Wednesday, January 13, 2010

பொங்கல் வாழ்த்துக்கள் – தமிழ் புத்தாண்டு தையிலா? சித்திரையிலா?

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.




போன வருடம் தமிழ் புத்தாண்டு சித்திரையிலா அல்லது தையிலா என குழப்பம் வந்தது. இப்போது அது குறித்து அந்தளவிற்கு சலசலப்பு இல்லையென்றாலும் அந்த சமயத்தில் நான் படித்த ஓரு சுவாரஸ்யமான பதிவு இந்த சுட்டியில்


நண்பரும் அவருக்கு மெயில் வந்ததை பதிவாக பகிர்ந்துள்ளார். அதனால் அது தவறாக இருந்தாலும் அது அவர் பிழை இல்லை.


எதுவாக இருந்தாலும் வாழ்த்து சொல்வதே மகிழ்வான விஷயம்தான். ஒருவொருக்கொருவர் பகிரப்படும் வாழ்த்துக்களால் மனம் நிறைகிறது. அதனால் இப்போதும் மற்றும் தையிலும் சொல்லுவோம்.


தமிழர் திருநாள் பொங்கல் சமயத்தில் ஊரில் இருக்க முடியவில்லையே என்ற வருத்தம்தான் அதிகமாக உள்ளது. பொங்கலுக்கு உறவினர் நண்பர் வீடுகளுக்கு இனிப்பு வழங்குவது, மறுநாள் சோத்தை கட்டி கொண்டு செல்லும் பாபநாசம், மணிமுத்தாறு , மற்றும் ஆத்தங்கரை , அருவிகரைகளை நினைத்தால், நிறைய இழக்கிறோம் என தோன்றுகிறது.


இப்போது எதற்கு வருத்தங்களை பற்றி சொல்ல...அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.


Tuesday, January 12, 2010

ஜக்குபாய் பிரஸ்மீட்டில் ரஜினிகாந்தும், ராதிகாவும் பேசிய வீடியோ

ஜக்குபாய் இணையத்தில் வெளியானது குறித்து நடைபெற்ற பிரஸ்மீட்டில் ரஜினிகாந்தும், ராதிகாவும் பேசிய வீடியோக்கள் இங்கே பகிர்ந்துள்ளேன்.




இதுகுறித்து பத்திரிக்கைகளிலும், பதிவுலகிலும் வந்த செய்திகள் வழக்கம்போல் வெட்ட பட்டு தங்களுக்கு சாதகமானதை மட்டும் எடுத்து வெளியிட்டு செய்தியை திரித்துள்ளனர்.

இணையத்தில் வெளியிட்டதாக கைது செய்யபட்டவரை சரத்குமார் விரட்டி சென்று பிடித்ததாக ராதிகா கூறுகிறார். இதெல்லாம் வெளிவந்த செய்திகளில் இல்லாது நான் அறியும் புது விஷயம். பதிவுலகிலும் ரஜினிகாந்த் பிரெஞ்சு படத்தின் காப்பி என கூறியுள்ளார் என்ற செய்தியை படித்து வியந்தேன். எப்படி இது போல ஓபனாக கூறமுடியும் என. ஆனால் வீடியோவை பார்த்ததும்தான் தெரிந்தது அதன் ஓன் லைனை மட்டும் எடுத்துள்ளோம் என வழக்கமான சினிமா மொழியில் கூறியுள்ளார்.


இதில் ரஜினி வழக்கம்போல் தேவையில்லாமல் ஜக்குபாய் தலைப்பை பற்றி ஓரு நெகட்டிவ் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். பின் திருட்டு விசிடியே சில தியேட்டர்காரர்களின் ஓத்துழைப்பில்தான் நடப்பதாகவும் அப்படி பட்ட தியேட்டர்காரர்களை கண்டறிந்து அவர்களுக்கு படம் குடுக்க கூடாது எனவும், அரசாங்கம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றில்லாமல் நாமும் இது போல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய ராதிகா ஓரு நண்பர் வந்து ஜக்குபாய் இணையத்தில் வெளியாகிவிட்டது என சொன்னவுடன் சரத்குமார் காரை எடுத்து போய் அது குறித்த ஒருவரை தேடி விரட்டி பிடித்ததாகவும் கூறினார்.


இன்னைக்கு இணைய வசதியும் ஆபிஸில் வேலையே குடுக்காத மேனேஜரும் இருக்க போய்தான் இந்த விஷயங்கள் தெரிய வருகிறது. அதனால்தான் உங்கள் பார்வைக்கும்



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேச்சு




ராதிகாவின் பேச்சு

 

Tuesday, January 5, 2010

புர்ஜ் காலிஃபா- உலகின் உயரமான கட்டிட திறப்பு விழா வீடியோ



உலகின் மிக உயர்ந்த கட்டிடம் புர்ஜ் காலிஃபா நேற்று திறப்பு விழா கண்டது. கோலாகலமான திறப்பு விழாவிற்கு ஏராளமானோர் வந்திருந்தனர். கட்டிடத்தின் உயரம் மிகுந்த ரகசியமாக பட்டு நேற்றுதான் 828 மீ என்று அறிவிக்க பட்டது. இது துபாயில் வீழ்ச்சி அடைந்துள்ள ரியல் எஸ்டேட் துறையை நிமிர்த்துமா என பொருளாதார நிபுணர்களால் அலசப்படுகிறது.

எப்படியிருந்தாலும் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சி துபாயில் 2010ன் கோலாகலமான ஆரம்பம் எனச் சொன்னால் அது மிகையில்லை.



Saturday, January 2, 2010

புர்ஜ் துபாய் திற்ப்பு விழா - கம்பெனி பார்ட்டி




ஏற்றி விட்ட ஏணியை மறக்கும் உலகம்


ஜனவரி 4ம் தேதி மிக பிரமாண்டமான ஓபனிங்க்கு தயாராகி கொண்டிருக்கிறது துபாயில் உள்ள அல் புர்ஜ் டவர் , உலகின் மிக உயரமான கட்டிடம்.

818 மீ உயரம், 160 மாடிகளை கொண்ட இந்த கட்டிடம், ஸ்ட்ரக்ச்ச்ர் மற்றும் கிளாடிங் வேலைகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராகிறது. ஜனவரி 4ல் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.






ஏற்றி விட்ட ஏணியை மறக்கும் மனிதனின் பழக்கத்தை இந்த கட்டிடமும் கற்று கொண்டது. வெறும் மண்ணாக கிடந்த இடத்தை கம்பியாலும் காங்கீரீட்டாலும் உலகில் மிக உயரத்திற்கு கொண்டு செல்ல அல்லும் பகலும் அயராது உழைத்தவர்களை ( யார்ரா... அவன் கேக்கெ.. பிக்கென்னு சிரிக்குறவன்) மறந்து விட்டது. இப்போது என்னால் கட்டிடத்திற்கு உள்ளே நுழைய முடியவில்லை. விஐபிகளும் விவிஐபிகளும் மட்டுமே நுழைய முடியுமாம்.




கிளிக்கு றெக்கை முளைச்சிட்டுதோன்னோ..அதான் பறந்து போச்சு.........



” பாலூட்டி வளர்த்த கிளி

பழம் கொடுத்து வார்த்த கிளி

நான் வளர்த்த பச்சை கிளி

நாளை வரும் கச்சேரிக்கு “


உலகின் உயரத்தில் உன்னத தமிழன் ( வேற யாரு ...ந்நாந்தேன்...)




இயர் எண்ட் பார்ட்டி...

இந்த ரிஸஸன் நேரத்தில் பார்ட்டியை நடத்தவா வேண்டாமா என பட்டிமன்றம் நடத்தி எடுக்கப்பட்ட முடிவு. வழக்கம் போல் முதல் நாளே சொல்லி விட்டதால் அதிலிருந்தே ஓன்றும் சாப்பிட கூடாது என்ற தொன்று தொட்ட வழக்கத்தை விட்டு விட்டால் தமிழின துரோகி என கூறி விடுவார்கள் என்பதால் அதையே கடைபிடித்தேன்.





முதலில் பவுலிங் செண்டர்க்கு சென்றோம். பந்தை உருட்டி கட்டைகளை தட்டி விட்டு பக்கத்திலிருக்கும் செம கட்டைகளை ஓரு தட்டு தட்டி விளையாண்டோம். ஊரில் கோலிக்காவை மட்டுமே விளையாண்டு பழக்கம். இங்கு வந்து இம்மாம் பெரிய பந்தை குடுத்தா என்ன பண்ணுவேன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..







சரின்னு மனசை தேத்திகிட்டு, ”சாமி.. தேவதைகள் மத்தியில மானத்தை வாங்கிறாதனு” நினைச்சுகிட்டே பந்தை போட்டா... கடவுள் நல்லவங்களை எப்பவும் கைவிடமாட்டார்னு புரிஞ்சுகிட்டேன். ( யாரு அந்த நல்லவன்னு தெரியாத மாறி கேப்பீங்களே..)

அப்புறம் ரெஸ்டாரண்ட் போய் சாப்டவிட்டா...ஆத்தாடி...ஸ்பூனை கைல குடுத்து சாப்பிட சொல்லுறானுவோ... அடங்கொக்கா மக்கா.. ஸ்பூனு வச்சு அதை எடுத்துகறேன்..கைய வச்சு சாப்ட்டுக்கறேன்னு சொன்னா .. கேக்கானுவளா...கேணப்பயலுக.... அப்புறம் ஸ்பூனு வச்சு ரொட்டியை பிச்சா ஓரு பாதி என் டேமேஜர் முகத்துல போய் விழுது... அப்புறம் அவங்க எல்லாரும் கெஞ்சி கேட்டுகிட்டதுனால மறுக்கா கையை வச்சே சாப்பிட்டு முடிச்சேன்.








இதுக்கு மேல என்னால டைப்ப முடியாத காரணத்தால் உரையை இதோடு முடித்து கொள்கிறேன்.