றதுக்காகத்தான்

:))

கண்ணா.. said...

@மீனாட்சி சுந்தரம்

வாங்க நண்பா,

கட்டிட தொழில்நுட்பதுறை பற்றி எழுத எனக்கு இன்னொரு ஆளும் துணைக்கு கிடைச்சிட்டார்.

நீங்களும் நிறைய எழுதுங்க நண்பா...

நமக்கு தெரிந்ததை நிறைய பேருக்கு கொண்டு செல்வோம்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல

geethappriyan said...

கண்ணா,
நான் ஆர்கிடெக்சர் இண்டஸ்ட்ரியில் தானெ 13 வருடமாக இருக்கிறேன்.எத்தனை வேதனை அனுபவித்திருப்போம். அதுல ஒரு கூத்து என்னன்னா சில வாஸ்து கனசல்டண்டுகள்
ஸ்கொயர் ஃபீடுக்கு 25 ரூபாய் கண்ஸலடேஷன் ஃபீஸாக வாங்குது.
இதில ஃப்ளைட் டிக்கெட்.ஹோட்டல் ரூம் எல்லாம் தனியாம்.
அவனுக்கு கொடுக்க யோசிக்காத க்ளையண்ட்கள் ஆர்கிடெக்டுக்கு டிசைன் ஃபீஸ் தர தயங்குவது ஏன்?
குழப்பமாயுள்ளது.மூளையிலிருந்து கற்பனைகளை பேப்பரில் இறக்கி தானே டிசைன் பண்ணுகிறான்?.பின்னே எப்படி நம்மால் இன்னோவேடிவாக பில்டிங் செய்ய முடியும்?

===
ஜோசியக்காரனுக்கு தான் (வாஸ்துக்காரன்) சமூகத்தில் லக்கிப்ரைஸ்.கொடுமைங்க...

இது கக்கூஸுக்கு ஏசிபி கிளாடிங் போடும் காலம்.இந்த கொத்த்னார் பயல்களை கிளையண்ட்கள் கையில் வைத்துக்கொண்டு போடும் ஆட்டம் இருக்கே?
ஒரு கல்யாணமண்டபத்தில் பூவேலை பாடுடன் ஏசிபி(அலுமினியம் காம்போசிட் பேனல்)கிளாடிங்காஇ பார்த்ததும் தலையில் அடித்துக்கொண்டேன்.
=====
நண்பர் மீனாட்சி சுந்தரம் ஆர்கிடெக்ட் என அறிந்தேன்.மிக்க மகிழ்ச்சி.ஒரே ஃபீல்டு.தொடர்ந்து குரல் கொடுப்போம்.

Unknown said...

//கட்டிட தொழில்நுட்பதுறை பற்றி எழுத எனக்கு இன்னொரு ஆளும் துணைக்கு கிடைச்சிட்டார்.//
மிக்க நன்றி கண்ணா, லாரி பேக்கர் பற்றி ஒரு முழுநீள தொடர் தயாரிதுக்கொண்டிருக்கிறேன் கூடிய விரைவில் என் வலைப் பக்கத்தில் வெளியிடுகிறேன். நீங்கள் பேக்கரின் தொழில்நுட்பம் பற்றி தொடர்ந்து எழுதுங்கள் என் கட்டுரை அவரின் அழகியல் கோட்பாடு மற்றும் நம் மரபார்ந்த கட்டிடக்கலையின் உயர்வை எடுத்துக் காட்டுவதாக இருக்கும்.

@நண்பர் கார்த்திகேயன்,

ஆம் நீங்கள் சொன்னது சரி, தமிழ்நாட்டிலும் மற்றும் அமெரிக்காவிலும் கட்டிடக்கலை பயின்று தற்பொழுது அமெரிக்காவில் கட்டிடக்கலைஞராக உள்ளேன். கூடிய விரைவில் தாயகம் திரும்பும் தாகத்தோடு! உங்களிடம் பேக்கரின் சீடர் பென்னி குரியகோஸ் பற்றி கேட்கவேண்டும், தனியாக ஈமெயில் செய்கிறேன்.

//இது கக்கூஸுக்கு ஏசிபி கிளாடிங் போடும் காலம்.//
டெக்னாலஜியை மிஸ் யூஸ் பண்ண நம்ம ஆட்களுக்கு சொல்லித்தரனுமா என்ன?

கண்மணி/kanmani said...

என்ன சொன்னாலும் மக்கள் மாறப் போவது இல்லை

ஜோதிஜி said...

இதை விட விளக்கமா சொல்லி புரிய வைக்க முடியாது.

சிநேகிதன் அக்பர் said...

கண்ணா,

எனது பதிவுல " கொத்தனார் கையில கிடைத்த செங்கல் போல‌ (பீஸ் பீஸாக்கிட்டார்)ன்னு வந்திருக்கனும். தப்பா எழுதிட்டேன் மக்கா. அந்த வரியை எடுத்துட்டேன்.

கண்ணா.. said...

@கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

வாவ் நீங்கள் 13 வருட அனுபவசாலியா..??!!

அப்போ நீங்கள் இது பற்றி என்னை விட தெளிவாகவும், விபரங்களுடனும் எழுதலாமே..?!

சீக்கிரம் இது பற்றியும் எழுது தல...

கண்ணா.. said...

@மீனாட்சி சுந்தரம்

லாரி பேக்கர் குறித்த உங்கள் பதிவிற்க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கண்ணா.. said...

@கண்மணி/kanmani

வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

நமக்கு தெரிந்ததை சொல்லத்தான் இதை எழுதினேன். மாற்றங்கள் அவரவர் மனதை பொறுத்துதானே இருக்கிறது

:)

கண்ணா.. said...

@ஜோதிஜி

வாங்க நண்பா, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

நிறைய விளக்கமெல்லாம் ஒண்ணும் இல்ல நண்பா..

இது எனக்கு தெரிந்தது மட்டும்தான். இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

கண்ணா.. said...

@அக்பர்

வாங்க மக்கா,

அட அத எதுக்கு தல எடுத்த....

நான் ஓண்ணும் தப்பா எடுத்துக்க மாட்டேன்..

நட்பில் இது போன்ற கலாய்த்தல்தான் நல்லா இருக்கும்

:))

ராஜ நடராஜன் said...

அண்ணா கண்ணா!பாலோ எங்கே?அங்க போயிட்டு வந்திடுறேன்.

வாஸ்துக்கும் கீழே நிறைய சரக்கு வச்சிருப்பீங்க போல.இன்னைக்கு டேரா உங்க கிட்டத்தான்.

ராமலக்ஷ்மி said...

//நன்கு உழையுங்கள் நல்ல பலன்கள் தேடி வரும்.//

அப்படிப் போடுங்க!

அன்புடன் மலிக்கா said...

வாஸ்து வாஸ்துன்னு விளையாடிகிட்டு இருப்போருக்கு புரிஞ்சா சரி சரியான சாத்து...

கண்ணா சூப்பர்..

கண்ணா.. said...

@ராஜ நடராஜன்
வாங்க அண்ணா, முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

பாலோ பண்ணியதற்கும் நன்றிகள் பல

சரக்கெல்லாம் கூகிளாண்டவர் துணைதான். நம்ம சொந்த சரக்க வச்செல்லாம் எழுத முடியுமா..?

கண்ணா.. said...

@ராமலக்ஷ்மி

வாங்க முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல

கண்ணா.. said...

@அன்புடன் மலிக்கா

வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல

தொடர்ந்து வாங்க...

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு.
நன்றி

Asir said...

Nice Post......

Unknown said...

செம்மம்ம

Unknown said...

குகைல வாழ்ந்த போதும் கூறைகொட்டகைல வாழ்ந்தபோதும் எல்லாம் சிங்கிள் ரூம் தானுங்க அப்ப வாஸ்து நல்லாவே வேல செஞ்சுது. வெளிச்சம், காற்றோட்டம், குளிர்ச்சி எல்லாம் இருந்துச்சி இப்போ எல்லாம் போச்சு காசும் செலவழிஞ்சிபோச்சு. . . .

ரமனன் said...

வாஸ்து சாஸ்திரம் அடி என்பது நம்முடைய காலடி கணக்கு என்று தாங்கள் கூறியது சரியாகத்தான் இருக்கும்.என்று நம்புகிறேன். ஏன் என்றால் பழைய நாட்களில் அளவு கோலாக இருந்தது சங்கிலி அளவுதான்.தாங்கள் தந்த வாஸ்து விளக்கம் அனைவருக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். நன்றி

Unknown said...

சூனிய மூலை என்று ஒரு மூலை இருக்கின்றதா?