Tuesday, January 12, 2010

ஜக்குபாய் பிரஸ்மீட்டில் ரஜினிகாந்தும், ராதிகாவும் பேசிய வீடியோ

ஜக்குபாய் இணையத்தில் வெளியானது குறித்து நடைபெற்ற பிரஸ்மீட்டில் ரஜினிகாந்தும், ராதிகாவும் பேசிய வீடியோக்கள் இங்கே பகிர்ந்துள்ளேன்.
இதுகுறித்து பத்திரிக்கைகளிலும், பதிவுலகிலும் வந்த செய்திகள் வழக்கம்போல் வெட்ட பட்டு தங்களுக்கு சாதகமானதை மட்டும் எடுத்து வெளியிட்டு செய்தியை திரித்துள்ளனர்.

இணையத்தில் வெளியிட்டதாக கைது செய்யபட்டவரை சரத்குமார் விரட்டி சென்று பிடித்ததாக ராதிகா கூறுகிறார். இதெல்லாம் வெளிவந்த செய்திகளில் இல்லாது நான் அறியும் புது விஷயம். பதிவுலகிலும் ரஜினிகாந்த் பிரெஞ்சு படத்தின் காப்பி என கூறியுள்ளார் என்ற செய்தியை படித்து வியந்தேன். எப்படி இது போல ஓபனாக கூறமுடியும் என. ஆனால் வீடியோவை பார்த்ததும்தான் தெரிந்தது அதன் ஓன் லைனை மட்டும் எடுத்துள்ளோம் என வழக்கமான சினிமா மொழியில் கூறியுள்ளார்.


இதில் ரஜினி வழக்கம்போல் தேவையில்லாமல் ஜக்குபாய் தலைப்பை பற்றி ஓரு நெகட்டிவ் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். பின் திருட்டு விசிடியே சில தியேட்டர்காரர்களின் ஓத்துழைப்பில்தான் நடப்பதாகவும் அப்படி பட்ட தியேட்டர்காரர்களை கண்டறிந்து அவர்களுக்கு படம் குடுக்க கூடாது எனவும், அரசாங்கம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றில்லாமல் நாமும் இது போல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய ராதிகா ஓரு நண்பர் வந்து ஜக்குபாய் இணையத்தில் வெளியாகிவிட்டது என சொன்னவுடன் சரத்குமார் காரை எடுத்து போய் அது குறித்த ஒருவரை தேடி விரட்டி பிடித்ததாகவும் கூறினார்.


இன்னைக்கு இணைய வசதியும் ஆபிஸில் வேலையே குடுக்காத மேனேஜரும் இருக்க போய்தான் இந்த விஷயங்கள் தெரிய வருகிறது. அதனால்தான் உங்கள் பார்வைக்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேச்சு
ராதிகாவின் பேச்சு

 

11 comments:

கலையரசன் said...

எங்குமே தேடி கிடைக்காத அறிய வீடியோ கிளிப்சும், தகவல்களும்!! பகிர்ந்த உங்களுக்கு கோடானு கோடி நன்றி கண்ணா அவர்களே!

(மனசாச்சி : மண்டையன்.. வரும்போது, மொக்கை எழுதக்கூடாது சொல்லிட்டு திரிஞ்சிது!!)

வினோத்கெளதம் said...

அருமையான தகவல்கள்..தொடர்ந்து இதுப்போல் பல வீடியோ காட்சிகளை எதிர்ப்பார்க்கிறோம்..
கொஞ்சம் பார்த்து பண்ணு..

KISHORE said...

ரொம்ப முக்கியம்.. ஏதோ திட்டணும்னு தோணுது..ok..
வேணும்னா கலை புதிய பதிவோட தலைப்ப ஒரு தடைவ படிச்சிக்கோ

goma said...

விளக்கமான விளக்கம்.
அருமை.

கண்ணா.. said...

வாடா மானங்கெட்ட கலை,

மனசாட்சியை படுத்து தூங்க சொல்லு...:)

கட்டுமானம் சம்பந்தமா தனியா ஒரு ப்ளாக்ல எழுதலாம்னு ஐடியால இருக்கேன். பல தகவல்களும் தேடிக்கிட்டு இருக்கேன்.

அதை உரிமையுடன் உணர்த்தியதற்கு நன்றிடா...

கண்ணா.. said...

@ வினோத், கிஷோர்

வருகைக்கு நன்றி

மேலே கலைக்கு சொன்னதுதான் உங்களுக்கும்

:)

கண்ணா.. said...

@ கோமா,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

பின்னூட்டத்தில் பாராட்டிதான் சொல்லணும்னு அவசியமில்லை.. என் நண்பர்கள் மாதிரி குறையிருந்தாலும் சுட்டி காட்டுங்கள். அது என்னை இன்னும் மெருகேற்ற உதவும்

:)

goma said...

முதலில் ஹாய் என்ற கை குலுக்கல்.

.அப்புறம் இருக்கு ..மவனே.

கண்ணா.. said...

@goma


//முதலில் ஹாய் என்ற கை குலுக்கல்.

.அப்புறம் இருக்கு ..மவனே.//

ஆத்தாடி.........அவசரபட்டு வார்த்தையை விட்டுடேனோ.....

:))

ஹாலிவுட் பாலா said...

இவங்கெல்லாம் வயித்தெரிச்சல்ல பேசறாங்க... கண்ணா..!!

தலைவரைப் பத்தி.. என்ன நியூசுன்னாலும்... அதுக்கு ஜேதான்!!! :) :)

--

ரஜினியை திட்டினாதான்.. ஹிட் கிடைக்கும். அதுதான் வேணுங்கற மாதிரி.. எடுத்துக்கறாங்க.

கண்ணா.. said...

வாங்க பாலா,

வருகைக்கு நன்றி

//தலைவரைப் பத்தி.. என்ன நியூசுன்னாலும்... அதுக்கு ஜேதான்//

உண்மைதான்.. இவ்ளோ பெரிய இந்த மொக்கை பதிவிற்கே 21 ஓட்டு கிடைச்சிருக்கு.. ஹிட்ஸும் தாறுமாறா போகுது..

:)